இன்று #ConversionConclave-இல் மாண்புமிகு @TNIndMin தம்பி @TRBRajaa அவர்கள் சொன்ன ஒவ்வொரு டேட்டாவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவதூறுகள் பரப்புவோருக்கான பதில்!
அவர் சொன்ன ஒவ்வொரு நம்பரும், எங்க Team-இன் ஐந்தாண்டுகால கடுமையான உழைப்புக்கான நம்பர்!
இதனை ஊடகங்கள் பெருமளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்!
Each data point presented today by Hon’ble @TNIndMin Thiru. @TRBRajaa at the #ConversionConclave is a direct answer to those who, unable to accept Tamil Nadu’s growth, continue to spread misinformation.
Each number he shared reflects five years of relentless hard work by our team.
We request the media to take these facts widely to the people.
கழகத் தலைவர் அவர்களும், நானும் மக்களைச் சந்தித்துப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் என்ற நம்பிக்கையில் மக்களை சந்திக்கிறோம்.
இன்னும் பல சாதனைகள் செய்ய திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்டும்! 🌄
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK
இப்போதும் எப்போதும் திருச்சி தி.மு.க. பக்கம்தான்!
🌄 திருச்சிக்கு #DravidianModel நிறைவேற்றித் தந்துள்ள பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டு உரிமையோடு வாக்கு கேட்டேன்.
பா.ஜ.க.விடம் அ.தி.மு.கவை உள்வாடகைக்கு விட்டு, வெற்று வாய்ச்சவடால் விடும் பழனிசாமி அவர்களுக்கு 11-ஆவது படுதோல்வி On The Way!
🌄 மலைக்கோட்டை மாவட்டம் எப்போதுமே கழகக் கோட்டைதான் என்பதை 2026 தேர்தல் முடிவுகள் உறுதிபட உணர்த்தும்.
🌄 திருச்சியில் 2021-இல் பெற்றது போன்றே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முழுவெற்றி Repeat! திராவிட மாடல் 2.0 Sure Hit!
#TiruchiWithDMK #VoteForDMK
2026 தேர்தல் டெல்லி vs தமிழ்நாடு தேர்தல்..!!
அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் நான் பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கின்றேன், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருவாரூரில் கழகத் தலைவர் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி பாஜக போட்டியிடும் மயிலாப்பூரில் ஆரம்பித்தார், இதில் இருந்தே தெரிகிறது எடப்பாடியின் கொள்கைத் தலைவர்கள் மோடியும், அமித்ஷாவும் தான் என்பது.
மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் #DravidianModel தொடர வேண்டும்!
அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை #StalinStatement என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் #Vote4DMK!
உழைப்பால், குணத்தால், பண்புகளால், கொள்கை உறுதியால், மக்களின் வாழ்வுயர்த்தும் சீர்மிகு திட்டங்களால், தொடர் வெற்றிகளால் இந்திய துணைக்கண்டமே வியந்து பார்க்கும் #ஒரே_தலைவன் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் திராவிட நாயகரின் தலைமையில் #வெல்வோம்_ஒன்றாக!
யு டியூப்பில் காண https://t.co/9Oliboi0nk
#HBDCMMKStalin
தமிழ்நாட்டிற்காகவும் தமிழர் உரிமைக்காகவும் தியாகிகளையும் தீரர்களையும் வாரி வழங்கிய விருதுநகர் மண்ணில் நாளைய தினம் நடைபெற இருக்கிறது கழக இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு!
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காத்துப் புதிய வரலாறு படைக்க, தென் மண்டல தீரர் படையே திரண்டு வாரீர்! கல்குறிச்சி கலைஞர் திடலில் சந்திப்போம்!
#Youth4DMK2026 @dmk_youthwing
குன்னம் தொகுதி, வேப்பூர் ஒன்றியம், வயலப்பாடி ஊராட்சியில், ரூபாய் 2.38 லட்சம் மதிப்பீட்டில் முருகேசன் வீடு முதல் பழமலை வீடு வரை 0.025 கி.மீ நீளத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, ரூபாய் 6.85 லட்சம் மதிப்பீட்டில் வீராமநல்லூர் கிராமத்தில் புதிய குடியிருப்புப் பகுதிக்கு அருகில் கழிவுநீர் கால்வாயுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, ரூபாய் 6.85 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் தெருவில் மேல் நிலை நீர்தேக்க தொட்டி, புதிய ஆழ்துளை கிணறு நீர்மூழ்கி மோட்டார் மற்றும் குழாய்கள் அமைக்கும் பணி ஆகிய பணிகளை துவக்கி வைத்த போது.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர், அரசு அலுவலர்கள், வேப்பூர் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் அழகு.நீலமேகம் வேப்பூர் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் மருவத்தூர் சி.இராஜேந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்.
