Nee soldrathu sari தான்,
Ana nee dmk oppose panni oru post pannathu illaiye vijayavey yenneramum kadichikittu irukka
Mothala nee kannisatha vidu olu boy👍
RAID – SPECIAL NIGHT DUTY
ரெய்ட் என்ற அஜய் தேவ்கன் நடித்தபடம் படம் Zee Thiraiயில் அடிக்கடிப் போடுவான்
அதைப் பார்த்தபோது, என்னுடைய டெல்லி ரெய்ட் அனுபவம் ஞாபகத்திற்கு வந்தது
அந்த நேரத்தில் (1996) வங்கிகளுக்கு சனிக்கிழமை அரை நாள். ஞாயிறு விடுமுறை
ஒரு அருமையான சனிக்கிழமையன்று, நான், ஷஷாங் மிஷ்ரா, மற்றும் Mr. Rao மூன்று பேரும் சுமார் 3.30 மணி அளவில் வீட்டுக்குப் போகும் முன்பு ஏதோ பேசிக் கொண்டிருந்தோம்
அப்போது கதவைத் திறந்து கொண்டு, யூனிபார்மில் ஒருவர் – ஒரு கவரைக் கொடுத்தார் Mr.Raoவிடம் – படித்தால் ‘’இன்று இரவு ஒரு ரெய்ட் இருக்கிறது – உங்கள் வங்கியில் இருந்து 2 officerகள் witnessக்கு வரவேண்டும்’’ என்று லெட்டர் – Requestலாம் கிடையாது – ஆர்டர் தான்
Mr. Rao உடனே என்னையும் ஷஷாங்கையும் பார்த்தார். அந்தப் பார்வையின் அர்த்தம்: "என் வயசுல இந்த மாதிரி நைட் டியூட்டிலாம் முடியாது... நீங்க போயிட்டு வாங்க!"
எனக்கும், ஷஷாங்கிற்கும் Officialஆக லெட்டர் அடித்துக் கொடுக்கப்ட்டது – வந்தவரும் எங்கள் அட்ரஸை வாங்கிக் கொண்டு ‘’இரவு 9 மணிக்கு வருகிறோம் – தயாராக இருங்கள்’’ என்று சொல்லிப் போய் விட்டார்
நானும் அவனும் ஒரே Quarters – We were ready by 8.30 – கரெக்டாக 9 மணிக்கு ஒரு ஜீப் வந்தது – எங்கள் இருவரையும் ஏற்றியது – 30 நிமிட பயணம் – நானும் ஏதோ பிஸினஸ்மேனை ரெய்ட் பண்ணப் போகிறார்கள் என்றிருந்தேன்
ஜீப் ஒரு பங்களா முன்பு நின்றது – வாசலில் இருந்த Boardஐப் பார்த்ததும் படு ஷாக் – அது டெல்லியில் மினிஸ்டராக இருந்த ஒருவரின் பங்களா (அவர் வேறு ஒரு மாநிலத்தில் முதல்வராகவும் இருந்தவர்) - எனக்கு அப்போது BP இல்லாவிட்டாலும் இரண்டு பாயிண்ட் ஏறியிருக்கும் என்று நினைக்கிறேன்
எங்கள் இருவருக்கும் ஒரே ஒரு இன்ஸ்டிரக்ஷன் தரப்பட்டது – ‘’நீங்கள் இருவரும் உங்களுக்குள் சத்தமில்லாது பேசிக் கொள்ளலாம் – ஆனால் உள்ளே இருக்கும் யாருடனும் பேசக்கூடாது’’ என்பது மட்டுமே
இன்னொரு ஜீப்பில் வந்த Officerகள் முதலில் உள்ளே போனார்கள் – நாங்கள் வெளியே நின்றிருந்தோம் – 5 வது நிமிடம் நாங்களும் உள்ளே
‘’எங்க வீட்டுப் பிள்ளை’’ படத்தில் வருவது போல் பங்களா – எங்கள் இருவரையும் பக்கத்துப் பக்கத்தில் ஒரு தனித் தனி ஸோபாவில் உட்கார வைத்தார்கள் – ஆபீஸர்கள் வீட்டில் இருந்தவர்களிடம் எங்களைக் காட்டி ஏதோ சொன்னார்கள் – அடுத்த நொடி எங்கள் ஸோபாவின் முன் சின்ன டேபிள் போடப்பட்டு, ஒரு ஜூஸ் பாட்டில், தண்ணீர், வறுத்த முந்திரி கொண்டு வந்து வைக்கப்பட்டது
