சிங்கப்பூர் தொகுதியில் முன்னாள் MLA வின் அருமையை மக்களுக்கு புரிய வைக்கும் வகையில் கடந்த ஒரு மாதமாக மின்சாரம் அடிக்கடி தர்ணா போராட்டத்தில் இருப்பது தெரிந்ததே..
இதற்கு காரணமான உபிகள் மீது நடவடிக்கை எடுக்க இன்று வாகனம் விரைந்தது.. பிடிங்க சார்,,, பிடிச்சி உள்ள போடுங்க..
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடைய அப்பா
பிடரிக் ட்ரம்ப்
அவருக்கு இறுதிக் காலத்திலே மறதி நோய் வந்து விட்டதாம்
ஆனால் தொடர்ந்து அலுவலகம் வருவேன் கோப்புகளை பார்ப்பேன் கையெழுத்து போடுவேன் என அடம்பிடித்தாராம்
அதனால் டிரம்ப் குடும்பத்தினர் ஒரு ஏற்பாடு செய்தார்களா
போலியான ஒரு அலுவலகம் வைத்து அதில் ஆட்களை நடிக்க வைத்து
விற்பனை வாங்குவது போன்ற செயல்களுக்கு கோப்புகள் வருவது போலவும் அதற்கு அவர் கையெழுத்து போடுவது போலவும்
வங்கிக் கணக்குகளை பார்ப்பது போலவும் போலியாக வடிவமைக்கப்பட்ட செக்குகளுக்கு கையெழுத்து போடுவது போலவும்
காட்டி அந்த நடிப்பின் மூலம் அவரை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தார்களம்
இதற்கும் கீழே இருக்கின்ற படத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை
இரண்டும் வேறு வேறு செய்திகள் என இப்பொழுதே சொல்லி விடுகிறேன்
ஆக
@mkstalin
60 வயதுக்கு மேற்பட்டோர் திமுக பொறுப்புகளில் இருக்க கூடாது
- Ex MLA தத்தி..
காமராஜர் K Plan செயல்படுத்தும் போது 60 வயதுக்கு மேற்பட்டோர் பொறுப்பில் இருக்க கூடாது என, முன்னுதாரணமாக தான் வகித்த தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.. ஆனால் இந்த நாடககோஷ்டி??..
களவாணி எல்லாம் காமராஜர் ஆகிட முடியுமா??
@mkstalin@DMKITwing
தவெக அமைச்சரவையில் இசுலாமியர்கள் இடம் பெற்றுள்ளதால் இனிதான் பாஜக ஆட்டத்தை பார்ப்பீர்கள் என பில்டப் போயிட்டு இருக்கு..
ஒரே கூட்டணியில இருந்தும் அண்ணா அறிவாலயத்துல ரெய்டு விட்டு கூட்டணி பேரம் பேசுன கட்சி காங்கிரஸ்..
ஆனா திமுககாரனுகளை உள்ள தள்ளுறதுக்கு இவ்வளவு காரணங்களும் முகாந்திரமும் இருந்துமே பாஜக ஒன்னும் செய்யல.. இவனுக தவெக வை என்ன பண்ணிட போறானுக..
ஐந்து வருசமா வெடிக்காம இருக்குற இது வெடிகுண்டு இல்லை.. வெறும் குண்டு..
புழுவுக்கு இருக்கும் எதிர்ப்பு குணம் கூட இல்லாமல்
கோபாலபுர கக்கூசுக்கு வாயை வாடகைக்கு விட்டு
பூனைகுட்டி கூட காரித்துப்பும் அளவுக்கு இருந்த நீங்கள் இனியாவது சிறுத்தைகுட்டியாக அரசியல் வாழ்க்கையை மானத்துடன் வாழ வாழ்த்துகள் @thirumaofficial
எப்போதும் என்னோட அப்பா அம்மா அரசியலே வேண்டாம்டா நல்லா சம்பாதிச்சு உருப்படற வேலையைப் பார்னு சொல்லுவாங்க
கடந்த தேர்தல் தோல்வியால் கடுமையாக மனமுடைந்து நான் அரசியலே வேண்டாம்னு நினைக்கறேன்னு எங்கப்பாம்மா கிட்ட சொன்னேன்
வெற்றி வந்தா உடனிருக்கிறதும் தோல்வி வந்தா விலகிக்கனும்னு நினைக்கறது என்ன மாதிரியான மனநிலை
இப்போதான் நீ எங்க பேரை காப்பாத்தனும் தோல்வின உடனே ஓடிட்டான்னு ஊர் பேசும்
எடப்பாடியார் மாதிரி நல்ல மனுசனை விட்டுப் போறது தப்புனு அறிவுரை சொன்னாங்க
மனமகிழ்ச்சியோடு எங்கள் குடி மராமத்து நாயகனுக்காக கழகப்பணியை ஆரம்பிச்சாச்சு
இன்றைய என் பிறந்தநாளில்🖤🤍❤✌ @EPSTamilNadu
திருமாவை முதல்வராக்க பரிசீலித்திருக்கலாம்.. தவறில்லை.. பின்ன எதுக்கு ஆளுநரை சந்தித்து தன் ஆதரவு சமஉ க்களுடன் முன்மொழியவில்லை?.. அப்போ காரணம் அது இல்லை..
