திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை மகாதீபம் இறுதியாக இன்று ஏற்றப்பட்டது.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
#கார்த்திகைதீபம்#முருகனுக்குஅரோகரா
The Karthigai Mahadeepam was finally lit today at the Deepa Thoon at Thirupparankundram.
Vetrivel Muruganukku Arogara!
#KarthigaiDeepam
#MuruganukkuArohara
திருவண்ணாமலை தீப மலையில் பலத்த காற்றுக்கு மத்தியிலும் 2668 அடி உயரத்தில் தொடர்ந்து 5-வது நாளாக பக்தர்களுக்கு ஜோதியாய் காட்சி தரும் அண்ணாமலையார்..!
#Tiruvannamalai | #Deepam | #PolimerNews
#மகாபெரியவா
1)இவர் மிக இளம் வயதிலேயே சந்நியாசம் மேற்கோண்ட காஞ்சி சங்கர மடாதிபதியாவார்.
2)பத்து வயதிலேயே அப்பொறுப்பிற்கு வந்தவர்.
3)நான்கு வேதம், ஆறு சாஸ்த்திரம், புராணங்களை சுயமாக கற்றுத் தேர்ந்தவர்.
4)சுமார் 18 மொழிகளில் பேச எழுத படிக்கத் தெரிந்தவர்.
5)தமிழ் மொழி குறிப்பாக கல்வெட்டு மொழிகளில் இலக்கணத்தோடு விவாதிக்கும் ஆற்றல் பெற்றவர்.
6)இந்து மத வேதங்கள் உபநிடதங்கள் தழைக்க அருளியவர்.
7)எண்ணற்ற வசதிகள் அருட்கொடையாளர்கள் வழங்கிய போதும் கால்நடையாகவே இந்தியா முழுவதும் மும்முறை வலம் வந்து ஒவ்வொரு 15 கிலோ மீட்டர் தூரத்தில் அருகிலுள்ள கிராமத்தில் தங்கி பக்தி நெறி பரப்பியவர்.
8)எவ்வளவு வவசதிகளிருப்பினும் மாட்டுத்தொழுவத்தில் கொசுக்கடியில் படுத்துறங்கியவர்.
9) எண்ணற்ற உணவுகள் வந்தும் அதைத் தவிர்த்து நெல் பொறி போன்ற ஆகாரம் அதுவும் ஒருவேளை மட்டும் உண்டு வாழ்ந்தவர்.
10)எளிமையான மக்களுக்கு பக்தி நெறியே சிறந்தது என அருளிய அருட்கொடையாளர்.
11)99 வருடங்கள் வாழ்ந்து 100 ஆண்டில் சில மாதங்கள் வாழ்ந்தவர்.
12)அதிகப்படியான 88 சாதூர்மாஸ்யம் என சந்திர பிறையை பார்த்தவர் (சந்யாசிகளின் வயதை கணக்கிடும் முறை)
13)உலகம் முழுவது உள்ள இந்துக்களின் ஆன்மீக குரு. மேலும் எண்ணற்ற மனிதர்களின் சாதி மதம் கடந்த ஆதர்ஸன குரு.
14)போப் ஜான் பால் 2, முகம்மது கொமேனி, தலாய் லாமா, மேல் மருவத்தூர் போன்ற ஆன்மீக பிற மத குருமார்கள் இவருடன் பேசி தொடர்பிலிருந்தார்கள்.
15)இவர் சமாதி அடைந்த நேரத்தில் எண்ணற்ற முஸ்லீம்கள்/கன்யாஸ்த் ரிகள் சிந்திய கண்ணீரைப்பார்த்து இந்து மதத்தினர் கூட ஆச்சர்யபட்டார்கள்.
16)Queen elizabath /canadian president முதல் உள்ளூர் அரசியல் பிரமூகர் வரை இவரிடம் தனி மதிப்பு வைத்திருந்தனர்.
17) கடவுள் நம்பிக்கையற்ற M.R. ராதா; ப்ளீட்ஸ் ஆசிரியர் கரஞ்சியா கண்ணதாசன் போன்றோரும் பின்னாளில் இவரை சந்தித்து ஆன்மீகவாதியானார்கள்.