எனக்கு இருந்த மனநிலையில் நான் எதையுமே தொடவில்லை – நான் என்ன நடக்கிறது என்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருக்க, ஷஷாங்க் ஏதோ சினிமா இன்டர்வெல்ல இருப்பது போல, எதிரில் வைக்கப்பட்டிருந்ததை நிமிடத்தில் காலி செய்திருந்தான் – திரும்ப வேற ஏதோ கேட்டான்
10 மணிக்கு ஸ்டார்ட் ஆன ரெய்ட் காலை 3 மணி வரை போனது
ஒரு பீரோவில் ரூ.17.75 லட்சத்திற்கு பணம் (அது மிகப் பெரிய தொகை அப்போது)
ஒரு சூட்கேஸ் முழுவதும் வாட்ச்கள் – அத்தனை மாடல் வாட்ச்களை நான் வாழ்நாளில் பார்த்ததில்லை (மோதிரத்தில் வாட்ச்)
ஏகப்பட்ட டாக்குமென்ட்ஸ்
எங்கள் இருவருக்கும் பணத்தை எண்ணும் வேலை தரப்பட்டது – பெரிய டினாமினேஷன் என்பதால் அரை மணி நேரத்தில் முடிந்தது
நாங்கள் விட்னஸ் கையெழுத்துப் போடும் போது, சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் போல இருந்த அமைச்சரும் எங்களைப் பார்த்தார் – அந்த பார்வையில் ‘’படவா ராஸ்கல்களா’’ என்ற கோபம் இருந்தது
4.30க்கு திரும்ப எங்களை பேங்கில் இறக்கி விட்டனர். Entrance + Safe Key எங்களிடம் இருந்தது – பணத்தை Safeல் வைத்தோம் – (இந்த கேஸ் முடியும் வரை அது Current Accountலேயே இருக்கும் – ‘’எப்ப முடியறது’’ – இது போல் அப்போதே ரூ.25 கோடி வரை இருந்ததாக ஞாபகம்)
எங்களை திரும்பவும் வீட்டில் கொண்டு போய் விட்டார்கள் – மறுநாள் ஞாயிறு என்பதால் பிரச்சனையில்லை
நான் இந்த ரெய்டை கனவு போல் completeஆக மறந்து விட்டேன்
பின் நான் டிரான்ஸ்பரில் எங்கெங்கோ சுற்றி, மும்பையில் இருக்கும் போது, 2014ல் எனக்கு Summon
மீண்டும் டெல்லி - நான் காலை 10 மணிக்கு ஆஜர். 10.30க்கு என்னைக் கூப்பிடுவார்கள் என்று சொன்னார்கள் – தண்ணீர் குடிக்கும்போது கூட, கூப்பிட்டுவிடுவார்களோ என்ற பதட்டத்திலேயே குடித்தேன்
கூப்பிட்டது மதியம் 4.30க்கு – அது வரை சாப்பிடவில்லை
என்ன கேட்கப் போகிறார்களோ என்று பதபதைப்புடன் கூண்டில் ஏறினேன் – Advocate வந்தார் – ஒரு பேப்பரைக் காட்டினார் – இது உங்க கையெழுத்தா என்றார் – ‘’ஆம்’’ என்றேன்
‘’ நீங்கள் போகலாம்’’ என்றார் – 15 விநாடியில் முடிந்தது - இதுக்காடா காலைலேந்து சாப்பிடாமா வைச்சிருக்கீங்கன்னு மனசிற்குள் நினைத்துக் கொண்டேன்
வெளியில் வந்தபின் ‘’திரும்ப கூப்பிடுவீங்களா’’ என்றேன் – இல்லை உங்கள் Portion முடிந்து விட்டது என்றார்கள்
எதிரில் அந்த அமைச்சர் வீல் சேரில் வந்து கொண்டிருந்தார் காலம் தான் எவ்வளவு கொடியது – நான் பார்த்து ஸ்டண்ட் மாஸ்டர் போல் இருந்தவர் 30 வயது கூடியதைப் போல் இருந்தார்
2016ல் அந்த அமைச்சர் கேஸ் முடியும் முன்னரே இறந்தும் விட்டார்
கேஸ் முடிந்ததா இல்லையா என்று தெரியவில்லை