ஆகஸ்ட் 10 - #கறுப்பு_நாள்:
----------------------------------------------
தலித் கிறித்தவரின் நெடுநாளைய அறப்போராட்டம் வெல்லட்டும்!
தலித் கிறித்தவர்களை
எஸ்.சி பட்டியலில் சேர்த்திட வேண்டும்!
தொல்.திருமாவளவன் அறிக்கை!
-------------------------------------
இந்து மதத்தைப் பின்பற்றும் பட்டியல் சமூகத்தினரை மட்டுமே அட்டவணை சாதிகளின் பட்டியலில் சேர்க்கவேண்டும் என 1950 ஆகஸ்டு 10 ஆம் நாள் குடியரசுத் தலைவரின் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதனால் கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைத் தழுவிய பட்டியலினத்தார் எஸ்.சி பட்டியலில் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டனர். எனவே, அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க அந்நாளை தலித் கிறித்தவர்கள் கறுப்பு நாளாகக் கடைபிடித்து வருகின்றனர். அவர்தம் நெடுநாளைய அறப் போராட்டம் வெற்றிபெற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்களது நியாயமான கோரிக்கையை ஏற்று அவர்களை பட்டியலினத்தில் சேர்த்திட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இந்து மதத்தைப் பின்பற்றுவோரைத்தான் எஸ்.சி பட்டியலில் சேர்க்கவேண்டும் என்ற குடியரசுத் தலைவரின் ஆணையில் 1956 ல் திருத்தம் கொண்டுவரப்பட்டு சீக்கிய மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோரையும் எஸ்சி பட்டியலில் சேர்ப்பதற்கு வகைசெய்யப்பட்டது. அடுத்து 1990 ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தால் பௌத்த மதத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்டோரையும் எஸ்சி பட்டியலில் சேர்த்துக்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைத் தழுவிய மக்களை மட்டும் அப்பட்டியலில் சேர்க்கப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்திய ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட 'ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்' தலித் கிறித்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என அறிக்கை அளித்து 16 ஆண்டுகள் ஆன பின்னரும்கூட இந்திய ஒன்றிய அரசாங்கம் அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.
பின்னர், 2022ல் மேலும் இதுகுறித்து ஆய்வு செய்ய கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக அலுவலக இடம் கொடுக்கப்பட்டதை தவிர வேறெந்த வசதிகளும் இன்னும் செய்துதரப்படவில்லை. தேவையான வசதிகள் செய்து தரப்பட்டால் இக்குழுவின் அறிக்கை அடுத்த ஆண்டு 2024ல் சமர்ப்பிக்கப்படலாம் என அவர் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் ‘கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் ஆதிதிராவிட மக்களை எஸ்சி பட்டியலில் சேர்த்து அவர்களுக்கான உரிமைகளை வழங்கிட வேண்டும்’ என தனித் தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் மீதான நடவடிக்கைகளும் இன்னும் ஒன்றிய அரசால் எடுக்கப்படவில்லை.
ஒருவர் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றுவதற்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண் -25இல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைத் தழுவிய தாழ்த்தப்பட்டோரை மட்டும் எஸ்சி பட்டியலில் சேர்க்காமல் வஞ்சிப்பது அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமையை மறுப்பதாகும். இந்த அநீதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு கடந்த 13 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டும் இந்து மதத்தின் சாதி கோட்பாடு எல்லா மதங்களையும் தொற்றிப் பாழாக்கிவிட்டதால் எந்த மதத்தைத் தழுவினாலும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்த உண்மை ஆட்சியாளர்களுக்குத் தெரிந்திருந்தும்கூட தலித் கிறித்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்காமல் பாரபட்சம் காட்டுகின்றனர். இந்தப் போக்கு மாறவேண்டும்.
சீக்கியம், பௌத்தம் ஆகிய மதங்களைத் தழுவியவர்களுக்குக் காட்டப்படும் பரிவு கிறித்தவத்தைத் தழுவிய பட்டியலினத்தவர்களுக்கும் காட்டப்படவேண்டும். இதில் ஓரவஞ்சனை செய்வது கூடாது என இந்திய அரசுக்கு சுட்டிக் காட்டுகிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விசிக.
#தலித்_கிறித்தவர்
நன்றி: @sathiyamnews
மின்சார வாரிய ஊழல் விவாதம்.
https://t.co/6KPziKXHkP
அடுத்து எந்த செய்தி தொலைக்காட்சி சேனல் விவாதம் நடத்த போகிறார்கள்?
#Arappor#EBscam
ஊழல் செய்வது அரசியல்வாதிகளின் வேலை, அவர்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு முட்டு கொடுப்பது அந்த கட்சி தொண்டர்களின் கடமை என்ற அவல நிலையில் இருந்து தமிழகத்தை மீட்பதற்கு நாம் என்ன செய்யலாம்? ஒரு குழுவாக இணைந்து ஊழல்வாதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதன் பயன் என்ன?
வாங்க பேசலாம். 400 கோடி Transformer ஊழலை அறப்போர் கண்டுபிடித்தது எப்படி?
#Arappor #TransformerScam #Tangedco
அதிமுக ஆட்சியில் இந்த ஊழல் நடக்கிறது. அவர்கள் ஆட்சியிலேயே கண்டுபிடிக்கப்பட்டு கண்ணன் பணியிடை நீக்கமும் செய்யப்படுகிறார். அடுத்து FIR போடப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று இந்நேரம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து கண்ணன் சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் கண்ணன் தொடர்ந்து பிழைப்பூதியம் வாங்கி சொகுசாக இருக்கிறார். திமுக அரசு ஒரு படி மேலே போய் பிழைப்பூதியத்தை அதிகரித்து கொடுக்க ஆரம்பிக்கிறது. இதெல்லாம் நீங்க சம்பாதித்த பணமாக இருந்தால் இப்படி அள்ளி கொடுப்பீர்களா அமைச்சர் @KN_NEHRU அவர்களே? ஒரு ஊழல் குற்றவாளி மீது FIR போட உத்தரவிட விடாமல் உங்களை தடுப்பது எது செயலர் @SDMeena_IAS அவர்களே?
ஊழல்வாதி கண்ணனை பாதுகாப்பது யார்?
Video - https://t.co/0BwOEfiET5
@CMOTamilnadu #Arappor #Udumalaipettai
Sources : Even after six days of the incident of alleged custodial death of Kandasamy aged 26, the deceased’s relatives have not received the remains so far.
They are now going to meet DIG Tirunelveli Range and present a petition demanding CB CID probe and compensation
There is a complete paralysis of administration in TN.
Govt doesn’t care about anyone except Senthil Balaji. @CMOTamilnadu@tnpoliceoffl
மணிப்பூர் 'கிறிஸ்து அவர்கள்' (கிறிஸ்தவர்கள்)
தங்களுடைய ஆலயங்கள் உடைத்து நொறுக்கப்பட்டதால், தீக்கிரையாக்கப்பட்டதால், மாநிலத்தில் அமைதி நிலவ, காங்போக்பி நெடுஞ்சாலையில் ஞாயிறு வழிபாடு செய்யும் மணிப்பூர் குக்கி பழங்குடியின கிறிஸ்தவர்கள்.