மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது!
- நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்று துணை ஆட்சியராக தேர்ச்சியடைந்துள்ள, கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிர்தப்பிய மாணவி ஜெனிபரின் காணொளியை பகிர்ந்து, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
#MKStalin#DMK#NaanMudhalvan #Tamilnadu #TVKFails #CMVijayFails #KalaignarSeithigal
ஆளுநர் உரை மீதான விவாத நேரலை துண்டிக்கப்பட்டு, எதிர்க்கட்சியினரின் விவாதங்கள் முற்றிலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, ஆளுங்கட்சியினருக்கு வேண்டிய விவாத வீடியோக்கள் மட்டும் Edit செய்யப்பட்டு மாலையில் வெளியிடப்பட்டுள்ளன.
இது நல்லதொரு ஆக்கப்பூர்வமான சட்டமன்ற ஜனநாயகத்திற்கு உகந்தது இல்லை!
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TVKFails
தேனி மாவட்ட முன்னாள் கழகச் செயலாளர் திரு எல்.மூக்கையா அவர்களின் மகனும், ஒன்றியக் கழகச் செயலாளர் திரு எல்.எம்.பாண்டியன் அவர்களின் சகோதரரும், கோவை மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவருமான திரு எல்.எம்.மருதுபாண்டியன் அவர்களின் மறைவுக்கு கழக இளைஞர் அணிச் செயலாளர்- மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் @udhayatalinஅவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தி!
#JustNow | "நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்" -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
#SunNews | #MKStalin | #NaanMudhalvan | @mkstalin
பத்திரிகைச் செய்தி
இன்று (20-06-2026), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், சென்னை – பல்லாவரத்தில் நடைபெற்ற, திரு. N. ஆனந்தன் அவர்களின் மகன் A. திருமலை (எ) திலீப் - M. வித்யா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி,
மற்றும் அரும்பாக்கத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் திரு. M. ஜீவானந்தம் அவர்களின் மகன் J. ரூபேஷ் – V. சரண்யா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.
பத்திரிகைச் செய்தி
18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் @SDPofIndia கட்சிக்கு, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தி:
சிறுபான்மையினர் உரிமைகளுக்காகவும், சமூக அமைதி - சமூகநீதி - சம வாய்ப்பு - சமத்துவம், எளிய மக்களுக்கான அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட மேலான கோட்பாடுகளை இலக்காகக் கொண்டு இயங்கி வரும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI) 18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு வாழ்த்துகள்!
எஸ்டிபிஐ கட்சி, அரசியல் ரீதியாகப் பல்வேறு போராட்டங்களைக் கடந்து வளர்ந்து வந்திருக்கிறது. இதன் வளர்ச்சிக்கும், ஆக்கரீதியான அரசியல் பங்களிப்புக்கும் பாடுபட்டு வரும் எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் திரு. எம்.கே. ஃபைஜி அவர்கள், மாநிலத் தலைவர் திரு. @nellai_mubarak அவர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டுதலையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் முதல்முறையாக இடம்பெற்று, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்த போதிலும், நீண்டகாலம் தோழமையுடன் இருப்பதைப் போன்ற உணர்வுடன் @sdpitnhq கட்சியின் நிர்வாகிகளும், தோழர்களும் முழு மூச்சுடன் கூட்டணியின் வெற்றிக்காக அயராது உழைத்தனர். பரப்புரைக்காக நான் சென்ற இடங்களில் எல்லாம், எஸ்டிபிஐ கட்சியின் தோழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது ஆதரவையும், நல்லுணர்வையும் வெளிப்படுத்தியதை இத்தருணத்தில் நினைவு கூர்கிறேன்.
எஸ்டிபிஐ கட்சி எளிய மக்களின் மேம்பாட்டுக்காக என்றென்றும் ஊக்கத்துடன் தொடர்ந்து பாடுபட்டு வரவும், அரசியல்ரீதியாக அதன் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்திடவும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதோடு, சிறுபான்மை மக்கள் நலன் மீதான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அக்கறையும், ஆதரவும் என்றென்றும் தொடரும் என்பதையும் தோழமையுணர்வோடு இந்த நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!