18)கலைஞர் அவர்களின் காஞ்சியிலே ஒரு பெரியவருண்டு என்ற பேச்சு இவரது உள்ள அன்பை வெளிப்படித்திய கட்டுரையாகும். முனி வாழ்க்கை வாழ்ந்தார் எனவும் பேசியுள்ளார்.
19)காஞ்சி சங்கரமடத்திற்கு ஒட்டியுள்ள சிறு மசூதி தாமே மனம் வந்து வழங்க வந்த போது அதை மறுத்து உங்களின் பாங்கொலியில் அல்லாவிடமிருக்கிறேன் என பகர்ந்தவர்... ஐந்து வேளை தொழுக முஸ்லீம்களை வலியுறுத்தியவர்.
20)உலகப் புகழ் வாய்ந்த கிறிஸ்தவ பாடகர் இந்து மதம் தழுவ அவரிடம் சென்ற போது "உன் மதத்தில் என்ன இல்லை என இங்கு வருகிறாய் "என வினவி இன்றளவும் அப்பாடகர் தன் கிருத்தவ மதத்திலேயே இருக்கச் செய்தவர்.
21)நீதியரசர் மூ.மூ.இஸ்மாயில் அவர்களின் எண்ணற்ற சந்தேகங்களுக்கு அறிவு விளக்கமும் சிக்கலான தீர்ப்புகளில்
"உள்முகமாக" உதவியவர் என அவர் வாயிலாகவே வெளிப்படுத்தியுள்ளார்.
22)சுதந்திர போராட்டத்தில் தானும் கலந்து, சாத்வீகமான அவர் முறையில் மக்களை கலந்து கொள்ளச்செய்தவர்.
23)ரமண பகவான் புகழ் வெளியுலகுகத் தெரிய காரணமாயிருந்த "பால் பிரண்டன் "என்ற ஐரோப்பிய பயணி ஞானம் தேடி இவரை அணுகிய போது உனக்கான குரு திருவண்ணாமலையில் இருக்கிறார் என சிஷ்யனுக்கு குருவைக்காட்டிய ஞான குரு.
24)தன்னை நாடி இன்றளவும் வரும் எண்ணற்ற ஆத்மாக்களுக்கு அற்புதங்கள் நிகழ்த்திக்கொண்டிருப்பவர்.
25)தர்க்க சாஸ்திரம் ஜோதிடம் மருத்துவம், வான சாஸ்திரம் போன்றவற்றில் அத்துறையில் வல்லுவர்களோடு உரையாடும் அளவு ஆழ்ந்த ஞானமுள்ளவர்.
26) எண்ணற்ற நூல்களுக்கு வியாக்கியானம் எழுதியவர்.
27)திருப்பாவை, திருவெம்பாய், திருப்பள்ளி எழுச்சி, தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம் போன்றவை இன்று எழுச்சியோடு கோவில்களில் பாடப்படுவதற்கு இவரது எழிச்சீயூட்டலே காரணமாகும்.
28)இன்றளவும் நாகப்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரத்தில் விளையும் முதல் சாகுபடி நாகூர் ஆண்டவருக்கே அற்பணியுங்கள் என்று கூறியவர்.
29)டாடாவிலிருந்து பிர்லா நாட்டுக்கோட்டையார் ஆற்காடு நவாப்கள் VGP போன்ற அனைத்து மதத்தினருக்கும் "மக்கள் சேவையே மகேசன் சேவை" என உணர்த்தி அப்பாதையில் இவர்களை திருப்பச் செய்து இழுத்து வந்தவர்.
30)இன்று பிராதோஷம் போன்ற கூட்டங்கள் சேர்வதற்கு இவரே காரணம்.மூன்று லட்சம் ஆலயங்களில் இன்று ஒரு வேளை பூஜையாவது நடைபெறுவதற்கு இவரே காரணம்.
31) இசைஞானி இளையராஜா இவர் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர்.
32)விமான விபத்தில் 300 பேர் இறந்த போது கூட்டுபிரார்த்தனை என ஒன்றை ஏற்படுத்தி மோக்ஷ தீபம் என்ற முறையை ஏற்படுத்தியவர். வேதாத்ரி மகரிஷி, விசிறி சாமியார், ரவிசங்கர் குருஜி, தலாய் லாமா, போன்றோர் இவரிடம் தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்திருந்தனர்.
