சாதி வெறியர்களால் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளாகி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் தேவேந்திர ராஜ் அவர்களை இன்று சந்தித்தேன். அவரது பெற்றோர் தங்க கணேஷ் மற்றும் மாலதி அவர்களுக்கு ஆறுதல் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூபாய் இரண்டு லட்சத்து பத்தாயிரம் (ரு2,10,000) நிதியாக வழங்கினேன்!
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை தலைவர் (Dean) ரேவதி பாலன் அவர்களை சந்தித்து தேவேந்திர ராஜின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். தீவிரமான சிறப்பான சிகிச்சை அளித்து மாணவன் தேவேந்திரர ராஜை காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்?
எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை #அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம்.
அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் உண்மையான எதிரிகள். இதனையே விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம்.
சங்பரிவார்கள் புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள்.
புரட்சியாளர் அம்பேத்கர் "விசுவரூபம் " எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும்!
@AmitShah@PMOIndia@RahulGandhi #Constitution #DrAmbedkar
விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி திருநாவலூரில் சி.எஸ்.ஆர் நிதியில் நலத்திட்டப் பணிகள் செய்துதர வேண்டும்
என்.எல்.சி சேர்மனை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்
====
விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி, திருநாவலூர் வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களில் குடிநீர் வசதி, பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை ஆகியவற்றை அமைத்துத் தருமாறு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு எம்.பிரசன்ன குமார் அவர்களை இன்று மாலை நேரில் சந்தித்துக் கடிதம் அளித்து வலியுறுத்தினேன்.
அந்தக் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
“ இந்தியாவில் உள்ள முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக என்.எல் சி.இந்தியா லிமிடெட் நிறுவனம் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தனது லாபத்தில் சுமார் 40 கோடி ரூபாயைக் ‘கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி ( சி.எஸ்.ஆர்) திட்டத்தின் கீழ் அது செலவிடுகிறது. 2019ஆம் ஆண்டு கோவிட் தாக்குதலின் போது எனது வேண்டுகோளை ஏற்று விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை சி.எஸ்.ஆர் நிதியின் கீழ் அமைத்து தந்ததை நன்றியோடு நினைவு கூர்கிறேன்.
என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 2021ல் திருத்தப்பட்ட சி எஸ் ஆர் கொள்கையில், ஒரு நிதியாண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் நிறுவனம் ஈட்டிய லாபத்தில் 2% தொகையை சி.எஸ்.ஆர் நடவடிக்கைகளுக்குச் செலவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தங்களது மேலான பரிசீலனைக்காகப் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறேன்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் வட்டம் எனது விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது. இந்த மாவட்டத்தில் கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவற்றில் பின்தங்கிய வட்டங்களில் அது ஒன்றாகும்.
எனவே , திருநாவலூர் வட்டத்துக்கு உட்பட்ட பின்வரும் கிராமங்களில் சி.எஸ்.ஆர் நிதியின் கீழ் பின்வரும் பணிகளைச் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
1. ஒடப்பன்குப்பம் பஞ்சாயத்தைச் சேர்ந்த எலவத்தடி கிராமத்தில் மக்களின் குடிநீர் வசதிக்காக இரண்டு ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துத் தர வேண்டும்;
2. சேந்தநாடு பஞ்சாயத்துக்குட்பட்ட ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் ஒன்றை அமைத்துத் தர வேண்டும்.
3. ஆண்டிக்குழி பஞ்சாயத்து கல்லமேடு, விஜயங்குப்பம் பகுதிகளில் அங்கன்வாடி கட்டிடங்களை அமைத்துத் தர வேண்டும்;
4. வாணாம்பட்டு மட்டிகை கிராமத்தில் ஆழ்துளைக் கிணறு ஒன்றை அமைத்துத் தர வேண்டும் ;
5. கிழக்கு மருதூர் ஆதிதிராவிடர் குடியிருப்பில் மேல்நிலை குடிநீர்த் தொட்டி ஒன்றை அமைத்துத் தர வேண்டும்
திருநாவலூர் வட்டத்துக்குள் சேந்தநாடு பகுதியில் இரண்டு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், 9 பஞ்சாயத்து யூனியன் பள்ளிகள், ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன. அவற்றில் குறைந்த பட்சம் தலா ஒரு ஸ்மார்ட் வகுப்பறையாவது அமைத்துத் தர வேண்டும்.
இந்தப் பணிகளை எதிர்வரும் 2025 - 26 நிதியாண்டில் செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”
எனக் குறிப்பிட்டுள்ளேன். என்.எல்.சி இந்தியா லிமிடெட் தலைவரை சந்தித்தபோது திரு குணவழகன் உடனிருந்தார்.
#Watch | "கலைஞர் மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறந்தது யார்? TASMAC என்ற நிறுவனத்தை உருவாக்கியது யார்? ஏன் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?"
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேச்சு.
#SunNews | #VCK | @thirumaofficial
"கடைசி மனிதனுக்கும் சனநாயகம்!
எளிய மக்களுக்கும் அதிகாரம்!
ஆட்சியிலும் பங்கு !அதிகாரத்திலும் பங்கு ! - என 1999ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி " -
என்று கடந்த செப்-12 ஆம் தேதி மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல செயற்குழுவில் ஆற்றிய உரையின் சுருக்கம்..
முழு காணொளி இணைப்பு: https://t.co/zzcYTSyE6K
பூம்புகார்க் கல்லூரியில் இளங்கோ மன்றத்தைத் துவக்கி வைத்தேன்
மயிலாடுதுறை மாவட்டம் மேலையூரில் உள்ள பூம்புகார்க் கல்லூரியில் இன்று இளங்கோ மன்றத்தைத் துவக்கி வைத்தேன். அதற்கு வைப்பு நிதியாக இலட்ச ரூபாயை அந்தக் கல்லூரியின் தாளாளரும் இந்து சமய அறநிலையத்துறையின் இணை இயக்குநருமான திரு சிவக்குமார், கல்லூரியின் முதல்வர் ஆகியோரிடம் வழங்கினேன்.
விசிக தேர்தல் பணிக்குழு செயலாளர் குணவழகன், மாவட்டச் செயலாளர்கள் தாமு இனியவன், மலைச்சாமி, விடுதலைச்செல்வன், அறிவுக்கரசு, மேனாள் மாவட்டச் செயலாளர்கள் சூ.க.ஆதவன், வ.க.செல்லப்பன், வேலு குணவேந்தன், நிர்வாகிகள் அன்புச்செல்வன், கார்வேந்தன், ஜீவகன், ஓவியர் அரசு, இமான், சிவராஜ், கங்காதரன், சத்தியசீலன், மாத்தமிழன், சிவ பிரபாகரன், மாரிமுத்து, தேவா, உலக கணிவண்ணன், செந்தில்குமார், இன்பவளவன், பெரு சரித்திரன் உள்ளிட்ட சுமார் 50 தோழர்கள் உடன் வந்திருந்தனர்.
மேலையூர் - பூம்புகார்க் கல்லூரி!
இளங்கோவடிகள் மன்றம் துவங்க நிரந்தர வைப்பு நிதி வழங்கும் விழா - பொதுச்செயலாளர் @WriterRavikumar தலைமையில் கலந்து கொண்டோம்!
“தலித் மக்கள் நிம்மதியாகத் தூங்க முடியும் “
வன்னியர்களும் - பட்டியல் சமூகத்தினரும் சேர்ந்து ஆட்சியைப் பிடிக்கலாம் என பாமக நிறுவனர் பேசுவதால் ஒரு நன்மை இருக்கிறது. இதனால் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமை குறையும். கிராமப் பகுதிகளில் உள்ள தலித் மக்கள் ‘நம் வீடு எரியாது’ என்று நிம்மதியாக இரவில் தூங்க முடியும்.
புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் நான் பேசியதன் ஒரு பகுதி 👇🏿
சௌந்தர்யாவுக்கு என் அஞ்சலி
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட எலவனாசூர் கோட்டையைச் சேர்ந்தவர். இந்த வாரம் நான் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்த போது 23.07.2024 அன்று பிரதமர் நிவாரண நிதியில் உதவி கேட்டு சௌந்தர்யா என்பவருக்கான கடிதத்தை என் உதவியாளர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பினார். நான் அதை பிரிண்ட் அவுட் எடுத்து உடனே கையொப்பமிட்டு விரைவு தபாலில் அவருக்கு அனுப்பி வைத்தேன். சௌந்தர்யாவின் குடும்பத்தினரும் நேற்று (25.07.2024) விழுப்புரத்திலுள்ள எனது அலுவலகத்திலிருந்து அந்தக் கடிதத்தைப் பெற்றுச் சென்றிருந்தனர். ஆனால் அந்தக் கடிதம் அவருக்குச் சென்று சேர்வதற்கு முன்பே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த செய்தி என்னை நிலைகுலைய வைத்து விட்டது. அவருக்கு என் அஞ்சலியையும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
விழுப்புரம் மாவட்டத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் 225 பேருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து நான் உதவி பெற்றுத் தந்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலோர் புற்று நோயாளிகள் தான். அந்த நிதி உதவி மூலம் பெற்ற சிகிச்சையினால் பலர் குணமடைந்திருக்கிறார்கள், உயிர்பிழைத்திருக்கிறார்கள்.
மீண்டும் நான் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த இரண்டு மாதங்களில் மட்டும் 13 பேருக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக பிரதமர் நிவாரண நிதியில் உதவி கேட்டு கடிதம் தந்துள்ளேன்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏன் இவ்வளவு அதிகமாக புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது என்பதைப்பற்றி தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அவ்வாறு ஆய்வு செய்து அதற்கான மூல காரணம் கண்டறியப்பட்டால் நிச்சயம் பலரது உயிர்களைக் காப்பாற்ற முடியலாம். மாண்புமிகு தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு தம்பி கலையரசன் அவர்களின் மறைவு!
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இயக்கத் தோழர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்!
விடுதலைச் சிறுத்தைகளின் செம்மாந்த வீரவணக்கம்!
அஞ்சலி
தோழர் கலையரசன் என்னும் சூசைநாதன் அவர்களின் மறைவுச் செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவருக்கு என் அஞ்சலி!
அவரை இழந்து வாடும் அனைவருக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்
தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள் அறிவிப்பு :
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 'இண்டியா' கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளர் போட்டியிடுகிறார். அவரது வெற்றிக்கு களப்பணிகள் ஆற்றிட விசிக சார்பில் பணிக்குழு நியமிக்கப்படுகிறது.
பிறந்த நாள் வாழ்த்து பெற்றேன்
ஜூன் 10 எனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். மாவட்டச் செயலாளர்கள் பெரியார், விடுதலைச் செல்வன்,அறிவுக்கரசு, பொன்னிவளவன், திலீபன், மலைச்சாமி, தனஞ்செயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு பொதுக்குழு
விழுப்புரத்தில் திரு ஆறுமுகம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுக்குழுவில் பங்கேற்று உரையாற்றினேன். மாவட்டச் செயலாளர்கள் பெரியார், அறிவுக்கரசு; சங்கத்தமிழன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.