கவிப்பேரரசு திரு. @Vairamuthu, கழகத் தலைவர் திரு. @mkstalin நேரில் சந்தித்து, ஜூலை 13-ஆம் நாள் தனது பிறந்தநாளன்று, டெல்லியில் நடைபெறவுள்ள 60-ஆவது ஞானபீட விருது வழங்கும் விழாவில், தனக்கு ஞானபீட விருது வழங்கப்பட இருப்பதை தெரிவித்து, அதற்கான அழைப்பிதழை வழங்கினார். கழகத் தலைவர் அவர்கள் கவிப்பேரரசு அவர்களை வாழ்த்தினார்.
கொடுத்த வாக்குறுதியில் மோசடி செய்த விஜய்!
மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என வாக்குறுதியாக சொல்லிவிட்டு, தற்போது 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என சொல்கிறார். அதுவும் 500 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தினால் மட்டும்!
500 யூனிட் க்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் 200 யூனிட் இலவச மின்சாரமும் இல்லை என்பதே பெரிய மோசடி!
முன்பு இது போல நிபந்தனை இல்லாமல் அனைவருக்கும்
100 யூனிட் இலவச மின்சாரம் என்ற சலுகைகளும் தற்பொழுது இல்லாமல் போகும்...
ஆக இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லாமல் போவதை விட மக்களுக்கு மேலும் சுமையையே இது ஏற்படுத்தும்...
இந்த அறிவிப்பு மறைமுகமாக மின் கட்டண உயர்வையே காட்டுகிறது
#TVKFails
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
Our heads held high.
Our resolve is stronger than ever.
Our tribe will continue fighting for the people.
We are DMK.
Lead by the best of the best.
🫡 Thalaivar 🙏🏽 #DMKForever
எனது தனிப்பட்ட விருப்பம்!
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்!
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்
எங்கள் மண், எங்கள் உரிமை! மக்கள் தொகையைச் சரியாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது அநீதி. இந்தச் சதியை முறியடிக்கத் தமிழ்நாடே ஒன்றிணைந்து திரளும்!
தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்.!
#SayNoToNDA
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA