அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத இந்த தலைமுறைக்கு உண்மையான அரசியல்வாதி குறித்த பாடம் எடுக்கும் தோழர் நல்லகண்ணு குறும்படம் !
Thozhar Nallakannu short film | M.S. Bhaskar | Rishaniya vijayakumar https://t.co/6ZO3tmjhsC via @YouTube
இந்தப் பிள்ளை அந்த நேர்காணலில் என்ன சொல்லியது எண்டு எனக்கு தெரியாது. நான் பார்க்கேல்லை.
ஆனால்”Netflix“ இல் இவள் சம்மந்தமான பதிவுகளின் கீழ் பெரும்பாண்மைச் சமூகத்தினர் கொட்டும் வன்மம் அந்த தளத்தினை பார்வையிடும் பன்னாட்டு சமூகத்திருக்கும் ஒரு செய்தியை சொல்லியுள்ளது.
இலங்கைத்தீவில் தமிழர்கள் இவர்களிடம் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்து இருப்பார்கள். தமிழர்கள் சார்ந்த இவர்களின் மனநிலையை என்ன என்பது மிக நேர்த்தியாக பதிவாக்கப்படுகின்றது.
பிரதி
அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களின் தொடர் விமர்சனத்தையும், கருத்தியல்ரீதியிலான தாக்குதலையும் எதிர்கொள்ளத் துப்பற்றத் தற்குறிக்கும்பல், அவர் தேர்தல் சமயத்தில் பேசிய பொதுக்கூட்டப் பேச்சை எடுத்துப் போட்டுப் பரப்பி, வழக்குபோட முயன்றுகொண்டிருக்கிறது.
கரூர் பேரவலத்தில் விஜய்யைக் குற்றவாளி எனக் கூறிவிட்டாராம். அப்போதும் சொன்னோம். எப்போதும் சொல்கிறோம்.
கரூர் மரணங்களில் விஜய்தான் பொறுப்பாளி; விபத்துக்குக் காரணமான குற்றவாளி. விஜய்யின் அலட்சியம்தான் 41 உயிர்களைக் கொன்றது.
நீங்கள் பெரிதும் மதித்தவர் கட்சியை விட்டு போய் என்ன பேட்டி கொடுக்கிறார் பார்த்தீர்களா என்று தம்பிகள் என்னிடத்தில் உரிமையோடு கேட்கிறார்கள்..
நான் சொன்னேன்..
அந்த பழைய பத்தாயத்தில் நெல்மணிகள் இருக்குமென்று நினைத்தேன்.. அதில் இருந்ததெல்லாம் எலிப் புழுக்கைகள் தாம் என்று தெரிந்து கொண்டேன்னென..
கட்சியை விட்டு வெளியேறுபவர்கள் காரணமே சொல்லாமல் போக முடியாது. அவர்களுக்குத் தோன்றிய காரணங்களைச் சொல்லிவிட்டுத்தான் வெளியேற வேண்டும். தனிப்பட்ட காரணங்கள் இருந்தாலும், பொது காரணங்களைச் சொல்லிவிட்டுத்தான் போக வேண்டும். வேறு வழியில்லை. அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அதுதான்.
ஜூவி போன்ற இதழ்களை தவெக ஊடக மாபியா கைப்பற்றி ரொம்ப நாட்களாகிவிட்டது. இரண்டு இதழ்களுக்கு ஒருமுறை நாம் தமிழர் கட்சிக்கு எதிராக ஒரு எதிர்மறை செய்தியைப் பிரசுரித்தே ஆக வேண்டும். அதுதான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட். அண்ணன் களஞ்சியம் கூட நாம் தமிழர் கட்சியை எதிர்த்து பேசினால் தான் அவருக்கு அந்த இரண்டு பக்கங்கள். இல்லாவிட்டால் அவருக்கு அந்த இரண்டு பக்கங்களும் இல்லை.
இந்த வாரம் வந்த அந்த இரண்டு பக்கங்களும் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் விகடன் நிறுவனம் காசு வாங்கிக்கொண்டு ஊடக மாபியாவுக்காகச் செய்யும் வேலை. அவ்வளவுதான்.அதற்கு மேல் அதில் வேறு எதுவும் இல்லை.
நடுநிலையான ஊடகமாக இருந்தால் நம் கருத்துக்களையும் கேட்டிருப்பார்கள் இல்லையா.. புரிந்து கொள்ள வேண்டாமா.??
அதனால், இதுபோன்ற விமர்சனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. கொஞ்சம் அலட்சியமாகப் பார்ப்பதே இதற்கெல்லாம் அதிகம்.
யாரையும் உறுத்தாத அரசியலோ, மக்கள்
பணியோ உலகில் இல்லை. அதனால், கட்சியை விட்டு வெளியேறுபவர்களை நாம் திட்ட வேண்டிய அவசியமில்லை. சலனம் ஏற்படுத்தாத செயல் செயல் அல்ல. எதிர்வினையை ஏற்படுத்தாத அரசியல் அரசியலே அல்ல.