தவெக வுக்கு ஆதரவு கொடுக்கலாம்.. தவறில்லை.. ஆனால் அவர்கள் முறைப்படி ஆதரவு கோரினார்களா??.. பின்ன எதுக்கு இந்த முண்டியடிப்பு??..
தவெக உடன் நல்லுறவை பேணுவதில் தவறில்லை.. அதிமுக வெற்றி பெற்றிருந்தால் தவெக உடன் இந்த நல்லுறவை பேணியிருப்பீர்களா??..
அரசியலில் துரோகம் என்ற வார்த்தைக்கு இடமில்லை.. அவரவர் விருப்பம் மற்றும் திறமை.. அதற்காக நாகரீகமாக குற்றச்சாட்டு வைக்காமல் வாயில் வந்ததை உருட்ட கூடாது..
@EPSTamilNadu@CVShanmugamofl@TVKVijayHQ
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் மூலமாக பல லட்சம் மக்களுடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்த , செயல் வீரர் @EPSTamilNadu அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!
நலமுடன் வாழ்க பல்லாண்டு !!
இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 101 இடங்களில் வைப்புத்தொகை இழந்தது என்றும் 100 இடங்களில் மூன்றாம் என்றும் பரப்புகிறார்கள்.
உண்மையாகவே இந்தத் தேர்தலில் அதிமுக 16 இடங்களில் மட்டுமே வைப்புத்தொகையை ( டெபாசிட்) இழந்தது.
அதிமுக தான் போட்டியிட்ட 167 தொகுதிகளில்
47 இடங்கள் வெற்றி, 40 இடங்களில் இரண்டாமிடம், 40 இடங்களில் போட்டிக்கான முன்றாமிடம் என 127 தொகுதிகளில் அதிமுக போட்டிக்கு தேவையான சிறப்பான வாக்குகளைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள தவெக 48 தொகுதிகளில் மூன்றாமிடம்.
தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக 37 இடங்களில் மூன்றாமிடம் பெற்றிருந்தும் அதிமுகவைப் பற்றி மட்டும் பலரும் பலவீனமான கதைகளை சோடிக்கிறார்கள்.
நட்சத்திர நடிகர் விஜய்யின் வருகையால் அதிமுகவின் பெரும்பான்மை வெற்றி தவெகவால் தடுக்கப்பட்டுள்ளது. மும்முனைப்போட்டி தவெகவிற்கு சாதமாக அமைந்துள்ளது என்பதே உண்மை.
வேகமாக திமுக கூட்டணி உடைந்தது, அதைப்பற்றி எந்த ஊடகமும் வாய் திறக்கவில்லை.. ஆனால் அதிமுக பற்றிய வதந்திகளை பரப்புவதின் மூலம் யார் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் என தெரிகிறது.. திமுக மீள எந்த கூறுகளும் இல்லை.. எடப்பாடியார் தலைமையில் மீண்டும் வருவோம்..
@EPSTamilNadu@TVKVijayHQ
35000 வாட்சப் குழுவ கண்டுபிடிக்காத உளவுத்துறைன்னு ஒன்னு இருந்தாச்சான்னு தெரியாத அளவுக்கு ஷூட்டிங்லயே முழுநேரமும் இருந்துட்டு, இப்ப அரசியல் பேச வருது பிளடி தத்தி..
முதல்ல வந்தே மாதரம் பாடுனாங்க என்றால் நீ பதவி ஏற்கும் போது என்ன பாடுனானுகன்னு கேட்பானுகளா இல்லையா..
