ரீல்ஸ் மாமியின் @Keerthana4VNR ரீல் அந்து போச்சு.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு மகன் நாரா லோகேஸ் :
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதில் முந்தைய திமுக அரசுடன் கடுமையாக போட்டியிட்டோம். சிலவற்றில் வெற்றி பெற்றோம், சிலவற்றில் தோல்வியடைந்தோம்.
ஆனால், பணம் கேட்கப்பட்டதாக எந்த முதலீட்டாளரும் என்னிடம் புகார் தெரிவித்ததில்லை. நியாயமான இடத்தில் பாராட்டு வழங்கப்பட வேண்டும்: திமுக அரசு நேர்மறையான மற்றும் தொழில்முறை முறையில் முதலீட்டு செயல்முறையை நடத்தி வந்தது. அதற்கான பாராட்டை அது பெறத் தகுதியானது.
தன் குட்டி சிக்கித் தவிப்பதை பார்த்த தாய் பூனை, என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றத்தில் நின்றது
அந்த நேரத்தில் ஒரு நாய் தைரியமாக உதவிக்கரம் நீட்டி குட்டியை மீட்டது
A man in Brazil claimed he needed to save his four children during a severe flood, rescuers later discovered he was actually rescuing his four dogs left at home
Sometimes, kindness needs no words.❤️
A woman’s warm interaction with a crawling baby has won heart,
It is a beautiful example of universal maternal love. 🥹✨
எதுவும் இல்லாமல்… இதயமெல்லாம் கொடுத்தார் Assam திருமணத்தில், தன்னிடம் அதிகம் இல்லாவிட்டாலும் ₹10 கொடுத்து வாழ்த்திய விருந்தினரின் gesture இணையத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது பணத்தின் அளவு இல்லை… மனத்தின் அன்புதான் முக்கியம்
Salute to this reporter. Wow, his righteous anger and words 👏🏾🙏🏾
I just wonder what’s the percentage of these mindless brainless heartless dimwits in Tamil Nadu!
🤮
திமுக ஆட்சிக்கு வந்தது
கட்டயன் - செந்தமிழ்செல்வன் ஆனான்
கட்டச்சி -செந்தமிழ் செல்வி ஆனால்
சத்யமேவ ஜெயதே
" வாய்மையே வெல்லும் " ஆனது
அக்ரனாசன் "கூட்டத்தின் தலைவர்" ஆனார்
ஜில்லா- மாவட்டம் ஆனது
மாகானம் - மாநிலம் ஆனது
அரசுதுறையில் மதகுறியீடு அறவேகூடாது 🖤❤
#தீ_பரவட்டும் 💥
நாங்க பாரதிய பேஷினா,
நீங்க பாரதிதாசனை கொண்டு வாறீங்க.!
நாங்க ராமாயணம் பேஷினா,
நீங்க சிலப்பதிகாரத்தை கொண்டு வாறீங்க.!
நாங்க சீதையை பேஷினா,
நீங்க கண்ணகியை கொண்டு வாறீங்க.!
நாங்க கீதையை பேஷினா,
நீங்க திருவள்ளுவரை கொண்டு வாறீங்க.!
நாங்க சரஸ்வதி நாகரிகம் பேஷினா,
நீங்க சிந்து சமவெளி, கீழடி நாகரிகம் பேசுறீங்க.!
நாங்க ஸமஷ்கிருதம்தான் மூத்த மொழின்னு ஷொன்னா,
நீங்க தமிழ்தான் உலகின் முதல் மொழிங்கிறீங்க.!
நாங்க பிள்ளையாருக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணோம்னு ஷொன்னா,
நீங்க 5,500 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை பயன்படுத்தியது தமிழர்கள்ங்கிறீங்க.!
மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கீங்க.!
நீங்க இந்தியாவுல இருக்கீங்களா, இல்லையா.!
தமிழ் நாடு, இந்தியாவுக்குல இருக்கா, இல்லையா.!
அதை சொல்லுங்க, ஃபர்ஸ்டு.!
அப்பா மாறவேயில்லை.
பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால் இன்ஜினியரிங் முடித்து விட்டு பணிக்காக சென்னைக்கு வந்தேன். எனக்கு வேலை கிடைத்த புதிதில் நான் வாங்கிய முதல் மாதச் சம்பளம் 8000 ரூபாய்.
அதுவும் அந்த மாதத்தின் 7 ஆம் தேதி தான் போடப்படும். அப்படி முதல் மாதச் சம்பளம் பேங்கில் போடப்பட்டதும், தலைகால் புரியவில்லை வீட்டிற்கு போன் செய்தேன், அப்பா தான் எடுத்தார். அவரிடம் நான் அதிகமாக பேசுவதில்லை. மெல்லியதாக குசலம் மட்டும் விசாரித்து விட்டு,
"உங்களுக்கு எதாச்சும் வேணுமா"
அப்பா பதில் சொல்லவில்லை.
