மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கின��ம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொ��ுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கு���் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்��ியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
@burkov dude. i hav huge respect on your work in tech. And i can talk in triple the times the way you hav jus talked above. but i will jus pass and i don't generally believe on economist's take. But i hope you would see this
https://t.co/tWK7AHHnzn.
go ahead n block me
பெண் IAS அதிகாரி ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டுமென தமிழ்ந���டு காவல்துறை DGP-இடம் தி.மு.கழகம் சார்பில் இன்று புகார் மனு அளித்தோம்.
பாதிக்கப்பட்ட அதிகாரி ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் புகாரளித்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சட்ட அமைச்சர் நிர்மல்குமார் பொய் பேசி பேட்டி கொடுத்தார்.
இந்த சம்பவத்தில், புகாரளித்து 116 நாட்கள் ஆகியும், உயர்நீதிமன்றம் சொன்ன பிறகே இந்த டம்மி முதலமைச்சரின் அர���ு வழக்குப்பதிவு செய்துள்ளது.
மற்றவர்களை பாய்ந்து பாய்ந்து கைது செய்யும் காவல்துறை, அருள் விக்னேஷை கைது செய்யவில்லை. அவரை கைது செய்ய வேண்டும்.
குற்றத்தை மறைத்தை குற்றத்திற்காக தலைமைச் செயலாளர் - சட்ட அமைச்சர் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் - சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று DGP-யிடம் புகாரளித்தோம்.
இதே போல, கோரிக்கை அளிக்க வந்த ஒருவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் கடுமையாக தாக்கி இருக்கிறார்.
இதில் தாக்குதலுக்கு ஆன நபர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.
ஆகவே துணை சபாநாயகர் மேல் உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தோம்.
ஆளுங்கட்சிக்காரர்களின் atrocity-ஐ டம்மி முதலமைச்சரும் அவர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்ற தமிழ்நாட்டு மக்களின் குரலை ஊடக நண்பர்களிடம் எடுத்துரைத்தோம்.
#WATCH | "இதனால்தான் தவெக எம்.எல்.ஏ. ��ருள் விக்னேஷிடம் முதலமைச்சர் விஜய் எந்தக் கேள்வியும் கேட்காம இருக்காரா?"
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேட்டி
#SunNews | #UdhayanidhiStalin | #ArulVignesh