எரிகாற்று உருளை விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்!
வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிகாற்று உருளையின் விலையை இந்திய ஒன்றிய அரசு 29 ரூபாய் அளவிற்கு அதிகரித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. எவ்வித முன்னறிவிப்புமின்றி எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தியுள்ளது ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கட்டுக்கடங்காது நாளுக்கு நாள் உயர்வதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் மக்கள் செய்வதறியாது தவித்து நிற்கையில், எரிகாற்று உருளை விலையையும் உயர்த்துவது, இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான குடும்பங்களின் குருதியை உறிஞ்சும் கொடுஞ்செயலாகும்.
இந்திய ஒன்றிய அரசின் கையிலிருந்த வாகன எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை தனியார் எரிஎண்ணெய் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் வகையில், கடந்த 2010ஆம் ஆண்டு சூன் மாதம் பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை காங்கிரசு அரசும், 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டீசல் விலை நிர்ணய உரிமையை பாஜக அரசும் மொத்தமாகக் கையளித்ததன் விளைவே தற்போது மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கு அடிப்படை காரணமாகும்.
1200 ரூபாய் அளவிற்கு விற்ற சமையல் எரிகாற்று உருளையின் விலை கடந்த நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டுதான் 1000 ரூபாய்க்கு கீழாக குறைக்கப்பட்டது. தற்போது அதனை மீண்டும் 1000 ரூபாய் அளவிற்கு உயர்த்தும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் மாதந்தோறும் பாதிக்கும் அறமற்றச் செயலாகும்.
ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு எரிகாற்று உருளை விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமெனவும், எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் இந்திய ஒன்றிய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
இத்தகைய நெருக்கடியானச் சூழலில் எரிகாற்று உருளை விலை உயர்வால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படாமல் காக்க, தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு, உடனடியாக தான் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து குடும்பங்களுக்கும் வருடத்திற்கு 6 எரிகாற்று உருளைக்கான செலவை முழுமையாக ஏற்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
இசை என்கிற பேராற்றலின் மனித வடிவம்..!
இசையில் உருவெடுத்த உலகின் முதல் தத்துவம்!
உலக இசை வரிசையில் தமிழுக்கு முகவரி பெற்றுத் தந்த தனித்துவம்..!
மனிதனின் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் இசை வடிவம் கொடுத்த இசைக் கடவுள்! தம் கைவிரல் மீட்டிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் கொட்டிக் கிடக்கும் இசை நுணுக்கங்களால் துயரில் தவிக்கும் மனிதனை, உடைந்து கிடக்கும் மனதினை, காதலால் கசிந்து உருகும் விழிகளை, அன்பால் நெகிழ்ந்து உறையும் ஆன்மாவை, இசை என்ற இன்ப உலகிற்குள் காற்றில் மிதந்தபடி, கைபிடித்து அழைத்துச் செல்லும் எங்கள் ஐயா இசை இறைவன் இளையராஜா அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்.
உலகிற்கே இன்னிசை புகட்டும் தமிழினத்தின் பெருமைமிக்க அடையாளம் இசைஞானி இளையராஜா அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலனுடனும், உள நிறைவுடனும் மகிழ்வாக வாழ்ந்து, அவருக்குள் ஊற்றெடுக்கும் வற்றா இசை அமுதத்தை வாரி வழங்கி, எங்கள் வாழ்வினை அவரது இசை அருளால் நிறைக்க வேண்டும் என இப்பிறந்த நாளில் உளமார வாழ்த்துகிறேன்.
ஈடு இணையற்ற இசை மேதை, இசை இறைவன் இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
@ilaiyaraaja
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
தமிழீழ தாயக விடுதலைப் போராட்டத்தில் தொடக்க நாள் முதல் தன் வாழ்நாளின் இறுதி நொடிவரை அந்த விடுதலைக் களத்தை விட்டு சற்றும் விலகாத தமிழ்த்தேசிய விடுதலைப் போராளி!
