இது தான் தற்போது தஞ்சாவூரில் சீரமைத்துக் கொண்டிருக்கும் 642 ஏக்கர் கள்ளப்பெரம்பூர் ஏரி.
இந்த 642 ஏக்கரில் 400 ஏக்கருக்கும் அதிகமாக நாட்டுக்கருவேல மரங்களும், சீமைக்கருவேல மரங்களும் ஆக்கிரமித்து இருப்பதால் தண்ணீரை சேமிக்க முடியவில்லை.
இந்த மரங்களை அகற்றினால் மட்டுமே அந்த இடங்களை தூர்வார முடியும், தூர்வாரினால் மட்டுமே தண்ணீரை சேமிக்க முடியும்.
ஆகவே இந்த ஏரியில் ஆக்கிரமத்துள்ள கருவேல மரங்களை அகற்றி தருமாறு தமிழ்நாடு வனத்துறையை கள்ளப்பெரம்பூர் / செங்கழுநீர் ஏரி சீரமைப்பு குழுவின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்🙏🏾
“மேகதாது அணை”
ஒரு முக்கியமான கேள்வியை நாம் நம்மிடம் கேட்க வேண்டும்.
மேகதாது அணை கட்டப்படுகிறதா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்…
தமிழ்நாட்டிற்கு வரும் ஒவ்வொரு துளி தண்ணீரையும் நாம் முழுமையாகப் பாதுகாக்கிறோமா?
மழை பெய்யும்போது அந்தத் தண்ணீரை எவ்வளவு சேமிக்கிறோம்?
நம்முடைய ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் உயிரோடு இருக்கிறதா?
நிலத்தடி நீரை நாம் மீண்டும் நிரப்புகிறோமா?
மழைநீர் கடலுக்குச் சென்று வீணாகாமல், கடலுக்கு தேவையானதை மட்டும் அனுப்பிவிட்டு மீதமுள்ள நீரை நமது நீர்நிலைகளுக்குள் கொண்டு வருகிறோமா?
இதுதான் நாம் இப்போது சிந்திக்க வேண்டிய நேரம்.
நமக்குத் தேவையானது ஒரு அணையைப் பற்றிய விவாதம் மட்டுமல்ல… ஒரு முழுமையான நீர்ப்பாதுகாப்புத் திட்டம்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஏரி, குளம், கண்மாய், ஊரணி ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டும்.
மழைநீரை சேமிக்க வேண்டும்.
நீர்நிலைகளை ஒன்றோடொன்று இணைக்க வேண்டும்.
நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும்.
விவசாயத்தில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
அதிலும் முக்கியமாக,
“தண்ணீர் வந்த பிறகு சேமிப்போம்” என்ற மனநிலையிலிருந்து, “தண்ணீர் வரும் முன்பே சேமிப்போம்” என்ற மனநிலைக்கு நாம் மாற வேண்டும்.
“மேகதாது விவகாரம் எப்படியிருந்தாலும், தமிழ்நாடு வெளிப்புற நீர்வரத்தை மட்டும் சார்ந்திருக்காத அளவுக்கு நீர்ப்பாதுகாப்பை உருவாக்க வேண்டும்!”
அதற்காக அரசாங்கம் மட்டும் அல்ல…
அரசு, விவசாயிகள், தொழில்துறையினர், பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள், என
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நாம் தண்ணீருக்காக அடுத்த தலைமுறையுடன் போராட வேண்டாம்.
அடுத்த தலைமுறைக்காக இன்றே தண்ணீரைச் சேமிப்போம்.
நீரைக் காப்போம்…
நீர்நிலைகளைக் காப்போம்…
நம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்போம்.
“நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!”
-நிமல் ராகவன்.
உகாண்டாவில் நாம் சீரமைக்கும் ஏரிக்கு சிறிது தொலைவில் நான் கண்ட காட்சி இது!
இது போல 5 கிமீ முதல் 10 கிமீ தொலைவில் பல இடங்களில் ஒரு தண்ணீர் குழாய் இருக்கிறது. எந்த நேரத்தில் பார்த்தாலும், வெயிலோ மழையோ அந்த குழாயை சுற்றி எப்போதும் மக்கள் தண்ணீருக்காக வரிசையில் நின்று எடுக்கின்றார்கள், அவர்களில் பெரும்பாலும் சிறுவர்கள் தான்🥲
நாம் ஏரி சீரமைத்த பிறகு இவர்களின் தண்ணீர் தேவைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது💫
#WaterCrisis #Uganda
தஞ்சாவூர் மாவட்டத்தின் மிக முக்கிய நீர்நிலையான 642 ஏக்கர் பரப்பளவு கொண்ட கள்ளப்பெரம்பூர் ஏரி சீரமைக்கும் பணிகள் இன்று 16/07/2026 தொடங்கப்பட்டது.
