எனக்கு இவரும் இவரின் தம்பி தங்கைகளும் சட்டசபை செல்ல வேண்டும் என தோன்றுகிறது... ஏனெனில் இவர்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வது, சமூக தீங்குகளை ஒழிப்பது.. நல் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுப்பது.. ஊழல் குற்றங்கள் நடக்காமல் மக்களின் பணம் சூறையாடப்படாமல் தடுத்து அதை நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்த ஆலோசனைகள் வழங்குவது... எல்லா மேடைகளிலும் இவர் முழக்கம் எதிர்கால வாழ்வியல் பற்றியே இருப்பதால் இவர்கள் சட்டமன்றத்தில் இருந்தே ஆகவேண்டும்.. ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் ஆற்றலை கடந்த அரசுகள் கைவிட்டுவிட்டு வெறும் இலவசங்களை ஆசை காட்டி வாக்கு வாங்கி , தேர்தலில் முதலீடாக ஒவ்வொரு வேட்பாளரும் கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டு அதை நூறு மடங்காக எப்படி எடுப்பது என திட்டம் தீட்டும் அரசாகவே நாம் இதுவரை பார்த்திருக்கிறோம்..
கொள்ளையையும் அலட்சியங்களையும் போதை புழக்கத்தையும் வன்முறைகளையும் தட்டிக்கேட்க ஒரு அழுத்தமான குரல்கள் தேவை... அந்த குரல் சீமானின் குரலாகவும் சீமானின் தம்பி தங்கைகளின் குரலாகவும் இருந்தால் அரசையும் அரசு அதிகாரிகளையும் நல்வழிப்படுத்தும் மேய்ப்பாளர்களாக மாறுவார்கள்.. ஆகவே இந்த தேர்தலில் நாதக வேட்பாளர்களில் யாரெல்லாம் தங்களது கருத்துக்களை முன்வைத்து அழுத்தமாக போராடுகிறார்களோ அவர்களை அடையாளம் காணுங்கள்.. அந்த குரல்கள் நமக்கான குரல்கள்... வெற்றி பெற்று அவர்கள் உள்ளே சென்றால் நமக்குத்தான் நல்லது செய்யப்போகிறார்கள்.. இளைஞர்களின் ஆற்றலை வீணாக்கிவிட வேண்டாம்.. தலைமுறை தலைமுறையாக ஆட்சி நடத்துபவர்களும் அடுத்த தலைமுறைக்கு பதவிகளையும் அதிகாரங்களையும் தாரை வார்ப்பவர்கள் இனி வேண்டாம்.. நம் பிள்ளைகள் முதலில் வாரிசு அரசியலை புறந்தள்ளி நல்லதோர் மாற்று அரசியலை முன்னெடுக்க நினக்கும் இளைஞர்களை உருவாக்க்கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.. சிந்திப்போம்.. நம்மை நாமே ஆள்வோம்..
கைகட்டி அடிமைகளாக நிற்கபோகிறோமா?... நல்ல திசையை நம் பிள்ளைகளுக்கு கைகாட்டி நாமே தலைவர்களாய் வாழப்போகிறோமா?...
41 உயிர்களைக் காவு வாங்கிய பிறகும், குற்ற உணர்வு துளியுமின்றி, விஜய்யின் அரசியல் பிம்பத்தைக் காப்பாற்றத் துடியாய் துடிக்கிறது தவெக!
விஜய்யை நோக்கியும், தவெகவின் முதன்மை நிர்வாகிகளை நோக்கியும் கைது நடவடிக்கைகளைப் பாய்ச்சினால் தவெகவானது அதிமுக கூட்டணிக்குப் போய்விடுமெனக் கருதி, கூட்டணிக் கணக்குகளுக்காக நடவடிக்கை எடுக்க மறுக்கிறது கேடுகெட்ட திமுக.
41 பேர் பிணத்தின் மேல் கூட்டணி அமைத்துவிட முடியாதா? என நாக்கைத் தொங்கப் போட்டு திரிகிறது பாஜகவும், அதிமுவும்.
