ஒப்பற்ற தன் திரையோவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன்! பதினாறு வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட எண்ணற்ற மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களை கவிதையாகப் படம்பிடித்த தமிழினத்தின் ஈடு இணையற்ற பெருமை, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
திரைக்கலையின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் எனக்கு கற்பித்த பேராசான்; பெற்ற மகனைப்போல என் மீது பெரும் பாசம் காட்டிய அப்பா பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக திரைக்கலை பயின்ற நாட்கள் ஒவ்வொன்றும் என் வாழ்வின் பொன்னாட்களாகும். பெரும்புகழ் பெற்ற ஏராளமான திரைக்கலைஞர்களை தமிழ்த்திரைக்கு தந்து வாழ்வளித்த மகாகலைஞனின் மறைவு கலைத்துறைக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரைத்துறை மட்டுமின்றி என்னுடைய அரசியல் பயணம் வெற்றியடையவும் நாம் தமிழர் கட்சியின் மேடையேறி வாழ்த்திய பெருந்தகையின் மறைவு தனிப்பட்ட முறையில் என்னுள்ளத்தை மிகவும் பாதித்துள்ளது. இப்பெருந்துயரிலிருந்து மீள முடியாமல், என்னை நானே தேற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றேன்!
அப்பா பாரதிராஜாவை இழந்து பெருந்துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், உலகெங்கும் பரவிவாழும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்துகொள்கிறேன்.
‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
அலிஷா அப்துல்லா மற்றும் அவரது குழந்தைகளை குறித்து மிக கொச்சையாக பேசிய DMK வளர்ப்பு,Vck ஆதரவு பெற்ற முக்தார் கைது செய்யப்பட்டான்
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை , தற்போதைய முதல்வர் விஜய் உட்பட அனைவரையும் தரக்குறைவாக பேசிய விடைத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@alishaabdullah
இலஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கிலிருந்து தப்பித்திருக்கிறார் முன்னாள் அமைச்சரும், திமுகவின் பிரமுகருமான வைத்திலிங்கம்.
2011-2016ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் அதிமுகவின் ஆட்சியில் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி வழங்க ₹27.9 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாக, 2024ஆம் ஆண்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்தது முந்தைய திமுக அரசின் கீழிருந்த இலஞ்ச ஒழிப்புத்துறை.
அதே வைத்திங்கம், 2026ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.
தற்போது , 'போதிய ஆதாரங்கள் இல்லை' என நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்புத்துறைக் கூறியதையடுத்து, வழக்கு மொத்தமாக முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. முந்தைய திமுக அரசின் நடவடிக்கையின் அடிப்படையிலேயே இலஞ்ச ஒழிப்புத்துறை இத்தகைய முடிவை எடுத்திருக்கிறது.
அதாவது, எந்த திமுகவின் ஆட்சியில் வைத்திலிங்கம் மீது இலஞ்ச ஒழிப்புத்துறை வழக்குத் தொடுத்ததோ, அதே ஆட்சியின் முடிவில் வழக்கு நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருக்கிறது.
திமுகவில் சேர்ந்ததற்கானப் பிரதிபயனை வைத்திலிங்கம் அடைந்துவிட்டார்.
திமுக செய்த பச்சை அயோக்கியத்தனம் இது!
First full page advertisement for a government function by public money, same as like dravidian parties regime.
Vijay is not alternative rather he is elongation of dravidan political culture…
#TVKVijayFails
முக்கியமாக குழந்தைகள் இருக்கும் வீடுகள் படாத பாடு படுகிறார்கள். மடிப்பாக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டிலும் மூன்று பேஸ் வராமல் இரண்டு பேஸ் மட்டுமே வந்தது. அந்த தெரு முழுவதும் அப்படி இருந்தது. பின்பு ஊழியர்களை அணுகி நடு இரவே சரி செய்தோம். எதனால் இந்த சிக்கல் ஏற்படுகிறது என்பதை அரசு விளக்குவது நல்லது..
❌மோசடி செய்த ஸ்டாலின்❌
முன்னாள் அதிமுக அமைச்சரை காப்பாற்றிய அறிவாலய வாஷிங் மெஷின்.
#️⃣2013ம் ஆண்டு ஸ்ரீராம் நிறுவனம் பெருங்களத்தூரில் 1450 வீடுகள் கட்ட CMDAவிடம் அனுமதி கோரி விண்ணப்பம் செய்கிறது.
