My interview to @timesofindia on the outcome of the recent elections in Tamil Nadu, my political journey with the BJP, the reasons behind my decision to move on, and the vision and objectives of our new political movement to shape a stronger future for Tamil Nadu.
https://t.co/SVCXXfyHYZ
#Wetheleaders சார்பாக கடலூர் சட்டமன்றத் தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்.
R.மேகநாதன், சந்திரன் பத்மினி ஜெயந்தி ஆகியோர் கடலூர் முதுநகர் பேருந்து நிறுத்தம் அருகில் உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகின்றனர்
மாறுவோம் மாற்றுவோம்!
Be the Change, Bring the Change!
@annamalai_k
கடந்த 2020 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில், உதவி மின் பொறியாளர் பணியிட நியமனங்களுக்கான TNPDCL தேர்வு, கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, நிர்வாகக் காரணங்களைக் கூறி, இந்தத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக, TANGEDCO அறிவித்தது. மேலும், TN Act No. 14 of 2022, TNPSC (Additional Functions) சட்டத்தின்படி, TNPSC மூலமாக, இந்தத் தேர்வுகள் நடைபெறும் என்றும், கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மின்பகிர்மானக் கழக உதவி மின்பொறியாளர் பணி நியமனம் தொடர்பாக, 2025 ஆம் ஆண்டு வரை, மூன்று ஆண்டுகளாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த 26.07.2024 அன்று வெளியிடப்பட்ட, பொதுப்பணித்துறை (PWD) உதவி மின் பொறியாளர் காலிப் பணியிட நியமனங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பாக, முன்பு ரத்து செய்யப்பட்ட TNPDCL உதவி மின்பொறியாளர் காலிப் பணியிடங்களில், 195 இடங்கள், பொதுப்பணித் துறை சார்பாக நடைபெற்ற தேர்வு முடிவுகள் மூலம் நிரப்பப்படும் என்று திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு வயது வரம்பும் 32 என்று அறிவிக்கப்பட்டது.
இதனால், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல், மின்பகிர்மானக் கழகத்தில், உதவி மின்பொறியாளர் பணி நியமனத்துக்காகக் காத்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு, அந்தத் துறை சார்பான தேர்வுகள் ரத்து செய்து, எந்த மறு அறிவிப்பும் செய்யாமல் காத்திருக்க வைத்து விட்டு, அதே பணியிடங்களை, பொதுப்பணித்துறை சார்பான தேர்வுகள் மூலம் நிரப்ப முடிவு செய்தது, அந்த இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. குறிப்பாக, அரசின் நிர்வாகக் குளறுபடி காரணமாக, தகுதியான இளைஞர்களுக்கு வயது வரம்பில் மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு தளர்வு வழங்கும் தமிழக அரசின் 13.09.2021 அன்று வெளியான அரசாணை எண் 91 ன் படி, கொரோனா பெருந்தொற்றால் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானால், வயது உச்ச வரம்பு, 2 ஆண்டுகள் தளர்த்தப்படும். ஆனால், மின்பகிர்மானக் கழகத்தில், உதவி மின்பொறியாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது, 04.07.2022 அன்றுதான். ஏற்கனவே தேர்வுகள், 2020 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், பொதுவாக வெறும் இரண்டு ஆண்டுகள் தளர்வு என்பது எப்படிப் பொருத்தமானதாக அமையும்?
இந்த நிலையில், வயது வரம்பில் தளர்வு வேண்டும் என்ற கோரிக்கை, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற மின்பகிர்மான கழக உதவி மின்பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கான TNPSC தேர்வு முடிவுகள், கடந்த 23.01.2026 அன்று வெளியாகின. பணி நியமனங்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் முன்பாக, வயது வரம்பைக் காரணம் காட்டி, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற இளைஞர்களைக் கூட தகுதி நீக்கம் செய்துள்ளார்கள். TNPSC அமைப்பின் இந்த நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக, கடந்த ஆறு ஆண்டுகளாக மின்சார வாரிய உதவி மின்பொறியாளர் பணிக்காகக் காத்துக் கொண்டிருந்த தகுதியான இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த துரதிருஷ்டவசமானது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) தேர்வுகள் ரத்து செய்யப்பட்டபோது, பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அரசாணை எண் 231 மூலம் தமிழக அரசு சிறப்புத் தளர்வு வழங்கியுள்ளது. அதே போல, கடந்த 2013 ஆம் ஆண்டு, இதே போன்று, நீண்ட கால பணியிட நியமனங்கள் நடைபெறாத நிலையில், விதி 91(h) மூலம், ஐந்து ஆண்டுகள் வயது வரம்பு தளர்வை, தமிழக மின்சார வாரியம் வழங்கியிருந்தது. கடந்த 2019 முதல், 2024 வரை, எந்தப் பணியிடங்களும் நிரப்பப்படாத நிலையில், இதே சூழ்நிலையில் தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கும், வயது வரம்பில் தளர்வு கொடுத்திருக்க வேண்டும். நிர்வாகத் தவறுகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு, அந்த நிவாரணத்தை மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.
எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். கடந்த கால முன்னுதாரணங்களைப் பின்பற்றி, நிர்வாகத் தாமதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒருமுறை சிறப்பு வயதுத் தளர்வு வழங்க வேண்டும். மேலும், தேர்வு நடைமுறை தொடங்கிய பிறகு கூடுதல் அறிவிப்பு என்ற பெயரில் பணியிடங்களையோ, விதிகளையோ மாற்றும் முறைகேடுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக இளைஞர்களின் எதிர்காலம், அரசின் நிர்வாக அலட்சியத்திற்குப் பலியாக அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
#Wetheleaders சார்பாக இன்று கடலூர் சட்டமன்றத் தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்.
R.மேகநாதன், சந்திரன் பத்மினி ஜெயந்தி ஆகியோர் கடலூர் முதுநகர் பேருந்து நிறுத்தம் அருகில் உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகின்றனர்
மாறுவோம் மாற்றுவோம்!
Be the Change, Bring the Change
@annamalai_k
Yoga, a profound science uniting mind, body, and spirit, is a timeless gift from our ancient Indian civilisation to the world.
On this #InternationalYogaDay, let us commit to making Yoga an integral part of our daily lives for our physical fitness and inner peace.
இன்று மாலை, கடலூர் மாவட்டம், கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடலூர் துறைமுகத்தில் We The Leaders(WTL) இயக்கத்தில் புதிய உறுப்பினர் சேர்ப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.....
மாறுவோம், மாற்றுவோம்!
#LeadTheChange#wetheleaders
திரு.அண்ணாமலை அவர்கள் மாநிலத்தலைவராக இருந்த போதே, தவறு NTA மீது தான் என்று கூறியுள்ளார். ஒரு போதும் NEET தேர்வை அல்ல. இப்போதும் அவர் நீட் தேர்வு எழுத போகும் மாணவர்களின் மனநிலை,பயம், மற்றும் மனஅழுத்தம் குறித்தான தனது ஆதங்கத்தை தானே வெளிப்படுத்தியுள்ளார்? என்ன தவறு????
My first podcast (an unconventional one) after the announcement of our political movement is on its way & will be aired tomorrow at 10 AM on my YouTube channel.
https://t.co/rfti0J7ZsL
https://t.co/oVURDAxIE7 - Where it all began.
சென்னையில், மொத்தம் விற்பனையாகும் சுமார் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பாலில், கிட்டத்தட்ட 50%, சுமார் 7.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் ஆகும்.
இந்த நிலையில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்பட்டு, குறைந்த அளவே தற்போது விற்பனைக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தி அறிந்து, அது குறித்து விசாரித்ததில், ஏற்கனவே சுமார் 50% விற்பனை குறைக்கப்பட்டிருப்பதாகவும், படிப்படியாக, கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாகவும், ஆவின் விற்பனை மையங்களிலேயே கூறுகின்றனர்.
ஆனால், தவெக அரசு தற்போது வெளியிட்டிருக்கும் செய்தி வெளியீட்டில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால், ஏன் ஆவின் மையங்களில் முன்பு போல அது கிடைப்பதில்லை? கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதை பொதுமக்களே அறிவார்கள். யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கத்தை அளிக்கிறது தவெக அரசு?
கடந்த 2023 ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலும் இதே போல, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்த போது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் அந்த முடிவை திமுக அரசு கைவிட்டது. ஆனால், தற்போதைய தவெக அரசும் அதே முடிவை மக்களிடம் திணிப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை குறைப்புக்கு, நிதி இழப்பைக் காரணமாகக் கூறுகிறார்கள். நிதி இழப்பைச் சரி செய்ய, பால் உற்பத்தியையும், பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையையும் அதிகரித்து, அதன் மூலம் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமே தவிர, ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் வகை விற்பனையை நிறுத்தக் கூடாது.
உடனடியாக, மீண்டும் போதுமான அளவு, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் விற்பனையைக் கொண்டு வர வேண்டும் என்றும், பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
Heartiest congratulations to our Hon. PM Thiru @narendramodi avl on becoming the longest-serving elected Prime Minister in India’s history, completing 4,399 days in office today.
May the almighty bless him with immense strength and good health in continuing his service to our nation.
தொடர்ந்து 4399 நாட்கள்.....இந்திய தேச வரலாற்றில் மிக நீண்ட கால பிரதமர் என்ற சாதனையை படைத்த கர்மயோகி நம் பாரதப்பிரதமருக்கு வாழ்த்துகள்....
பார் போற்றும் நமது பாரதப்பிரதமர் மாண்புமிகு திரு.நரேந்திர மோடி அவர்களின் வரலாற்று சாதனைகளில் சில.
#MyPMMyPride@highlight#12YearsOfSeva
குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது.
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை.