மூடர் கூட்ட அரசின் விளம்பர வெறியால் கடைமடையில் கருகும் பயிர்கள்!
மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் டெல்டாவின் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேராமல் சம்பா பயிர்கள் காய்கின்ற நிலையில், தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படவுள்ளதால் பயிர்களை எப்படி காப்பாற்றுவது என்று புரியாமல் டெல்டா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படாததால் ஏற்கனவே குறுவை சாகுபடி பொய்த்தது.
இப்போது சம்பாவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், செப்டம்பர் 1-ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்கு பதிலாக கொஞ்சம் தாமதமாக தண்ணீர் திறக்க வேண்டும் - அப்போது தான் நெல்மணி முளைத்து வருகின்ற காலகட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்று டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் நடைமுறை சிக்கல் புரியாமல், Reels வெறி கொண்டு அவசரகதியில் இந்த Dummy CM தண்ணீர் திறந்துவிட்டார். இப்போது உரிய நேரத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுகின்றன.
எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் - விவசாயிகளின் பேச்சையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு குறுவை - சம்பா இரண்டையும் இல்லாமல் செய்திருக்கிறது இந்த கோமாளி சர்க்கார்.
ஏற்கனவே அரிசி - பருப்பு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
தினத்தந்தியின் இன்றைய முதல் பக்க தலைப்புச்செய்தியே விலைவாசி உயர்வு பற்றித்தான் என்பது முதல்வருக்கு தெரியாதா?
இப்படிப்பட்ட சூழலில் நிர்வாகத்திறனற்ற இந்த ஆட்சியாளர்களால், உணவு உற்பத்தி மேலும் பாதித்து, விலைவாசி இன்னும் உயருகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேளாண்துறைக்கு செயலாளர் இல்லாததை நாம் சுட்டிக்காட்டிய பிறகு, வேளாண் செயலாளரை நியமித்த முதலமைச்சர், விவசாயிகள் பிரச்சினையை தீர்ப்பதற்கான Review Meeting-ஐயும் நாம் சொன்ன பிறகு தான் நடத்துவாரா?
இப்பிரச்சினை குறித்து உடனே ஆய்வுக்கூட்டங்களை நடத்தி, டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு அனைத்து நிவாரண உதவிகளையும் இந்த ஆட்சியாளர்கள் உடனடியாக வழங்க வேண்டும்.
#DeltaFarmers #Cauvery #MetturDam
திமுக ஆட்சியில் நீண்ட நாள் ஒப்பந்தம் எதையும் செய்யவில்லை என எப்போதும் போல பொய்யான தகவலை சொல்ல வேண்டாம் மின்துறை அமைச்சர் Collectionகுமார், Sorry, CTR நிர்மல் குமார் அவர்களே, ஒரு நாளாவது உண்மை பேசுங்கள்..
நடைமுறையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்சார கொள்முதலில் நீண்ட கால கொள்முதல் / நடுத்தர கால கொள்முதல் மொத்தம் 6240 MW.. அதில் 2021-2026ல் தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட நீண்ட கால கொள்முதல் / நடுத்தர கால கொள்முதல் 2825 MW..
தெரியாவிட்டால், மின்துறை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்..
த.வெ.க. ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம்! எதில் தெரியுமா? பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும்!
இவர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத்துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யைக் கேட்டுத்தான் ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள்.
மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம். அப்போதே சுதாரித்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
மின்துறை அமைச்சர் பஞ்சாபைக் காட்ட, முதலமைச்சரோ இலண்டன் பறந்துவிட்டார். இப்போது, கடைசி நிமிடத்தில் கதவைத் தட்டி, யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கப் போகிறார்களாம். கழக ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்கிய ஒப்பந்தங்களை இரத்து செய்துவிட்டு, இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் வாங்காத அதிக விலைக்கு வாங்குவதுதான் இவர்கள் கொண்டு வந்துள்ள மாற்றமா?
