நம்மை பற்றிய நல்லெண்ணம் இல்லாதவர்களிடம்
நம்மை நிரூபிப்பதை விட,
அவர்கள் மனதில் தீயவராகவே
வாழ்ந்து விட்டுச் செல்வது
மேலானது...! 😇♥️
அவர்கள் அப்படித்தான் என்று
கடந்து செல்லுங்கள்...
இறைவன் உள்ளத்தை நன்கறிந்தவன்...❣
#Safna_Husain ✍🏻
தனிமையை ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்..
இங்கு தேவைக்காக வருபவர்கள் எல்லாம் இறுதி வரை துணைக்கு வர மாட்டார்கள்....
உங்களுக்கு நீங்கள் மட்டுமே
என்றும் நிரந்தரமானவர்... ✨
#Safna_Husain 🦋
எல்லா தேடல்களும் ஒரு நாள் தீரும்
என்ற நம்பிக்கையில்,
தீராத தேடல்களுடன் தினமும் பயணிக்கிறேன்...
தேடல் என்னவோ ரணமாக இருந்தாலும், தேடலின் விளைவு எப்போதும் சுகமாகத் தான் இருக்கும்... 💫
♥️🍂
#Safna_Husain 💫
🍂
நீங்கள் நேசிக்கும் உறவுகள்
உங்களுடனேயே இருந்தால் என்ன
நலவு என்பதை விட,
நீங்கள் இல்லாமல் இருக்கும் போது எவ்வளவு இழப்பு என்பதை உணர்தால் உறவுகளுக்குள் பிரிவு என்பது
தூரமாகி விடும்...
#Safna_Husain 💝
விதி என்றே சில விடயங்களை
கடந்து விடுங்கள்,
விளக்கங்கள் கேட்கப் போனால் இறுதியில் இறைவனையே வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவீர்கள்...!🥀
•●○●•
#Safna_Husain ✍🏻
அழகான வாழ்க்கை என்பது
உடல் தோற்றத்திலும்
தோல் நிறத்திலும் மட்டும் இருப்பதில்லை.
மாறாக,
ஆளமான புரிதலிலும்
தூய்மையான அன்பிலும்
இருக்கிறது...! 💙✨
#Safna_Husain ✍🏻