கஜானாவுல போதுமான காசு இருந்துச்சுன்னா எதுக்கு கடைசி வருசத்துல கடைசி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி கொடுத்த? அரசு ஊழியர்களுக்கு வாக்குறுதி கொடுத்த சம்பளம் கொடுக்கல?.. இப்படியெல்லாம் கேள்வி வரும்..
இப்ப நான் உன்னைய காரித்துப்புறதால என்னையயும் தவெகன்னு நினைச்சிக்க போறானுக.. அதனால நாடககோஷ்டிய செத்த அனத்தாம இருக்க சொல்லு, இல்லை பேட்டாவை கொடுத்து நிரந்தமா அனுப்பிவிடு.. @mkstalin@TVKVijayHQ
End of era and Beginning of era..
> வரலாறு திரும்பிக்கொண்டே இருக்கும் என்பது போல், வயதானவர்களை சபையில் கொண்டிருந்த காமராஜர் ஆட்சியிழக்க காரணம் அன்றைய அலை.. K Plan மூலம் வயதானவர்களை மாற்றினாலும் இன்றும் முன்னர் அளவுக்கு காங்கிரஸ் மீளமுடியவில்லை..
அந்த வகையில் திமுக, அதிமுக உள்ளிட்ட போன தலைமுறை கட்சிகளின் era முடிந்தது.. மீள முடியுமா என்றால், சிரமம் அல்லது வாய்ப்பில்லை என்றே சொல்லலாம்..
> எடப்பாடியார் உழைப்புக்கும் ஸ்டாலின் உழைப்புக்கும் வித்தியாசம் உள்ளது.. எடப்பாடியார் தேரை தன் சக்திக்கு மீறி இழுத்தார்.. ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருப்பது அவருக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்.. மக்கள் மனதில் வாழ்கிறார்.. ஸ்டாலினை பலர் இழுத்து கொண்டு போனார்கள்.. அப்படியும் அங்கீகாரம் இல்லை..
> திமுக விற்கு அனைத்து ஊடகங்களும் ஐடி விங்தான், ஆகையால் என்னதான் strategy போட்டிருந்தாலும் நட்சத்திர கவர்ச்சி முன்னர் எதுவும் எடுபடவில்லை.. அப்படியானால் ஆட்சியில் இல்லாத மற்ற கட்சிகளின் ஐடி விங் எப்படி எடுபடும்?..
அதனால் தனிப்பட்ட பொறுப்பும் இருக்கு என்பதை மறந்து வெளிய இருந்து “அப்படி செய்திருக்கலாம், இப்படி செய்திருக்கலாம்” என மிக்சர் சாப்பிடுக்கொண்டே அறிவுரை சொல்லிகொண்டு இருப்பவர்களும்தான் இதற்கு காரணம்.
அறமற்ற முறையில் செயல்பட்ட தெலுங்குலாபியின் 10% கூட தமிழ்லாபி அறமாக செயல்படவில்லை.. சக ஜாதி வன்மத்திலும், நோகாமல் அறிவுரை சொல்வதிலும் மட்டுமே சென்றது..
> மக்களுக்கு ஏன் வாக்களிக்கிறோம் என தெரியாமல் இருக்கலாம், ஆனால் யாருக்கு வாக்களிக்கிறோம் என தெளிவாகவே உள்ளார்கள்.. நானோ அல்லது நாதகவினரோ வாக்களிக்க வலுவான காரணம் உள்ளது.. விஜய்க்கு வாக்களித்தவர்களுக்கு மாற்றம் வேண்டும் என்ற காரணத்தை தவிர வேறு எந்த காரணமும் இல்லை..
அந்த வகையில் நான் ஏன் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்தேன் என்ற திருப்தி எனக்கு போதுமானது.. எடப்பாடியார் நின்றால் மீண்டும் ஆதரிப்பேன், நாதகவில் சிலரை ஆதரிப்பேன்.. ஆனால் அனைத்தையும் விட்டு விலகி எடப்பாடியார் இனி நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து..
> 2006 இல் புரசைவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் வி.எஸ்.பாபுவுக்கு (அவரேதான்) பூத் ஏஜெண்டாக என் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்தது.. 2009 க்கு பின்னர் காங்கிரசை புதைத்தே ஆக வேண்டும் என அதற்கான கட்சிகளிடம் இணைந்து பணியாற்றினோம்..
