"The earth, the air, the land and the water are not an inheritance from our fore fathers but on loan from our children. So we have to handover to them at least as it was handed over to us."
— Mahatma Gandhi
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களது அறிவுறுத்தலின் பேரில், இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் ஆலோசனைக்கிணங்க பாகத்திற்கு ஓர் இளைஞரைத் தேர்வு செய்து சட்டமன்றத் தொகுதி வாரியாக சமூக வலைத்தளப் பயிற்சி வழங்கி வருகிறோம்.
மண்டலம் 7, 8 - இல் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான சமூக வலைத்தளப் பயிற்சி 1.12.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது.
அந்தந்த சட்டமன்றத் தொகுதி பாகங்களில், இப்பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் தவறாமல், இதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
#DMKYW_SMTraining @ilaiyadmk@GprMadurai
மதுரை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ஒன்றிய அரசு இரத்து செய்ய வேண்டும்! தமிழ்நாடு அரசு இதனை ஒருபோதும் அனுமதிக்காது!
மாநில அரசின் அனுமதியின்றி இதுபோன்ற சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என மாண்புமிகு பிரதமர் அவர்கள் சுரங்க அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.
#Arittapatti #அரிட்டாபட்டி #Tungsten
நம்முடைய பிறந்த நாளான இன்று, #ChepaukTriplicane தொகுதி, இராயப்பேட்டை டி.டி.கே சாலையில் செயல்பட்டு வரும் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற வீடற்றோர் காப்பகத்தில் தங்கியுள்ள, மூத்த குடிமக்களுடன் சேர்ந்து கேக் வெட்டி மகிழ்ந்தோம். அவர்களின் வாழ்த்துகளை பெற்றோம். அங்கு தங்கியுள்ளோருக்கு உடை, உலர் பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினோம். அவர்களுக்கு என் அன்பும், நன்றியும். @nchitrarasu
கழக இளைஞர் அணிச் செயலாளரும், மாண்புமிகு துணை முதலமைச்சருமான @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் @PKSekarbabu நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
#HBDDyCMUdhay
உயிரையும், உடலையும் தந்தது மட்டுமின்றி தமிழ்நாட்டை நேசிக்கும் உணர்வையும் - அயராது உழைப்பதற்கான ஆற்றலையும் தந்து கொண்டிருக்கும் கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களிடமும், ஈன்றெடுத்த அன்புத்தாயாரிடமும் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டோம்.
எந்நாளும் வழிநடத்தும் தாய் - தந்தையின் வாழ்த்தைப் பெற்று நம் பணிகளை தொடர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
இளம் தலைவர்
இளைய சூரியன்
திராவிட தளபதி
இளைஞர் அணி செயலாளர்
மாண்புமிகு துணை முதலமைச்சர்
அண்ணன் @Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
#HBDDyCMUdhay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் உத்தரவின்படி, விருகம்பாக்கம் கால்வாயில் நடைபெற்று வருகிற தூர்வாரும் பணிகளை @chennaicorp - கோடம்பாக்கம் மண்டலத்துக்குட்பட்ட கிருஷ்ணா நகர் பகுதியில் இன்று ஆய்வு செய்தோம்.
கனமழையின் போது தெருக்களில் தண்ணீர் தேங்கிடாமல், விருகம்பாக்கம் கால்வாய் வழியாக அதனை வெளியேற்றிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிட அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினோம். @PrabhakarRaja88 #PradeepYadavIAS @kgbias
கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் ஆலோசனையின் பேரில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பாக இளைஞர்களுக்கு சமூக வலைத்தளப் பயிற்சி வழங்கி வருகிறோம்.
அந்த வகையில் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கான சமூக வலைத்தளப் பயிற்சி மாநில துணைச் செயலாளர் @ilaiyadmk முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து @sidique_dmk அவர்களும், சமூக வலைத்தளத்தை ஆக்கப்பூர்வமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விக்னேஷ் ஆனந்த் அவர்களும் பயிற்சி அளித்தனர்.
மாறி வரும் அரசியல் சூழலுக்கேற்ப சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் இந்நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது.
#DMKYW_SMTraining @Govichezhian@SKDMKTJ@GkmRaja4
Presented Tamil Nadu's key demands to the #16thFinanceCommission:
📈 Increase States' share of central taxes to 50% to ensure greater fiscal autonomy and service delivery.
🤝 Ensure balanced inter-state devolution, incentivising good governance & growth.
🔹Address Tamil Nadu’s challenges of rapid urbanisation disaster relief expenditure and ageing population.
We hope that the Commission will remedy past injustices and lay a roadmap for a true cooperative federalism.
ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பங்களிப்போடு செயல்பட்டு வரும் எல்.ஐ.சி-யின் இணையதளம், முழுக்க, முழுக்க இந்திமயமாக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அந்த இணையதளத்தை ஆங்கிலத்தில் பார்ப்பதற்கான வசதியைக் கூட இந்தியில் உள்ள சுட்டியின் மூலம் தான் பெற முடியும் என்பது ஒன்றிய அரசின் இந்தித்திணிப்பு மோகத்தையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தமிழ், ஆங்கிலம் உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் LIC இணையதளத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் உடனே மாற்றி அமைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தி உட்பட எந்த ஒன்றையும் வலுக்கட்டாயமாக திணிப்பதன் மூலம் வளர்த்துவிட முடியாது என்பதை ஒன்றிய அரசு இன்னும் புரிந்துகொள்ளவில்லை.
சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது!
#LIC #StopHindilmposition