'நீளிரா' படத்தினை இன்றுதான் பார்த்தேன். அம்மா முதலாக அப்போது வாழ்ந்தவர்கள் எல்லோரும் சொல்லக் கேட்ட கதை. அமைதி காக்கும் படை என்கிற பெயரில் வந்த இந்திய இராணுவத்தின் வருகை வடக்கில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலில், இருப்பில், சுதந்திரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று பேசும் கதை.
1988 இல் இலங்கையின் வடபகுதியில் வாழும் ஒரு குடும்பம் அடுத்தநாள் வீட்டில் நடக்கவிருக்கும் திருமண நிகழ்விற்குத் தயாராகிறது. அப்படி அவர்கள் தயாராகிற போது, அந்த இரவில் அவர்கள் வீட்டிற்கு வருகிற இந்திய இராணுவத்துக்கும் தமிழ் இயக்கத்துக்கும் இடையில் போர் ஆரம்பிக்கிறது. இந்தப் போரில் அந்தக் குடும்பம் எப்படி சிக்கிக்கொண்டு வெளியே வருகிறது என்பதுதான் கதை.
இந்தப் படத்தை உன்னிப்பாகக் கவனிக்கிறவர்களுக்கு ���ிறைய விஷயங்கள் தெரியவரும். உதாரணமாக, இந்தப் போரில் தமிழர்களின், தமிழ்க் குடும்பங்களின் பங்கு எத்தகையது என்பதை இந்தப் படம் நெடுக அவதானிக்கலாம்.
இந்தக் கதையில் வருகிற குடும்பம் தமிழ்ப் பற்று உள்ள குடும்பம். தமிழர்களின் சுதந்திரத்திற்காக தங்களை அர்ப்பணிக்கவும் தயாராக இருக்கிற குடும்பம். வீட்டில் இளையவர்கள் இருந்தால் இயக்கத்துக்கு போறேன் என்று சொல்பவர்களும் கட்டாயம் இருப���பார்கள்.
இயக்கப் பெடியள் வழமையாக தமிழர்களின் வீட்டில்தான் வாங்கிச் சாப்பிடுவார்கள். தேநீர் அருந்துவார்கள். வந்தால் பெடியளுக்கு உபசாரம் செய்யாமல் ��ாப்பாடு தராமல் இருக்கமாட்டார்கள். அது பயத்தினால் வந்தது அல்ல. நமக்கும் அவர்கள் காவலர்கள் என்கிற பயபக்தியினால் வந்த அன்பு அது. அவர்களும் நமது பிள்ளையள் என்பதால் வந்த உணர்வு அது.
"கல்யாண வீட்டில அசைவம் வைக்கிறதில்லை. உங்களுக்காகத்தான் புட்டும் முட்டைப் பொரியலும் வைச்சம்" என்று சொல்கிற ஒரு வசனமே சொல்லிவிடும். கவனமா போங்கோ என்று அன்பாக உணவு கொடுத்து அனுப்பும் காட்சியே அந்தப் ��ிணைப்பைச் சொல்லிவிடும்.
இந்தப் படத்தில் வருகிற காட்சிகளை வைத்தே நிறையக் கேள்விகளைக் கேட்டு நீங்கள் ஆராயலாம்.
அந்தப் படத்தில், விஜயகாந்த் படத்தின் காஸட்டை பார்த்துவிட்டு, மதராஸி! தமிழ் இயக்க ஆதரவாளரா? என்று ஏன் அந்த இந்திய இராணுவ அதிகாரி கேட்டார். ஏன் தமிழக மக்களின் ஆதரவு அவர்களுக்கு அவ்வளவு எரிச்சல் ஊட்டுகிறது? என்று தேடிப் பாருங்கள்.
ஏன் இலங்கையில் தமிழர் பூமியில் இருக��கும் எல்லோரும் தமிழ் அல்லாத இன்னோர் ஆக்கிரமிப்பை எதிர்த்தார்கள்?
ஏன் படித்தவர்கள், மருத்துவர்கள் எல்லோரும் படிப்பை விட்டு ஆயுதம் ஏந்தினார்கள்?