இப்படி சிறுவராக இளைஞராக மனிதராக தனி ஒருவராக ஞானியாக அவதரித்த அற்புத மஹான்
உலகிலுள்ள அனைத்து மத நல்லுள்ளங்களாலும் "காஞ்சிப் பெரியவர்" "பெரியவா" "நடமாடும் காமாக்ஷி" என போற்றப்படுபவர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
#அடுத்தத்_தலைமுறையினருக்காக
எல்லோரும் நமது எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள கீழ்கண்டவற்றை ஒரு டைரியில் (Memo Pad / Note Pad / Note Book / I Pad-ல்) குறித்து வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியும்படி சொல்லி வைப்பது அல்லது Email-ல், WhatsApp-ல் அனுப்புவது நல்லது.
1. நமது குலம்
2. நமது கோத்திரம்
3. நமது பூர்வீகம்
4. நமது குலதெய்வம்
5. நமது தகப்பனார், தாத்தா, கொள்ளு தாத்தா இவர்களின் பெயர்கள்
6. நமது அம்மா, பாட்டி,
கொள்ளு பாட்டி
பெயர்கள்
7. அம்மாவின் பிறந்த வீட்டு கோத்ரம்
8. அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர்கள்
9. அம்மாவின், அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி பெயர்கள்
10. முதல் மொட்டை எந்த கோவிலில்
11. தை, ஆடி வெள்ளியில், புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கு போடும் வழக்கம்
12. ஸ்ராத்த திதி
13. வீட்டில் சுமங்கலியாக மரித்தவர்களின் பெயர்கள்.
14. சுமங்கலி பிரார்த்தனை வழக்கம்
15. அத்தையின் கோத்ரம்
16. Family Tree Chart
நமக்கு அடுத்த தலைமுறையினர், சம்பிரதாயங்களை பின்பற்றுவார்களோ, இவற்றை செய்வார்களோ இல்லையோ, நம்முடைய கடமையை நாம் செய்வது உத்தமம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
#அஷ்டாம்ச_ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயர் எட்டு விதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார்.
அனுமனது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி "அஞ்சேல்' என்று அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது முத்திரை பதிக்கும் முதல் சிறப்பு.
மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது. இந்த ஐந்து வகை ஆயுதங்களில் கதாயுதம் மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக் கூடிய இடது கையில் அனுமன் தாங்கும் கதா யுதம் இரண்டாவது சிறப்பு.
மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கி கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்தததில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன.
ஆஞ்சநேயர் இந்த மலையை பார்த்தபடி அருள்பாலிக்கிறார். இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை. - மேற்கு நோக்கிய முகம் மூன்றாவது சிறப்பு.
எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது.
நல்வாழ்வு தரும் நான்காவது சிறப்பு.
ஆஞ்சநேயரது மிகவும் சிறப்பு பெற்ற வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ளன.
அதிலும் குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. இதனால் குபேரனின் அருள் முழுமையாக கிடைக்கும். இங்கு வடக்கு நோக்கிய வாலை முழுமையாக தரிசிக்கலாம். ஆஞ்சநேயரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் பிடிக்கும் என்ற பயமே தேவையில்லை.
"ராமா உன் நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ யார் கூறினாலும், அவர்களிட ம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன்,'' என்று ராமரிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவார்கள்.
ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு.
ஆலவாயன் சிவனின் அம்சம் ஆறாவது சிறப்பு
ராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள். அதன்படி ஆலவாயனான சிவன் ராமாயணத்தில் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர்.
எனவே தான் அனுமரை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. ஆஞ்ச நேயரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
ஏழுமலையானின் அனுக்கிரகம் ஏழாவது சிறப்பு.
ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள் பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகா லட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது.
எரிகின்ற சூரியன் எட்டாவது சிறப்பு.
ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது.
ஜீவநேத்திரம் மிகவும் சிறப்பு பெற்றது.
அனுமனின் பார்வையே தரிசிப்பவர்களைன் அனைத்து தோஷங்களையும் நீக்கி அருள் மழை பொழியவைக்கிறது என்பதை உணரலாம்.
ஶ்ரீ ராம ஜெயம்.... ஶ்ரீ ராம ஜெயம்...
ஜெய் ஆஞ்சநேயா
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
#WATCH | Deepathoon row | Madurai, Tamil Nadu: Film director Mohan G says, "Not only me, but the whole crowd is disappointed. Tamil Nadu Government and District Administration never agreed to light the lamp. Vijay Sir proved he is a great actor. Till 5.50 pm there was information that they will light the lamp but this great actor disappointed everyone and everyone is in a very sad state. If the Govt and the District Administration are not obeying the Supreme Court order, what are they expecting from the people...We never expected this from this Govt, people will give the same impact for this TVK Govt..."
#திருச்செந்தூர்_முருகன்_பற்றிய_60_தகவல்கள்
1. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.
2. திருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.
3. திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.
4. மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.
5. மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு.
6. திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.
7. திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.
8. திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.
9. திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
10. திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.
11. மூலவருக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.
12. திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.
13. திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
14. நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.
15. திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.
16. தமிழகத்தில் முதன் முதலில் நாகரீகம் தோன்றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று.
17. முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் அய்யனார்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
18. திருச்செந்தூர் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.
19. இத்திருத்தலம் மன்னார் வளைகுடாக் கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால், அலைவாய் என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்றும் அடைமொழி சேர்க்கப்பட்டு, ‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப்படுகின்றது.
20. இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநாயகரை வணங்கிய பின்னர்தான் முருகப் பெருமானை வணங்கச் செல்ல வேண்டும்.
21. இத்திருக்கோயிலில் பன்னிரு சித்தர்களில் எட்டுச் சித்தர்கள் சமாதியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது.
22. முருகப்பெருமானின் வெற்றி வேல் மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், கடற்கரை ஓரமாக உள்ள மாப்பாடு என்ற இடம் ஆகும். இப்பகுதி தற்போது, மணப்பாடு என்று அழைக்கப்படுகின்றது.
23. அலைவாய், திரச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டி னம், என்றெல்லாம் திருச்செந்தூர் முன்பு அழைக்கப்பட்டது.
24. முருகனின் அறுபடை வீடுகளில் இது 2-வது படை வீடு எனப்படுகிறது. ஆனால் இதுதான் முதல் படை வீடு என்ற குறிப்புகளும் உள்ள.ன
25. முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.
26. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம் என்ற சிறப்பும் திருச்செந்தூர் கோவிலுக்கு உண்டு.
27. முருகன் சிவந்த நிறம் உடையவன். அவன் உறைந்துள்ள தலம் என்பதால்தான் இத்தலத்துக்கு செந்தில் என்ற பெயர் ஏற்பட்டது.
28. திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவப்கொழுந்தீசுவரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
29. கிறிஸ்தவ மீனவர்கள் திருச்செந்தூர் முருகனை உறவுமுறை சொல்லி அழைக்கிறார்கள். திருச்செந்தூர் கோவில் திருப்பணிகளுக்கு காயல்பட்டினத்தில் வசித்த சீதக்காதி எனும் வள்ளல் நன்கொடை அளித்துள்ளார். எனவே திருச்செந்தூர் முருகன் ஆலயம் சமய ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.
30. அருணகிரி நாதர் தன் பாடல்களில் பல இடங்களில் திருச்செந்தூரை குறிப்பிட்டுள்ளார். அவர் திருச்செந்தூரை மகா புனிதம் தங்கும் செந்தில் என்று போற்றியுள்ளார்.
31. திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.
32. திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.
33. குமரகுருபரர், பகழிக் கூத்தர், ஆதி சங்கரர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட ஏராளமானவர்கள் திருச்செந்தூர் முருகனின் நேரடி அருள் பெற்றனர்.
34. முருகன், மால், ரங்கநாதப் பெருமாள் ஆகிய சைவ, வைணவ மூர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன.
35. செந்திலாண்டவருக்கு ஆறுமுக நயினார் என்றும் பெயர் உள்ளது. திருச்செந்தூர் தாலுகா பகுதியில் வாழும் பலருக்கு நயினார் எனும் பெயர் சூட்டப்பட்டிருப்பதை காணலாம். இசுலாமியரும் நயினார் எனும் பெயர் சூட்டிக் கொண்டுள்ளனர்.
36. வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி சக்கம்மாவும் செந்திலாண்டவருக்கு ஏராளமான தங்க நகைகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
37. மூலவர் தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.
38. முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, «பரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன.
39. உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள்.
40. இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர்.
41. சண்முகருக்கு ஆண்டுக்கு 36 திருமுழுக்கு மட்டுமே நடைபெறுகிறது.
சித்திரை, ஐப்பசி, தை - 3
ஆடி, தை அமாவாசை - 2
ஆவணி, மாசித் திருவிழா - 10
ஐப்பசி, பங்குனி திருக்கல்யாணம் - 2
மாத விசாகம் - 12
ஆனி தை வருடாபிஷேகம் - 3
தீபாவளி, மகாசிவராத்திரி - 4
மொத்தம் 36
42. திருச்செந்தூர் முருகன் கோவிலின் ஆண்டு வருமானம் தற்போது சுமார் ரூ.30 கோடியாக அதிகரித்துள்ளது.
43. திருச்செந்தூர் கோவிலில் தர்ம தரிசனம் எனப்படும் பொது தரிசனம், சிறப்பு தரிசனம் எனப்படும் ரூ.10, ரூ.20 கட்டண தரிசனம், வி.ஐ.பி.க்களுக்கான விரைவு தரிசனம் எனப்படும் ரூ.100, ரூ.250, ரூ.500 கட்டண தரிசனம் ஆகிய 3 வகை தரிசனங்கள் நடைமுறையில் உள்ளன.
44. திருச்செந்தூர் கோவிலுக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.
45. இத்தலத்தில் கோவில் வெளிப் பிரகாரங்களில் தூண்களில் கந்த சஷ்டி கவசம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல உள்பிரகாரங்களில் தல வரலாற்றை கூறும் வரை படங்களை அமைத்துள்ளனர்.
46. திருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்ததும் மணி ஒலிக்கப்பட்ட பிறகே வீரபாண்டிய கட்டபொம்மன் சாப்பிடுவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 250 ஆண்டு பழமையான, அந்த 100 கிலோ எடை கொண்ட அந்த பிரமாண்ட மணி தற்போது ராஜகோபுரம் 9-ம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.
47. சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகன் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார். அதை உணர்த்தும் வகையில் இன்றும் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது. முதல் 6 நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் நடைபெறும். 7-ம் நாள் முருகன்-தெய்வானை திருமணம் நடைபெறும். அதன் பிறகு 5 நாட்கள் கல்யாண ஊஞ்சல் சேவை நடைபெறும்.
48. திருச்செந்தூரில் கருவறைக்கு எதிரில் இரண்டு மயில்கள் மற்றும் ஒரு நந்தி இருக்கின்றன. அது ஏன் தெரியுமா? முருகனுக்கு ஏற்கனவே ஒரு மயில் வாகனமாக இருந்து வருகிறது. பின்னர் சூரனைப்பிளந்தும், ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவல் கொடியாகவும் ஆனதல்லவா? சூரசம்ஹாரம் முடிந்ததும், ஏற்கனவே இருந்த மயிலோடு, இந்த மயிலும் (சூரன்) சேர்ந்து வந்து செந்தூரில் இரண்டு மயில்களாக நின்றுவிட்டன. சூரசம்ஹாரத்திற்கு முன்புவரை இந்திரனே முருகனுக்கு மயில் வாகனமாக இருந்தான். முருகன் சூரனை வென்றபின் இந்திரனுக்கு தேவலோக தலைமை பதவியை கொடுத்து அனுப்பிவிட்டு, மயிலாக மாறிய சூரனையே தன் வாகனமாகக் கொண்டார்.பஞ்சலிங்ககளை வைத்து முருகன் பூஜை செய்யும் கோலத்தில் சிவனுடன் இருக்கிறார். எனவே, சிவனுக்குரிய நந்தி, மயில்களுடன் சேர்ந்து கருவறைக்கு எதிரே இருக்கிறது.
49. ஆவணி திருவிழாவின்போது முருகப்பெருமான், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.
50. திருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு கங்கை பூஜை என்று பெயர்.
51. மூலவருக்கு போற்றிமார், சண்முகருக்கு திரிசுதந்திரர், திருமாலுக்குத் வைணவர்கள், தனித்தனியே 3 இடங்களில் நைவேத்தியம் தயாரிக்கின்றனர்.