தன்னுடைய எழுச்சி மிகுந்த குரலால் இன உணர்வும், மான உணர்வும் ஊட்டி தமிழினப் பிள்ளைகளை எழுப்பிய பாசறைப்பாணர்!
நம்முடைய அப்பா தேனிசை செல்லப்பா அவர்களினுடைய நினைவைப் போற்றுகிற நிகழ்வு!
வைகாசி 23 | 06-06-2026 சனிக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: சர் பி.டி.தியாகராயர் அரங்கம், தியாகராயர் நகர் சென்னை.
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
மதிப்புமிக்க நம்முடைய பாசறைப்பாணருக்கு நம் புகழ் வணக்கத்தைச் சூடுவோம்!
நன்றி! வணக்கம்!
சென்னை பெருங்குடி மாருதி நகர்ல மின்சார கம்பிகள் கீழ தொங்குது EB office ல சொன்னா இருக்குற வேலை செய்றதுக்கே இங்கு ஆள் இல்லைனு அலட்சியமா பதில் சொல்றாங்க கார் வண்டி ஏதாவது போனால் கம்பியை தொட்டு போது இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுங்க..
@TANGEDCO_Offcl@EB_Adyar_Tmbm@CTR_Nirmalkumar
நடிகரும், இயக்குநருமான @RJ_Balaji அவர்களது இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'கருப்பு' திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருப்பதாக அறிகிறேன். ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டப் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!
இத்திரைப்படத்தில், ஐயா இளையராஜாவின் காப்புரிமை கோரல் தொடர்பாக ஒரு காட்சியைக் கேலியாக அமைத்து, பிறகு, படத்தயாரிப்பு நிறுவனம், அதற்கு ஐயா இளையராஜா அவர்களிடம் வருத்தம் தெரிவித்த செய்தியைப் படித்தேன்.
இச்சமயத்தில் இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 2018ஆம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு, நாம் தமிழர் கட்சியும், இனமானத் தமிழர்களும், திரைக்கலைஞர்களும் செய்த போராட்டத்தை கேலிசெய்து பேசினார் இதே ஆர்.ஜே.பாலாஜி. "ஐ.பி.எல்.லை நிறுத்தினால் தண்ணி வந்துடுமா?" எனப் பகடி செய்தார். அதனையே அவர் நடித்த 'எல்.கே.ஜி.' திரைப்படத்திலும் வசனமாகப் பேசி, எள்ளி நகையாடினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் வழக்கில், 'காவிரிச் சிக்கல் தமிழ்நாட்டில் ஒரு சிக்கல் இல்லை; அந்த மாநிலத்தின் தலைநகரத்திலே பெரிய சலனம் இல்லை' என உச்ச நீதிமன்றத்தில் அப்போது வாதிட்டது கர்நாடக அரசு. ஒருவேளை, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் நடத்தப்பட்டிருந்தால், "பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி சென்னையில் கிரிக்கெட் போட்டியைக் கண்டுகளிக்கிறார்கள். ஆகவே, காவிரி தமிழர்களுக்கு முதன்மைச்சிக்கல் இல்லை" எனும் வாதத்தை கர்நாடக அரசு முன்வைத்திருக்கும்.
ஏற்கனவே, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பான 192 டி.எம்.சி. தண்ணீர் என்பதை, 177.25 டி.எம்.சி.யாக தனது வாதத்தின் மூலம் குறைக்கச் செய்தது கர்நாடக அரசு. ஆம்! தமிழ்நாட்டினுடைய நிலத்தடி நீர் மட்டத்தின் இருப்பு 20 டி.எம்.சி. ஆக இருப்பதைக் காரணமாகக் காட்டி, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நீரின் அளவில் 14.75 டி.எம்.சி.யைக் குறைக்கச் சொல்லி, உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது கர்நாடக அரசு. அந்த வாதத்தையும் ஏற்று, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நீர்வரத்தை 177.25 டி.எம்.சி.யாகக் குறைத்துத் தீர்ப்பு அளித்தது உச்ச நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் தமிழகமெங்கும் வலுபெற்று வரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் எனும் கேளிக்கை தேவையில்லை என்பதைக் கருதியும், அந்தக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றால் அதனையே உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வாதமாக வைக்கக்கூடும் என்பதாலும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அந்த ஆண்டு சென்னையில் நடத்த எதிர்ப்புத் தெரிவித்துப் போராடினோம். அந்தப் போட்டி போராட்டங்களுக்கு மத்தியில் நடைபெற்றாலும், அதற்குப் பிறகு, அந்தாண்டு சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டன.
