Thenisai Thendral Deva Sir, The man behind the iconic title card of Super Star..
Not just this., when it comes to Gaana songs, Deva Sir is the first one who comes to mind. Not only Gaana songs, his love songs are so good that you can listen to them on loop. Recently, one of the reasons many concerts felt so vibey is also because of his music. Thank you, Deva Sir... you will always remain in our hearts.
RIP Deva Sir🙏🙏🙏
கழக அரசின் அறிவுத் திருக்கோயில்கள்!
பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடத்தைத் தொடர்ந்து நமது திராவிட மாடல் அரசின் மற்றுமொரு மாபெரும் திட்டம் இன்று மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. சுயமரியாதையையும் பகுத்தறிவையும் பரப்புவதையே தம் வாழ்நாள் கடமையாகக் கருதிக்கொண்டு, தமிழினத்தின் மேன்மைக்காகத் தம் இறுதிமூச்சு வரை உழைத்து ஒளிவீசிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பெயரிலான அறிவுலகம் இன்று கோவையில் திறக்கப்படுகிறது. மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது!
2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், கோவை வாழ் பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரின் அறிவுத்தாகத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என அறிவித்தோம். அதனையடுத்து, 6-11-2024 அன்று அடிக்கல் நாட்டி, கோவை மத்தியச் சிறைச்சாலைக்குச் சொந்தமான இடத்தில், 1.98 இலட்சம் சதுர அடிப் பரப்பளவில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதனைக் கட்டி முடித்தோம். இப்படி நாம் விரைந்து செயல்பட்டு, அக்கறையோடு உருவாக்கியுள்ள அறிவுக் கோயில்தான் பெரியார் அறிவுலகம்.
தரைத்தளத்தில் கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம் மற்றும் விண்வெளிப் பயணத் தூக்கி, முதல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் மையம், இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் சொந்தப் புத்தகம் படிக்கும் பிரிவு, மூன்றாம் தளத்தில் போட்டித் தேர்வுகளுக்கான நூலகம் மற்றும் தலைமை நூலகர் அலுவலகம், நான்காம் தளத்தில் தமிழ்ப் புத்தகப் பிரிவு மற்றும் பருவ இதழ்கள் பிரிவு, ஐந்து, ஆறாவது தளங்களில் ஆங்கில புத்தகப்பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர், ஏழாம் தளத்தில் அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் எனக் காண்போரின் கண்களைக் கவரும் விதத்திலும் சிந்தையைத் தூண்டும் விதத்திலும் உலகத்தரத்தில் இதனை அமைத்துள்ளோம். ஒரு இலட்சத்து 25 ஆயிரம் நூல்களைக் கொண்ட, மேற்கு மண்டலத்துக்கான மாபெரும் அறிவுச்சுரங்கமாக இது திகழவுள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான் கோவைக்குச் சென்றிருந்தபோதே, பெரும்பாலான பணிகள் முடிவுற்று இருந்தன. அப்போதே இதனைத் திறந்து வைத்திடலாம் எனப் பலரும் சொன்னபோது, “அவசரம் வேண்டாம், முழுமையாகப் பணிகள் நிறைவடைந்த பின்னர் திறந்தால் போதுமானது” என்று சொன்னேன். யார் திறந்தால் என்ன! திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை! தமிழ்நாட்டில் அந்தப் பெருமை ஆக்கசக்தியான திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே உரியது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது அன்புத்தம்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சென்னை கோட்டூர்புரத்தில் ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமான, அழகிய நூலகத்தை உருவாக்கினார். கலைஞரின் ஆட்சிக்காலத்துக்குப் பின்னர், அதனை அங்கிருந்து மாற்றிடவும் சீரழித்திடவும் பல முயற்சிகள் நடைபெற்றன. அனைத்தையும் தடுத்து நிறுத்தி, திராவிட மாடல் அரசு 2021-ஆம் ஆண்டு அமைந்ததும் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்துயிரூட்டினோம். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குச் சரணாலயமாக இன்றளவும் அது திகழ்ந்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பூங்காக்கள், நூலகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ஐ.டி. பூங்காக்கள், மேம்பாலங்கள், தமிழர் பண்பாட்டுச் சின்னங்கள் என உருவாக்கிய நவீன தமிழ்நாட்டின் சிற்பியாம் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அமைத்துத் திறந்து வைத்தேன். சென்னை முழுவதும் முதல்வர் படைப்பகங்கள் மற்றும் நூலகங்களையும் அமைத்துத் திறந்து வைத்தேன்.