அதென்ன ஹாஸ்பிடல் படுகொலை? அவளுடைய traumaவின் பின்னால் இருக்கும் நிகழ்வு என்ன? அதென்ன யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலை. அதற்கும் இந்திய அமைதிப் படைக்கும் என்ன தொடர்பு?
இயக்கப் பெடியளிடம் தயங்காமல் பேசும் பெண்கள், ஏன் இந்திய இராணுவம் வந்து இரவில் கதவைத் தட்டினால் பெண்கள் போகாமல் முதியவர்களை அனுப்புகிறார்கள்? ஏன் பெண்கள�� ஷேர்ட் போடுகிறார்கள்? ஏன் கூனி நிற்கிறார்கள்?
இதுபோல நிறையக் கேள்விகளைக் கேட்டால் எல்லாவற்றும் பதில் கிடைக்கலாம்.
அதேநேரம் எல்லோரும் கெட்டவர்கள் கிடையாது. இந்திய இராணுவத்தின் காப்டனை நிதானமானவராக தீங்கு விளைவிக்காதவராக காட்டியிருப்பார்கள். நீங்க சமாதானம் என்று வந்து, யாரிடமிருந்து(இலங்கை இராணுவத்திடமிருந்து) எங்களைப் பாதுகாக்க வந்தீர்களோ இப்போது அவர்களுடன் சேர்ந்த��� எங்களை(தமிழர்களை) அடக்குகிறீர்கள் என்று மக்கள் கேள்வி கேட்பதுபோல காட்சி அமைத்திருப்பதெல்லாம் நன்று.
இன்னொரு பக்கம் இயக்கத்தின் கெரில்லா போர் உத்தி. சிறு குழுக்கள் எப்படி இயங்குவார்கள், அவர்கள் எப்படி ��ாழ்ப்பாணத் தமிழில் பேசிக்கொள்வார்கள், யாழ்ப்பாணத் தமிழில் பேசி எப்படி சண்டை போடுவார்கள் என்பதையெல்லாம் அழகாக எடுத்திருக்கிறார்கள். சண்டையை விளையாடுவோம் வா என்று ஆரம்பிப்பதெல்லாம் சரியாக இருந்தது.
ஒருபக்கம் வலி நிறைந்த வாழ்க்கை. இன்னொரு பக்கம் இந்த நூற்றாண்டிலேயே தமிழர்களின் புறநானூற்று வாழ்க்கையைப் பதிவு செய்கிறார்கள். ஆவணப்படுத்துகிறார்கள். ஈழப் பிரச்சனையைப் பேச ஆ��ிரம் ஆயிரம் கதைகள் இருக்கிறது. ஆனால் அதைச் சரியாகவும் சுவாரசியமாகவும் சொல்ல ஆளில்லை என்கிற குறையை இந்த நீளிரா படம் குறைத்திருக்கிறது. இந்தப் படம் வெற்றிபெற வேண்டும். பலரையும் சென்றடைய வேண்டும்.
இடையிடையே அழகான தமிழ் வார்த்தைப் பிரயோகங்கள். அழகான நல்ல பொருள் என்றால் மணியா இருக்கு என்பார்கள். நாம் இப்போது சூப்பர் என்று சொல்வதுபோல! இந்த மாதிரி வலிக்குள்ளும் அழகான தமிழ் உரையா��லை காது குளிரக் கேட்கலாம். தமிழகம் முதலாக இலங்கை உட்பட எல்லா திரையரங்குகளிலும் இந்தப் படம் போகிறது. சென்று பாருங்கள்.
#Neelira @karthiksubbaraj
பட்ஜெட் ரூ.2000 கோடின்னா.. கமிஷன் எத்தனை கோடி ரூபாய்? தி.மு.க அரசின் திட்டம் ரத்து ஏன்? வெளியானது பரபரப்பு தகவல்..!