மக்கள் நலன் துளியும் இல்லாது, அரசியல் பிழைப்புகளுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் இந்தக் கயவர்களை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தாது தமிழர்களுக்கு ஒருநாளும் விடிவு இல்லை.
விஜய் அவர்களின் கரூர் கூட்ட நெரிசலில் - 40 பேர் மரணம்!
புதிய தமிழகம் கட்சி ஆழ்ந்த இரங்கல்!
கூட்டத்திற்கு மிகக் குறுகலான இடத்தை ஒதுக்கிய, கரூர் காவல்துறையும், தமிழக அரசுமே பொறுப்பேற்க வேண்டும்.!
.................................................
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களின் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், முதியோர் என 40-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தாருக்குப் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திரை உலகின் பிரபலம் என்பதாலும், புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளதாலும் அவரது நிகழ்ச்சிக்குக் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்வது இயல்பு. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கூட்டம் கூட்டுவதற்கு உரிமை உண்டு. ஆனால், தொடக்கம் முதலே விஜய் அவர்களின் கூட்டங்களுக்கு நடைமுறைக்கு ஒத்துவராத கட்டுப்பாடுகளை விதிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.
துவக்கத்தில் கரூரில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பிறகு, வேண்டா வெறுப்பாக கரூர் - ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரம் என்ற பகுதியில், 22 அடி அகலம் மற்றும் 200 அடி நீளம் மட்டுமே விஸ்தாரணம் உள்ள மிகக் குறுகலான சாலை ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு எவ்வளவு கூட்டம் வரும் என்று காவல்துறைக்குத் தெரிந்திருந்தும், அக்குறுகலான இடத்தை ஒதுக்கியது ஏன்?
மேலும், அவர் நாமக்கல்லிலிருந்து கூட்ட நிகழ்வுப் பகுதிக்கு வந்தபோதே, எண்ணற்ற மக்கள் கூடியிருந்தனர். அவரது வாகனம் வேலுச்சாமிப்புரத்தின் நுழைவுப் பகுதியில் நிறுத்தப்பட்டுப் பேச அனுமதித்திருந்தால் கூட, இவ்வளவு நெரிசல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிரச்சாரக் கூட்டத்தின் நெரிசல் நிறைந்த மையப் பகுதிக்குள் அவரது பிரச்சார வாகனத்தைச் செலுத்தச் சொல்லி, காவல்துறை நிர்ப்பந்தம் கொடுத்ததே இத்தனை பேர் மரணமடையக் காரணமாகியுள்ளது.!
கூட்ட அனுமதி வழங்குவதில், தமிழ்நாடு அரசு ஆளுங்கட்சிக்கு ஓர் அளவுகோலும், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு அளவுகோலும் கொள்ளக் கூடாது; காவல்துறை நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். இந்த உயிரிழப்புகளுக்குத் தமிழக அரசும், காவல்துறையும்மே பொறுப்பேற்க வேண்டும்.
சீமானும் அவர் மனைவியும் கள் இறக்க வருவார்களா ? ஐஸ்ப்ப்ரூட் அப்பாவு கேள்வி.
ஸ்டாலினும் துர்கா மேடமும் டாஸ்மாக் கடையில் சரக்கு விக்க வந்த உடனே சொல்லி அனுப்புங்க , அவர்களும் கள் இறக்க வருவாங்க
கவினின் சாதியப் படுகொலை, அனைத்து எல்லைகளையும் தாண்டி தமிழக இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய அனுதாபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சாதியக் கட்டமைப்பை மீறி, ஒரு சாதியைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் பிற சாதியினருடன் எவ்விதமான மனித உறவுகளையோ அல்லது திருமணப் பந்தத்தையோ ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என எச்சரிக்கும் மிகப் பெரும் அபாயகரமான சூழல் தமிழகத்தில் சிலரால் உருவாக்கப்படுகிறது. இது தமிழகத்தின் இன்றைய மற்றும் நாளைய தலைமுறைக்கு ஒருபோதும் உகந்தது அல்ல.
பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் இளம் வயது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் உறவுகளை யாராலும் தடுக்க இயலாது. எல்லா உறவுகளையும் திருமண உறவாகக் கருதவோ, அது திருமணத்திற்கு இட்டுச் செல்வதாக இருந்தாலும், தனி மனிதச் சுதந்திரத்தை வலியுறுத்தும் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக எவரும் செயல்பட முடியாது. 18 வயது வரை குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்கும் உரிமை பெற்றோருக்கு உண்டு. அவர்கள் வாழ்க்கை அமைப்பதற்கான ஆலோசனைகளை வேண்டுமானால் வழங்கலாமே தவிர, அவர்களது முடிவைத் தடுப்பதற்கோ, மீறினால் தவறான எல்லைக்குச் செல்வதற்கோ பெற்றோர்களுக்கோ, உடன் பிறந்த சகோதரனுக்கோ, மாமன், மச்சான், உற்றார், உறவினர் அல்லது தான் சார்ந்த சாதிய, மதப் பிரிவினருக்கோ எவருக்கும் எவ்வித உரிமையும் இல்லை.
தமிழ்ச் சமூகம் "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே மூத்தகுடி" எனப் பெருமை கொள்கிறது. சிந்து சமவெளி நாகரிகம் நமது என்கிறோம். 2,500 வருடங்களுக்கு முற்பட்ட இரும்புக்கால கீழடி நாகரிகத்தைப் பற்றிப் பெருமை கொள்கிறோம். தமிழகத்தில் விண்ணைத் தொடும் கட்டிடங்கள், போக்குவரத்து வசதிகள், அகன்ற சாலைகள், பெரும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளில் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைக் காட்டிலும் முன்னேறிய மாநிலம் என்று பெருமை கொள்கிறோம். திருக்குறள், ஐம்பெருங்காப்பியங்கள் பற்றிப் பெருமையாகப் பேசுகிறோம்.
ஆனால், மனிதக் குலத்திற்கு இருக்க வேண்டிய மனிதநேயக் குறியீட்டில் தமிழ்நாடு ஏன் பாதாளத்தில் இருக்க வேண்டும்? கலப்புத் திருமணத்திற்குத் தங்கப் பதக்கம் அறிவித்து, அதை ஓர் இயக்கமாகவே முன்னெடுத்த மாநிலம் தமிழ்நாடு. ஆனால், நடைமுறையில் சாதி மாறித் திருமணம் செய்யும் குறியீட்டில் தமிழ்நாடு கடைசிப் புள்ளியில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோமா?
அண்டை மாநிலமான கேரளாவில் கலப்புத் திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம். பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் 40 சதவீதம். வடகிழக்கு மாநிலங்களில் 80 சதவீதம். அங்கு எவரும் முற்போக்கு பேசுவதில்லை, பண்டைய நாகரிகம் பேசுவதில்லை. ஆனால், மொழி, இன வேறுபாடுகள் இருப்பினும் எண்ணற்ற சாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றன. அங்கு வெட்டுவோரும் இல்லை, அதை ஆதரிக்கும் சாதியக் கும்பல்களும் இல்லை, சண்டியர் கூட்டமும் இல்லை. ஆனால், 2 முதல் 3 சதவீதம் மட்டுமே சாதி மறுப்புத் திருமணம் நடக்கும் தமிழகத்தில் குடும்பம், சாதி, மதக் கௌரவம் என்ற பெயரில் நடக்கும் கொலையோ, தமிழகமே தலைகுனிவு கொள்ளும் அளவிற்கு நடைபெறுகிறது.