அம்மாட்ட பேசு... என்றவாறே போனை அம்மாவிடம் தந்து விட்டார். நானும் அம்மாவிடம், பாத்தியா நான் என்னமாச்சும் வேணுமான்னு அப்பாட்ட கேக்கேன், பதிலே சொல்லல... இவரெல்லாம்..." என்று துவங்கி அப்பாவை சிறிது வசை பாடிவிட்டு, மற்ற கதைகளை, அந்தக் கதைகளை எழுபத்தியெட்டு முறை அம்மாவிடமே சொல்லியிருந்தாலும் எழுபத்தி ஒம்பதாவது முறையும் முதல் தடவை போல கேட்பாள் அம்மா பேசிவிட்டு போனை வைத்து விட்டேன்.
ஓரிரு நாட்கள் கழித்து என் வங்கிக் கணக்கை எதேச்சையாகப் பார்த்தேன். அந்த அக்கவுண்ட் என் கல்லூரி காலத்தில் இருந்து நான் பயன்படுத்துவது. என் அப்பா என் செலவுக்காக என்று அதில் தான் பணம் போடுவார். பணியில் சேர்ந்த தகவலும், சம்பள விவகாரங்களும் அப்பாவிற்கும் தெரியும். அதனால் இனி மாதச் செலவுக்காக அதில் பணம் போட மாட்டார் என நினைத்திருந்தேன். அதோடு இனி அப்பா காசு நமக்கெதுக்கு என்ற ஆணவமும் என் தலையில் ஏறிக்
கொண்டதால் அந்த வங்கிக் கணக்கைப் பார்க்கவில்லை.
முதல் மாதச் சம்பளம் வாங்கி அது தீரும் நிலை வந்து பழைய அக்கவுன்டில் ஏதாவது இருக்கிறதா என்று அக்கவுன்டைப் பார்த்தால்
அதில் வழக்கம் போல, அந்த மாதமும் 30 ஆம் தேதியே ஐயாயிரம் ரூபாய் போட்டிருந்தார். அதற்கடுத்த மாதங்களிலும் இதுவே தொடர்ந்தது. அது மட்டுமின்றி அந்த வருடமும் வழக்கம் போலவே, தீபாவளிக்கும், பொங்கலுக்கும் என் பிறந்த நாளுக்கும் நான் வீட்டிற்கு வரும் முன்னமே துணிமணிகள் எடுத்து வைக்கப்பட்டிருந்தது. கையில் கொஞ்சம் காசு வந்தவுடன் நான் தான் மாறியிருந்தேன்.
அப்பா மாறவேயில்லை...
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.
ஒரு கட்டத்தின் வெளித் தோற்றம் அம்மா பார்க்க அழகாக இருப்பார், வீடும் அப்படித்தான் இருக்க வேண்டும், ஆனால் அந்த வீட்டின் அஸ்திவாரம் அப்பா அதன் பலன் வெளியே தெரியாது, ஆனால் உறுதியாக இருக்கும்.
நான் போகும் பாதை எல்லாம் என் தந்தை போட்டு வைத்தது,
எனை சேரும் செல்வம் எல்லாம் அவர் பார்த்து விதைத்தது!
கையில் கொஞ்சம் காசு வந்தவுடன் நான் தான் மாறியிருந்தேன்.
அப்பா மாறவேயில்லை.
இது போல் ஆயிரம் அப்பாக்கள்.
படித்ததில் மிகவும் பிடித்தது.
நேற்று மதுரையிலிருந்து ராமேஸ்வரம் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை அடுத்து அப்துல் கலாம் நிறுத்தம் என்ற இடத்தில் வழக்கறிஞர் படிப்பை படிக்கும் மாணவி ஒருவர் இரவு 10. 30 மணிக்கு பேருந்து நிறுத்தத்தில் இறங்க தயாரானார் ஆனால் உடனே நடத்துனர் மாணவியிடம் உன் பெற்றோர்கள் யாராவது அழைத்து சென்றால்தான் இந்த இரவில் இறக்கி விடுவேன் இல்லையென்றால் இறக்கி விடமாட்டேன் என்று கறாராக கூறினார். அந்த மாணவியின் பெற்றோருக்கு போன் மூலமாக தகவலும் கொடுத்தார் அவர்கள் வருவதற்கு 15 நிமிடங்கள் காலதாமதமானது உடனே ஓட்டுனரும் நடத்துனரும் இரவில் இறக்கி விட மாட்டோம் தயவுசெய்து வண்டியிலேயே இருமா ராமேஸ்வரம் பேருந்து நிறுத்தத்தில் விட்டு விடுகிறோம் என்றார்கள் காலம் கெட்டு கிடக்கு பெண் குழந்தையை பாதுகாப்பாக பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள் பத்து நிமிடம் காத்திருப்புக்கு பின் மாணவியின் சித்தப்பா அவரை அழைத்து செல்லும் வரை பேருந்து அந்த இடத்தில் நின்றது உண்மையிலேயே இரவு நேரங்களில் பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் ஓட்டுநர் அந்தோணி ராஜ் நடத்துனர் முத்துராமலிங்கம் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்..
#பகிர்வு
Source - Yonadoss