உண்மை இப்படியிருக்க, வெகுஜன ஊடகமான திரைப்படத்தில் அந்தப் போராட்டத்தின் நியாயத்தைத் துளியும் உணராது கேலி, கிண்டல் செய்தார் ஆர்.ஜே.பாலாஜி. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதன் விளைவாக, கைதுசெய்யப்பட்டு, குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டு, 68 நாட்கள் புழல் சிறையில் இருந்தவன் எனும் அடிப்படையில் ஆர்.ஜே.பாலாஜியின் அந்தக் கேலி, கிண்டல் எனக்கு வலித்தது; கோபத்தையும் ஏற்படுத்தியது. ஆர்.ஜே. பாலாஜியின் நகைச்சுவையைப் பல சமயம் ரசித்திருக்கிறேன். ஆனால், ஒரு மண்ணுரிமைப் போராட்டத்தை நகைச்சுவைப் பொருளாக மாற்ற முனைவதை ஒருநாளும் ரசிக்க முடியவில்லை.
நிற்க! ஐயா இளையராஜா கோரும் காப்புரிமை என்பது உரிமை தொடர்பானது; அதில் கேலி, கிண்டலுக்கு இடமில்லை என உணர்ந்து கொண்டது போல, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நிறுத்தக் கோரி அன்றைக்குப் போராடிய அண்ணன் சீமான், ஐயா மணியரசன், ஐயா பாரதிராஜா, அண்ணன் வெற்றிமாறன் உள்ளிட்ட இனமானத் தமிழர்களின் போராட்டமும் நியாயமானது; அதில் கேலி, கிண்டலுக்கு இடமில்லை என்பதை ஆர்.ஜே.பாலாஜி இனியாவது உணர்ந்து கொள்வார் என நம்புகிறேன்.
தமிழினம் திட்டமிட்டு சிங்கள இனவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துவிட்டது. நீதிக்கான போராட்டம் நம்மை நோக்கி ஒரு அங்குலம் கூட நகரவில்லை. படுகொலை நிகழ்த்தியவர்கள் அவர்களுக்கு துணை நின்றவர்கள் என எல்லோரும் சிறு தண்டனை கூட இல்லாமல் இன்றும் உலாவருகின்றனர். எந்த காங்கிரஸ் நம்மை கருவருத்ததோ அந்த காங்கிரசை 50 வருடம் கழித்து அமைச்சரவையில் சேர்த்து கேடுகெட்ட துரோகத்தை தவெக அரசு செய்யத் துணிந்துவிட்டது. திமுக செய்த தவறை ஒரு படி அதிகமாக செய்து விஜய்யும் இனத்துரோகிகளின் கூட்டத்தில் ஒருவனாக இணைந்துவிட்டார்.
எல்லாத்தையும் விட கொடுமை.. தமிழினப்படுகொலைக்கு காரணமான காங்கிரசை அமைச்சரவையில் சேர்க்ககூடாது என்று பேசக்கூட இங்கே ஒரு ஆள் இல்லை. பேசினாலும் இதெல்லாம் முடிந்து போன விசயமாகவும் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லாத விசயமாகவும் பிம்பம் கட்ட பலர் தயாராக பேனாவுடன் இருக்கிறார்கள். கடந்த ஆட்சியின் பொழுது திமுகவை காப்பாற்ற திராவிட இயக்கத்தினரும் முற்போக்கு பேசியவர்களும் செய்த துரோகம் தான் இன்று விஜய் அதை normalize செய்கிறார். அவர்களை விட ஒரு படி மேலே போய் இலங்கை எம்பி என ஒருவன் தமிழகம் வந்து தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்துவிட்டு வந்து அண்ணன் சீமானை எதிர்த்து பேட்டி கொடுப்பதெல்லாம் அந்த செயல்திட்டத்தின் ஒரு பகுதி தான்.