2011 முதல் 2016 வரையிலும் இதேபோன்ற எண்ணற்ற கௌரவக் கொலைகள் நடந்தபோது, நாம் சட்டமன்றத்தில் அதைத் தடுத்து நிறுத்தத் தனிச் சட்டம் வேண்டும் என கோரிக்கை வைத்தபோது, அன்றைய முதல்வராக இருந்தவர் மறுத்தார், ஏளனமாகவும் பேசினார். அதன் விளைவு, ரூ 1,60,000 சம்பளம் வாங்கும் இன்ஜினியர் கவின், தனது பள்ளிப் பருவக் காதலியை நேசிப்பதற்காகக் கொல்லப்பட்டுள்ளார். அவர்கள் இன்னமும் திருமணம் எனும் எல்லைக்குக்கூடச் செல்லவில்லை. ஆனால், இளைஞர் கவின் பட்டப் பகலில் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி, கூலிப்படை மற்றும் குடும்பத்தாரின் உதவியுடன் கொல்லப்பட்டுள்ளார். இது தமிழகத்தில் மிகப்பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பும் கடந்த 10 வருடங்களில் உடுமலை சங்கர், தர்மபுரி இளவரசன், கோகுல்ராஜ் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதி திராவிடச் சமுதாய இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். குடும்பமே திட்டமிட்டுச் செய்யும் குடும்பக் கௌரவக் கொலைகளை தடுக்கவும், நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கவும் தனிச் சட்டம் தேவை.
சாதி மாறி திருமணம் செய்து கொள்ளும் இளம் தலைமுறையை சாதியவாதிகள் கொலை செய்வதை தடுத்து நிறுத்திட உடனடியாக தமிழக அரசு ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வரவும், சாதி மாறி திருமணம் செய்வோருக்கு தம்பதிகளில் இருவரில் ஒருவருக்கு உடனடியாக நிரந்தர அரசு வேலையும், பாதுகாப்பான குடியிருப்பில் வீடும், இதர பாதுகாப்பு வசதிகளும் வழங்கி தமிழக அரசின் சிறப்புத் தம்பதிகளாக அறிவித்துப் பாதுகாக்க வேண்டும். இதை வலியுறுத்தி ஆகஸ்ட் 17 ஆம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.!
நாம் தமிழர் கட்சியின்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
தாய்புலி அண்ணன்
செந்தமிழன் சீமான்
அவர்களின் ஆணைக்கிணங்க
தமிழ் தேசிய அரசியல் போரில் களமாடி திருவில்லிப்புத்தூர் தொகுதியை வென்று வெற்றிக்கனியை தாய் புலியிடம் சமர்பிப்போம்
வெறிகொண்ட வேட்டை ஆரம்பம்
@guru_senthan@A6Baskaran
திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட கவினின் குடும்பம் பாரம்பரியமிக்க குடும்பம். செல்வ செழிப்பு மிக்க ஊரையே கட்டியாண்ட குடும்பம். அவரது தாத்தா பஞ்சாயத்து தலைவராக பல ஆண்டுகள் இருந்துள்ளார். கொலை செய்த சுர்ஜித் குடும்பத்தை விட பன்மடங்கு சொத்துக்கள் வைத்திருக்கும் குடும்பம். அவர்களிடம் போயிட்டு 5 லட்சம் ரூபாய் காசோலையை அரசாங்கம் நீட்டினா கிழித்து முகத்திலேயே எறிவார்கள் , அவர்களுக்குத் நீதி கிடைக்க வேண்டும். கேவலமான அரசியல் அல்ல.
கவின் உடலை வாங்கி அடக்கம் செய்யுங்கள், உங்கள் பின்னணியில் நாங்கள் இருக்கிறோம் என்று சொன்னோம்
ஆனால் அவரது பெற்றோரும், உறவினரும் நீதி கிடைக்காமல் உடலை வாங்கமாட்டோம் என்று உறுதியாக கூறிவிட்டார்கள்
ஆக, திராவிட முதலாளி கொடுத்த வேலை தேவேந்திரர்களிடம் எடுபடவில்லையா @thirumaofficial?
தமிழகத்தில் சிறிய கட்சிகளின் ஆதரவு இல்லையென்றால் பெரிய கட்சிகள் கூட சிறிய கட்சிகளாக மாறிவிடும் என்பது எங்கள் நிலைப்பாடு
ஆனால் திமுகவின் நிழலையே சார்ந்து பிழைத்து,அவர்களின் அடிமையாகவே மாறி,அடிமை இரத்தம் ஓடுபவர்களுக்கு திமுக பெரிய கட்சியாகத்தானே தெரியும்!
https://t.co/C7d4P7AYm2