நேற்று என் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது எங்களுக்கு பட்ட ஒன்று.
அரசியல் சமூகக்கருத்துக்கள் கொண்டவர்கள், சமூக வலைதளங்களில் அரசியல் கருத்து பேசும் நம் போன்ற பலருக்கு முன் இப்பொழுது நிற்பது, கொள்கை கருத்து முரண்பாடுகளோ, மத்திய மாநில வேற்றுமைளோ, கட்சி வேறுபாடுகளோ அல்ல. நம் முன் நிற்பது, லாஜிக் இல்லாத, லாஜிக் பார்க்காத, வரலாறு முக்கியமில்லாத, கொள்கை முக்கியமில்லாத, செயல்முறைகள் தேவையில்லாத, பொய் செய்தி பரப்பி, பொய் செய்தி நம்பி, பொய் செய்தி உட்கொண்டு, பொய் செய்தி ஜீரணிக்கும், எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் ஒரு பெரிய மக்கள் இயக்கம்.
கவனிக்க, மக்கள் கூட்டம் என்று நான் சொல்லவில்லை. இது வெறும் கூட்டமில்லை. இது பேரியக்கம். அந்த இயக்கத்தின் மத்தியில் ஒரு பிம்பம். ஒரு நட்சத்திரம். அதைச்சுற்றி பல சாட்டிலைட்டுகள். அவற்றைச்சுற்றும் பொதுமக்கள், அதிகார வர்க்கம்.
இந்த இயக்கத்தின் பேரோட்டத்தில் மாற்று குரல்கள் சிந்தனைகள் கரைந்து மங்கிவிடும். இங்கு நாம் data, fact-check போன்ற எதை எடுத்து வைத்தாலும் எல்லாம் அந்த வண்டியின் சக்கரங்களுக்கு அடியில் நசுக்கப்படும்.
எதிர்கட்சியாக கட்சிகள் மட்டுமல்லாது, ஊடகம், பொதுமக்கள் என்று யார் பேசினாலும் இந்த இயக்கத்தின் சத்தத்தில் எதுவுமே வெளியே கேட்காது.
விஜய் சுனாமி என்று சரியாகத்தான் சொன்னார்கள். சுனாமி வரும்பொழுது நம்மை தற்காத்துக்கொள்ள எப்படி ஒரு மரத்தில் ஏறி நின்று அல்லது மொட்டைமாடியில் நின்று சுனாமி அடித்து ஓய்ந்ததற்குப்பிறகு இறங்கிவருவோமோ, அதே போல் இப்பொழுது ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பது மட்டுமே நல்லது.
எதிர்கட்சிகள் எங்கு தவறு செய்தோம் என்று ஆய்வு மேற்கொள்வதெல்லாம் பிரயோஜனமற்ற வேலைகள். நீங்கள் செய்த ஒரே தவறு, நீங்கள் விஜய் இல்லை என்பதுதான்.
எதிர்கட்சிகள் இந்த வேடிக்கைப்பார்க்கும் காலகட்டத்தை, கட்சியின் உட்கட்டமைப்புக்களை வலுவாக்குவது, கொள்கை ரீதியான பயிற்சிப்பாசறைகள் நடத்துவது, நிதி திரட்டுவது போன்ற வேலையில் ஈடுபடுவது நல்லது. அரசியல் பேசும் பொதுமக்கள் சொந்த வேலையைப்பார்க்கச் செல்வது நல்லது.
Sofa model ஆட்சி நடத்தும் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே.. உங்க லட்சணத்தைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேளுங்கள்.
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை சரி செய்யுங்கள்.. முதலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசுங்கள். நிழல் முதலமைச்சராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா தான் பேசிக் கொண்டிருக்கிறார்.அவர்தான் முதல்வரா? நீங்க டம்மி முதலமைச்சரா பதில் சொல்லுங்க CM sir..
#TVKFails
தற்குறியின் ஆட்சியில் தவிக்குது தமிழ்நாடு.
வெற்று விளம்பரங்களையும் 'ரீல்ஸ்'களையும் மட்டுமே நம்பி நடக்கும் இந்த "சிரிச்சா போச்சு" ஆட்சிக்கு மக்கள் கூடிய விரைவில் முடிவுகட்டுவார்கள்!
#TVKFails
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும்.
ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?
திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?
மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
Did the young woman tease, harass, and disrespect her own father?
He even pleaded, “I might cry… don’t tease me!”
But she didn’t listen to him at all.
Elders are especially vulnerable in such emotional moments.
Anything can happen to their health.
Yet the young lady didn’t seem to realise his emotions and pain.
#NEET – Never Been Neat:
இந்த ஆண்டும் #NEET Paper Leak முறைகேடுகள் வெளிவந்து, Exam Cancel ஆகியிருக்கு. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க.
ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்!
ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும்.
மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் Delay, மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி Plus Two தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே MBBS இடங்கள் ஒதுக்கப்படணும்.
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu