மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தலைமையில்,
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் அஇஅதிமுக 55-ஆம் ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், கழக வளர்ச்சி பணிகள் குறித்தும் சேலம் புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஒரு யூனிட் மின்சாரத்தை வாங்க அதிக விலையில் ஒப்பந்தம் போட்டு, ஏற்கெனவே கடன் சுமையில் சிக்கியுள்ள தமிழ் நாடு மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்க துடிக்கும் திரு. ஜோசப் விஜய்யின் பொய்க்கால் குதிரை அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சென்னை மெட்ரோ 2-ம் கட்டத்தின் வடபழனி - பூந்தமல்லி வழித்தடம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க தமிழகத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களை, சென்னை விமான நிலையத்தில் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் வரவேற்றார்கள்.
@PMOIndia
@mithra_twitts மிகச் சரியாக சொன்னீர்கள்
காயப் படுத்து மலர்களின் முகம்
கொடுரமாக தெரியும்
காயங்களை தாங்கிக் கொள்ள பக்குவப்படுத்தி கொண்டவர்களின் முகத்தில் சோகம் தெரிவதில்லை
காயப் படுத்தி மலர்களே காணப்படும் அளவுக்கு
புன்னை கையால் வென்றெடுத்து விடுகிறார்கள் மன காயங்களை
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அறவழியில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது இன்றைய தவெக அரசின் காவல்துறை அரங்கேற்றியுள்ள அராஜகம் என்பது கொடூரத்தின் உச்சம்.
“பாசிசம், பாயாசம்” என்று Rhyming வசனங்கள் பேசிய முதல்வரின் கையில் இருக்கும் காவல்துறை, உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் மீது நடத்தியுள்ள பாசிச அக்கிரமத்தை எப்படி இந்த Reels முதல்வர் Justify செய்வார்?
ஆட்சிக்கு வருவது முன், இதே செவிலியர்கள் முன் நின்று உங்கள் கட்சி நிர்வாகிகள், இன்றைக்கு அமைச்சராக இருப்பவர்கள் பேசியது எல்லாம் நினைவில் இருக்கிறதா? ஆட்சிக்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு பின் அதற்கு மாறான செயல் என்பது தான் மாற்றமா?
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுவது குறித்து மக்கள் பிரச்சனையை சுட்டிக்காட்டினால் கூட ஏற்றுக்கொள்ள மனமின்றி அவதூறுகளை அள்ளி வீசும் நபராக இருக்கிறார் இன்றைய சுகாதாரத் துறை அமைச்சர்.
தனது துறையைச் சார்ந்த செவிலியர்கள் போராடுவது குறித்து ஒரு வார்த்தை பேசினாரா? செவிலியர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்துவதை விட அப்படி என்ன பெரிய வேலை இருக்கிறது இந்த அமைச்சருக்கு?
போராடும் இடத்தில் மின்சாரத்தை துண்டிப்பது, பேச்சுவார்தை எனக் கூறி அழைத்து சென்று கைது செய்வது என மிகவும் கீழ்த்தரமாக ஒரு போராட்டத்தை அணுகியுள்ள இன்றைய ஆச்சரியக்குறி அரசுக்கு எனது கடும் கண்டனம்.
கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டு, அவர்கள் மீது எந்த வழக்கும் பதியாமல் இருப்பதை உறுதி செய்து, ஜனநாயக ரீதியாக அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
தான் முதல்வராகிவிட்டதையே மறந்துவிட்டு, இன்னும் நடிகர் என்ற நினைப்பிலயே பேசியும் நடித்துக் கொண்டும் வருகிறார் ரீல்ஸ் முதல்வர் Mr Vijay,
திமுக போல வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு தகுதி நிர்ணயம் செய்து ஏமாற்ற மாட்டோம் என்று மேடைக்கு மேடை பேசி, ஓட்டுரிமை இல்லாத சிறுவர் - சிறுமிகள் மூலம் புறவாசல் வழியாக ஆட்சியை பிடித்த பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் திரு விஜய் அவர்கள், இன்று அனைத்திற்கும் தகுதி பார்த்துக் கொண்டிருக்கிறார்.
நம் அஇஅதிமுக அரசு அனைவருக்கும் இரு முறை முழு விவசாய கடன் தள்ளுபடி, பெண்கல்வி யை ஊக்குவிக்க கல்வி கற்கும் (பன்னிரண்டாம் வகுப்ப அதற்கு மேல் ) பெண்களுக்கு தாலிக்கு தங்கம், ரொக்கம், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பணமாக 2500 ரூபாய் என எதற்கும் தகுதி நிர்ணயித்து ஆட்சி நடத்தவில்லை.
ஆனால் திமுகவின் 2.0 அரசாக இந்த தவெக அரசு செயல்படுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
#TVKFails #AIADMK #DMKFails #ADMK
நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது.
நான் உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி.
எனக்கு நம்ம மக்கள் படுற கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நம்மளோட பிரச்சனைகளை தெரியும்.
ஆனா எனக்கு அதுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது.
ஏன்னா, நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிரா, அத்தனை சூழ்ச்சிகள்.
எனக்கு பின்னால், 100 வருடத்திற்கு இந்த இயக்கம் இருக்கும்ணு சொன்ன, புரட்சி தலைவி அம்மாவின் சின்னம், இந்த இரட்டை இலை.
இதை காப்பாத்த நினைச்சது நம்முடைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா?
புரட்சி தலைவரும், புரட்சித் தலைவியும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாதுன்னு, இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், போராடிட்டு இருக்கிறோம்.
ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்?
எத்தனை சூழ்ச்சிகள்?
எத்தனை துரோகங்கள் ?
இந்த இயக்கத்தை சூறையாட எத்தனை நாடகங்கள்?
இன்று இந்த இரட்டை இலையை விமர்ச்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைச்சோம்?
அதான் நாம செய்த குற்றமா ? அதுக்கான பிரதிபலனாதான் நம்ம MLA-க்களை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா?
உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசிச்சிருந்தாகூட, இப்படி செய்ய மனசு வந்துருக்குமா?
அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்க நியாயம் கேட்கிறோம்.
அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே, உங்ககிட்ட நியாயம் கேட்கிறோம்.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம்.
இதற்கான தீர்ப்பை நீங்களே கொடுங்க. நீங்க கொடுக்கப்போற தீர்ப்பு, இனி MLA-க்களை, குதிரை பேரத்தில் விலை பேசும் த.வெ.க-வுக்கும், விலை போக நினைச்ச துரோகிகளுக்கும், வாழ்நாள் பாடமாக, இந்த பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்.
எனவே, அக்.6 அன்று,
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை
@AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu
அவர்கள்,
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி, அச்சிறுபாக்கம் பகுதியில் கழக வெற்றி வேட்பாளர் திருமதி. கணிதா சம்பத் அவர்களுக்கு “இரட்டை இலை” சின்னத்தில் வாக்கு சேகரித்தார்கள்.
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#AIADMK #Madurantakam #ByeElections
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu
அவர்கள்,
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி, மதுராந்தகம் நகரத்தில் கழக வெற்றி வேட்பாளர் திருமதி. கணிதா சம்பத் அவர்களுக்கு “இரட்டை இலை” சின்னத்தில் வாக்கு சேகரித்தார்கள்.
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#AIADMK #Madurantakam #ByeElections
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu
அவர்கள்,
மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே உள்ள அஇஅதிமுக நிறுவனர், பொன்மனச் செம்மல், நம் புரட்சித் தலைவர் #எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#AIADMK #Madurantakam #ByeElections