சூன் 14,
சேகுவேரா அவர்களின் 97-வது பிறந்தநாள்:
சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா நாட்டின் மீட்பு போராளி இன்றும் உலகமே போற்றப்பட்டு வரும் சிறந்த போராளியின் பிறந்தநாளில் அவரின் போர்க்குணத்தை நினைவில் கொள்வோம்!
@thirumaofficial
இண்டியா கூட்டணி கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் விசிக சார்பில் நான் முன் கருத்துகள். (ஆங்கிலத்தில்..)
Greetings to all the leaders of the INDIA Alliance parties. Vanakkam.
The future of India’s students has been gravely jeopardized by the BJP government’s mishandling of the education sector. A series of question paper leaks has led to the cancellation and re-conduct of major examinations, exposing widespread irregularities and systemic failures. Lakhs of students have suffered as a result, yet no one in the BJP government has accepted responsibility. The Union Education Minister, Shri Dharmendra Pradhan, who ought to be accountable, has remained conspicuously silent.
In response, students and young people across the country have spontaneously taken to the streets in protest. This development should serve as a wake-up call for all political parties. The present situation has arisen in part because we, as political forces, have failed to consistently mobilise and fight for the issues confronting the youth. We should not regard Cockroach Janta Party an organisation that raise the concerns of young people as adversary. Instead, the INDIA Alliance must take up these issues on a broader platform, amplify the voices of the youth, and launch coordinated nationwide protests.
The Narendra Modi government’s flawed economic and foreign policy decisions have pushed the country towards a deep financial crisis. Our foreign exchange reserves have witnessed a steep decline, causing widespread concern. Rather than presenting a credible roadmap to address the situation, the Prime Minister appears content with merely urging citizens to tighten their belts. Just as the government’s incompetence during the COVID-19 pandemic resulted in immense suffering and the loss of countless lives, a major economic crisis is now unfolding that threatens the livelihoods of crores of Indians. It is our duty to expose this reality and spearhead a nationwide movement against the failures of the Narendra Modi government.
To effectively carry forward such struggles, mutual trust, understanding, and unity among opposition parties are indispensable. The approach adopted by the Congress party during the recent elections has caused dissatisfaction among several constituents of the INDIA Alliance. In particular, the Congress party’s electoral strategy in Kerala, West Bengal, and Tamil Nadu weakened parties that have been among the strongest pillars of this alliance, including the Trinamool Congress, the Communist Party of India (Marxist), and the DMK. This is neither desirable nor beneficial to the larger cause of opposition unity. The Congress party must therefore undertake a sincere reassessment of its approach and explore ways to further strengthen and consolidate the alliance.
The INDIA Alliance brings together both national and regional parties. Differences of opinion are natural in such a broad coalition. However, such differences must not be allowed to escalate into divisions. The responsibility for maintaining unity rests not only with regional parties but equally with national parties. At a time when Centre–State relations are under unprecedented strain, national parties must re-evaluate their positions through the lens of federalism and cooperative governance.
In this context, the INDIA Alliance must adopt a clear and unequivocal position on the three-language policy being promoted by the BJP-led Union Government. Furthermore, I urge the Alliance to examine and deliberate upon the recommendations submitted by the Justice Kurian Joseph Commission to the Government of Tamil Nadu on Centre–State relations. Such discussions will contribute significantly to strengthening federal principles and safeguarding the rights of the states within the Indian Union.
Kind Regards..
Dr.Thirumaavalavan MP
கண்ணியத் தமிழர் #காயிதேமில்லத் அவர்களின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (5-6-2026) சென்னை திருவல்லிக்கேணியில் வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் விசிக சார்பில் #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்.
