இன்று இறந்த கீழிருக்கும் படத்திலுள்ள D. B. S. Jeyaraj, மற்றும் இந்து ராம், சோ, R. K. Radhakrishnan எல்லோரும் புலிகள் இருந்த காலத்தில், அவர்களுக்கு எதிராக narrative இனை உருவாக்கி கொண்டிருந்தவர்கள்.
அவர்கள் இயங்கிய ஊடக தளத்தில், புலிகளுக்கு எதிராக இயங்கி “கணிசமான வெற்றியையும்” அடைந்தவர்கள்.
அப்படிப்பட்ட ஒருவருக்கு திமுகவின் கனிமொழி எழுதிய அஞ்சலி. 😎
#இந்தியத்_துரோகம்
@KanimozhiDMK
தேசியத் தலைவர் உயிருடன் இருப்பதாக கூறி தேசியச் சொத்துகளை ஏப்பம் விடும் பேர்வழிகளுக்கு இந்தக் காணொளி கசக்கத்தான் செய்யும்.
லெப் செல்லக்கிளி அம்மான் அவர்களின் சகோதரரும்,முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான திரு கனகரத்தினம் அவர்களின் அண்மைய நேர்காணல் ஒன்றிலிருந்து.
#போலித்தேசியவாதிகள்
#துரோகிகள்_களையெடுப்பு
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிப்பு
_______________________
இனப்படுகொலை நடைபெற்று 17 ஆண்டுகள் ஆகிய ஆகிய நிலையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் மக்களினுடைய உயிர் காத்த ஒரு உணவாக இருந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நினைவு கூர்ந்து இன்றைய முள்ளிவாய்க்கால் வாரத் தொடக்க நாளில் வல்வெட்டி துறையில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சினை மக்களுக்கு வழங்கி வைத்தது. தொடர்ந்து நெல்லியடி கொடிகாமம் ஆகிய பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
இதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினுடைய சங்கம் என அனைவரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#மே18
#தமிழர்_இனவழிப்பு
தமிழ்தேசிய சித்தாந்தத்தின் ‘குறைந்தபட்ச இலக்கு’ எது?
தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தை தமிழ்தேசிய சித்தாந்தம் கைப்பற்ற வேண்டும்.
தமிழ்தேசியம் என்ற சித்தாந்தமே தமிழினத்திற்கு ஆரியமும், திராவிடமும் தீயது என்ற புரிதலில் இயங்குவது.
தமிழ்தேசிய சித்தாந்தம் மீதான எனது ஆதரவு என்பது தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தை தமிழ்தேசியம் கைப்பற்றவேண்டும் என்பதுதான்.
அதை கைப்பற்றுவதற்கு ஒரு கருவி தேவை. இந்த நேரத்தில் இருக்கும் ஒரே கருவி சீமான். ஏனெனில் வேறு கருவிகள் கைவசம் இல்லை.
இன்று திராவிட கட்சிகள், திராவிட அறிவுஜீவிகள், திராவிட ஊடகவியலாளர்கள், பிறமொழி பேசும் முக்கியஸ்தர்கள் என சகலரும் ஒன்று திரண்டு நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர்ப்பது நாம் தமிழர் கட்சியைத்தான்.
ஏனெனில் தமிழ்தேசியம் வளர்வது அவர்களது அடிமடியில் கைவைத்துவிடும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது.
நாளை தமிழ்தேசியம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய பின்பு, தமிழ்நாட்டில் பல தமிழ்தேசிய கட்சிகள் உருவான பின்பு இருப்பதிலேயே நேர்மையான தமிழ்தேசிய அரசியல்வாதி யார் என தேடி பார்ப்பேன்.
அதுவரை எனது தெரிவாக இப்போது இருப்பது சீமான் மட்டுமே.
#NTK
@Seeman4TN
கஸ்தூரியார் வீதியில் வெடிச்சத்தம்
பு லிக்கொடியல்ல வேறு ஏதோ
புதுக்கொடியுடன் சிலர்..
அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது
பாம்பன் வழியாய் தமிழீழமும்,
பலாலி விமானத்தில் விடுதலையும்,
ஒரு விசிலடியோடு கனவு மெய்ப்பட்டு
தமிழன் ஆட்சி தலைவிரித்தாடுமாம்.
எடேயப்பா..!!!!
இது தெரியாமல் மேதகு பிரபாகரன்
படிப்பை விட்டு பதினாறில் புறப்பட்டு
செல்லக்கிளி அம்மான் மாட்டை விற்று..
சிவகுமாரன் சைனைட் கடித்து..
சோதியா மாலதி வானதி கஸ்தூரி..
விடியல் காண வீழ்ந்தது வீண் தானோ..??
