தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவதல் எனும் ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கிறது என உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரை தன் தொகுதிக்குள் வைத்துள்ள தவெக சட்டமன்ற உறுப்பினரே பேசுவது வன்மையாக கண்டிக்கதக்கது .
ஜல்லிக்கட்டு சீரழிவு அல்ல
தமிழர்களின் பண்பாடு !
தமிழர்களின் கலாச்சாரம்!
தமிழர்களின் வீரம்!
தமிழர்களின் தொன்மம்!
தமிழர்களின் வீரக்கலையான ஏறுதழுவுதலை (ஜல்லிக்கட்டு) ‘இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு’ என இழிவுபடுத்துவதா?
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா கருத்தைத் திரும்பப்பெற்று மன்னிப்புக் கோர வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும், நாட்டு மாடுகளைக் காக்கும் மரபின் நீட்சியாகவும் திகழும் ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு, இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு என்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்; அதற்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை முற்றிலும் நியாயமானது. உழவர்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சியும் முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால், சர்க்கரை ஆலைக்கு நிதி கேட்டுப் பெறுவதற்காக ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தி பேச வேண்டிய தேவை என்ன?
தமிழ்நாட்டு தெருக்கு தெரு இருக்கும் சாராயக்கடைக்கு சென்று மது அருந்தும் இளைஞர்கள் சீரழியவில்லையா? அலங்காநல்லூர் வாடிவாசலில் காளையைத் தழுவி வீரத்தைக் காட்டும் இளைஞர்கள்தான் சீரழிகிறார்களா?
வாடிவாசலில் நின்று காளையை எதிர்கொள்வது பண்பாட்டு சீரழிவு? ஆனால், அரசு விற்கும் மது குடித்து உடலையும், குடும்பத்தையும், பொருளாதாரத்தையும் இழப்பது இளைஞர்களின் முன்னேற்றமா?
இளைஞர்களை மதுவை நோக்கி அழைத்துச் செல்லும் சாராயக்கடைகளை மூடச் சொல்ல உங்களுக்குத் துணிவு இருக்கிறதா?
இளைஞர்களை மண்ணோடும், மாடுகளோடும், உழவோடும் இணைக்கும் ஏறுதழுவுதலை மட்டும், சீரழிவு என்று சொல்லும்
துணிவு எங்கிருந்து உங்களுக்கு
வந்தது?
குடிக்கிற இளைஞன் சீரழியவில்லை;
காளையை வளர்க்கிற இளைஞன் சீரழிகிறானா?
மதுப்புட்டியைத் தூக்குகிற கை நல்ல கை;
காளையின் திமிலைத் தழுவுகிற கை கெட்ட கையா?
சாராயக்கடைக்கு அரசு இடம் கொடுத்தால் அது வருவாய்;
ஜல்லிக்கட்டுக்கு அரசு இடம் கொடுத்தால் அது வீண் செலவா? எப்படிபட்ட மோசமான பார்வை இது?
ஜல்லிக்கட்டு என்பது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது தமிழர்களின் வேளாண்மையோடும், கால்நடை வளர்ப்போடும், நாட்டு மாட்டு இனங்களின் பாதுகாப்போடும், கிராமியப் பொருளாதாரத்தோடும் பின்னிப் பிணைந்த வாழ்வியல் பண்பாடு. ஒரு காளையை ஜல்லிக்கட்டுக்குத் தயார்படுத்துவதற்காக ஓர் உழவர் குடும்பம் ஆண்டுக்கணக்கில் அதனைத் தனது குடும்ப உறுப்பினரைப் போல வளர்க்கிறது. அதன் உணவு, உடல்நலம், பராமரிப்பு என அத்தனையிலும் அக்கறை செலுத்துகிறது. "ஓஓ! இவள் இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால், திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்சொல்லால் தரப்பட்டவள்..."- ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்று குறிப்பிடுகிறது கலிப்பாடல்,
இதை எல்லாம் அறியாமல்,
அந்த வாழ்வியலைப் புரிந்துகொள்ளாமல்,
அந்த மண்ணின் வரலாற்றை உணராமல்,
“இளைஞர்களைச் சீரழிக்கும் ஜல்லிக்கட்டு” என்று பேசுவது அறியாமையின் உச்சமல்லவா?
அதுவும் உலகமே அறிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தனது தொகுதிக்குள் கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினரிடமிருந்தே இப்படியொரு கருத்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை மறந்துவிடக்கூடாது மெரினா கடற்கரையிலும் தமிழ்நாட்டின் வீதிகளிலும் உலக நாடுகளின் தெருக்களிலும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டது எதற்காக?