சுற்றி அனைவரும் கைவிட்ட இனமாக நாம் இருக்கிறோம். நாம் தமிழர் கட்சி என்று ஒன்று இல்லை என்றால் இந்த மண்ணில் இந்த பேராவலத்தை பேச, ஒரு இனத்தின் வீரமிக்க போராட்டததை பேச அடுத்த தலைமுறைக்கு கடத்த யாருமில்லை. தேர்தல் வெற்றி தோல்விக்கு அப்பால் எந்த காரணத்திற்காக இந்த கட்சி தொடங்கப்பட்டதோ எது நமது இலக்கோ அதை நோக்கி நாம் பயணப்பட்டுக்கொண்டே இருப்பது தான் நாம் கையிலெடுத்துக்கொண்ட இனப்பணி.. துரோகிகளும் எதிரிகளும் வெற்றி பவனி வர இந்நாளில் நாம் மேலும் உணர்வோடும் வெறியோடும் ஒன்றுகூடி பலத்தை பெருக்கி அவரகளுக்கு எதிர்நிக்க வேண்டியிருக்கிறது.
மாண்ட நம் மக்களுக்காக…
ஈகம் செய்த நம் மாவீரர்களுக்காக..
போராடிய நம் தலைவனுக்காக..
போராடும் நம் அண்ணனுக்காக..
நாளை மறைமலைநகரில் அனைவரும் கூடுவோம்… தமிழ்ப்பேரின எழுச்சியை காட்டுவோம்..
அண்ணன் யார் கார்த்தி என்று சொல்ல பின்னால் நான் இருந்து கேட்ட அந்த நொடியில் நாம் தமிழர் கட்சியின் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர் நோக்கி எடுத்த படமிது..
என் தம்பிக்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி சொல்லி அவனை உச்சி முகர்ந்து பெருமையடைகிறேன்.. பிறந்த நாள் வாழ்த்துகள் @idumbaikarthi
2012 அப்துல் ரவூப் கூட்டத்துக்கு நீ, நா, தேவா அண்ணன் எல்லாம் சென்னையில் இருந்து ஒன்னா அரியலூருக்கு ரயில்ல போனோம் 14 வருசம் ஓடி போச்சி அப்ப எப்படி உன்ன பார்த்தேனோ அப்படியேத்தான் இப்பவும் இருக்க? எப்போதும் அப்படியே இரு அதான் உன்னுடைய தலைசிறந்த குணம்.... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
தமிழர்களின் இன ஓர்மையை சிதைக்கும் இலங்கை இனவாத அரசின் சதியை இருநாட்டு தமிழ் மீனவர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்!
கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது கடந்த 25.04.26 சனிக்கிழமை அன்று ஈழத்தாயகத்தினை சேர்ந்த 3 மீனவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதன் காரணமாக தமிழ்நாட்டு மீனவர்கள் நடத்திய பதில் தாக்குதலில் இருவர் தப்பியோடிய நிலையில், காங்கேசன் துறையைச் சேர்ந்த அயந்தன் என்ற தமிழ் மீனவரை, தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபடுத்தி கொண்டுவந்துள்ள நிகழ்வு அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாட்டு தமிழ் மீனவர்களுக்கும், ஈழத்தாயக தமிழ் மீனவர்களுக்கும் இடையே பகைமையை உருவாக்கும் இதுபோன்ற கசப்பான நிகழ்வுகள் மிகுந்த வருத்தமளிக்கிறது.