52. கோவில் திருப்பணி செய்த துறவிகளில் காசி சுவாமி கி.பி. 1882-ல் வசந்த மண்டபம் கட்டினார். மவுன சாமி 1895-ல் மண்டபத்தை கட்டி முடித்தார். வள்ளிநாயக சுவாமி - கிரிப்பிரகாரத்துக்கு தகரக் கொட்டகை அமைத்தார். ஆறுமுக சுவாமி - கோவிலுக்குள் கருங்கல் தூண்கள் அமை¢த்தார். தேசியமூர்த்தி சுவாமி - ராஜகோபுரத்தை கட்டினார்.
53. திருச்செந்தூர் கோவில் தங்க தேரில் அறுங்கோண வடிவில் அறுபடை வீட்டு முருகன் சிலைகள் உள்ளன.
54. சஷ்டித் தகடுகளில் எழுதப்பட்ட மந்திரம் ஓம் சரவணபவ என்பதாகும்.
55. திருச்செந்தூர் தலத்தில் பழங்காலத்தில் பல மணற் குன்றுகள் முருகனது சிறிய சந்நிதியைச் சூழ்ந்திருக்க வேண்டும். அவற்றுள் பெரிய மணற்குன்று ஒன்றைக் கந்த மாதன பர்வதம் என்ற பெயரால் குறித்திருக்க வேண்டும். நாளடைவில் மணற் குன்றுகள் தேய்ந்து தேய்ந்து பிராகாரங்கள் ஆகியிருக்க வேண்டும். வடக்குப் பக்கத்தில் மணற்குன்றே ஒரு மதிலாக அமைந்திருப்பதை இப்போதும் காணலாம். இம்மணற்குன்றின் தாழ்வரையில்தான் ரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார்.
56. கந்த சஷ்டி என்றால், கந்தவேளுக்குரிய ஆறாவது நாள் என்று பொருள்.
57. மாறாத உடல் அழகும் மாறாத உள்ளத்தழகும் என்றும் இளமை நிலையும் கொண்டருள்பவன் திருமுருகன்.
58. சிவப்பு, கருப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஐந்து நிறங்கள் கொண்ட வண்ண மயில் ஏறி வருபவன் திருமுருகன்.
59. யோகம், போகம், வேகம் என மூவகை வடிவங்களைக் கொண்டருள்பவன் திருமுருகன்.
60. திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை. இச்சரிதத்தை எழுதுவோரும் படிப்போரும் கேட்போரும் நீங்காத செல்வங்களைப் பெற்று வாழ்ந்திருப்பர் என்று சூதம முனிவர் உரைத்தருளி உள்ளார்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
Do not just think about making money – think about living well. The most important aspect of living well is doing what you truly care for. #SadhguruQuotes
இங்கு வர தயங்கினவர்களுக்கு கிடைத்த ஆத்மார்த்தமான அனுபவம்!
ஈரோடு மாவட்டம், சாவடிபாளையம் புதூர் அருகிலுள்ள காங்கேயம்பாளையம் ஸ்ரீ நட்டாற்றீஸ்வரர் கோவில் சார்பில் ஈஷா யோக மையத்திற்கு குழுவாக வந்திருந்த பக்தர்கள் அவர்கள் பெட்ரா அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்
Courtesy;Sri Ramakrishna Vijayam
#மகான்கள்_எப்படித்_துன்பத்தைத்_தாங்குகின்றனர்?
தவிர்க்க முடியாத வினைப்பயனை இறைசக்தியின் துணையுடன் – அந்த அருளை நம்பியே அனுபவித்துக் கழித்தவர் யாராவது உண்டா? உண்டு.
சுவாமி சண்டிகானந்தர்: மனதை உருக்கும் ‘ஜய ஜய ஜனனீ ஜெய ஸ்ரீசாரதாமணி’ போன்ற பாடல்களை இயற்றியவர் சுவாமி சண்டிகானந்தர். சுவாமிகளின் ஆழ்ந்த பக்தியின் வெளிப்பாடாக அமைந்த அவரது பாடல்கள் கேட்பவரிடம் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கும்.
சுவாமிகளின் கடைசி சில ஆண்டுகள் சித்தபிரமையில் கழிந்தன. அவர் மிகவும் சிரமப்பட்ட நாட்கள் அவை. அதற்குக் காரணம் என்ன?
