பட்டிமன்றம் என்றாலே நினைவுக்கு வரும் பெயர் சாலமன் பாப்பையா. சிந்திக்க, சிரிக்க வைத்த பட்டிமன்றங்கள் ஏராளம். இவரின் நடுவர் என்ற இடம் மிகப்பெரிய வெற்றிடமாகவே இருக்கும். உங்கள் பட்டிமன்ற நிகழ்வுகள், நினைவுகளாக இருந்து கொண்டே இருக்கும்.சென்று வாருங்கள் ஐயா. ஆழ்ந்த இரங்கல்.
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
பொருள்:
உண்மையான பெருமை உடையவர்கள் எக்காலத்திலும் செரு��்கின்றி பணிவாகவே இருப்பார்கள். ஆனால், சிறுமை (கீழ்மையான குணம்) உடையவர்கள், தம்மைத்தாமே வியந்து புகழ்ந்து பாராட்டிக் கொள்வார்கள். #Tamil #Thirukural
இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் எப்போதும் நடக்க கூடாது. அரசியல் கட்சிகள் மக்களை கும்பல் கூட்டும் மந்தைகளாக பார்க்க கூடாது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இர��்கல். #KarurStampede #tvkstampede #RIP #Karur
திருச்சி பேரணியிலே கடும் கன்டணத்தை தெரிவித்து, விஜய்யின் பயணத்தை கட்டுப்பாடு அதிகரிக்க அரசுக்கு வலியுறுத்தியிருக்க வேண்டிய ஊடகங்களும், மூத்த பத்திரிக்கையாளர்களும் கூட்டத்தை சிலாகித்து பேசி அரசு விஜயை பார்த்து பயப்படுகிறது, நடுங்குகிறது என நியாயமாக கொடுக்கும் விதிமுறைகளுக்கு
அரசியல் தலைவரோ, அரசாங்கமோ உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் வேண்டுமானால் சொல்வார்கள். அதிகபட்சம் நிவாரணம் தருவார்கள். ஆனால் உயிர்?
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அரசு இயந்திரம் முழுமையாக விரைவாக செயல்பட்டது. களத்தில் நின்ற ஆளுங்கட்சி, எதிர்கட்சிகள் என அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்
முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் தடுமாற்றத்துடன் ஆரம்பித்து சிறப்பாக #WorldCup வை வென்றுள்ளது #Australia . They deserve this victory. குறிப்பாக இந்த தொடர் முழுவதும் அவர்களின் முக்கிய Startegy யான Sledgeing போன்றவற்றையும் பயன்படுத்தவில்லை. #CWC23Final#INDvsAUS
தமிழ்நாட்டில் சில வருடம் முன் பிறமொழி பேசும் ரயில்வே ஊழியரால் Communication gap பிரச்சனையால் பெரிய ரயில் விபத்து நடந்திருக்கும் கடைசி நேரத்தில் சமயோசிதமாக தடுத்து நிறுத்தப்பட்டது என படித்தேன். ஒடிசா ரயில் விபத்து இதை தான் நினைவுபடுத்துகிறது. ஆழ்ந்த இரங்கல் #TrainAccident
பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களை ஓரளவிற்கு கதையை மறு நினைவூட்டலுக்கு இந்த படம் உதவுமே தவிர, வாசகரின் திருப்தியை பாதி கூட நிறைவேற்றவில்லை. ஆனால் நிச்சயமாக முதல் பாகத்தை விட சற்று விறுவிறுப்பாக படம் நகர்கிறது பல அடிப்படை கதை மாற்றங்களுடன் #PS2
சென்னையில் சமூகநீதி காவலர் முன்னாள் பிரதமர் #VPSingh திருவுருவ சிலை நிறுவப்படும் ���ன்ற செய்தி வரவேற்பு க்குறியது. பல்வேறு அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் தமிழ்நாட்டு மக்களின் பிரதான கோரிக்கையான காவிரி நடுவர் மன்றம் அமைத்து தமிழகத்துக்கு சாதகமாக வழங்கியவர். #vpsinghstatue
ஒரு சின்ன சர்வே.
கடந்த 2022 ஆம் ஆண்டில், எனது finance tweets களினால் ஏதாவது ஒரு வகையில் பலனடைந்தவர்கள் மட்டும் இந்த ட்வீட்டை #RT செய்யவும்.
மிக்க நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
#SelfMotivation#ImprovingMyself#2023NewYear
நாவலை படித்த போதே தஞ்சை, பழையாறை சென்று பார்த்தது போல் உணர்வு. ஆனால் படத்தின் காட்சிகளோ, நடித்த நடிகர்களோ எதிலும் ஒட்டாமல் கதை பெயர்களை மட்டுமே எடுத்துக் கொண்டு திரைக்கதையை மட்டுபடுத்தி,
நாவலில் இருந்த அடிப்படையானதை மாற்றி மேலும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது. #PonniyinSelvan
தமிழ் கடல் திரு.நெல்லை கண்ணன் மறைவுற்ற செய்தி மிகுந்த மன வருத்தத்தை கொடுத்தது. சமகால அரசியலை நகைச்சுவையாக நெல்லை தமிழில் வெளிபடுத்தும் அவரின் பாங்கு ரசிக்கத்தக்கது. இலக்கியம், சொற்பொழிவு, பட்டிமன்றம் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர். #RIPNellaiKannan
இந்துதமிழ்திசை நாளிதழில் தற்கொலை போன்ற செய்திகளை முடிந்த அளவு பூடகமாக அணுகுவார்கள். தற்கொலை எண்ணம் தோன்றினால் councelling மைய எண்ணை தொடர்பு கொள்ளவும் அறிவுறத்துவார்கள்
ஆனால், இன்றைய ஊடகங்களோ இது போன்ற செய்தியை தொடர்ச்சியாக காட்சிப்படுத்தல் பலவீனமான எண்ணம் கொண்டவர்களை பாதிக்கும்.