அவர்கள் பின்னர் நம்மை விமர்சித்தாலும், “இவர்கள் இப்படிப்பட்ட எண்ணத்துடன்தான் இத்தனை காலமும் நம்முடன் இருந்திருக்கிறார்கள்; பழகியிருக்கிறார்கள். நல்லவேளை.. இயற்கையாக ஏதோ நடந்து இப்போது பிரிந்து சென்றது நமக்கு நடந்த நன்மை” என்று நினைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. மகிழ்ச்சிதான் அடைய வேண்டும்.
சிலர் பிரிந்து செல்வதால் மட்டும் எந்தக் கட்சியும் பலவீனமடைந்ததாக வரலாறு இல்லை. கட்சித் தலைமை தனது கொள்கைகளில் உறுதியாகவும் நிமிர்ந்தும் நிற்கும் வரை, அந்தக் கட்சியை யாராலும் வீழ்த்த முடியாது.
அண்ணன் சீமான், 2010-ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை உருவாக்கியபோது எந்தக் கொள்கைகளில் உறுதியாக நின்றாரோ, அதே கொள்கைகளில்தான் இன்றும் உறுதியாக நிற்கிறார். தனியாகப் போராடுகிறார். அவரது கொள்கைகளில் மாற்றமோ சமரசமோ இல்லை.
அவரது கொள்கைகளை நேரடியாக விமர்சிக்க முடியாதவர்கள்தான், “கட்சியின் நிர்வாகம் சரியில்லை; அமைப்பும் கட்டமைப்பும் சரியில்லை” என்று பல்வேறு காரணங்களைச் சொல்லி வெளியேறுகிறார்கள்.
கொள்கை உறுதியும், கோட்பாட்டுத் தெளிவும் கொண்ட நாம் தமிழர் கட்சியே கும்பல் என்றால்.. மற்ற கட்சிகள்..?? தாங்கள் கட்டப் போகிற அமைப்பு..?? ஆறு வருடங்களுக்கு மேலாகப் பயணித்தபோது அதே 'கும்பலில்'(?) ஒருவராக இருந்ததை மறந்துவிட்டார்களா என்ன..??
நிர்வாகம் சரியில்லை, கட்டமைப்பு இல்லை என்றெல்லாம் பேசுவது இப்போது மிகவும் அற்பமானது. எந்த நிர்வாகமும் கட்டமைப்பும் இல்லாமலேயே ஒரு கட்சி ஆட்சிக்கே வந்துவிட்டது.
இவர்கள் இதே நிர்வாகத்தைப் பார்த்துத்தானே கட்சியில் சேர்ந்தார்கள்? இதே கட்டமைப்பை ஏற்றுக்கொண்டுதானே பயணித்தார்கள்?
அதனால் எத்தனையோ பேர் வந்தார்கள்; எத்தனையோ பேர் சென்றார்கள். அதனால் என்ன? . இனியும் வருவார்கள். போவார்கள். அது ஒரு அரசியல் கட்சியின் இயங்கியல் நிலை.
அண்ணன் சீமானின் மன உறுதியும் கொள்கைப் பற்றும் இருக்கும் வரை நாம் தமிழர் கட்சி நிலைத்திருக்கும்.
எந்த விமர்சனத்தைப் பொருட்படுத்த வேண்டும், எதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதுதான் முக்கியம்.
நான் சில டிப்ஸ்களை தருகிறேன்.
என் சமூக வலைதளப் பதிவுகளில் யாராவது தேவையில்லாத கருத்துகளைப் பதிவிட்டால், முகநூலும் ட்விட்டரும் அதற்கான தீர்வை ஏற்கனவே கொடுத்துவிட்டன.
அந்தப் பொத்தானின் பெயர் — “Delete.”
அவ்வளவுதான்.
அதற்கு நான் கொடுக்கும் மதிப்பு.
நீ பக்கம் பக்கமாக என்னைத் திட்டி எழுதினாலும், ஒரே நொடியில் அதை நீக்கிவிட்டு அடுத்த வேலையைப் பார்த்துக்கொள்வேன். உன் பக்கத்தில் என்னைத் திட்டிக்கொண்டிருந்தால், உன்னை Block செய்துவிட்டு அதைப் பார்க்காமலேயே போய்விடுவேன்.
நான் எதைப் பார்க்க வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்வேன்.
நீ என்னை ஏசுவதையோ, இழிவாகப் பேசுவதையோ, அவதூறாக எழுதுவதையோ நான் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.
மேலும், அதையும் தாண்டி பொதுவெளியில் கட்சியையோ தலைமையையையோ தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவும் வழிகள் இருக்கின்றன.
எதற்கு பதில் சொல்ல வேண்டும், எதை கவனிக்காமல் புறக்கணிக்க வேண்டும் என்பதில் தான் நாம் யார் என்று உலகிற்கு அறிவிக்கிறோம்.
♦️🔸
மணி செந்தில்.