“எங்கள் மாடு! எங்கள் மண்! எங்கள் உரிமை! எங்கள் ஜல்லிக்கட்டு!” என்று தங்களது இனத்தின் அடையாளத்தைக் காக்கத்தானே போராடினார்கள்?
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இளைஞர் எழுச்சியையும் “சீரழிவு” என்று சொல்வீர்களா?
ஒரு மக்கள் நலத்திட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட நிதியை மற்றொரு திட்டதிற்கு பயன்படுத்துவதை எதிரியாக நிறுத்துவது சரியான அரசியல் அல்ல. பள்ளிக்கூடத்திற்கு நிதி கொடுத்ததால் மருத்துவமனை வேண்டாமா?
மருத்துவமனை கட்டியதால் சாலை போடக்கூடாதா? என்ன மாதிரியான கருத்துருவாக்கம் இது?
தமிழர்களின் அடையாளத்தை அழித்துவிட்டு தமிழ்நாட்டை வளர்க்க முடியாது. தமிழர்களின் பண்பாட்டை இழிவுபடுத்திவிட்டு தமிழர்களுக்கு நல்லாட்சி தர முடியாது.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் விளையாட்டு மட்டுமல்ல;
அது எமது மண்ணின் அடையாளம்!
அது வெறும் காளையும் மனிதனும் மோதும் களம் அல்ல;
மனிதனுக்கும் மாட்டிற்குமான ஆயிரமாண்டுப் பந்தத்தின் பண்பாட்டு வெளிப்பாடு!
(1/2)
இராணிப்பேட்டையில் விசிகவினரால் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு வாலாஜா அரசு மருத்துவனையில் இருக்கும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி, அன்புத்தம்பி குபேந்திரன் சிகிச்சைப்பெற்று வரும் சூழலில், சரித்திரப் பதிவேடு குற்றவாளி உட்பட தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய துணிவற்ற தவெக அரசின் காவல்துறை, தம்பி குபேந்திரனை கைது செய்ய முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஆட்சியாளர்களின் அதிகார அழுத்தம் காரணமாக, சிறிதும் மனச்சான்றின்றி காவல்துறை மேற்கொள்ளும் இத்தகைய கொடும் அடக்குமுறையை உடனடியாக கைவிடாவிட்டால், விரைவில் பெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
அடித்துக்கொன்றார்கள் என்ற உண்மை தெரிந்து போராடிய பெற்றோர்களையும் உறவினர்களையும் இந்த அரசு காவல்துறை வைத்து கைது செய்து ஆகாசின் உடலை எடுத்துக்கொண்டு போய் அடக்கம் செய்தது.. அநீதி இழைத்த அரசும் நீதிமன்றமும் என்ன பதிலை வைத்திருக்கிறது?
சாதியை கடந்த ஆட்சி என்று பெருமை பேசிய முதல்வரின் கீழ் உள்ள துறையில் சாதி தலைவிரித்தாடுகிறது.. என்ன நடவடிக்கை எடுக்கபோகிறார் @CMOTamilnadu?
மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் வருவேன் என்று சொன்ன முதல்வர் விஜய், கர்நாடகாவில் 3 தமிழர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் உறுதியாகியும் வராமல் எங்கே சென்றார்?
@CMOTamilnadu@TVKVijayHQ
கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது திட்டமிடப்பட்ட படுகொலை என்பது உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் உறுதியான பிறகும்கூட, தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் அமைதியாகக் கடந்து செல்வது பெருத்த ஏமாற்றமளிக்கிறது. மூன்று தமிழர்களின் படுகொலை குறித்து நீதிவிசாரணை வேண்டுமெனக் கூறி, கர்நாடகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகளே குரலெழுப்பி வரும் நிலையில், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு அதுகுறித்த எவ்வித அக்கறையுமில்லாது அலட்சியப் போக்கோடு இதுவரை எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சுடப்பட்ட மூன்று தமிழர்களும் 10 அடிக்கும் குறைவான தூரத்திலிருந்து சுடப்பட்டுள்ளனர் என்பதும், சுடப்பட்டவர்களில் ஒருவரான ஜான்ரோஸ் பீட்டரின் இடதுகாதுப் பகுதியிலிருந்து நெஞ்சுப்பகுதி வரை 25 செ.மீ. நீளத்திற்கு ஆழமான காயம் கண்டறியப்பட்டுள்ளது என்றும், மற்ற இருவரின் நெஞ்சு, தொடை போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றும் உடற்கூறாய்வு அறிக்கையில் வெளியாகியிருக்கும் தகவல்கள் நடந்திருப்பது திட்டமிடப்பட்ட படுகொலை என்பதை உறுதி செய்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்குள் சிக்கல் உருவாகியிருக்கும் இந்நேரத்தில் இது தமிழ்த்தேசிய இனத்தின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலை. இது தமிழ்த்தேசிய இனத்திற்கு நேர்ந்த அவமானம் .
2023ஆம் ஆண்டுப் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகப் பரவிய பொய்ப்பரப்புரைக்குப் பீகாரிலிருந்து அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாட்டின் பெயரில், கூட்டுக்குழு தமிழ்நாட்டுக்கு வந்து பீகாரிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிபடுத்திவிட்டுச் சென்றது. உண்மைக்குப் புறம்பான செய்தியென்றாலும், தனது இன மக்களின் பாதுகாப்புக்கும், நல்வாழ்வுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் அளித்தார் அன்றைய பீகார் முதல்வர் நிதிஷ்குமார். 2014ஆம் ஆண்டுச் சென்னை, மௌலிவாக்கத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிக்குண்டபோது தமிழ்நாட்டுக்கு ஓடோடி வந்தார் அன்றைய ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு. காயம்பட்டுச் சிகிச்சைப் பெற்ற தெலுங்கு இன மக்களை மருத்துவமனையில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்ற முனைந்தார். விபத்துதானென்றாலும், தனது இன மக்களுக்கு ஒரு இன்னலென்றவுடன் தமிழ்நாட்டுக்கு விரைந்து வந்தார் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஆனால் தமிழர்கள் மூன்றுபேர் கர்நாடக வனப்பகுதிக்குள் வைத்துத் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் அதனையொரு பொருட்டாகவே கருதவில்லை. மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் வருவேன் என்றவர் இப்பொழுது எங்கே சென்றார் எனத் தெரியவில்லை?
இப்படுகொலையைச் செய்த வனத்துறையினர் மேல் கொலைவழக்கு பதிந்து கைதுசெய்யப்பட்டு உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டுமெனக் கேட்காது, விசாரணைக்குழு அமைக்க வேண்டுமென தமிழக முதல்வர் கோருவது மோசடித்தனம்! விசாரணைக்குழு அமைக்கப்பட்டால் அக்குழு வருடங்கள் கடந்து அறிக்கையைத் தாக்கல் செய்யும் முன் நீதிகேட்கும் குரல்கள் மறைக்கப்பட்டுவிடும். விசாரணைக்குழு அமைக்கக்கோருவது இதிலிருந்து தப்பிக்கக் கர்நாடக அரசுக்குப் பாதை அமைத்துக் கொடுக்கும் படுபாதகச் செயல். தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று வென்ற முதல்வர் விஜய் அவர்கள், எதற்காகக் கர்நாடக அரசுக்கு ஆதரவாக நிற்கிறார்?
தமிழர்கள் மூவரை மான் வேட்டையாடியதாகக் கூறி, சுட்டுக்கொன்றுவிட்டு, ‘எங்கள் மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடாதீர்கள்’ என ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசிய பிறகும்கூட, முதல்வர் விஜய் எதிர்ப்பையோ, எதிர்வினையையோ ஏன் ஆற்ற மறுக்கிறார்? ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை முழுமையாக நியாயப்படுத்திப் பேசுகையில், தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் மூன்று தமிழர்கள் படுகொலை குறித்தோ, மேகதாது அணை அமைக்கப்பட்டால் அதன்மூலம் தமிழ்நாட்டுக்கு விளையும் ஆபத்து குறித்தோ ஒரு வார்த்தைகூடப் பேசாதது ஏன்? இதுதான் தமிழர்களுக்காக நீங்கள் குரல்கொடுக்கிற முறையா முதல்வரே?
ஆகவே, மூன்று தமிழர்களைப் படுகொலை செய்த வனத்துறையினர் மீது கொலைவழக்குத் தொடுத்து, அவர்களைக் கைதுசெய்து சிறைபடுத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்புத்தொகையைப் பெற்றுத் தரவும் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற குண்டர்களால் தாக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி குபேந்திரன் அவர்களை கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மருத்துவமனையில் குவிந்து வரும் காவல்துறையினர்...