சிறைபிடிக்கப்பட்ட காங்கேசன்துறை மீனவர் அயந்தன் தற்போது தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை இருதரப்பினர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றது. தமிழ்நாடு காவல்துறை விசாரணை மூலம் உண்மை நிலையை கண்டறிவதோடு, காயமடைந்த மீனவருக்கு உரிய மருத்துவம் அளித்து, அவர் விரைவில் தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே, தமிழக மீனவர்கள் மீது சிங்கள இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களும், தமிழர் படகுகளைப் பறித்து அரசுடைமையாக்கிக் கொள்ளும் அநீதியும், வலையறுப்பு நிகழ்வுகளும், மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை நடுக்கடலிலே வைத்து தாக்குவது, ஆயுதத்தைக் கொண்டு துன்புறுத்துவது, அவர்களது உடைமைகளைப் பறித்துக்கொள்வது, படகுகளைச் சேதப்படுத்துவது, மீனவர்களைச் சிறைபிடிப்பது, துப்பாக்கிச்சூடு நடத்துவது என இலங்கை கடற்படை அரங்கேற்றிவரும் கொடுமைகளும் சொல்லி மாளக்கூடியதல்ல.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலின் மூலம் இதுவரை பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்துள்ளனர். 850-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நடுக்கடலிலே கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை சிறைகளில் தொடர்ச்சியாக வாடிக்கொண்டுள்ளனர். இருந்தபோதிலும், இதுவரை தமிழக மீனவர்கள் மீதான இக்கோரத் தாக்குதல்களுக்கும், அநீதிகளுக்கும் எதிராக இந்திய ஒன்றிய அரசு கண்டனம் தெரிவித்ததுமில்லை. எதிர்வினையாற்றியதும் இல்லை.
இத்தகுச் சூழலில் இருநாட்டு தமிழ் மீனவர்களிடையே நடைபெறும் இதுபோன்ற தாக்குதல்கள், இலங்கை இனவாத ராணுவத்தால் திட்டமிட்டு நடத்தப்படும் கொடுமைகளை மறைத்து, இங்குள்ள தமிழ் மீனவர்களுக்கும், ஈழத்து தமிழ் மீனவர்களுக்கும் இடையேதான் பிரச்சனை என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்குவது நிலைமையை மென்மேலும் சிக்கலாக்கவே வழிவகுக்கும். தமிழ் மக்களிடையே நிரந்தர பகையை உருவாக்க நடைபெறும் இதுபோன்ற சூழ்ச்சிகள் குறித்து இருநாட்டு தமிழ் மீனவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொப்புள்கொடி சொந்தங்களான தமிழ் மீனவர்கள் தங்களுக்குள் நிலவும் எல்லை சிக்கலையும், மீன்பிடி சிக்கலையும் பேச்சுவார்த்தை மூலம் எளிதில் தீர்த்துக்கொள்ள முடியும்.
சிங்கள இராணுவம் ஈவிரக்கமற்று தொடர்ச்சியாக தமிழக மீனவர்களைச் சிறைபடுத்தி வருவதும், கடுமையாகத் தாக்குவதும் தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடேயாகும். அதனை எந்த காலத்திலும் சிங்கள ராணுவம் கைவிடப்போவதில்லை. இந்திய ஒன்றிய அரசும், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைத்த தீர்வை எந்த காலத்திலும் பெற்றுத்தரப் போவதுமில்லை.
ஆகவே, தமிழ்நாடு மற்றும் தமிழீழத் தமிழ் மீனவர்களும் எவ்வித சிறு பகைமைக்கும் இடமளிக்காமல், தங்களுக்குள் நிலவும் சிறு சிறு சிக்கல்கள் குறித்து திறந்த மனதுடன் அமர்ந்து பேசி, நிலையான தீர்வு காண முன்வர வேண்டும். அதன் மூலம், இருநாட்டு தமிழ் மீனவர்களிடையே பகையை உருவாக்கி, உருவெடுத்து வரும் இன ஓர்மையை சிதைக்க முயலும் இலங்கை இனவாத அரசின் திட்டமிட்டச் சதியை தமிழர்கள் ஒற்றுமையுடன் முறியடிக்க வேண்டும்.