#Chennai | #TNGovt | #TVK | #DMK | #PolimerNews
"Puttu" is very famous in Northern Sri Lanka. In Jaffna, we eat puttu for breakfast and dinner most of the time. It is made from red rice flour mixed with coconut. Puttu is also very popular in Kerala. It's almost like rice. We eat it with spicy curries and sweet fruits. People in other parts of Sri Lanka also eat pittu, but it is not one of their main foods.
நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்கு கட்டணம் வசூலிக்கவேண்டும். இவர்களைப் போன்றவர்களால் உண்மையில் கிடைக்கவேண்டியவர்களுக்கும் சேர்வார்கள��� என்று நினைத்து தாமதமாக்குகிறார்கள்.
@joe_selva1 நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்கு கட்டணம் வசூல��க்கவேண்டும். இவர்களைப் போன்றவர்களால் உண்மையில் கிடைக்கவேண்டியவர்களுக்கும் சேர்வார்கள் என்று நினைத்து தாமதமாக்குகிறார்கள்.
என் உள்ளங்கைகளில்
புத்தகமாகத் தவழும்
உன் முகம்
அதில்
பக்கங்களாகப் புரளும்
உன் பதட்டங்கள்
பேசப் பேச
கும்மாளமிடும்
உன் உதடுகள்
அதில்
வளைய வரும்
உன் விருப்பங்கள்
அனைத்தையும்
நான் ஒன்றுவிடாமல்
படித்துவிட்டேன்
படித்தேனா? முத்தம��ட்டேனா?
பூச்சரம் போல
உன்னை முழம் போட்டேனா?
முறுவலித்த பெண்ணின்
பேராசைகளோடு
தீர்த்த நீராடிவிட்டேன்
தித்தித்த பூந்தேனில்
உன் பெண்பருவங்களை
பருகிவிட்டேன்
சொல் உரைத்த
உந்தன் செவ்வாயில்
தமிழ் கண்டுவிட்டேன்
சரி- தவறு
எனும் நிலைகடந்து
அனுராகத்தில் லயித்துவிட்டேன்
- சுதர்ஷன்
எப்பவுமே காதலில் உடலா? மனமா? என்று காதலர்கள் சண்டை போடுவார்கள். பின்னர் அதில் சிலர் திருமணம் செய்துகொள்வார்கள்.
முதலில், மனம் என்று பேச ஆரம்பித்து அது பின்னர் உடல் மீதான ஆக்கிரமிப்பாக மாறுகிறது. அந்த உடல் மீது கெளரவம் முதற்கொண்டு எல்லாவற்றையும் வைத்திருக்கிறார்கள்.
அது அவளுடைய உடல், அவளுடைய விருப்பம் என்கிற அடிப்படை எண்ணமும் கிடையாது. இதேபோல ஆண்களை சிறைப்பிடித்து வைக்கும் பெண்களும் இருக்கிறார்கள்.
காதலில், மனதால் பிரிந்துவிட்டால், ஒரு பெண்ணை கொலை செய்கிறார்கள். ஓர் ஆணைப் பொதுவில் அவமானப்படுத்துகிறார்கள்.
ஆண்கள், இன்னொரு ஆணிற்கு அவளின் மீது ஆசை ��ந்துவிடக்கூடாது என்று அவளுடைய முக அழகைக் கெடுக்கிறார்கள். தலைமுடியை மறைக்க சொல்கிறார்கள். முகத்தையும் உடலையும் மூட சொல்கிறார்கள். குனிந்த தலை நிமிராதே என்கிறார்கள்.
உடலும் உயிரும் கொண்டு இந்த உலகில் பிறக்கிற ஒருவர் மீது இன்னொருவர் அன்பு வைக்கலாம். ஆனால் ஒருவரை அழிக்கிற இந்த ஆக்கிரமிப்பு எண்ணம் எங்கிருந்து வருகிறது?
ஓர் ஆண் தன்னுடைய முன்னாள் காதலியை கூரிய ஆயுதத்தால் தாக���குவது போல காட்சி வருகிறது. பின் தன்னைத்தானே தாக்குகிறான். தான் அழிந்தாலும் பரவாயில்லை. இன்னொருத்தி உடலாலும் மனதாலும் மகிழ்ச்சி அடையக்கூடாது என்கிற எண்ணம் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.