சரித்திர பதிவேடு குற்றவாளியை கைது செய்ய முடியாமல் புகார் அளித்த பாதிக்கப்பட்ட நபரை கைது செய்ய 20க்கும் மேற்பட்ட ராணிப்பேட்டை காவல் துறையினர் குவிந்து வருகின்றார்கள்.
சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்க முடியாத காவல்துறை புகார் அளித்த நபர் கைது செய்வதா?
@tnpoliceoffl@CollrRanipet@CMOTamilnadu
விசிக தலைவர் திருமாவளவன் அவர்களை விமர்சித்து பேசியதற்காக, ராணிப்பேட்டை தொகுதியைச் சேர்ந்த நாம்தமிழர் கட்சியின் பொறுப்பாளர் குபேந்திரன் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சார்ந்த குண்டர்களால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார் .
கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் பட்டியல் சமூகத்துக்கு பாதுகாப்பு என்று சொல்லி அதே சமூகத்தை சேர்ந்த நபரையே தாக்குவதுதான் உங்க நாகரீக அரசியலா? @thirumaofficial
தமிழக காவல்துறை தம்பி குபேந்திரனை தாக்கிய குண்டர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் .
@tnpoliceoffl
Behindwoods விவாத நிகழ்ச்சி முடிந்தப் பிறகு, பார்வையாளர்களும், பங்கேற்பாளர்களும் அரங்கைவிட்டு வெளியேறியப் பிறகு, நாஞ்சில் சம்பத்தை மட்டும் வைத்து, பேச வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு, விவாத நிகழ்வில் அது சேர்க்கப்பட்டிருக்கிறது.
அதில் தான் ஆபாசமாகப் பேசியதற்கு மன்னிப்பு கோரியிருக்கிறாராம் நாஞ்சில் சம்பத்.
இந்த வீடியோ பாருங்கள்...
போலீஸ் துறையில் பல மன நோயாளிகளாகா திரிகிறார்களா என்ன? இதெல்லாம் கொடுமை... 21 வயது பையனுக்கு இதெல்லாம் வாழ் நாள் முழுவதும் மன காயத்தையும் மன ரீதியான பாதிப்பையும் உருவாக்கும்...
பணியிட மாற்றம் மட்டுமே இதற்கு தீர்வாகாது - உரிய அனைவர் மீதும் கைது நடவடிக்கை அவசியம்...
அமைச்சர் வெங்கடரமணன் அவர்கள் @AdvocateVenkatP இன்று கிறிஸ்டி நிறுவன ஊழல் குறித்து சட்டசபையில் பேசியுள்ளார். கிறிஸ்டி நிறுவனத்தின் 992 கோடி ரேஷன் போக்குவரத்து ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் அனைத்து ஆதாரங்களுடன் அமைச்சருக்கு ஜூலை 13ஆம் தேதி அனுப்பியுள்ளது. அதன் மீது உடனடியாக FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அமைச்சர் பேசும் இந்த ஊழல் குறித்தான அறப்போரின் விரிவான வீடியோவை இந்த லிங்கில் பார்க்கலாம்
https://t.co/ZCapMgSsQH
FIR நடவடிக்கை எடுப்பதற்கான முதல் படி! FIR பாயுமா ? அல்லது சட்டசபை பேச்சுடன் நடவடிக்கைகள் நின்று விடுமா?
இதை பாருங்கள்…
23 வயது பையன்..
என்ன தவறு செய்தான் என கழுத்தை கயிறு போட்டு இறுக்குகிறது காவல்துறை? கேட்டால் தெரியாமல் நடந்து விட்டது என கதை சொல்வார்.. போலீஸ் தெரிந்தே தான் செய்கிறார்கள்..
அவன் செய்த தவறு என்ன ?
வழி விடுங்க என கேட்டான், காவலர் அறைந்ததற்கு எதிர்வினை காட்டினான்..
இந்த ஆகாஷ் உயிர்க்கும் ஆபத்து ,
அவர் வாழ்வுக்கும் ஆபத்தை உருவாக்க- பழிவாங்கும் வெறியோடு அதிகார திமிரோடு வேட்டையாடும் கொடூரமான மன நோயோடு அலைகிறது தஞ்சாவூர் காவல்துறை..
இப்படி ஆட்சியை மிருக தனமாக நடத்து போலீஸ் துறையின் அமைச்சர் விஜய் பதில் சொல்லவேண்டும்..
தஞ்சாவூர் ஆகாஷ் விடுதலை செய்யப்பட வேண்டும்..