நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் (RK Nagar) தொகுதியின் வேட்பாளராக 2026 சட்டமன்றத் தேர்தலில் களம் காண்கிறேன்.
வழங்கப்பட்ட இவ்வாய்ப்பினை,
இன ஓர்மைக்கும், மண் மீட்சிக்கும், வடசென்னை ராதாகிருஷ்ணன் நகரில் சூழலியல் சீர்கேடுகளின் வழி வஞ்சிக்கப்பட்டிருக்கும் சமூகநீதியினை மீட்டெடுக்கவும்,
அறம் சார்ந்து முன் நகர்த்துவேன் என்று அண்ணன் சீமான் அவர்களுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் உறுதியளிக்கிறேன்.
@NTKEnvWing@Seeman4TN@NaamTamilarOrg@_ITWingNTK
If Mr. Stalin is truly opposed to SIR, he should have convened the Legislative Assembly and passed a resolution against SIR!
Senthamizhan Seeman
Chief Coordinator
Naam Tamilar Katchi
@Seeman4TN
13+ ஆண்டுகால நட்புறவு and still ageing like fine wine and yeah, you are ageing like fine wine! பெருமிதத்துடன் கூற முடியும், பல செயல்களில் முன்மாதிரி நடைபோடுகிறாய்:
ஓட்டமெடுக்கும் அயரா உழைப்பு;
மனதினை உடலினை உறுதி செய்யும் வலிமை;
பெண்பிள்ளைக்கு நீ கற்பிக்கும் வாழ்வரசியல்;
நொந்து போகப் புனையப்பட்ட தருணங்களை நீ அசாதாரணமாகத் தள்ளிவிடும் ஆன்மபலம்;
ஆண் ஆதிக்க உலகத்தை எதர்கொள்ள நம்மை நீ எத்தனிக்கும் எப்பொழுதுகளிலும் உன்னிடத்தில் நிரம்பியிருக்கும் கூர்மொழி;
புத்தகத்தாளுக்குள் நீ தேடி எடுத்துக் கொண்டு வரும் நமக்கான அறம் மறம்;
வெற்று காற்றுக்குள் வெற்றியைத் துழாவித் திரிய எனக்கே எனக்காக எப்பொழுதும் நீட்டப்பட்டிருக்கும் கைவிரல்கள்;
உனக்குப் புரியும், நம் சமூகத்தில் அரிதினும் அரிதாகப் பெண்மைக்கும் ஆளுமைக்கும் நடுவில் நின்று, இரண்டினையும் சமநிலை நீங்காது ஒருசேரக் கையாளும் திறன் - எளிதல்ல! ஆனால், உனக்கு எளிது and you do it in style;
“டே, என்ன ஆச்சு தெரியுமானு” நான் அழைப்பெடுக்கும் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளதனை நானறிவேன்! எங்கோ ஏத்திக்கொண்ட சுமையை உன் தோளில் இறக்கிவிட்டுப் போவதையும் நான்றிவேன். தீர்வுகள் கிட்டுமோ இல்லையோ, சுமைகள் எளிமையானதுண்டு and that is why, நான் எப்பொழுதும் சொல்வதுதான், you are the silver lining where I am clouded and shrouded; Keep being the sunshine that I can grasp and grapple on to and so will I be! Let our promises to each other outshine all that is grim and dark.
Happy budday love @Sunandha_TS! ❤️ Onwards and upwards only! 😘
"அன்பின் வழியது உயிர்நிலை "
பிறந்த நாளை ஒட்டி, அண்ணனை பார்த்து விட வேண்டும் என்று வருடாவருடம் நினைப்பதுண்டு.
இதற்காகவே அமைந்ததுப்போல் அந்த times of India நிகழ்வு செப்.29 ஆம் தேதி அழைத்திருந்த்தார்கள்.
என்னுயிர் அண்ணன் சீமானின் ஆசியோடும் அன்போடும் தொடங்கிய இப்பிறந்த நாள்,
அன்பு அண்ணன் மணி செந்திலின் வாழ்த்து தொடங்கி, தொடர்ச்சியாக அன்பு உறவுகளின் வாழ்த்துகளும் அலைபேசி வழி வாழ்த்துகளாலும் நிரம்பி வழிந்தது.
கரூர் கொடுந்துயரம் கருதி, இம்முறை புத்தாடைக்கூட அணிய மனம் ஒப்பவில்லை. ஆனால் நாம் தமிழர் உறவுகளின் அன்பின் வழி, மனம் பூரித்துப்போனது.
எம்மிறை தேசியத்தலைவர் மற்றும் மாவீரர்களின் ஆசியுடன் நான் பெற்ற பொக்கிசமான நாம் தமிழர் குடும்பத்தினர் என் மீது கொண்டுள்ள அன்பும் பாசமும் மதிப்பும் நெஞ்சத்தை நெகிழச்செய்தது.
இத்தனை அன்புக்கும் நான் உரித்தானவள் என்ற கர்வத்துடன், என்றென்றும்என்றென்றும் என் இனப்பணியை நம் இலக்கை நோக்கி முன்னகர்த்திச்செல்வேன் என்ற உறுதியளிக்கிறேன்.
என் 35 ஆம் பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்புகளும்!
"Your chosen family sees you, loves you, and stands with you — not because they have to, but because they want to." — Unknown