@thirumaofficial
பெட் ரோல் டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை
பெட் ரோல் டீசல் விலையை நான்காவது முறையாக ஒன்றிய பாஜக அரசு உயர்த்தியுள்ளது. இன்று ஒரே நாளில் லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ள நிலையில் இந்த விலை உயர்வு மக்கள் மீது சுமத்தப்படும் அநீதியான சுமையே ஆகும். இதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்படவுள்ள நிலையில், கடந்த வார சரிவைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை இன்று ஒரு பீப்பாய்க்கு 91 டாலரை நோக்கி சுமார் 5% சரிந்துள்ளன. அமெரிக்க - ஈரான் இடையே ஏற்படுத்தப்படப் போவதாகக் கூறப்படும் இந்த ஒப்பந்தம், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும், போர் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், முடக்கப்பட்ட சில ஈரானிய சொத்துக்களை விடுவிப்பதற்கும், மற்றும் தெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் கூடுதல் பேச்சுவார்த்தைகளுக்கும் வழிவகுக்கும் என்று அறிக்கைகள் சுட்டிக்காட்டின. ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மீண்டும் திறப்பது இந்தியா உள்ளிட்ட முக்கியமான ஆசிய நாடுகளின் பொருளாதாரங்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிகளில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகச் செல்வதால், இது எண்ணெய் விலைகளை கணிசமாகக் குறைக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தம் எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பில் கச்சா எண்ணெய் விலை கடந்த 2 வாரங்களில் இல்லாத அளவுக்கு இன்று சரிந்து பீப்பாய் ஒன்றுக்கு 92 டாலர் என விற்கப்படுகிறது. இதையொட்டி இங்கும் பெட் ரோல் டீசல் விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்திருக்கும் சூழலில் ஏழை எளிய மக்களின் மீது சுமையை அதிகரிக்கும் விதமாக மோடி அரசு இன்று ஒரே நாளில் பெட் ரோல் டீசலில் லிட்டருக்கு சுமார் 3 ரூபாய் விலையை உயர்த்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில் எந்தவிதத் தர்க்கமோ நியாயமோ இல்லாமல் இங்கே விலையை உயர்த்துவது ஏற்புடையது அல்ல. எனவே இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்துகிறோம்.
இவண்
தொல். திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்
விசிக
விசிக வரலாற்றில் இன்று!
@thirumaofficial அவர்கள் முதல் முறையாக கடலூர் மாவட்டம், மங்களூர் தொகுதியில் வெற்றிபெற்று விசிக முதல் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட நாள்: (22-05-2001)
தமிழக அமைச்சரவையில் முதல் முறையாக @VanniArasu_VCK அவர்கள் அமைச்சராக பதவியேற்றார்.
(22-05-2026)
கடலூர் மாவட்டம்,
குறிஞ்சிப்பாடி தொகுதி மாவட்டம்!
அயோத்திதாசர் பண்டிதர் 181 வது பிறந்தநாள் புகழ் வணக்கம் செலுத்திய நிகழ்ச்சி நமது வெளிச்சம் தொலைக்காட்சியின் களத்தில் சிறுத்தைகள் பகுதியில்...
@thirumaofficial@velichamtvtamil
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிவாகை சூடிய தினம்!
(2021- மே 2, சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவு)
தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஐந்து ஆண்டு காலம் முழுமையாக இருந்து இன்றுடன் நிறைவு செய்கின்றனர்.
@thirumaofficial@velichamtvtamil
கட்சியின் உயர்நிலை முக்கிய பொறுப்புகளான மாநிலப் பொருளாளர் & மாநில முதன்மைச் செயலாளர் பொறுப்புகளை தலித் அல்லாதவர்களுக்கு வழங்கி கௌரவப்படுத்தி இருக்கிறார் சமூகநீதி பாதுகாவலர் #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள்!
இருவருக்கும் வாழ்த்துகள்...
@thirumaofficial@VckBalaji@aloor_ShaNavas
பாஜக மோடி அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறையை கண்டித்து விசிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்களும், பொதுச் செயலாளர் #துரை_ரவிக்குமார் அவர்களும் கருப்புச்சட்டை அணிந்து இன்று (16-04-2026) நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்றார்.
@thirumaofficial