தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் - தலைவர் தமிழினவேந்தர் டாக்டர், திரு.பெ.ஜான்பாண்டியன் அவர்கள் தலைமையிலும் , கழக பொதுச்செயலாளர் ஆகிய எனது முன்னிலையிலும் 04.10.2025 சனிக்கிழமை திருநெல்வேலி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வியூகம் மற்றும் அதற்கான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாநில இளைஞர் அணி தலைவர் மருத்துவர் திரு.ஜா.வியங்கோ பாண்டியன் அவர்கள், மாநில மகளிர் அணி தலைவி மருத்துவர் திருமதி.ஜா.வினோலின் நிவேதா அவர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
@JohnPandianTMMK
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் 04.10.2025 சனிக்கிழமை எனது தலைமையிலும் , கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர், முனைவர்.திருமதி.ஜா.பிரிசில்லாபாண்டியன் @priscillaTMMK அவர்கள் முன்னிலையிலும், திருநெல்வேலி - தென்தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில்,மாநில இளைஞர் அணி தலைவர் மருத்துவர் திரு.ஜா.வியங்கோ பாண்டியன் @ViyangoOfficial அவர்கள், மாநில மகளிர் அணி தலைவி மருத்துவர் திருமதி.ஜா.வினோலின் நிவேதா @vinolinnivetha , மற்றும் மாநில பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான திட்டங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றது.
இன்று 04.10.2025 சனிக்கிழமை திருநெல்வேலி தென்தலைமையகத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம். தலைவர் தமிழினவேந்தர் டாக்டர், திரு.பெ.ஜான்பாண்டியன் அவர்கள் தலைமையிலும் , கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர், முனைவர்.திருமதி.ஜா.பிரிசில்லாபாண்டியன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
வரவிருக்கும் 2026 தேர்தல்களை எதிர்கொள்வது மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாநில இளைஞர் அணி தலைவர் மருத்துவர் திரு.ஜா.வியங்கோ பாண்டியன் அவர்கள், மாநில மகளிர் அணி தலைவி ஆகிய நானும் மற்றும் மாநில பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
#tamilagamakkalmunnetrakazhagam #Johnpandian
மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அவரது தலைமை, அறிவாற்றலையும், இந்தியாவின் வளர்ச்சிக்கான அளவற்ற அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. எளிமையும் உறுதியும் கொண்ட அவரது பயணம் நாட்டின் மக்கள் அனைவருக்கும் உத்வேகமளிக்கிறது. இந்த மகிழ்ச்சிகரமான நாளில், அவருக்கு நீண்ட ஆயுள், உடல் நலம் மற்றும் நாட்டிற்கு தொடர்ந்து சிறப்பாக வழிகாட்டும் வலிமை கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
#DraupadiMurmu
மதுரையின் உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் தெய்வீக வைபவம், இன்று பக்தர்களின் அளப்பரிய ஆரவாரத்துடன், பச்சைப் பட்டணிந்து, அழகர் பெருமான் வைகையில் இறங்கிய காட்சி, கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. இந்தப் புனித நிகழ்வு, தமிழகத்தின் கலாச்சார பெருமையை உலகறியச் செய்திருக்கிறது.
தமிழக மக்கள் அனைவருக்கும், அழகர் பெருமானின் அருளாசிகள் கிடைக்கட்டும். நமது மாநிலம் செழிப்புடனும், சமாதானத்துடனும், வளமுடனும் திகழ, அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபடுவோம். இத்திருவிழா, நமது பண்பாட்டு ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தட்டும்!
#ChithiraiThiruvizha2025 | #Kallazhagar | #AlagarKovil
கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதியின் உறுதியை நிலைநாட்டியுள்ளது.
2019-ல் தமிழகத்தை அதிரவைத்த இந்த வழக்கில், ஒன்பது குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் தைரியமான சாட்சியங்கள் மற்றும் சிபிஐயின் வலுவான ஆதாரங்கள் இந்த தீர்ப்பை சாத்தியமாக்கியுள்ளன.
நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையுடன் அபராதம் விதித்ததோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ₹85 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கியதோடு, சமூகத்தில் இத்தகைய கொடிய குற்றங்களுக்கு எதிராக கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. நமது நீதித்துறையின் இந்த உறுதியான நடவடிக்கையை மனதார பாராட்டுவோம்.
நீதி வென்றது!
#PollachiCase
1200 ஆண்டுகள் பழமையான இங்கிலாந்தின் வரலாற்றில், சென்னையைச் சேர்ந்த முதல் தமிழர் பெண்மணியாக, துணை மேயராக மீண்டும் பதவியேற்கும் அரிய பெருமையைப் பெற்றிருக்கும் மாண்புமிகு டாக்டர் திருமதி. மோனிகா தேவேந்திரன் அவர்களுக்கு, என் உள்ளம் கனிந்த, நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!