ஒருமுறை அன்னை ஸ்ரீசாரதாதேவியிடம் சுவாமி சண்டிகானந்தர், ‘அம்மா, இனி எனக்குப் பிறவி வேண்டாம், இந்தப் பிறவியிலேயே முக்தி வேண்டும்’ என்று மன்றாடினாராம்.
அதற்கு அன்னை, ‘மகனே, உனக்கு இன்னும் சில பிறவிகள் பிறந்து கழிக்க வேண்டிய கர்மாக்கள் உள்ளனவே…?’ என்றாராம்.
சண்டிகானந்தர் திரும்பத் திரும்ப முக்தியையே வற்புறுத்திக் கேட்டார். அதற்கு அன்னை, ‘அப்படியானால் அந்தச் சில பிறவிகளுக்கான துன்பங்களை இப்பிறவியிலேயே அனுபவிக்க வேண்டியிருக்கும். அதற்காக நீ சிரமப்பட வேண்டியிருக்கும் மகனே…?’ என்றாராம்.
அப்போதும் சுவாமிகள் தம் கோரிக்கையை வலியுறுத்தினார். அன்னையின் அருளுடன் சுவாமிகள் பல பிறவிகளில் தான் கழிக்க வேண்டிய கர்மவினைகளை இந்தப் பிறவியிலேயே கழித்தார். அதற்காகத்தான் அவர் தமது இறுதிக்காலத்தில் பலவிதமான துன்பங்களை அனுபவித்தார். (சுவாமி விநாயகானந்தர் கூறியது).
எண்ணில் வினைகளைவா னெழிலாப்ப னூரானைப்
பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே.
என்று திருஞானசம்பந்தர் பாடுகிறார்.
பல பிறவிகளின் கர்மபலனை, அன்னையின் அருளால் ஒரே பிறவியில் அனுபவிக்க முடியும் என்ற தைரியமும், திடவிசுவாசமும் சுவாமி சண்டிகானந்தரது பிறவித் தளையை அறுக்கும் வாளாகியது.
அன்னையையே முற்றிலும் சார்ந்திருந்த சுவாமிகளது மன ஓட்டம்தான் அவரது பாடல்களுக்கு அவ்வளவு உருக்கத்தைத் தந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
உங்களுக்குள் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, உங்கள் செயல்கள்
இயல்பாகவே அக்கறையும், மென்மையும், தாராளமும் கொண்டதாக மாறிவிடும்.
#SadhguruQuotes#குருவாசகம்
#ஸ்ரீ_காசி_விஸ்வநாதர்_சுவாமி_திருக்கோயில்
இறைவன்: ஸ்ரீ காசி விஸ்வநாதர் (சிவபெருமான்)
இறைவி: அம்பாள் சன்னதி குறித்த உறுதியான தகவல் கிடைக்கவில்லை. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டத்தில் உள்ள நடுச்சத்திரம் எனப்படும் சத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள சிவத்தலம்.
கோயிலின் சிறப்பு:
காசி விஸ்வநாதர் என்ற திருநாமம், காசி மாநகரில் அருள்பாலிக்கும் விஸ்வநாதப் பெருமானை நினைவுபடுத்துகிறது. சிவபெருமானை வழிபடுவதன் மூலம் மன அமைதி, குடும்ப நலம், இறையருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்தத் திருக்கோயிலில் மூலவராக சிவலிங்கத் திருமேனியில் காசி விஸ்வநாதர் அருள்பாலிக்கிறார் என்று குறிப்பிடப்படுகிறது. இத்தலத்தின் வரலாறு, கல்வெட்டுகள் மற்றும் தனிப்பட்ட வழிபாட்டு மரபுகள் குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்காததால் அவற்றை ஊகித்துக் கூறவில்லை.
கோயிலின் தல வரலாறு:
இந்த ஆலயம் சுமார் 1,100 முதல் 1,200 ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படுகிறது. பாண்டியர் காலத்துடன் தொடர்புடைய பழமையான கட்டிட அமைப்புகளும் கல்வெட்டுச் செய்திகளும் இத்தலத்தின் சிறப்பை எடுத்துரைக்கின்றன.