அதேபோல, தான் அழிந்தாலும் பரவாயில்லை. விவாகரத்து கொடுத்துவிட்டால் ஒரு பெண் மகிழ்ச்சியாக இருந்துவிடுவாள் என்று இழுத்தடிப்பவர்கள் இருக்கிறார்கள். தேடிப்போய் தன்னுடைய முன்னாள் மன��வியைப் பழிவாங்குகிறவார்கள் இருக்கிறார்கள். வன்முறைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
யார் இவர்கள்? இவர்களிடமிருந்து சட்டம் பெண்ணிற்கும் ஆணிற்கும் சிறப்பு சலுகைகள் கொடுக்காவிட்டாலும் இந்த சமூகம் என்ன மாதிரியான சமுகம்? காதலித்து ஏமாற்றி��ால் ஆஸிட் அடிப்பான் தானே. ஆகவே ஏமாற்றாதீர்கள். இவ பக்கமும் தவறுதானே என்றெல்லாம் பேசும் சமூகத்தை தான் நாம் பார்க்கிறோம். மாறாக ஒருவருடைய மனதின் மீதும் உடலின் மீதும் ஆக்கிரமிப்பு செலுத்தும் உரிமை இன்னொருவருக்கு இல்லை என்று உறுதியாகச் சொல்லும் சமூகத்தை நாம் பார்க்கவில்லை. எது உயர்வான மோரல் என்கிற கேள்வி இங்கு எழுகிறது.
இதற்கு முதலிலேயே உடல்தான் முக்கியம். இதுதான் கன்டிஷன் எ��்று சொல்லி ஒரு பெண்ணின் மனதையோ ஆணின் மனதையோ வெற்றிகொள்ளலாமே? அதைவிட்டுவிட்டு இந்த மனசு என்கிற பிதற்றல் எதற்கு? அப்படியே மனசுதான் முக்கியம் என்றால் உடல் மீதான ஆக்கிரமிப்பும் கட்டுப்பாடும் எப்படி நியாயப்படுத்தப்படுகிறது. பார்க்கப்போனால், மற்றவர்களை ஏமாற்றுவதை விட இங்கு நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறோம்.
இவை எல்லாவற்றுக்கும் மேலே சமூகத்தில் ஒருவித மோரல் சுப்பீரியாரிட்டியை காட்டுவதற்காக, நான் உயர்ந்த எண்ணங்கள் கொண்டவன் என்பதை நிரூபிக்க ஆண்-பெண் பலரும் பாடுபடுகிறார்கள். அதற்காக, தான் ஒழுங்காக இல்லாவிட்டாலும் அடுத்த��ர்களை குற்றம் சொல்பவர்களைத்தான் அதிகம் பார்க்கிறோம். மாறாக ஒன்றை ஆழமாக உணர்பவர்களையோ புரிந்துகொள்பவர்களையோ நாம் பார்க்கவில்லை. அல்லது அவர்கள் மிகமிகக் குறைவாகவே இருக்கிறார்கள் எனலாம்.
Dear Men, ஆண் என்றால் எப்போதுமே கையில் நரம்பு தெரிய, தாடியும் மீசையும் வைத்து விறைப்பாக இருக்கவேண்டும் என்றோ, பைக்கில் எப்பொழுதும் ஆண் நண்பர்களுடனேயே கெத்தா�� சுற்ற வேண்டும் என்றோ, பெண்களை சொத்துடமை ஆக்கவேண்டும் என்றோ கட்டாயம் இல்லை. அது ஆணிற்கு உரிய இலக்கணம் இல்லை. தனியாக ஒரு குடும்பத்தை பராமரிப்பதும், பெண் என்பவள் எப்படியிருந்தாலும் அவளையும் ஒரு தனி மனுஷியாகக் கருதுவதும், புரிந்துகொள்வதும் பெரிய விடயம்தான்.