இந்த ஏரி சீரமைப்பு முழுமை பெற உதவி தேவை.
உதவுவதற்கு : 9345420445, 9025351318.
"You Northerners , why the hell do you have so much religious fanaticism? You moro*s voted them in, and now we’re the ones who have to suffer and pay the f*cking penalty along with you."
உகாண்டாவில், லீராவிற்கு அருகிலுள்ள அலெப்டாங் பகுதியில் ஒரு நீர்நிலையை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள முடிவு செய்து, அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்யச் சென்றோம்.
அப்போது அங்குள்ள மக்கள் எங்களுக்கு அளித்த வரவேற்பு எங்களை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. அவர்களின் அன்பும், உற்சாகமும், நம்பிக்கையும் இந்தப் பணிக்கான எங்களின் பொறுப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.
மக்களின் ஒத்துழைப்புடன், Alebtong Village-ல் நீர்நிலையை சீரமைக்கும் பணிகளை மிக விரைவில் தொடங்க உள்ளோம்.
நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
நீர் இருக்கும் இடத்தில் வாழ்வு வளரும்💚🌍
#Uganda #MegaFoundations #WaterCrisis #WaterConservation #SaveWater
It was a privilege to meet Hon. @LillianAber , Uganda’s state Minister for Relief, Disaster Preparedness and Refugees Affairs, at the Office of the Prime Minister.
We had a productive discussion about our environmental restoration projects in Uganda, with a focus on sustainable water conservation, lake restoration, and building climate resilience for local communities.
I sincerely thank Hon. Lillian Aber for her valuable time, warm hospitality, and encouragement. I look forward to working together to create a lasting positive impact for the people of Uganda.
Together, we can restore ecosystems, strengthen communities, and secure water for future generations. 🇺🇬💚🌍
#Uganda #LakeRestoration #WaterConservation #ClimateAction #Sustainability #EnvironmentalRestoration #CommunityDevelopment #WaterForAll
தற்போது நாம் சீரமைத்துக் கொண்டிருக்கும் 400 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் குறிச்சி பெரியநாயகியம்மன் ஏரி💫
Thank you @Zoho@svembu sir for all the support🙏🏾
🚨 URGENT BLOOD DONATION REQUEST 🚨
A friend’s child is currently admitted at Ramachandra Hospital, Porur and urgently requires 30 units of blood within the next 2 days. Blood donors of any group are welcome.
🩸 Requirement: 30 units (Any Blood Group)
📍 Hospital: Ramachandra Hospital, Porur
⏰ Needed: Within the next 2 days
If you are willing to donate or can arrange donors through your friends, family, or colleagues, please get in touch immediately.
📞 Contact: 95661 55575
@BloodAid@BloodDonorsIn@BloodDonorsTN
மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் @BussyAnand அவர்களை இன்று நேரில் சந்தித்து நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் நமக்கு இருக்கும் இடையூறுகளையும் நமக்கு என்னென்ன தேவை என்பதையும் குறித்தும் வண்டல் மண் எடுக்கும் விஷயத்தை எப்படி சீராக்க வேண்டும் என்பது குறித்தும் பல கோரிக்கைகளை முன் வைத்தோம். அனைத்திற்குமான தீர்வுகள் உடனே கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
அதே நேரத்தில் நமக்காக ஒரு அதிகாரியை நியமித்து, அவர் மூலம் அனைத்திற்குமான தீர்வுகள் உடனுக்குடன் கிடைக்க வழிவகைகள் செய்துள்ளார். நல்லது நடக்கும் என்று உறுதியளித்த மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@TVKVijayHQ
நீர்நிலைகள் சீரமைப்பின் போது சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அனுமதிக்கான காலதாமதங்கள் குறித்து நான் பதிவு செய்திருந்த பதிவு மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் கவனத்திற்கு வந்தது மிக்க மகிழ்ச்சி, அதுமட்டுமல்லாது அதற்கான தங்களின் உடனடி பதில் கிடைத்தது மேலும் மகிழ்ச்சி.
அலைபேசி மூலம் அழைத்து நீங்கள் கொடுத்த உத்திரவாதத்திற்கும், தங்களின் நேரத்திற்கும் நன்றிகள்.
எனது பதிவினை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்சென்ற அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர். பணிகள் விரைவாகவும், தெளிவாகவும், தடைகளின்றி நடக்குமென்று நம்புகிறேன்.
நன்றிகள் அண்ணே @BussyAnand@CMOTamilnadu@TVKVijayHQ 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@BussyAnand