இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் அவர்களுக்கு வீரவணக்கம்!
பாரம்பரிய விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், நஞ்சில்லா உணவின் தேவையையும் உலகறியச் செய்த இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. #நம்மாழ்வார் அவர்களின் நினைவுநாளில், அவரது சிந்தனைகளை நெஞ்சில் ஏந்திப் போற்றுவோம்.
அவர் கண்ட கனவான, 'விவசாயம் செழிக்க வேண்டும், விஷமில்லா உணவு கிடைக்க வேண்டும்' என்ற இலக்கை அடைய தொடர்ந்து பாடுபடுவோம்.
#RememberingNammalvar
கோவையில் தமிழ்நாடு வண்ணார் பேரவை மற்றும் தமிழ்நாடு துணி தேய்க்கும் தொழிலாளர் சங்கம் இணைந்து நடத்திய மூன்றாவது மாநில மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றியபோது.
25.05.25
(2.05.25) திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் புதிய வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் தர்ணா போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
ஏப்ரல்21 #சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகில் தமிழக மக்கள் ஐனநாயக கட்சி நடத்திய 1985 - #இந்தி_திணிப்பு_எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றார் பங்கேற்கும் ஒன்றுகூடல்- கையெழுத்து இயக்கம நிகழ்வில் பங்கேற்று கையெழுத்திட்டு உரையாற்றினேன்.
சுதந்திர போராட்ட தியாகி ஐயா தீரன் சின்னமலையின் 269 பிறந்தநாள் இன்று. தாய் நாட்டின் விடுதலைக்கு உயிரையே தந்து மக்கள் நாம் மானத்தோடு வாழ வழிகாட்டியவர்.சர்வாதிகாரத்திற்கு எதிராக சனநாயகத்திற்கு ஆதரவாக அய்யா வழியில் என்றும் நாம் வழிநடப்போம்.
#புகழ்_வணக்கம்
திருப்பூர் மாவட்டம் கொங்கல் நகரம் பவித்திரம் மஹாலில் நடைபெற்ற கள் விடுதலை கருத்தரங்க கூட்டத்தில் கலந்துகொண்டு, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கள் விடுதலையை ஒன்றிய மாநில அரசுகள் ஆய்வு செய்து பரிசீலித்து நியாயத்தின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
#டிசம்பர்5, மாண்புமிகு முன்னாள் முதல்வர் டாக்டர் புரட்சிதலைவி ஜெ.ஜெயலலிதா #அம்மா அவர்களின் நினைவு நாளில் போற்றி #புகழ்_வணக்கம் செலுத்துவோம். தமிழ்நாட்டு மக்களுக்காக தன் கடைசி மூச்சு இருக்கும் வரை மக்கள் பணி செய்தவர்,சமூக நீதியை நிலைக்கவும்,கொள்கையில் சமரசம் இல்லாமல் போராடிய தலைவி
திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் அருகே, சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்தில் நள்ளிரவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.கொலையாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என காவல்துறையிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இரவு நேரங்களில் கிராம பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.சாலைகளில் கேமராக்களை பொருத்தியும் முக்கியமான சந்திப்புகளில் சோதனைச் சாவடிகளை அமைத்தும் இரவு நேரங்களில் செல்லும் நபர்களை கண்காணிக்க வேண்டும்.
தோட்டத்தில் குடும்பமாக வாழ்ந்து வரும் மக்களும் முதலில் தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இனி இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடக்காத வகையில் தமிழக அரசின் காவல்துறை மக்களிடம் நம்பிக்கை அளித்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடநல் திருநாடும்’ வரி புறக்கணிப்பை வன்மையாக கண்டிக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்.
இன்று தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin அவர்களுக்கு என் #வாழ்த்துக்கள். கட்சி அரசியலிலும் ஆட்சி நிர்வாகத்திலும் நீண்ட அனுபவம் பெற்ற தாங்கள் நாட்டின் புதிய அரசியல் சமூக சூழலில் இப்பொறுப்பை ஏற்றுள்ளீர்கள்.(1/2)
இப்பொறுப்பிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயலாற்றி தமிழ் சமூகம் தனக்கான எல்லா உரிமைகளையும் பெற்று நல்வாழ்வு வாழ தாங்கள் கடமை ஆற்றிட தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பாக மீண்டும் வாழ்த்துகிறேன். (2/2)
உழவர் காவலர் பேராசிரியர் தெய்வத்திரு N.S.பழனிசாமி M.A Ex MLA அவர்கள் மணிமண்டபத்திற்க்கு வந்து புகழஞ்சலி செலுத்திய தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை @_TNKIP மாநிலத்தலைவர் அருமை சகோதரர் திரு @Thaniyarasu_U அவர்களுக்கும் அவரோடு பங்கேற்ற தொண்டர்களுக்கும் மிகுந்த நன்றிகள்.🙏🙏🙏
#தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் #திருச்சி மாவட்டம் #தொட்டியம் ஒன்றியம் #கருக்கமடை கிளையில் புதிய உறுப்பினர்கள் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர் .பெயர் பலகை திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.
இன்று பிறந்தநாள் காணும், தமிழ்நாடு முதலமைச்சர்,திமுக தலைவர், பாசமிகு அண்ணன் @mkstalin அவர்களுக்கு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கள் சேவையாற்ற வேண்டும்.
@CMOTamilnadu@arivalayam