தன் இதயத்தோடு நெருங்கி வாழும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நெகிழ்ச்சியோடு சிரம் தாழ்த்தி தன் நன்றியை தெரிவித்துக்கொண்டதோடு,
மக்களுக்கான மனசாட்சியுள்ள உண்மையான மக்களாட்சியை அமைத்துக் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் தன் நன்றியை தெரிவித்துக்கொண்டார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
White Shirt. Tucked In. Middle-Aged Man.
Honourable Chief Minister thanking the people of Trichy East for their unwavering support, trust, and affection. ❤️🙏
தனக்கு வாக்களித்து, தன்னை வெற்றி பெறச் செய்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நெகிழ்ச்சியோடு சிரம் தாழ்த்தி தன் நன்றியை உரித்தாக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின் 137-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (1.6.2026) சென்னையில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
#CMJosephVijay
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக திரு.கு.பா. கிருஷ்ணன் அவர்களை நியமனம் செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆணை
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு ம��தலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.05.2026) தலைமைச் செயலகத்தில், கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் திரு. ஜின்னா ரஃபிக் அகமது அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டில் அந்நிறுவனம் மேற்கொண்டுள்ள முதலீடுகள் குறித்தும், தோல் அல்லாத காலணித் தயாரிப்பில் அந்நிறுவனத்தின் பங்களிப்பு குறித்தும் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.05.2026) தலைமைச் செயலகத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. தொல். திருமாவளவன், பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. து. ரவிக்குமார், பொதுச் செயலாளர்
திரு. எம். சிந்தனைச்செல்வன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.05.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த திரு. எஸ். ராஜேஷ் குமார் மற்றும் திரு. பி. விஸ்வநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த திரு. வன்னி அரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சார்ந்த
திரு.அ.மு. ஷாஜகான் ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.05.2026) தலைமைச் செயலகத்தில், எம்.ஆர்.எஃப் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. கே.���ம். மம்மன், துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. அருண் மம்மன், மேலாண்மை இயக்குநர் திரு. ராகுல் மம்மன் ஆகியோர் சந்தித்து, தமிழ்நாட்டில் எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும், உற்பத்தி மற்றும் ஏற்றுமதிப் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீடுகள் குறித்தும் பேசினர்.
#CMJosephVijay
இன்று (21.5.2026) சென்னை, கிண்டியிலுள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான புதிய அமைச்சரவையின் குழு புகைப்படம்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில், விவசாயிகளின் நலன் கருதி நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதி அளிப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ���நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் (TANSTIA) தலைவர் திரு. S. வாசுதேவன், செயலாளர் திரு.V.நித்யானந்தம், பொருளாளர் திரு.P.N. ரகுநாத ராஜா, துணைத் தலைவர்
திரு. K.C. துரைராஜ் ஆகியோர் சந்தித்து, மாநிலத்தில் குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களை வலுப்படுத்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய வாகன உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ACMA) தென்மண்டலத் தலைவர் மற்றும் ரானே மெட்ராஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் திரு. ஆதித்யா கணேஷ், ACMA சங்கத்தின் தென்மண்டல முன்னாள் தலைவர் மற்றும் நடேசன் சின்குரோகோன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி சுபா குமார், MSME மற்றும் ACMA தென்மண்டலத் தலைவர் மற்றும் ALFA Rubber நிறுவனத்தின் இயக்குநர் திரு. ஸ்ரீகாந்த் மற்றும் ACMA தென்மண்டல இயக்குநர் திரு. சரவணன் ஆகியோர் சந்தித்து, மாநிலத்தின் வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தி மற்றும் எ��ிர்காலத் திட்டங்கள் குறித்து பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய ஆலைகள் சங்கத்தின் (SIMA) முன்னாள் தலைவர் திரு. T. இராஜ்குமார், பருத்தி துணிநூல் ஏ��்றுமதி மேம்பாட்டுக் குழுவின் (TEXPROCIL) துணைத் தலைவர் மற்றும் SIMA முன்னாள் தலைவர் திரு. ரவி சாம், இந்திய துணிநூல் தொழில் கூட்டமைப்பின் (CITI) தலைவர் திரு. அஸ்வின் சந்திரன், SIMA துணைத் தலைவர் திரு. S. கிருஷ்ணகுமார், துணைத் தலைவர் திரு. K. சிவராஜ், பொதுச் செயலாளர் முனைவர் K. செல்வராஜு ஆகியோர் சந்தித்து, துணிநூல் துறையில் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மின் கட்டண வீதங்கள் குறித்தும், தமிழ்நாடு ஒருங்கிணைந்த துணிநூல் கொள்கை
2026-யை செயல்படுத்துவது குறித்து பேச��னார்கள்.
#CMJosephVijay