The soul of Tamil Nadu speaks through its music. It inspires, it preserves, it evolves.🎶
Spent time with some of our talented musicians, to understand their craft, their energy, their world. They are not just creating music; they are keeping our heritage alive and shaping its future.
Conversations that celebrate culture, honor passion, and recognize true artistry.
#VibeWithMKS Episode 2 - Out Now! 🎵
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் உத்தரவின்படி, மதுரை பொன்மேனி அரசு போக்குவரத்து கழக பணிமனையில்,பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துடன் இணைந்து பெட்ரோல் டீசல் மற்றும் CNG சில்லறை எரிபொருள் விற்பனை நிலையம் கட்டப்பட்டு மாண்புமிகு தகவல் தொழில்நுட்பம் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் @ptrmadurai அவர்களுடன் திறந்து வைத்தோம்.
மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டத்தின் சார்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள 67 புதிய புறநகர் பேருந்துகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தோம்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்,சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்ட மேலாண் இயக்குநர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள்,தொழிற்சங்க பிரதிநிதிகள் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்களிடம் செல் - மக்களுடன் வாழு - மக்களிடம் கற்றுக்கொள் - மக்களுக்கு சேவையாற்று என்ற பேரறிஞர் அண்ணாவின் வரிகளுக்கேற்ப ஒவ்வொரு குடும்பத்தின் கோரிக்கைகளையும், கனவுகளையும் நிறைவேற்றும் திராவிட மாடல் அரசு!
#உங்க_கனவ_சொல்லுங்க
திருப்பூரில் திருப்புமுனை... திரளாக திரண்ட திராவிட மகளிர் படை 🖤❤️
பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். பெண்களின் வெற்றியே சமூகத்தின் வெற்றி. திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!
Women Power-ல் திமுக மீண்டும் POWER-க்கு வருவது உறுதி.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
பெண்கள் வாழ்வு சிறக்க, அவர்களின் இலட்சியக் கனவுகளை நோக்கிச் சிறகடிக்க அனைத்து வகையிலும் திராவிட மாடல் அரசு துணை நிற்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் எண்ணற்ற மகளிர் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்; இனியும் செயல்படுத்துவார்!
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
தமிழ்நாட்டில் சமூகநீதி ஆட்சியைச் சிறப்பாக நடத்திவரும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் செயல்படுத்திய கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 13 இலட்சம் பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில் மேலும் 17 இலட்சம் மகளிரை கூடுதலாகச் சேர்த்து இன்று விரிவாக்கம் செய்கிறார்!
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா?
தமிழ்நாட்டின் கோரிக்கைகளை - தேவைகளைக் கடிதங்களாக, நேரில் மனுக்களாக, சட்டமன்றத் தீர்மானங்களாக எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயமல்ல!
அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் வஞ்சனைகளைக் கடந்துதான் நாட்டிலேயே அதிகமான 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்!
வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகளிடம் ஒன்றிய பா.ஜ.க. அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்!
கரூரில் கூட்ட நெரிசலில் மக்கள் உயிரிழந்த செய்திகேட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின் பேரில், நேற்று (27.09.2025) இரவு உடனடியாக கரூர் விரைந்தோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கரூரில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களிடம் நலம் விசாரிக்கவும் கரூருக்கு வருகைபுரிந்து மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி உத்தரவுகளை வழங்கியபோது, அவரோடு உடனிருந்தோம்.
மகளிர் சுய உதவிக்குழுவில் தயாரிக்கப்படும் பொருட்களை, சுய உதவிக்குழு அடையாள அட்டையை பயன்படுத்தி பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்!
- மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin#திராவிடமாடல்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் கிழக்கு ஒன்றியம், திருக்களப்பூர் ஊராட்சியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாற்று கட்சி தோழர்கள், அரியலூர் மாவட்ட கழக அலுவலகத்தில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
உடன் ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ரெங்க.முருகன்.