📚 மெட்ராஸ் பேப்பர் - 4 புதிய வெளியீடுகள்!
சர்வதேச அரசியல், வரலாறு, மற்றும் வெற்றிப் பயணம் என 4 அதிரடி புத்தகங்கள் மே 31, 2026 முதல் உங்கள் கைகளில்!
🔥 எரியாத நாளில்லை - சிரியாவின் அதிரடி அரசியல் வரலாறு! (அசோக் ராஜ்)
👑 ஜெஃப் பெசோஸ்: THE BOSS - அமேசான் நிறுவனரின் மிரட்டலான வெற்றிப் பயணம்! (சரண்யா ரவிகுமார்)
🌍 இரான்: நேற்று - இன்று - நாளை - இரானின் ஆழமான வரலாறு! (ஜான்பால்)
🧕 நூர் - அரபுப் பெண்களின் மறைக்கப்பட்ட உண்மை வரலாறு! (ஆஷா பிரைட்)
✨ வெளியீடு: மெட்ராஸ் பேப்பர்
🎨 அட்டை வடிவமைப்பு: விஜயன்
📍 கிடைக்குமிடம்: ஜீரோ டிகிரி பப்ளிஷிங் (Zero Degree Publishing)
மே 31 முதல் ஆன்லைனிலும், புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்! தவறவிடாதீர்கள்! 📖
@writerpara
#MadrasPaper #NewBooks #TamilBooks #ZeroDegree #JeffBezos #Syria #Iran #ArabWomen #BookLovers #TamilReading
த்ரெட்ஸ்ல மமிதா பைஜு பத்தி எதோ எழுதியிருக்க என்றாள் மகள். ஆக,
1. gen z த்ரெட்ஸ் பார்க்கிறது.
2. மமிதா பைஜு என்கிற குறிச்சொல் வேலை செய்கிறது.
3. ஜோஹோ சோஷியல் தன் கடமையைச் செய்துவிட்டது.
நடுவில் இருந்த ரமேஷ் வைத்யா என்னும் ப்ரெஞ்ச் ஃப்ரையை யார் கடித்துத் தின்றது?
ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் ஜீரோ டிகிரி வெளியிட்டுள்ள என்னுடைய (சில) புத்தகங்கள் கிடைக்கும்.
நற்செய்தி அறிவிப்பாளர்: டிஸ்கவரி வேடியப்பன்.
பாராவின் ‘சலம்’ நாவல் முன்பதிவு இன்று தொடங்குகிறது. இரண்டு லிங்க்குகள் உள்ளன. முதலில் உள்ளது paperback பதிப்புக்கான லிங்க். அடுத்து உள்ளது hardcover பதிப்புக்கான லிங்க். உங்களுக்கு விருப்பமான பதிப்பை நீங்கள் தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்யலாம். குறிப்பிடப்பட்டிருக்கும் விலைச் சலுகை முன்பதிவுக் காலம் வரை மட்டுமே செல்லுபடி ஆகும். முன்பதிவு செய்யக் கடைசி நாள் ஏப்ரல் 13.
https://t.co/NARhh7j0ks
https://t.co/ZTa0WCSl6f
@writerpara
ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனம் வெளியிட என் நண்பர் பா ராகவனின் சலம்🔥🔥🔥💪💪💪 உங்களை பிரமிக்க வைக்க வருகிறான் இதோ ‘சலம்’ நாவலின் முன் பதிவுச் சுட்டிகள்! இதனை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
சலம் (Hard Cover)
https://t.co/hwAfaSbcL7
சலம் (Paperback)
https://t.co/71CslXVD5D
காசு கொடுத்து ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்கியவர்கள் இனி இரண்டு மணி நேர விடியோக்களை அப்லோடு செய்யலாம் என்கிறார் எலான் மஸ்க். கூடிய சீக்கிரம் ட்விட்டர் பறங்கிமலை ஜோதியாகிவிடும்.
இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கு, தலைப்பு குறித்த விளக்கத்தில் 'நிலமெல்லாம் ரத்தம்' எனும் புத்தகம் இருப்பதே இப்போது தான் தெரியும் என உங்கள் சார்பில், உங்கள் உதவி இயக்குனர் கூறியிருக்கிறார். இதைவிட சிறுபிள்ளைத்தனம் எதுவும் இருக்காது. குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்தது முதல் இன்றளவிலும் அதிரடி விற்பனையில் இருக்கும் புத்தகம் பா ரா வின் நிலமெல்லாம் ரத்தம்.
இஸ்ரேல், பாலத்தீன பிரச்சினை இன்று வரை தீராதிருக்க என்ன காரணம்? சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் பாலஸ்தீனிய அரேபியர்களுக்குப் பிற அரபு தேசங்கள் ஏன் கைகொடுப்பதில்லை, அராபத்தின் ஆயுதப்போராட்டம், அமைதி முயற்சி என இந்த ரத்த தேசத்தின் வரலாறு அனைத்தையும் உயிரோட்டமாக விவரிக்கும் அற்புதமான புத்தகம், 19 வருடமாக விற்பனையிலும், மக்களின் விருப்பத்திலும் கொடி கட்டிப் பறக்கும் ஒரு புத்தகத்தின் தலைப்பை வைத்து விட்டு, கேட்டால் புத்தகம் இருப்பதே தெரியாது என்ற சமாளிப்பு அதிர்ச்சியாக இருக்கவில்லை, வருத்தமாக இருக்கிறது. காரணம், வாசிப்பு இல்லாதவர் கூட வாங்கி வைத்து பார்க்கும் ஒரு புத்தகத்தை, இலக்கியத்தை கல்வியாகப் பயின்று, எழுத்தாளர்களுடன் இணைந்து பணியாற்றும் ஒரு 'மைல்ஸ் டூ கோ' இயக்குனர் அறியவில்லை எனக் 'கூறுகிறார்' என்பது தான் வருத்தம்.
உங்களுக்கு தெரியவில்லை சரி, தமிழிலும் ஆங்கிலத்திலும் கூகுளில் 'நிலமெ' என முதல் நாலு எழுத்து அடித்தாலே புத்தகம் தானே வருகிறது, இந்த குறைந்த பட்ச சிரத்தையோ, தேடலோ இன்றி ஒரு தலைப்பை எப்படி தேர்வு செய்கிறீர்கள் வெற்றி. இது எல்லாம் கிடக்கட்டும், தமிழில் 60க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளருக்கே அழைத்து , "அப்டியா, டைட்டில் வைக்கிற வரைக்கும் இந்தப் புத்தகம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது" என அதன் விபரங்களை அவரிடமே வினவுவது அவரை சிறுமைப்படுத்தும் ஒருவித உளவியல் தாக்குதல் தானே ! இதை நீங்களா செய்கிறீர்கள் ?
அப்புறம் எனக்கும் எழுத்தாளர் @writerpara அவர்களுக்கும் ஒரு பழக்கமும் கிடையாது. நேரில் பார்த்தது கூட இல்லை. இந்த கண்டனத்தை நான் பதிவு செய்யக்காரணம் அவரது எழுத்தின் மேல் இருக்கும் ஆதர்சம் மட்டுமல்ல ! என்னை எழுத்தாளனாக உருவாக்கியதில் நிலமெல்லாம் ரத்தமிற்கும் ஒரு பெரும் பங்குண்டு. அந்த தலைப்பை அவரைக் கேட்காமல் எடுத்ததில் இருக்கும் வாசக கோபம். அதே போல நம் ஆதர்ச இயக்குனர் ஒரு தலைப்பு சிக்கலின் முதல் உரையாடலிலேயே பொய் சொல்கிறாரே ஏன்ற வருத்தமும் கூட.
'உன்னைத் தவிர உங்களை யாராலும் அழிக்க முடியாது' - ஓஷோ.