இது யார் வீட்டுக் காசு சார்? அ.தி.மு.க.வில் இருந்து மேலும் 15 பேரை purchase செய்யப் போகிறோம் என்று வேறு வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே? அதற்குப் பணம் போதாமல்தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என மக்கள் மனதிலும் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.
குறுவை பொய்த்த நிலையில், டெல்டா விவசாயிகளின் பேச்சைக் கேட்காமல், ஜோசியரின் பேச்சைக் கேட்டு மேட்டூர் அணையையும் தவறான தேதியில் திறந்து வைத்தார்கள். 5 கோடி ரூபாய் செலவில் சாலையோரத் தடுப்புகள் அமைத்து CM ரீல்ஸ் எடுத்ததைத் தவிர அதனால் விளைந்த பயன் என்ன? இப்போது சம்பா சாகுபடியும் சாத்தியமாகுமா எனத் தெரியாமல் கடைமடை விவசாயிகள் நீரின்றிப் பரிதவிக்கிறார்கள்.
இப்படி, முன்யோசனையும் இல்லாத மூளையும் இல்லாத ஒரு மூடர் கூட்டத்திடம் சிக்கி, நம் கண்முன்னே தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் த.வெ.க. அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது.
இவர்களை வழிநடத்த வேண்டிய முதலமைச்சரோ, உடுப்பி, இலண்டன், விஜயவாடா என மாதம் ஒரு ஊருக்குச் சென்று விழாவைச் சிறப்பிப்பதிலேயே குறியாக இருக்கிறார்.
மொத்தத்தில், ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை கூட அறியாத இந்த அறிவிலிகளின் அலட்சியத்தாலும் அழிச்சாட்டியத்தாலும் எதிர்வரும் மாதங்களைத் தமிழ்நாட்டு மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற அச்சம்தான் மேலோங்குகிறது.
#Collectionகுமாரு
"மிகக் கூடுதல் விலையில் மின்சாரம் வாங்கப்படுகிறது" -டைம்ஸ் அப் இந்தியா
ஆட்சிக்கு வருவதற்கு முன், திமுக ஆட்சி கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குகிறது என குற்றம் சாட்டிய மாண்புமிகு விஜய் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார் ?
செயற்கை மின் தடை, கூடுதல் விலை !
https://t.co/AwDNDwmokA
Dear Prime Minister Ambani,
Please accept my humble apologies for not realizing that you are the real boss of India.
Naturally, you would prefer to maintain your monopolistic exploitation of the great people of India, but would you nonetheless consider allowing Starlink to compete?
There are many areas of India, as there are in all countries, with no Internet access, which denies children the opportunity for education and for small businesses the opportunity to sell their goods to a global market. Starlink would change their lives for the better.
Thank you 🙏
மு.க. ஸ்டாலின் தொழில்துறை அமைச்சரோடு வெளிநாடு போனாரு
விஜய் தொழில்துறை அமைச்சரை இல்லாமல் போனாரு.
உதயநிதி ஸ்டாலின் சர்வதேச கார் பந்தயத்தை தமிழ்நாட்டில் நடத்தினாரு
விஜய் சர்வதேச கார் பந்தயத்தை திரிஷாவோடு வெளிநாட்டில் போய் பார்க்குறாரு
மாற்றம்!?
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
I did a small search on the JkTyre company that the TVK MLA asked to be shutdown. I know there is one factory in Kanchipuram District but did not know there was one in Ranipet District. So we did a search for major subsidiaries which could be manufacturing for @JKTyreCorporate but still couldn't find anything big and polluting.
Then I found out why I did not know about the "JKTyre company" near Ranipet.
Because...the TVK MLA is said to have called a tyre retreading outlet as "JKTyre Company" 🤦🏾
Now, one thing is clear one should not take anything said by the Tvk MLAs as hard facts just like their reels.
But, Wonder why their own govt acknowledged it and even defended it😅
For them a retail retreading shop seems to be a polluting Industry worthy of a question raised in the assembly, instead of asking the local authorities to take action. Is this the kind of "industry" they are going after!