#️⃣2015-16 ஆண்டில் வைத்திலிங்கம் மகன் இயக்குனராக உள்ள Muthammal Estates Pvt Ltd நிறுவனத்திற்கு ஸ்ரீராம் குரூப்பின் Bharath Coal Chemicals Ltd நிறுவனத்திடம் இருந்து கடனாக (Unsecured Loan) 27.9 கோடி கொடுக்கப்படுகிறது.
#️⃣2014ம் ஆண்டு 36 லட்சம் பங்கு மூலதனத்துடன் துவக்கப்பட்ட Muthammal Estates Pvt Ltd நிறுவனத்திற்கு 2020 வரை எந்த வருவாயும் (பூஜ்ஜியம்) இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#️⃣2016ல் CMDA கட்டிட அனுமதி கொடுக்கிறது. அதே ஆண்டில் Muthammal Estates Pvt Ltd திருச்சியில் நிலம் வாங்க 18 கோடி அட்வான்ஸ் கொடுக்கிறது.
#️⃣2017-19 ஆண்டுகளில் ஸ்ரீராம் நிறுவனத்திடம் இருந்து கடனாக வாங்கிய தொகையில் Muthammal Estates Pvt Ltd மூலம் திருச்சியில் 24.2 கோடியில் 4.5 ஏக்கர் நிலத்தை வைத்திலிங்கம் மகன் வாங்குகிறார்.
#️⃣இதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் திரட்டி அறப்போர் இயக்கம் 2022 மே மாதம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாராக அளிக்கிறது. இரண்டு வருடங்கள் மீண்டும் மீண்டும் திமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்த பிறகு 2024ம் ஆண்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு செய்கிறது. ஆனால் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. எந்த ரெய்டும் நடத்தப்படவில்லை.
#️⃣2025ம் ஆண்டில் இந்த FIR அடிப்படையில் அமலாக்கத்துறை வைத்திலிங்கம் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி மேலும் 100 கோடி சொத்துக்களை இணைக்கிறது. இதற்கு பிறகும் திமுக அரசு அசைந்து கொடுக்காமல் அமைதி காக்கிறது.
#️⃣2026ம் ஆண்டில் தான் திமுக அரசின் அமைதிக்கான காரணம் தெரிந்தது. வைத்திலிங்கம் திமுகவில் இணைகிறார். திமுக அரசு அவருக்கு எதிராக பதிந்த FIR அடுத்த ஒரே மாதத்தில் ரத்து செய்யப்படுகிறது. ஊழல் எல்லாம் ஒரு பிரச்சினையா என்ற அறிவாலயத்தின் வாஷிங் மெஷின் உள்ளே போட்டு வைத்திலிங்கத்தை புனிதர் ஆக்கி விடுகிறார்கள்.
ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இந்த வழக்கை மூட போகிறோம் என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை புகார் தாரரான அறப்போர் இயக்கத்திற்கு சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அறப்போர் இயக்கத்திற்கு தெரியாமல் FIR ரத்து செய்ய பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ளனர் . மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியை மட்டும் புகார் தரராக காட்டி அவருக்கு இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நீதிமன்றத்தில் புதிய ஆட்சியில் ஜூன் நான்கு அன்று லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது. இன்றைய தினம் அறப்போர் இயக்கத்திற்கு இந்த மோசடி தெரியவந்துள்ளது.
🔲அறப்போர் இயக்கம் உடனடியாக நீதிமன்றத்தை நாடி இந்த வழக்கை மூடக்கூடாது என்று வாதிடும்.
அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த போது கட்டிட அனுமதிக்கு வைத்திலிங்கம் லஞ்சம் வாங்கிய ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் கொடுத்த புகார் பற்றி விரிவாக பார்க்க - https://t.co/vh9w54CMXd
@thisisRaj_ DMK அமைச்சரா இருந்தா நீங்க அமைதியா இருந்திருப்பீங்க. அவ்ளோதான் .
DMK , TVK ரெண்டும் ஒன்னுதான் , எந்த வேறுபாடும் இருக்காது.
DMK - தற்குறி முன்னேற்ற கழகம்
TVK- தற்குறி வெற்றி கழகம் .