உங்களுடைய சுயமரியாதையையும் சுயத்தையும் கெளரவத்தையும் உங்களை ஒரு துணையாக நண்பராக நம்பி வந்த பெண்ணினுடைய பிறப்பு உறுப்��ுக்குள் அல்லது உடல் மீது வைக்காதீர்கள். அது அவர்களுடையது. உங்களுடைய சுயமரியாதை கெளரவம் எல்லாம் உங்கள���டம்தான் இருக்கிறது. அது யாருடைய உடலிலும் இல்லை. உங்கள் மனதிலும் எண்ணத்திலும்தான் உள்ளது. உங்களை முதலில் நேசித்தால் மற்றவர்களின் சுயத்தை புரிந்துகொள்ளமுடியும். மதிக்கமுடியும்.
சாதாரணமாக, ஆண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற சிந்தனையை விட்டுவிட்டு, ஓர் ஆண் தோல்வியைத் தழுவலாம். ஓர் ஆண் அவமானப்படலாம். ஓர் ஆண் அழலாம். ஓர் ஆண் வெட்கப்படலாம். மென்மையாக இருக்கலாம். ஆழமாக சிந்திக்கிறவனாக இருக்கலாம். கூட்டத்திலிருந்து விலகி தனியாக தனக்கென்று சொந்தமாக சிந்திக்கக் கூடியவனாக இருக்கலாம். மனம்விட்டுப் பேசுபவனாக இருக்கலாம். ஒன்றை ஆழமாக இரசிக்கிறவனாக இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
அழகுக்காகவும் பெருமைக்காகவும் பொருத்தமில்லாத ஒரு துணையைத் தெரிவுசெய்துவிட்டு, அந்தத் துணைக்கும் நியாயம் சேர்க்காமல், உங்களுடைய சுயத்தையும் உணரமுடியா���ல் இருந்து அழுத்தம் கொள்வதைவிட ஓரளவு சரியான துணையைத் தெரிவுசெய்யுங்கள். அல்லது உங்களை எந்த நிலையிலும் மதித்து புரிந்துகொள்ளக்கூடிய நண்பராக இருக்கக்கூடிய துணையைத் தெரிவுசெய்யுங்கள். ஒருவரையொருவர் மாற்றி மாற்றி ஆளும் நோக்கில் குடும்பம் கொள்வதை விட அவர் அவரை அவராகவே இருக்கவிட்டு காதலியுங்கள். அதுவே காதல்.
ஆண்களின் ஏகப்பட்ட அழுத்தங்களுக்கான காரணம், ஆண்கள் 'ஆண்' என்றால் இப்படித்தான் என்று தங்களைப் பற்றி தாங்களே rigid ஆக கொண்டிருக்கும் எண்ணம்தான் காரணம். இந்த கருதுகோள்களைத் தவிர்த்து பொருளாதாரத்தில், சமூகத் தொடர்புகளில், உங்களை நீங்களே காதலித்து வாழ்ந்தால் பிறரையும் காதலித்து வாழலாம். அழுத்தமில்லாமல் வாழலாம். அப்படியே அழுத்தங்கள் வந்தாலும் அவற்றை நீங்களே எதிர்கொள்ளலாம்.
കേവലം ഒന്നര വയസ്സു മാത്രം പ്രായമുള്ള അർഷിദ് മ��ൻ്റെ വിയോഗ വാർത്ത ഉള്ളുലയ്ക്കുന്നു. മനസ്സ് അസ്വസ്ഥമാക്കുന്നു. ഭയം തോന്നുന്നു.
ഇത്തരം ക്രൂര സംഭവങ്ങൾ ഇനിയുണ്ടാവതിരിക്കട്ടെ,
മനുഷ്യസമൂഹം സ്വയം നവീകരിക്കപ്പെടട്ടെ.
പ്രാർത്ഥനകൾ മാത്രം!
கேரளம்: மலப்புரம் அருகே சாலையில் நேருக்கு நேர் மோதிய இரு சக்கர வாகனங்கள் - ஒரு பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
#SunNews | #Keralam | #Accident