Hope Not 🙏🏾
அரசு கேக்குற கேள்வி எல்லாத்துக்கும் நானே பதில் சொல்லனும்னு கேக்குறாங்க. சொல்றேன். சட்ட ஒழுங்கு, காவல்துறை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் விவாதம் நடக்கிறது. ஆனால் அது சம்பந்தப்பட்ட அமைச்சர் (விஜய்) எங்கே? அவர் ஏன் பதில் சொல்ல மாட்டேங்கிறார்?
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி.
The checking and verification of EVMs was undertaken from 14 polling stations of Kolathur Constituency from 29.07.2026.
This is not recounting but only verification of burnt memory / microcontroller of EVM.
On 30.07.2026 one VVPAT machine was not working.
On 31.07.2026 oneVVPAT Machine was not working.
Today EVM from polling station 157 was taken. To our shock we found that
1.the address tags of VVPAT and Control Unit were not filled up at all,
2. The address tag is found to be new,
3. The wax seal is inappropriately affixed on the front side causing serious doubt about the authenticity and proper custody of the machines.
Finding that it is not possible to proceed with the process as 3 out of 8 machines are not working properly to ensure fair elections, we have walked out of the process.
We have requested the ECI officers to seal the machines properly and informed them that we will be approaching the appropriate court for proper further remedies.
#eci
#ceo_tamilnadu
#deo_chennai
#arivalayam
#dmklegalwing
#dmkitwing
திராவிடர் கழகம் நடத்த இருந்த நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்திற்கு தடைவிதித்து, பெரியார் திடலில் காவல்துறையை குவித்துள்ளது தவெக அரசு. இது கடும் கண்டனத்திற்கு உரியது.
தி.க.வின் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் என்பது ஏதோ இப்போது மட்டும் திட்டமிடப்பட்ட ஒன்றல்ல. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போதும், திமுக ஆட்சியின் போதும் பலமுறை இப் பரப்புரை நடைபெற்றுள்ளது. ஆசிரியர் கி.வீரமணி அவர்களே தமிழ்நாடு முழுவதும் பயணித்து பரப்புரை செய்துள்ளார். அப்படி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றுள்ளேன்.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அதிமுகவுக்கும் திமுகவுக்கும் நீட் எதிர்ப்பு எப்படி கொள்கை முடிவோ, அப்படித் தான் இப்போது ஆட்சியில் உள்ள தவெகவுக்கும் நீட் எதிர்ப்பு என்பது கொள்கை முடிவு என்று சொன்னார்கள். அந்தக் கொள்கையை வலியுறுத்தித் தான் தி.க பரப்புரை செய்கிறது. அந்தப் பரப்புரையை அன்று @EPSTamilNadu அவர்களும் @mkstalin அவர்களும் அனுமதித்து இருக்கும் போது, இன்று @TVKVijayHQ மட்டும் தடுப்பது ஏன்?
நீட் விலக்கும், நீட்எதிர்ப்பும் தமிழ்நாட்டின் கொள்கை. அது தவெகவின் கொள்கையா இல்லையா?
(படம்: 2021-இல் நாகையில் நடந்த நீட் எதிர்ப்பு பரப்புரை)
🛑 பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்
🛑 மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கு
🛑 மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிப்பு
🛑 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டாமல் காலம் தாழ்த்தல்
என விவசாயிகளை எல்லா வகையிலும் வஞ்சித்து வேதனையில் தள்ளியிருக்கிறது செயல்படாத த.வெ.க. அரசு!
தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. @UdhayStalin அவர்களின் தலைமையில் 03-08-2026 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்!
விவசாயிகளின் குரலுக்குத் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு செவிசாய்க்க மறுத்தால் மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
While the english media is talking about NEET exams reform etc, one person has been forgotten, he name is S. Anitha, a Dalit student who committed suicide. She was the first victim of this oppressive and discriminative central exam system called NEET. It would be respectful to remember her at this moment.
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.