காந்தியறிதல் @VasumithraOff
I have hated Gandhi to the core bcos of the hate politics that was sown here, but when i read alternate interpretations, am not pushing him aside. He is definitely not our foe!
நட்பு முரண்பாடோடு காந்தியிடம் உரையாட முடியும் என்று நம்புகிறேன்!
வாழ்ந்து பார்த்திருக்கிறேன்
கோட்ஷேவாக
இவ்வுரையாடலை முடித்துக்கொள்ளவேண்டும்
போலிருக்கிறது நண்பனே
கஸ்தூர்பாவிடம் எத்தனை முறைகள்தான்
நான் மன்னிப்புக் கேட்பது
ஒன்றே ஒன்று புரிகிறது
வரலாற்றாசிரியர்கள் வார்த்தைகளைத் தேடுகிறார்கள்
கவிஞன்
அர்த்தங்களைத் தேடுகிறான்.
நிர்வாணப் பரிசோதனையில்
நீங்கள் உடுத்திய உடை யாருக்குச் சொந்தம் மகாத்மா
மன்னித்துவிடு நண்பனே
இக்கணம்
இக்கேள்வியை
நீ காந்தி போல் கேட்கிறாய்
நான் கோட்ஷே போல் பதிலளிக்க முடியாது
எதிரியாய் வாழ்வது
தற்கொலையூக்கி இல்லையா..!
துயரம்
என் வாழ்நாளில் சில நாட்கள்
அவர்கள் உங்களை
இன்னமும் நிற்க வைத்த கோலத்தில்தான்
சுடுகிறார்கள் காந்தி
தவறில்லை
அது சரிதான்
நான் அவர்களுக்காக ஏதும் செய்யவில்லை
இதற்காகவது பயன்படுகிறேனே
எனது பிம்பம் அத்தனை
துயருடையது மகனே