Dear Elon,
India is a sovereign country, not your personal business project. You run a private company, not a charity.
Just because you want to enter the Indian market doesn't mean you get to mock people and lecture India on what it should do.
And please stop selling this idea that you are coming to save poor Indians. Starlink is VERY expensive. It's not free internet that you are giving away out of kindness.
You are here to do business, just like every other company. So let's not pretend this is some social service.
Nobody is stopping you from making an offer. Make it affordable, follow Indian rules, and let the government decide. That's how it works.
Please keep attitude in check, you just sell internet. You don't own India.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. மக்கள் மனத்தில் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கென இருக்கும் முதன்மைச் சக்திக்கான முதலிடமும், நமது மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான நம் சொந்தங்களின் ஆழ்மன விருப்பமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
வாக்குகளுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், திருமங்கலம், ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்று எந்த ஃபார்முலாவும் இல்லாமல் அன்பு, பாச, உறவு ஃபார்முலா மற்றும் ஜனநாயகம் காக்கும் ஃபார்முலாவை வைத்து வென்ற தேர்தல் இது. தமிழகம், ஊழல் சக்திகளின் கோட்டை இல்லை. மாறாக, மாபெரும் மக்கள் சக்தியின் கோட்டை, மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்ற அன்பு மிக்க தூய சக்தியின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பணநாயகச் சூத்திரத்தையே அடித்து நொறுக்கிப் பெற்றுள்ள வெற்றியே இது.
கண்டகண்ட பேரங்கள் நடந்ததாக அவதூறு பேசிய மிருகக் குணப் பேச்சுக்கு எல்லாம் மக்கள் தகுந்த பதிலடியைத் தரமாகத் தந்துள்ளனர். அப்படிப் பேசியவர்களை மக்கள் வெகுதூரத்தில் ஒதுக்கி வைத்து, அவர்கள் மனத்தில் மீண்டும் தோல்வி பாரத்தை ஏற்றி உள்ளனர்.
இரண்டு தொகுதிகளிலும் நாம் இரண்டு நாள்கள் பிரசாரம் மேற்கொண்டதை நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசியவர்களுக்குத்தான் இப்போது மக்கள் பதிலடி தந்துள்ளனர். இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்ய அன்றைய தீய சக்தி தி.மு.க., நம்மை அனுமதித்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்.
நம்மைப் பொறுத்தவரை, என்றைக்கும் நாம் மக்கள் பக்கம்தான் நிற்போம். மக்களோடு மக்களாகத்தான் இரண்டறக் கலந்து இருப்போம். அது நம் கடமை மட்டுமன்று. மக்களுக்கான நமது நன்றிக் கடன் அது. எப்போதும் நம் தமிழக மக்களுக்காக முழுமூச்சுடன் நன்றி விசுவாசத்துடனேயே இருப்போம் என்பது நூறு சதவீதம் உறுதி.
இந்த வேளையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ள நம் சொந்தங்கள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவாக நன்றி சொல்வதில் மனம் மகிழ்கிறேன். நெஞ்சம் நெகிழ்கிறேன்.
இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் மதிப்பிற்குரிய தலைவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், எப்போதும் போலச் சிறப்பாகக் களப் பணியாற்றிய நம் மாண்புமிகு அமைச்சர்களுக்கும் மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை த.வெ.க. நிர்வாகிகளான நம் தோழர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த இடைத்தேர்தலில், வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நம் வேட்பாளர்களான சகோதரி திருமதி மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சகோதரி திருமதி சத்தியபாமா (தாராபுரம் தொகுதி) ஆகியோருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்போதும் சொல்கிறேன். இந்த வெற்றி, தனிப்பட்ட இந்த விஜய்யின் வெற்றியோ, தனிப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல. இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி. அப்பழுக்கற்ற தலைவர்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் செய்த துரோகத்திற்கு எதிரான வெற்றி.
மொத்தத்தில், அரசியல் நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. தனிமனித நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வாக்காளர்களுக்குக் கிடைத்த வெற்றி. இது இனிமேலும் தொடரும். தொடர்ந்தேதான் தீரும். மீண்டும் மீண்டும் இனிவரப் போகும் வெற்றிகளுக்கும் சேர்த்து இப்போதே நன்றி.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
எந்த வேடம் போட்டு வந்தாலும் தீயசக்தியை விரட்டியடிப்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்.
தோல்வி மேல் தோல்வி வந்தால் பழியை மாற்றிப் போடுவதுதான் ஆபாச கழகத்தின் வழக்கமான ஃபார்முலா !
கதறல்கள், உருட்டுகள் தொடரட்டும்!
தேர்தல் பிரச்சாரமா?பெண்களை கேலி செய்யும் கேவலப் பிரச்சாரமா?