கைகாலிழந்து கண்ணை போரில் கொடுத்து
இன்னமும் இடுப்புக்கு கீழியங்காமல்
இருக்கும் ஈழ தேசத்தில்
கல்லடித்தோ அன்றி முள்ளேறியோ
ஒரு முனகலறியாதவனை
தன் தலைவனென்கிறது தறிகெட்ட நம் தெரு!
இடுப்பைக் கிள்ளி
இன்னும் கீழும் தடவி கழுத்துக்கு கீழிறங்கி
காம சூத்திராவை காட்டி பாடியாடுவதை
விட்டு வந்தால் தியாகமாம்
ஏற்றுக்கொண்டு விட்டது எம்மினம்!
செம்மறிக்கூட்டமே
சினிமா கதையல்ல ஈழ வரலாறு
இரத்தமும் சதையும்
நேற்று கண் முன்னே நடந்த கால நிஜம்
ஒரு பிடி தாய் மண்ணை பற்றி பிடித்தபடியே
நஞ்சு கடித்த ஜெயத்தை தெரியுமா?
அவன் எங்கள் தளபதி!
உன் பிள்ளைக்கு எவனை காட்டுகிறாய்?
நொண்டி நொண்டி காலம் பூராவும் களத்திலேயே நின்றானே பால்ராச் அறிவாயா?
அரைவேக்காடே புத்திஜீவிகளின்
நிலமென்றும் பெயருண்டு,
புலியை ஈன்ற பெருவயிறிது!
புறநானூற்றை புதுப்பித்துக்காட்டியது
நேற்றுத்தான் ரெடி ரேக் அக்சனல்ல.
இந்நில இயல்பு வெடி துப்பாக்கி கந்தகம் கரும்புலி உயிருடன் ஊதியெறிந்த உன்னதம்!
எங்கு எவனாவது வெல்லட்டும்
இங்கு நாம் அவனாக முடியாது
நாம் நாமாக இருப்போம்
வல்லமையாய் இருந்தபோது
வந்திறங்கியது எங்கள் வாசலில் உலகம்.
வாலாட்டத் தொடங்கினால்
இன்னொருவர் பின்னே இழுபடுவதே
இனியெங்கள் வரலாறாய் முடியும்!
எழுத்து வடிவம் -பொன்காந்தன்
#fypage #JaffnaTamil #TamilNews #ஈழம் #மேதகு #TamilNews #tvk #மேதகு #வரலாறு
தமிழினத்தின் விடிவிற்காக இறுதிவரை, தீரமுடன் போராடித் தமிழீழ மண்ணில் வீரகாவியமான இம்மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வில் தமிழீழ மக்கள் அனைவரும் கலந்து கொண்டு, எமது வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பொன்விழா!
தேசியத் தலைவர் பிரபாகரனின் தலைமையில், ஒற்றைத் துப்பாக்கியோடு தொடங்கி, மாவீரர்களின் அர்ப்பணிப்போடு, நிழல் அரசு நிறுவி, தமிழரின் தாகத்தை உலகுக்கு உணர்த்திய மாபெரும் போராட்டத்தின் பொன்விழா!
உயிரையே கொடையாக்கி, இரத்த மழையில் குளித்து, நெருப்பாற்றை நீந்திக் கடந்து, தமிழரின் தாகத்திற்காகத் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் வழியில், அவர்களின் தியாகத்தில், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்றே இன்னுயிர் ஈந்த ஆயிரம் ஆயிரம் வேங்கைகளின் சாட்சியாக, இந்தப் பொன்விழாவை உலகத் தமிழர்கள் அனைவரும் சேர்ந்து போற்றுவோம்!
#LTTE50
#தமிழீழ_விடுதலைப்_புலிகள்
தமிழினப் படுகொலைக்கு துணைபோன கொலைஞர் கருணாநிதியை தோற்கடித்தது தமிழ்ச்சமூகம் இழைத்த மாபெரும் தவறு என்றும்,வரும் தேர்தலில் மீண்டும்
தி மு க ஆட்சிக்கதிரையில் ஏறி வரலாறைப் படைக்கவேண்டும் என்றும் வேல்முருகன் சூளுரைத்துள்ளார்.
ஐயா வேல்முருகன் அவர்களே.!
உங்களுக்கு எதற்கு தனிக்கட்சி
அதனை கலைத்துவிட்டு திமுக வில் இணைந்து பயணிக்கலாமே.
ஈழத்தமிழர்களின் மேடைகளில் பேசும்போது தமிழினத் தலைவர் மேதகு பிரபாகரன் என்பதும் தமிழகத்தில் பேசும்போது தமிழினத்தலைவர் கருணாநிதி என்பதும் எவ்வகையான ஏமாற்று வித்தைகள்.
தி மு க கொத்தடிமை என்பதனை தாங்கள் நிருபித்துவிட்டீர்கள்.