தற்போது, தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள, மீனவர் அயந்தனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, விரைந்து தாயகம் திருப்பி அனுப்ப காவல் துறை மற்றும் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தம்முடைய கந்தகக்குரலால் தாயக கீதம் இசைத்த பாசறைப் பாணர், தமிழீழத் தாயகப்பற்றாளர்..!
எறிகணை வரிகள் எழுதி தமிழர்களின் இதயங்களில் உறங்கிக்கொண்டிருந்த விடுதலை உணர்வை தட்டி எழுப்பிய புரட்சியாளர்..!
தமிழ்த்தேசியத் தலைவரின் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்ற பெருந்தகை..!
என் மீதும் நாம் தமிழர் கட்சி மீதும் பேரன்பு கொண்டு நேசித்து, நாம் தமிழர் மேடையை தம் இன்னிசையால் நிறைத்த
தமிழிசை ஏந்தல்..!
தம்முடைய எழுத்து, இசை, குரல் என்று யாவற்றையும் தாயக விடுதலைக்கு ஒப்புவித்து, வாழ்நாள் முழுவதும் தமிழ் மண்ணிற்கும், மக்களுக்காகவுமே வாழ்ந்து மறைந்த விடுதலைப் பாணர்..!
பாசறைப்பாணர் அப்பா தேனிசை செல்லப்பா அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் இன்று 29-04-2026 பங்கேற்று இறுதி வணக்கம் செலுத்தினேன்.
அப்பா தேனிசை செல்லப்பா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டும்!
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் 29.04.2026 அன்று நடைபெறும் என்று அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில்
சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று, தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில்
கூட்டத்தை நடத்த காவிரி மேலாண்மை ஆணையம்
முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
காவிரி ஆற்றினை பங்குகொள்ளும் மூன்று முக்கிய மாநிலங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இன்னும் அமையாத நிர்வாகச் சூழலில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை அவசர அவசரமாக கூட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது?
முழுமையான அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்?
மாநிலங்களின் உயர் அதிகாரிகள் வேற்று மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கும் சூழலில் மண்ணின் உரிமைகளையும், மக்களின் உணர்வுகளையும் எப்படி உரத்து எழுப்புவார்கள்? நடைபெறவுள்ள கூட்டத்தில் மேகதாது அணை கட்டுமானம் குறித்த முக்கிய விவாதங்கள் நடைபெறவுள்ள நிலையில், இதர மூன்று மாநிலங்களில் அதிகாரம் படைத்த அரசுகள் இல்லாத நிலையில், கூட்டம் முழுக்க முழுக்க ஒருபக்க சார்பாக மாறி கர்நாடகாவுக்கு சாதகமாகிவிடாதா?
யாருடைய உத்தரவின் பேரில் இத்தனை அவசரமாக காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டப்படுகிறது? யாருடைய நலனுக்காக இத்தனை அவசரமாக ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது? தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்க,
கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரசு அரசு மற்றும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கூட்டுச் சூழச்சியாகவே இக்கூட்டம் நடத்தப்படுவதாக தோன்றுகிறது. கச்சத்தீவு போன்று தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் இத்தகைய வரலாற்றுச் சதிகளை இனியும் அனுமதிக்க முடியாது.
ஆகவே, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ரஷ்ய எழுத்தாளன் 'பியோதர் தஸ்தயெவ்ஸ்கி" ஒரு பதின் பருவ இளைஞனாக சிறை சென்று மரண தண்டனை பெற்று அதிலிருந்து மீண்டு வந்து இன்று உலகம் போற்றும் குற்றமும் தண்டனையும், வெண்ணிற இரவுகள் என பல புத்தகங்களை எழுதியது போல் நீங்களும் சட்டத்துறையில் பல சாதனைகளை புரிய வேண்டும் அறிவு அண்ணா ♥️
விஜய்யின் கொள்கையற்ற அரசியலையும் சுயநலத்தையும் தொடர்ந்து பேசியதற்காக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் வாகனத்தை தாக்கிய தற்குறி கும்பல் !
தமிழ்நாட்டின் மிக இழிவான ஒரு அரசியல் கட்சியாக தவெக மாறி நிற்கிறது .