பெண்களை கேலி பேசும் டிஎன்ஏ
அது திமுகவின் கேடுகெட்ட டிஎன்ஏ!
நிலை மாறினால்
குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும்கூறுவான் !
பெண்களை இழிவாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்ட
திமுக தலைவரே
மன்னிப்பு கேள்!
மன்னிப்பு கேள்!!
#ஸ்டாலினே_மன்னிப்பு_கேள்
Thank you so much for your incredibly encouraging words, sir. They truly mean a lot to me and give me even more strength and motivation to push myself and do better with every opportunity. It means more than I can express. Love you, sir. ❤️
திரு ஸ்டாலின் அவர்கள் திருமதி சத்தியபாமா அக்காவை உருவகேலி செய்துள்ளது தவறானது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தேர்தல் பிரச்சாரமா? பெண்களை கேலி செய்யும் பிரச்சாரமா? பெண்களை இப்படி உருவக்கேலி செய்வதுதான் உங்கள் அரசியலா? மக்களின் வாக்குகளை கேட்கச் செல்லும் அரசியல் கட்சிகளுக்கு பெண்களின் கண்ணியம் குறித்து எந்தப் பொறுப்பும் இல்லையா?
பெண்களைப் பற்றி அவமதிக்கும் வகையில் பேசுவது ஒரு தனிநபரை மட்டும் பாதிக்கும் விஷயம் அல்ல. அது ஒட்டுமொத்த பெண்களின் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் அவமதிக்கும் செயல்.
அரசியல் மேடைகளில் பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளுக்கு கைதட்டல் கிடைப்பதாக நினைத்தால், அது அரசியலின் வெற்றியல்ல அரசியல் பண்பாட்டின் வீழ்ச்சி.
திரு ஸ்டாலின் அவர்கள் இதற்கு உடனடியாக விளக்கம் அளிப்பதுடன், பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்.
மன்னிப்பு கேள்!
மன்னிப்பு கேள்!!
#ShameOnStalin
தாராபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் திருமதி சத்தியபாமா அவர்களை உருவகேலி செய்யும் வகையில் முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் @mkstalin அவர்கள் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அரசியலில் எதிர்க்கட்சியினரை விமர்சிக்க முடியாமல், ஒரு பெண் வேட்பாளரின் தோற்றத்தை கேலி செய்வதுதான் கோபாலபுரம் குடும்பத்தின் அரசியல் தரமா?
ஐந்து ஆண்டுகால அதிகார ஆணவ ஆட்சிக்குப் பிறகும், பெண்களை இழிவுபடுத்தும் பேச்சு குறித்து எந்த சுயபரிசோதனையும் செய்யாமல், மீண்டும் அதே அவதூறு, கேலி, தனிநபர் தாக்குதல் அரசியலை முன்னெடுப்பது வெட்கக்கேடானது.
பெண்களை மதிக்கும் தமிழ்நாட்டு மண்ணில், ஒரு பெண் வேட்பாளரை பொதுமேடையில் கேலி செய்வதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மேடைதோறும் அண்ணாவையும் பெரியாரையும் தங்களது வழிகாட்டிகள் என்று கூறிக்கொள்ளும் கோபாலபுரம் குடும்பத்தினர், பெண்களின் சுயமரியாதை, பெண்கள் முன்னேற்றம், சமூகநீதி குறித்து அந்த தலைவர்கள் கூறிய கருத்துகளை முதலில் படிக்கட்டும். அதன் பிறகாவது அரசியல் நாகரிகம் என்றால் என்ன என்பதை கற்றுக்கொள்ளட்டும்.
முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.க. ஸ்டாலின் அவர்களே அரசியல் கருத்துக்கு அரசியல் பதில் கொடுங்கள். ஒரு பெண்ணின் தோற்றத்தை கேலி செய்வது அரசியல் அல்ல; அது அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சி!
தாராபுரம் வேட்பாளர் திருமதி சத்தியபாமா அவர்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்பதுடன், தமிழ்நாட்டு பெண்கள் முன்னிலையிலும் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்.
பெண்களை இழிவுபடுத்தும் இந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது!
@CMOTamilnadu | @TVKVijayHQ
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
அத்தனைக் கோபத்திலும் “ஆபாசமாய்”பேசாமல்.. ஆதாரப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக, அரசியல் பூர்வமாக பேசினார் முதல்வர்.
ஒருமணிநேர கூச்சலுக்கு நடுவே சிறிதும் சமநிலை தவறாது முழு உரையை முடித்தார். அரசியல் விருப்பு வெறுப்புகளை தாண்டி, இவரிடம் கற்றுக்கொள்ள பல பாடங்கள் உள்ளன.
நாகரீக அரசியலின் நட்சத்திரம் ⭐️ #CMVijay