#திமுக_நாடக_கம்பனி
1998 காலப்பகுதி அது.
ஈழத்தில் யுத்தம் தொடர்ந்து நடந்துகொண்டிருந்த காலம் அது.
மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் இல்லை. அவசர தேவைக்கு அம்புலன்ஸ் வாகனத்தை அழைக்க முடியாது. தொலைபேசி வசதிகள் இல்லாத காலம் அது.
மேலும் மருத்துவமனைகளும் கிராமங்களில் இல்லை. மருத்துவர்கள் பற்றாக்குறை இன்னொரு புறம். கிராமங்களில் இருந்து மக்கள் மருத்துவமனைகளுக்கு வருவதாயின் மாட்டு வண்டிகளிலும், அல்லது அருகிலுள்ள முகாம் போராளிகளின் உதவியுடன் தங்கள் அவசர தேவைகளை பூர்த்தி செய்த காலம்.
அத்தகைய காலப்பகுதியில் கிளிநொச்சி இராமநாதபுரம் எனும் ஊரில் தலைவர் பிரபாகரன் அவர்களின் மனைவி பிள்ளைகள் வசித்து வந்தனர். அப்போது தலைவரின் மூன்றாவது மகன் பாலச்சந்திரன் பிறந்து இரண்டு வயது ஆகியிருந்தது. மாதத்தில் ஒரு முறையாவது தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது மகனை பார்க்க செல்வார்.
அப்படி ஒரு முறை மகனை பார்க்க இராமநாதபுரத்திலுள்ள மனைவி வீட்டிற்கு சென்று தங்கியிருந்த போது இரவு வேளையில் பாலச்சந்திரனை திருநீலகண்டன் எனும் பெரும் வகை மட்டைத் தேள் (பூரான்) கடித்து விட்டது. அந்த வகை பூரான் மிகவும் கொடிய விசம் கொண்டது. உடனடியாக போராளி மருத்துவர் அன்ரி (பத்மலோசினி) யிடம் தலைவரின் மனைவி மற்றும் பாதுகாப்பு போராளிகள் ஆகியோர் அழைத்துச் சென்று விட்டனர்.
அப்போது வீட்டில் தலைவருடன் துவாரகா மற்றும் சார்லஸ் அன்ரனி ஆகியோர் இருந்தனர். அன்று இரவு யாருமே தூங்கவில்லை. தலைவரும் கூட. இரண்டு வயது பாலகனுக்கு கடித்ததால் பாதுகாப்பு போராளிகள் மற்றும் வீட்டில் எல்லோருமே பதட்டத்துடன் இருந்தனர். ஆனால் துவாரகா தம்பிக்கு இப்படி நடந்துவிட்டதே உயிருக்கு ஆபத்து ஏற்படுமா என எந்த சலனமும் இல்லாமல் பாதுகாப்பு போராளிகளுக்கு தேநீர் தயாரித்து கொடுப்பதும் சிரித்து பேசுவதுமாக இருந்துள்ளார். இதனை அவதானித்த தலைவர் துவாரகாவை அழைத்து தம்பிக்கு தேள் கடித்து என்ன நிலையில் இருக்கிறான் என உனக்கு கவலை இல்லையா என கேட்டார்.
அதற்கு துவாரகா அப்பா என் தம்பிக்கு தேள் கடித்ததற்கு நீங்கள் எல்லோரும் பதறியடித்து உடனடியாக வாகனத்தில் ஏற்றி அம்மாவுடன் மருத்துவமனைக்கு அனுப்பி விட்டீர்கள். ஆனால் இந்த ஊரில் உள்ள கர்ப்பிணி அம்மாக்களும் சரி குழந்தைகளுக்கு பாம்பு கடித்தாலும் சரி யாரிடம் போவார்கள். அருகில் எங்காவது மருத்துவமனைகள் உள்ளதா என கேட்டார். அப்போது தலைவரும் சரி நீயே சொல்லு கிராமங்களில் உள்ள மக்களுக்கு என்ன செய்யலாம் என துவாரகாவிடம் கேட்டபோது, எமது மருத்துவ போராளி அண்ணாக்களை ஒவ்வொரு ஊர்களுக்கும் மக்களுக்கு சேவையாற்ற விட முடியாதா? என கேட்டதும்,

இது நல்ல யோசனைதான் எனவும் நாளையே இதற்கான ஒழுங்குகளை செய்வதாக துவாரகாவிடம் கூறி படுக்கைக்கு சென்றுவிட்டார்.
அதன்படி தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் சிந்தனையில் உருவாகி ஈழத்தின் மருத்துவமனைகள் இல்லாத கிராமங்களுக்கு திலீபன் ஞாபகார்த்த மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன.அங்கு மருத்துவ போராளிகள் உதவி மருத்துவர்களாக நியமிக்கப்பட்டு அம்புலன்ஸ் வாகனமும் கொடுக்கப்பட்டது. மக்களுக்கு இறுதி வரை சேவையாற்றினார்கள்.
இதில் இன்னொரு முக்கிய விடையம் என்னவெனில் யுத்த நிறுத்த காலப்பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த பிரதேசங்களில் அமைக்கப்பட்ட திலீபன் மருத்துவமனைகளில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரும் சென்று மருத்துவப் போராளிகளிடம் தங்கள் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர். அவர்களுக்கு தெரியும் புலிகள் எதிரிகளாக இருந்தாலும் மருந்துகளை மாற்றிக்கொடுத்து துரோகம் செய்ய மாட்டார்கள் என்று…
#சல்லியர்கள்
சுடலை ஸ்டாலினுக்கு கஜேந்திரகுமார் பொன்னாடை போர்க்கும் அளவுக்கு அவர் ஈழத்தமிழருக்கு அப்படி என்ன செய்துவிட்டார்.
தமிழினப் படுகொலையின் சூத்திரதாரி கட்சிகளுக்கு துணைபோவதைத்தானே இந்த சுடலை செய்து வருகிறது.
#சுடலை
சரத்பொன்சேகா மட்டுமல்ல கோத்தாவும் மகிந்தவும் தாமே வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டோம் எனக்கூறினாலும் தமிழர் இனப்படுகொலை விசாரணையை மேற்கொள்ள இந்தியா விரும்பாது.ஏனெனில்
அதனை செய்யச்சொல்லி உத்தரவிட்டதே இந்தியாதான்.
அநுர ஆட்சியில் அமர்ந்ததும் தமிழர் இனப்பிரச்சினை தொடர்பாக கூறிய முதல் வாசகமே “இறுதிப்போர் தொடர்பாக தமது படையினர்மீது
விசாரணை மேற்கொள்ள எவரையும் அனுமதியோம் என்பதே.
#சிங்களப்பேரினவாதம்
#இந்தியத்துரோகம்
@eezhanesan கொலைஞர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து போரை நிறுத்தியது போன்று,
சுடலை ஸ்டாலினும் உண்ணாவிரதம் இருந்து ஏக்கய இராட்சியத்தை தடுத்து தமிழரை காப்பாற்றிடுவார்.😂😂
நம்புங்க மக்காள்.
இதைத்தான் சொல்வது ‘சரணாகதி அரசியல்’என்று
இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, அடல்பிகாரி வாஜ்பாய், மன்மோகன் சிங், நரேந்திர மோடி, என்று குறிப்பிடத்தக்க பிரதமர்கள் இந்தியாவை நிர்வகித்திருந்தாலும், ஈழத்தமிழர் தொடர்பான இந்திய வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் நிகழ்ந்ததாக தெரியவில்லை. ஆள் மாறி இருக்கின்றது, கட்சி மாறி இருக்கின்றது, சூழ்நிலைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, ஆனால் ஈழத்தமிழர் மீதான இந்தியாவின் நிலைப்பாடானது கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றமடையாமல் இருப்பதற்குரிய முக்கிய காரணம், இந்திய ஒன்றியத்தை இயக்குகின்ற இந்திய உளவுத்துறையும், அதனோடு இணைந்து கொள்கை வகுப்பாளர்களாக இருப்பவர்களுமே காரணமாகும்.
கடந்த காலங்களில் எவ்வாறு ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இந்தியா தமிழர்களுக்கான துரோக நகர்வுகளை செய்து வந்திருக்கிறது என்ற உண்மையை உரைப்பதற்கான சான்றே தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தொடரும் இந்திய அரசின் தடை நீடிப்பு.
இந்தியா திராவிடம் என்ற போர்வையில் தமிழ்நாட்டையும், வெளியுறவு கொள்கை என்ற ரீதியில் தமிழீழத்தையும் அழித்தார்கள், அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
#இந்தியத்துரோகம்
கடந்த காலத்தில் ஈஸ்டர் குண்டுவெடிப்பில் எம் மக்கள் இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த போது.... சுவிட்சர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC)"நாட்டிய மயில்" நிகழ்வில் மெய்மறந்து களிகொண்டு கிடந்தது.
இவர்களுக்கு எப்போதுமே நிதி ஒன்றுதான் நோக்கம். இவர்களுக்குப் பின் அலையும் மக்களுக்கு அவர்களுடைய மேடைகளும் பட்டங்களும் பதவிகளும் பெயர்களும் புகழ்களும் தான் முக்கியம்.
இந்தக்கும்பலுக்கு கூத்தும் கும்மாளமும்தான் இப்ப முக்கியம்.
எப்படா மாவீரர்நாள் முடியும் கூத்தடிக்கலாம் என்று காத்திருக்கும்
மங்குனிக் கூட்டம்.