Blessed to have had the opportunity to meet Bishop Paul Alappat and the members of the Coimbatore Diocese pastor council in Ramanthapuram, Coimbatore.
Bishop Paul Alappat's wisdom & community service has inspired countless lives.
Dear All,
@ChanakyaaTv TV - Shri @RangarajPandeyR - Most awaited - Event in Coimbatore on 7th April, Sunday - 10.00 am.
Venue: Suguna Auditorium, Kalapatti Road, #Coimbatore
Networking and High Tea: 10.00 am
Pls be seated by 10.30 am
For Registration: https://t.co/EzJwE3w4Xx
Inaugurated the Gyaltsuen Jetsun Pema Wangchuck Mother and Child Hospital, which stands as a beacon of hope for several families, offering quality healthcare. This facility embodies a commitment to nurturing a healthy future generation.
இன்றைய தினம், கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஊழியர் கூட்டத்தில் கலந்து கொண்டு, வரும் பாராளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து உரையாடினோம்.
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி @BJP4Tamilnadu சார்பாக, மாவட்ட நிர்வாகிகள், பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், மண்டலத் தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் நல்லாட்சி தொடர, தமிழகமும் இம்முறை நிச்சயம் பெரும்பங்கு வகிக்க வேண்டும் என்ற உறுதி மேற்கொண்டோம்.
கோயம்புத்தூர் கிரடாய் அமைப்பின் சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று, கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த, கட்டுமானத் துறையில் சிறந்து விளங்கும் தொழில்முனைவோர்கள் மத்தியில் உரையாற்றியது பெரும் மகிழ்ச்சி.
பல்வேறு தொழில் நிறுவனங்கள், 200க்கும் அதிகமான கல்வி நிலையங்கள், இயற்கை வளங்கள் என வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை வளங்களும் இருந்தும், கோயம்புத்தூர் தனது முழுமையான வளர்ச்சியைப் பெற முடியாததன் காரணங்கள் குறித்துப் பேசினேன். கோயம்புத்தூரின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை செயல்படுத்த இத்தனை ஆண்டுகள் எந்தக் கட்சிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை விளக்கினேன். (1/2)
திருப்பூர் மாநகரின் கல்வி பெருங்கடலாக விளங்கும் "நஞ்சப்பா மேல்நிலைப் பள்ளியில்"
இன்று காலை உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்களுடன் உற்சாகமாக கலந்துரையாடினேன்.
அனைத்து தரப்பு மக்களும் தங்களது இதயபூர்வமான வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவித்தனர்.
#APmuruganandam4Tirupur
#apm4Tirupur
Excited in announcing free NEET Coaching Classes for rural students - an initiative of @voiceofTenkasi !
2025ம் ஆண்டு NEET தேர்வுக்கான இலவச பயிற்ச்சி வகுப்பு!
This 1 year long free coaching is exclusively for students from govt & aided schools.
Orientation session on March 27th at Rajapalayam.
Register today @ https://t.co/5yr2iphtNH
https://t.co/gJVkZj9Djk
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், வரும் பாராளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமர் பொறுப்பேற்க வேண்டுமென்று, கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் முனைப்புடன் பணியாற்றும் தன்னார்வலர்களைச் சந்தித்து உரையாடியதில் மகிழ்ச்சி.
தமிழகத்தில் மக்கள் விரும்பும் நேர்மையான அரசியல் மாற்றம், எட்டும் தூரத்தில் இருப்பதை உறுதி செய்யும் விதமாக, தன்னலமின்றிப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தன்னார்வலருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய தினம், கோயம்புத்தூர் கவுண்டன்பாளையம் சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஊழியர் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
கவுண்டன்பாளையம் சட்டமன்றத் தொகுதி அனைத்துக் கட்சி பூத் உறுப்பினர்களும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், @BJP4Tamilnadu சார்பாக, மாவட்ட நிர்வாகிகள், பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், மண்டலத் தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
On board the Namo Bharat Train with our enthusiastic youngsters and the exceptional all-women team at the helm. A moment of immense pride as we journey towards a developed and prosperous India.
விதை ஒன்று முளைத்து, பெரும் விருட்சமாக வளரும்போது, பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்வது இயற்கையே. அந்தத் தடைகளை எல்லாம் தகர்த்து வளர்ந்து, பலருக்கும் உதவும் மரமாவது அந்த விதையின் இயல்பு. தமிழக பாஜகவும் அப்படித்தான்.
@annamalai_k அறிவாலய அரசின் அராஜக ஆட்சியை தூக்கி எறியப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இனி ஒவ்வொரு நாளும் அதிரடி அரசியல் தான்.
களத்தில் அணி திரள்வோம் !
வென்று காட்டுவோம் !
குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப் போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது பெரும் வினோதம்.
திமுக அரசின் உத்தரவின் பேரில், நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய @BJP4Tamilnadu சகோதர சகோதரிகள் மீது, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பொதுமக்களை ஏய்த்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் திமுக, எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும்.
பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) நேற்று காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர் திரு @vivinbhaskaran அவர்களின் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும் ஊழல் திமுக அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.