#வரலாறு
எங்களுக்கு மட்டுமல்ல
எல்லோருக்குமான வீரத்தை
விதைத்து வீழ்ந்து போகவில்லை
சிதைந்து போனான்...!
#மாவீரன்_#அழகுமுத்துகோன்
ஆரம்ப புள்ளி வைத்து
ஆங்கிலேயனை எதிர்க்க
அடித்தளமிட்டவன் அதுவே
ஆண்டுகள் கடந்து பேசப்படுகிறது...!
உண்மையான வரலாறு
உலகறியாமல் உறங்காது...!
அரசியல் வரலாற்றில் கறைபடாத கரங்களுக்கு சொந்தகாரர் தியாக சீலர் ஐயா பூ.கக்கன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மரியாதை செலுத்த வருகை தரும் சமநீதிப்போராளி அண்ணன்
கே கே செல்வகுமார் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்..
#கக்கன்@KKSelvakumaroff
விருதுநகர் மாவட்டத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலைகளின் விதிமீறல்களால் தொடர்ந்துவரும் வெடிவிபத்துக்களையும்,உயிரிழப்புகளை தடுத்திடவும்,
பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தவறும் அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்தும்,
காரியாப்பட்டி அருகே வடகரை யுவராஜ் பயர் ஒர்க்ஸ் ஆலையில் ஏற்ப்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த தண்டியனேந்தலைச் சேர்ந்த நால்வருக்கும் தலா 50 லட்சமும், அரசு வேலையும்,காயமடைந்தவர்களுக்கு தலா 25 லட்சமும், வழங்கிட வலியுறுத்தியும்
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்:18.06.2025, புதன்கிழமை இடம்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.
அநீதிக்கு எதிரான களத்தில் அணிதிரள்வோம் வாரீர்!
தன் அரச வாழ்வில் எதிர்கொண்ட அத்தனைப் போர்களிலும் வெற்றிக்கொடி நாட்டிய தமிழ்ப்பெரும் மண்ணின் 'தன்னிகரில்லா பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்' மன்னர் அவர்களின் 1350-வது சதய விழா..
வீரம் செறிந்த
அவரது தியாகத்தை
போற்றி வணங்கிடுவோம்..
#முத்தரையர்_சதயவிழா
ஓர் அடிமைக்கு
அவன் அடிமை என்பதை
முதலில் உணர்த்து
பிறகு அவன்
தானாகவே கிளர்ந்து எழுவான் ...
சட்டமேதை அண்ணல் #அம்பேத்கர் அவர்களின்
பிறந்தநாளில் வணங்கி மகிழ்கிறோம்
#தமிழர்_தேசம்_கட்சி
சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு திருநாளை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். #தமிழ்புத்தாண்டு2025#தமிழர்_தேசம்_கட்சி