எங்களுடைய திருமண நாளை முன்னிட்டு காஞ்சி சென்று மடத்தில் காஞ்சி பெரியசாமிகள் ஆசீர்வாதம் கிடைத்தது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய திருமண பரிசாகும். என்னைப் பெற்ற தாயும், என்னை உலகறிய செய்த தாயும் இல்லாத இந்த சூழ்நிலையில் பெரியவர் ஆசி எங்களுக்கு மகிழ்ச் அளவில்லை.
பல்வேறு வீரர்களின் தீரத்தாலும் தியாகத்தாலும் நமக்கு கிடைத்த
நம் வளமிகு இந்தியத் திருநாட்டை தொடர்ந்து ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் சமூகநீதிப் பாதையில் வலிமையான நாடாகக் கட்டமைத்திட இந்த சுதந்திர நாளில் உறுதியேற்போம்.
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
#IndependenceDay@AIADMKOfficial
தொகுதி மறுவரையறை குறித்த புதிய மசோதா எதுவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத, அதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாத நிலையில், எதற்காக தமிழக முதல்வர் அவசர அவசரமாக எம்.பி.க்கள் கூட்டம் என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறது?
கண் முன்னே நடக்கும் காவிரி- மேகதாது பிரச்சனைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரியுள்ள நிலையில், அவற்றை எல்லாம் உதாசினப்படுத்திவிட்டு இந்த அரசின் முதல்வர், எதற்காக தாக்கல் செய்யப்படாத மசோதாவிற்கு கூட்டத்தை நடத்துகிறார்?
இன்று வரை மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லை. விவசாயிகள் கண்ணீருக்கு பதில் சொல்லாமல் இந்த அரசு நடத்தும் மடைமாற்று அரசியல் அரங்கேற்றத்திற்கு @AIADMKOfficial ஒருபோதும் துணை போகாது.
காவிரி நதிநீர், மேகதாது அணை விவகாரம் தொடர்பான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று, தமிழக விவசாயிகளின் குரலாக, அவர்களின் எண்ணங்களைப் பிரதிபலித்து உரையாற்றிய மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#TNAssembly#AIADMK
நண்பர்களே, நான் பார்த்த வீடியோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாண்பை எடுத்துக் கூறுவதை போல் பத்திரிக்கையாளர் கூறுவதை பார்க்கின்ற பொழுது இந்த இயக்கத்தை வைத்து வளர்த்துக் கொண்டவர்கள் வெளியேறுவது எவ்வளவு தவறு. அடித்த புயலில் கோபுரத்தில் ஏறிய ஒன்று அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அழிந்தது ஒழிந்தது என்று கூறுவது அறியாமை, அடுத்த புயலில் அது கீழே வந்து விடும் என்பதை உணராத சிலர் கூறுவதை பார்க்கின்ற பொழுது சிரிப்புதான் வருகிறது.
ஆட்சிக்கு வருவதற்கு முன் காவல் மரண விவகாரங்கள் குறித்து நீதி வேண்டும் என மார்தட்டி வசனம் பேசிய ரீல் முதல்வர் அவர்கள்,
தனது ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் காவல் மரணங்கள் குறித்து ஏதும் பேசாமல் வாய்மூடி மௌனியாக இருப்பது ஏன்?
@CMOTamilnadu..
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதால்
அப்போது கேட்டதையே இப்போதும் கேட்கிறோம்..
நீதி வேண்டும்!
நீதி வேண்டும்!
தேர்தல் காலங்களில் மட்டும் மக்களை நாடிச் சென்று, பதவிக்கு வந்ததும் தீண்டாமையைப் போற்றும் முதல்வர்கள் மத்தியில், எந்தவித வேறுபாடின்றி அன்பால் மக்களை அரவணைக்கும் ஒரே மக்கள் இயக்கம் அஇஅதிமுக மட்டுமே!!
கரிசல் மண்ணின் குரலாகவும், தமிழ் இலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளராகவும் விளங்கிய சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் ஐயா பூமணி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தமது எழுத்தின் வழியாக மண்ணின் மணத்தையும், மக்களின் வாழ்வியலையும் தலைமுறைகளுக்கு பதிவு செய்த அவரது இலக்கியப் பணி என்றென்றும் நிலைத்திருக்கும்.
இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் இந்த வேளையில்,
அன்னாரின் புகழுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் இலக்கிய உலகினருக்கும், வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial
நம்முடைய இசை அரசி திருமதி ஜானகி அம்மாள், தன் இனிமையான குரல் வலிமையால் இந்திய திருநாட்டின் மக்களின் இதயங்களை கொள்ளையடித்தவர். அந்த இசைக்குயில் இறைவனடியில் இளைப்பாற பறந்து சென்று சென்றுவிட்டது அவர் ஆன்மா சாந்தியடைய நாம் ஆண்டவனை வணங்குவோம்💐💐💐😭😭😭😭😭😭🙏
ஏப்பா, ஏய்! எத்தனை கட்சியிலப்பா சேர்ப்பீங்க. நான் என்றும் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தான். புரட்சித் தலைவர் ஏழைகளின் நன்மைக்காக உருவாக்கிய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் என் வழி.
சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் உள்ளிட்ட மூவர் சிறுவனுக்கு வாயில் மது ஊற்றி, கொடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
சிறுவன் தன்னை தற்காத்துக் கொள்ள
டிவி ரிமோட்டால் காவலரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடி, அசோக் நகர் காவல் நிலையத்திற்கு நடந்தே வந்து புகார் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
தமிழகத்தில் நாள்தோறும் பரிணமிக்கும் குற்றச் செயல்களின் தன்மை ,
மிகுந்த அச்சமூட்டுகிறது.
@CMOTamilNadu அவர்களே -
எந்த குழந்தைகளை வைத்து நீங்கள் வாக்கு சேகரித்தீர்களோ, அதே குழந்தைகள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்பு இன்றி நிற்கின்றனர். இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
“சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்” என ஒன்றை நீங்கள் நடத்தியதாக ஒரு வீடியோவை உங்கள் அரசு வெளியிட்டது. அது மற்றுமொரு சம்பிரதாயத்திற்காண கூட்டமாக மாற்றி விடப்பட்டு உள்ளதோ என்ற சந்தேகங்கள் வலுப்பெறுகிறது.
வேலியே பயிரை மேயும் கொடூரம் நடப்பது உங்கள் மனதை உறுத்தவில்லையா?
சிறுவனுக்கு நேர்ந்துள்ள இந்த கொடுந்துயருக்கு காரணமான காமுகர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியேனும் “கோட்-சூட்-போட்டோஷூட்” மாடல் ஆட்சியை கைவிட்டு, சட்டம் ஒழுங்கைக் காக்க உணர்வோடு செயல்பட வேண்டும் என பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
" எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “
- அம்மா
கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!
இனி நமக்குள் பிரிவில்லை...
இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை..
நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே!
நாளை நமதே!
தமிழ்நாடும் நமதே!
#என்றென்றும்_அதிமுககாரன்
தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம் தான் வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்!
மாநிலத்தின் கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி, தமிழ்நாட்டைச் சுரண்டித் தின்றுக் கொழுத்த ஒரு குடும்பத்தை உங்கள் வாக்குகளால் விரட்டியடிக்கப் போகும் தேர்தல் இது!
பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து, தமிழ்நாட்டை போதை மற்றும் வன்முறைக் காடாக மாற்றிவிட்டது திமுக அரசு!
இந்த அராஜக ஆட்சியில் இருந்து உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றக் கூடிய ஒரே ஆயுதம் உங்கள் வாக்கு தான்!
ஒரு குடும்பத்தின் காட்டாட்சியை ஒழித்து, குற்றமற்ற நல்லாட்சியை வழங்க @AIADMKOfficial எனும் மக்கள் இயக்கத்தால் மட்டுமே முடியும்.
தொற்று நோய் தடுத்து,
விவசாயம் செழிக்கச் செய்து,
கல்வியில் புரட்சி செய்து,
தமிழ்நாட்டைச் சரியான திசையில் வழிநடத்திய அஇஅதிமுக-வின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
சிறப்பான நமது தேர்தல் அறிக்கை மூலம் வளமான ஒரு எதிர்காலத் தமிழ்நாட்டை நாம் கட்டமைக்க உள்ளோம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறவும்,
@AIADMKOfficial தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்திடவும்,
உங்கள் பொன்னான வாக்குகளை
#இரட்டைஇலை சின்னத்திலும்,
#தாமரை சின்னத்திலும்,
#மாம்பழம் சின்னத்திலும்,
#குக்கர் சின்னத்திலும்
அளித்திட வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
“அமைதி- வளம்- வளர்ச்சி” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் கனவுப் பாதையில் மீண்டும் தமிழகம் பயணிக்கப் போகும் நன்னாள் வந்துவிட்டது!
சந்தோஷமாக, மனநிறைவோடு உங்கள் வாக்குகளை அளியுங்கள். அடுத்த 5 ஆண்டுகள் உங்கள் மனம் நிறையும் காலமாக இருக்கும்.
அதற்கு உங்கள் எடப்பாடி K பழனிசாமி ஆகிய நான் உறுதியளிக்கிறேன்!
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#Vote4AIADMK