தமிழ்நாட்டின் முதல் பொதுநூலகமான எழும்பூர் கன்னிமாரா நூலகத்தை மிகச் சிறப்பான முறையில் புதுப்பித்து, நவீன சிறுவர் நூலகம், அறிவியல் மையம், சொந்த நூல் படிக்கும் பிரிவு, நவீன மாநாட்டுக் கூடம் போன்ற புதிய வசதிகளையும் ஏற்படுத்தித் திறந்து வைத்தோம். மேலும், சிந்தாதிரிப்பேட்டையில் சிதிலமடைந்து இருந்த கோஷன் நூலகத்தையும் அதன் நூற்றாண்டையொட்டிப் பழமை மாறாமல் புதுப்பித்தோம். இரண்டையும், அப்போதைய துணை முதலமைச்சர் திரு. உதயநிதி அவர்கள் திறந்து வைத்தார்கள்.
சென்னை, மதுரையைத் தொடர்ந்து பிற பகுதிகளிலும் மாபெரும் நூலகங்களை அமைக்க நமது திராவிட மாடல் அரசில் முடிவு செய்தோம். அப்படி, மேற்கு மண்டல மக்களுக்காகக் கோவையில் நாம் அமைத்துள்ளதுதான் இன்று திறப்பு விழா காணுகின்ற பெரியார் அறிவுலகம்.
கோவை மட்டுமல்ல, திருச்சியில் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் பிரம்மாண்ட நூலகம், நெல்லையில் 100 கோடியில் கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் பெயரிலான மாபெரும் நூலகம், சேலத்தில் 104 கோடி ரூபாயில் பாரதிதாசன் அறிவுலகம், கடலூரில் 98.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள அஞ்சலை அம்மாள் அறிவுலகம் எனத் தமிழ்நாட்டில் திசைதோறும் பிரம்மாண்ட நூலகங்களைத் திராவிட மாடல் அரசில் அமைத்து வந்தோம். இவையனைத்தும் வெகு விரைவில் அடுத்தடுத்து திறப்பு விழா காணவிருக்கின்றன.
அந்த வகையில், ஆட்சியில் இருந்தபோது மட்டுமல்ல, ஆட்சியில் இல்லாத நிலையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகள்தான் ஒவ்வொரு நாளும் மிளிர்கின்றன. திராவிட முன்னேற்றக் கழக அரசைத் தவிர வேறு எந்த அரசும் இப்படி நூலகங்களை அமைத்ததில்லை என்று கழக உடன்பிறப்புகள் தம் காலரைத் தூக்கிவிட்டுப் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் எழுந்து நிற்கும் இந்த அறிவுச் சின்னங்கள் கழக அரசின் சிந்தனையில் உதித்தவை. கழகத்தால் கட்டியெழுப்பப்பட்டவை. வேறு எந்த அரசும் செய்யாதவை.
நூலகங்கள் மட்டுமில்லாமல், சென்னையில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரையிலான மேம்பாலம், சென்னை மெட்ரோ இரயில் திட்ட இரண்டாம் கட்டத்தின் எஞ்சிய வழித்தடங்கள், முட்டுக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கம் எனத் திராவிட மாடல் அரசு அமைத்த திட்டங்களை மட்டுமே இந்தப் புதிய அரசு இன்னும் பல ஆண்டுகளுக்குத் திறந்துகொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு வலுவான அடித்தளத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைத்துவிட்டுச் சென்றிருக்கிறோம்.
அறிவு, அறிவு, அறிவு என அறிவை மையப்படுத்தியே இயங்கி வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அதனால்தான், கழகத்தின் முதல் தலைமையகத்துக்கு அறிவகம் எனப் பெயர் வைத்தார் நம் ஆருயிர் அண்ணா. அவரை ‘அறிஞர்’ என்றும், கலைஞரை முத்தமிழ் ’அறிஞர்’ என்றும்தான் அடைமொழி தந்து அழைக்கிறோம். தலைவர் கலைஞரால் அமைக்கப்பட்டு இன்றளவும் கழகத்தின் தலைமையகமாகத் திகழும் அலுவலகக் கட்டடத்துக்கும் அண்ணா ‘அறிவாலயம்’ என்றுதான் கலைஞர் பெயரிட்டார். இந்த அறிவுமரபின் தொடர்ச்சியாகத்தான், கடந்த ஆண்டு கழக இளைஞரணியின் சார்பில் அறிவுத்திருவிழா நடத்தப்பட்டது.
அறிவுத்தீ எங்கும் பரவ வேண்டும், அறிவு ஜனநாயகமயமாக வேண்டும், வாசிப்புப் பழக்கம் வளர்ந்து பண்பட்ட சமூகமாகத் தமிழ்ச் சமூகம் திகழ வேண்டும் என்றுதான் தமிழ்நாடு முழுவதும் நூலகங்களை உருவாக்கினோம்.புத்தகத் திருவிழாக்களை நடத்தினோம். கீழடி, பொருநை என அருங்காட்சியகங்களை உருவாக்கினோம். மாபெரும் தமிழ்க்கனவு சொற்பொழிவுகளை நடத்தினோம்.
இவையாவும் பசுமரத்தாணி போல, தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் பதிந்திருக்கிறது. ஆனால், உள்ளங்கையால் உதயசூரியனை மறைத்துவிட முயல்வதைப் போல சில முட்டாள்தனமான செயல்களில் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபடுவதைக் கண்டேன். பெரியார் அறிவுலகத்தின் அறிவியல் தொழில்நுட்ப அரங்கில் பிரமிட் வடிவிலான கணினி மேசையில் பொறிக்கப்பட்டுள்ள நான் முதல்வன் பெயரை மறைத்து வைத்துள்ளார்களாம். தான் முதலமைச்சராக ஆகிவிட்ட பின்பும் கூட, ‘முதல்வன்’ என்ற சொல்லைக் கண்டால் மக்களுக்கு இந்த ஸ்டாலின் நினைவுதான் வரும் என நம் எதிரிகளே அஞ்சுகிறார்கள் என்றால், அதுதான் நமது வெற்றி! நமது நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி!
அறிவுச் செயல்பாடுகளுக்கு எந்தத் தொடர்புமற்ற, அறிவார்ந்த சமூகத்தின் மேல் ஒவ்வாமை கொண்ட இந்த மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும்! அதை நிறைவேற்றுவதில், நாம் அமைத்த நூலகங்களும், வெளியிட்ட நூல்களும் நிச்சயம் பங்களிக்கும்! இன்று திறக்கப்படவுள்ள பெரியார் அறிவுலகம் இனி கோவையின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும்!
என் அன்புக்குரிய கோவை மக்களே, திராவிட மாடல் அரசில் நாம் திறந்து வைத்த செம்மொழிப் பூங்காவுக்குத் திரளாகச் செல்வதைப் போல, பெரியார் அறிவுலகத்தையும் அனைவரும் சென்று காணுங்கள். தினம்தினம் செல்லுங்கள். கோவைக்கு உங்கள் உறவினர், நண்பர் வந்தாலும், பாருங்கள் எங்கள் அறிவுலகத்தை எனப் பெருமையோடு அழைத்துச் சென்று காட்டுங்கள். பெரியார் அறிவுலகக் கதவு திறக்கட்டும்! அறியாமை ஒழியட்டும்! வாழ்க பெரியார்!
How am I supposed to choose ONE Rajinikanth song to post when this man has a soundtrack for EVERYTHING?! 😭🔥
Motivation? Friendship? Fake friends? Betrayal? Heartbreak? Society? Inequality? Philosophy? A MASS comeback?Romance? Family? To say what’s important in life money or people?
Whatever life throws at you, Thalaivar has a song for it 😍😍🔥🔥 At 75, this man isn’t just a superstar 😇 he’s the soundtrack to our lives. ❤️🔥🔥🔥🔥
Of course credits to Music director, singers (especially SBP sir), and other artists.
#Rajini #Jailer2
#RAJINISM #Rajinikanth @rajinikanth