தங்களின் தூய சேவையும், உறுதியான தலைமையும் இங்கிலாந்து மக்களின் வாழ்வில் புதிய புரட்சியை உருவாக்குவதோடு, உலகத் தமிழ்ச் சமூகத்திற்கு மாண்பு சேர்க்கிறது. இந்த உயரிய பதவியில், தங்களின் ஞானமும், திறனும், அர்ப்பணிப்பும் மேலும் பல உன்னத புரட்சிகளைப் படைக்கும் என உறுதியாக நம்புகிறேன்!
தமிழர் பெருமையை உலகறியச் செய்யும் தங்களின் பயணம் என்றென்றும் தொடர வாழ்த்துகிறேன்!
#DrMonicaDevendran
தலைமை இல்லாத மக்களின் தவிர்ப்பை சிறையில் உணர்ந்தேன் l திருநெல்வேலி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகமாக அரசு உறவாகினால் இளைஞர்களின் எதிர்காலம் மாறும்!
#johnpandian#Galatta#dkv#Tirunelveli#factory#youngest#johnpandiyan#dmk#cmstalin#johnpandiyan#johnpandian#john#pandian #caravantour #caravan #caravancamping #caravancampaign #tmmkitwing #tmmkmedia #tmmk #dmk #admk #tvk #bjp #bharatiyajanataparty #narendramodi #modi #mgr #mgramachandran #sasikala #jayalalitha #cmstalin #stalin #south
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருநெல்வேலி தலைமை அலுவலகத்தில் (20.01.2025) அன்று எனது தலைமையில் நடைபெற்றது.
இதில், மாநில இளைஞர் அணி தலைவர் மருத்துவர் திரு.ஜா.வியங்கோ பாண்டியன் அவர்கள் மற்றும் மாநில மகளிர் அணி தலைவி மருத்துவர் திருமதி.ஜா.வினோலின் நிவேதா அவர்களும் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
#johnpandian #viyangopandian #vinolinnivetha #TMMK #TMMKParty #tamilagamakkalmunnetrakazhagam #ExecutiveCommitteeMeeting #tirunelveli #JOHNPANDIAN
போற்றுதற்கும், வணக்கத்திற்குரிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் அண்ணன் ஜான்பாண்டியன் அவர்கள் பெரியார் குறித்து இன்று கூறிய கருத்துக்களை வரவேற்கிறேன்.
சரியான நேரத்தில் சரியான கருத்துகளைப் பதிவுசெய்த அன்பிற்கினிய அண்ணன் அவர்களுக்கு என்னுடைய அன்பும், நன்றியும்!
@JohnPandianTMMK
அண்ணா பல்கலை கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை பிரச்சனை l தென் மாவட்ட படுகொலை மற்றும் "தேவேந்திரகுல வேளாளர்" பட்டியல் வெளியேற்றம் குறித்து மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு R.N ரவி அவர்களிடம் தமமுக தலைவர் திரு. பெ .ஜான் பாண்டியன் அவர்கள் கோரிக்கை மனு அளித்ததார்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கொள்கை கோட்பாட்டை முன்வைத்து மாநாடு நடத்திய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தம்பி திரு .விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ...
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நீண்ட ஆண்டுகளாக வலியுறுத்திவரும்இடஒதுக்கீடு பற்றிப் பேசிய அவர், ‘விகிதாச்சார இடப்பங்கீடு’ தான் உண்மையான சமூகநீதி என மாநாட்டில் குரல் எழுப்பிதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் ..
தற்போது மாநாட்டில் தனது கொள்கைகள் மற்றும் கூட்டணி ஆட்சி வரவேண்டுமென அறிவித்த தம்பி திரு . விஜய் அவர்கள் அதனை முறையாக செயல்படுத்தவேண்டுமெனவும் அவரது அரசியல் பணி சிறக்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்..
என்றும் மக்கள் பணியில்,
தமிழினவேந்தர் ,
பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ.,
நிறுவனர் - தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
@actorvijay@tvkvijayhq@TVKVijayTrends@newstamil@news7tamil@News18TamilNadu #தமிழகவெற்றிக்கழகம் #TvkVijayMaanadu #ThalapathyVijay #TVKMaanadu
தென்காசி பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. ஜான் பாண்டியன் அவர்களை ஆதரித்து பாஜக மாநில துணை தலைவர் திரு.
@NainarBJP அவர்கள் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் செய்த போது..
செய்தி வெளியீடு - தேர்தல் தலைமை பணிக் குழு, தென்காசி பாராளுமன்றத் தொகுதி.
#தென்காசி | #tenkasi | #JP4Tenkasi | #JOHNPANDIAN | #viyangopandian | #tamilpolitics | #annamalaiBJP | #DMKFailsTN | #BJPAlliance | #indianpolitics | #NainarNagendran | #BJP | #Modi