காசிக்குச் செல்லும் பக்தர்கள் வழிபடுவதற்கு ஏதுவாக, காசி விஸ்வநாதர் ஆலயத்தின் அமைப்பை நினைவூட்டும் வகையில் இக்கோயில் அமைக்கப்பட்டதாகத் தல வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் இத்தலம் தென்னகத்தின் இரண்டாவது காசி என்றும் போற்றப்படுகிறது.
மூலவர் மற்றும் அம்பாள் தரிசனம்:
ஸ்ரீ காசி விஸ்வநாதர்: சிவபெருமான் சிவலிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீ அன்னபூரணி அம்மன்: இத்தலத்தின் தனிச்சிறப்பாக அம்பாள் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சிவபெருமானையும் அன்னபூரணி அம்மனையும் ஒருசேர தரிசிப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது.
கோயிலின் தனிச்சிறப்புகள்:
நந்தீஸ்வரர் சுவாமியைப் பார்த்தபடி அமைந்திருப்பதுடன், அம்பாளையும் தரிசிக்கும் வகையில் தலை சாய்ந்த அமைப்பைக் கொண்டுள்ளார்.
அன்னபூரணி அம்மனுக்குத் தனிச் சன்னதி உள்ளது.
குபேர சனீஸ்வரர் தனிச்சிறப்புடன் அருள்பாலிக்கிறார்.
சப்த கன்னியர்களுடன் தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளது.
காலபைரவர், கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.
நவக்கிரகங்களுக்குத் தனிச் சன்னதி இல்லாதது மற்றொரு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது.
கோயிலுக்கு எதிரே தெப்பக்குளமும், அருகில் தீர்த்தக் கிணறும் உள்ளன.
பழமையான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள் மற்றும் மண்டபங்கள் காணப்படுகின்றன.
வழிபாட்டு சிறப்புகள்:
குபேர சனீஸ்வரர் வழிபாடு: சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு தொழில் முன்னேற்றம், பொருளாதார வளம் வேண்டிப் பிரார்த்தனை செய்கின்றனர்.
காலபைரவர் வழிபாடு: தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. வெள்ளைப் பூசணிக்காய் தீப வழிபாடு செய்வது இத்தலத்தில் பக்தர்களால் பின்பற்றப்படும் ஒரு நேர்த்திக்கடன் முறையாகக் கூறப்படுகிறது.
அன்னபூரணி வழிபாடு: குடும்ப நலம், உணவுப் பஞ்சமின்மை, திருமண பாக்கியம் ஆகியவற்றை வேண்டி அம்மனை வழிபடுகின்றனர்.
பிரதோஷ வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து நந்தி பகவானுடன் இறைவனை வழிபடுவது சிறப்பாகும்.
திருவிழாக்கள்:
மாதந்தோறும் பிரதோஷம்.
பௌர்ணமி சிறப்பு வழிபாடு.
மகா சிவராத்திரி.
வைகாசிப் பெருவிழா.
தேய்பிறை அஷ்டமி காலபைரவர் வழிபாடு.
சனி பகவானுக்கான சிறப்பு வழிபாடுகள்.
வைகாசிப் பெருவிழா காலத்தில் தேர்த்திருவிழாவும் நடைபெறுவதாகக் கோயில் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆன்மீகச் சிறப்பு:
காசிக்குச் செல்ல இயலாத பக்தர்களும் காசி விஸ்வநாதரை நினைத்து இத்தலத்தில் சிவபெருமானையும் அன்னபூரணி அம்மனையும் வழிபட்டு இறையருள் பெறுகின்றனர். குபேர சனீஸ்வரர், காலபைரவர் சன்னதிகளும் இக்கோயிலின் தனிச்சிறப்புகளாக விளங்குகின்றன.
முகவரி:
அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில்,
நடுச்சத்திரம் (சத்திரம் கிராமம்), ஏழாயிரம்பண்ணை வழி, வெம்பக்கோட்டை வட்டம், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு.
அருகிலுள்ள முக்கிய ஊர்கள்:
வெம்பக்கோட்டை – சுமார் 6 கி.மீ.
சாத்தூர் – சுமார் 22 கி.மீ.
சாத்தூரிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் இக்கோயிலை அடையலாம்.
தரிசன நேரம்:
காலை: 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை.
மாலை: 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
ஓம் நமசிவாய! சிவாய நம!
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