அப்படி அரசியல் பேசுவதையே ஏளனமாக பார்த்தவர்கள் ரஜினி வந்தால் ஆதரிப்போம், கமல் வந்தால் ஆதரிப்போம், விஜய் வந்தால் ஆதரிப்போம் என திரை நட்சத்திரங்களை தாண்டி அவர்கள் சிந்தனையை மாற்றவில்லை.. அதுவே அவர்களுக்கு பெருமை என்றால், அந்ததந்த கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப என் அரசியல் நோக்கத்திற்கு எடுத்த சார்பு நிலைப்பாடுகள் நியாயமானதே என நம்புகிறேன்..
எது எப்படியோ என விஜய் மறுதேர்தல் வைத்து 200+ தொகுதிகள் வென்றிருந்தால் கூட ஆறுதலாக இருந்திருக்கும்.. ஆனால் காங்கிரசை சுமந்து கொண்டு வந்தது நாம் அரசியல் தளத்தில் நீடித்திருக்க வேண்டிய நிர்பந்தத்தை கொடுக்கிறது.. ஒரு கற்பனையில் மேதகுவே வந்து காங்கிரசிடம் கூட்டு வைத்தாலும் அவரையும் சேர்த்தே எதிர்ப்போம்..
Survival of the fittest என்ற முறையில் பெரும்பான்மை புத்தியின் மத்தியில் ஒருசிலரின் எதிர்ப்பு கணக்கில் கொள்ளப்படாததுதான்.. எனினும் ஆடைகளின்றி வாழும் ஊரில் ஆடையணிந்த ஒரு பைத்தியகாரனாகவே தொடர்வேன்..
அடி கொடுத்தாவது என் குடும்பத்தை சார்ந்த அடுத்த தலைமுறையை திரைகவர்ச்சிக்கு அடிமையாக இல்லாமல் இருக்க வைக்க வேண்டியது என் முக்கிய கடமைகளில் ஒன்று..
ஒரு end of era வரவேற்கதக்கதாயினும், இன்னொரு beginning of era எதிர்க்க தேவையான காரணங்களை உடன் அழைத்து வருகிறது..
@EPSTamilNadu@TVKVijayHQ
யோசிச்சி ஓட்டு போடனும்னுதான் 18 வயசு நிரம்பியிருக்கனும்னு சட்டம் இருக்கு..
ஆனால் குழந்தைகள் போயி வீட்டுல சொல்லுங்க என trigger செய்ததே அரசியலமைப்பை அப்பட்டமா கால்ல போட்டு மிதிச்சதுக்கு சமம்..
அப்பவே வழக்கு தொடுத்திருந்தா முடிஞ்சிருக்கும்.. ஆரம்பமே குறுக்கு வழி என்பதால் அனைத்தையும் குறுக்கு வழியாத்தான் யோசிக்க தோணுது..
@TVKVijayHQ
அது பதிலடி இல்லை.. குதிரை பேரத்துக்கான ஆதாரம்.. யாருய்யா இதை வெளியிட அனுமதி கொடுத்தது.. மேலும் சிக்கலாகிட்டே போறானுக.. சரியாக ஆலோசனை கொடுக்க ஒருவர் கூட விஜய் பக்கத்துல இல்லையா!!! @TVKVijayHQ@polimernews
எதுக்கு இந்த பாதுகாப்பு பின்வாங்கல் நாடகம்? (கமெண்டில்)
எதுக்கு அதிமுக திமுக சேருதுன்னு வதந்தி பரப்பனும்?
முறையாக குழு அமைத்து ஆதரவு கோராமல் எதற்கு பின்னாடி இருந்து கட்சிகளை உடைக்கனும்?
மீண்டும் தேர்தல் வந்தால் எந்த காரணமும் இல்லாமல் கண்மூடித்தனமாக மக்கள் எனக்கு வாக்கு செலுத்துவார்கள் என மக்களை அறியாமை இல்லாதவர்களாக பார்க்கும் மனநிலை கொடுக்கும் ஆணவம்தான் அது?
———
அதிமுக திமுக அதன் அடுத்தகட்ட வேலைகளை பார்க்க சென்றுவிட்டது (இனி அவர்கள் வர முடியாவிட்டாலும் சரி)..
சூது செய்தாவது ஆட்சியமைக்க வேண்டியது உங்கள் பிரச்சினை.. குடியரசு தலைவர் ஆட்சியையோ, ஒரு வருடம் கழித்து மறுதேர்தலையோ சாமானியனாக தனிப்பட்ட நான் விரும்பவில்லை..
@TVKVijayHQ@AIADMKITWINGOFL