என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு நிரந்தர இடத்தை வழங்கி, தாயன்புடன் தாங்கி வருகின்றீர்கள்.
எல்லாவற்றையும் அளித்த ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் என் நன்றியை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று யோசித்தோம். அதன் வெளிப்பாடாகவே, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே 2024-இல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் அரசியல் களம் கண்டே 27 மாதங்கள்தான் ��கின்றது. ஆனால் அதற்குள், தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினீர்கள்.
35% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க.வை உயர்த்திப் பிடித்தீர்கள். உங்கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் இதோ இன்று, தமிழக மக்களின் முதல் சேவகனாக, முதலமைச்சராக உங்கள் விஜய். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமா���க் கொண்டு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை நிறுவிக் காட்டி இருக்கிறோம்.
மக்களே… என் சொந்தங்களே…தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டினீர்கள். அதன் வெளிப்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில�� அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் த.வெ.க.வின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும். இந்த வேளையில், பேருழைப்பைத் தந்து கழகம் காக்கும் தோழர்களையும் நிர்வாகிகளையும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். அனைவருக்கும் நன���றி! நன்றி! நன்றி!
இன்னைக்கு மட்டுமே "வாழவே பிடிக்கல"னு ரெண்டு பேர் போட்ட ட்வீட்ஸ் கண்ணுல பட்டது. மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. உயிர்ங்கிறது சட்டுனு போயிடக்கூடிய ஒன்றுதான்... ஆனா அதுக்கப்புறம் என்ன மாறப்போகுது?
இன்னைக்கு நாம சோஷியல் மீடியால போடுற ஒவ்வொரு போஸ்ட்டும், வார்த்தையும் யாரோ ஒருத்த��ை போய் சேருது. அதைத்தான் நாம 'Views', 'Reach', 'Monetization'னு பேரு வச்சு பார்த்துட்டு இருக்கோம். ஆனா, அந்த எண்களுக்கு பின்னாடி ஒரு மனுஷனோட மனசு இருக்குங்கிற பொறுப்புணர்வு நமக்கு வேணும்.
முடிஞ்ச அளவுக்கு மத்தவங்களை கஷ்டப்படுத்தாம, யாருக்காவது ஒரு சின்ன நம்பிக்கையைத் தர்ற மாதிரி பாசிட்டிவா எழுதுற பொறுப்பு நம்ம கைலதான் இருக்கு.
அதனால உங்க கூட யாருமே இல்லைனு நினைச்சு என்னைக்கும் கவலைப்படாதீங்க. உளவியல் ரீதியா (General Counsellingல) இந்த மாதிரி தனிமையையோ மன அழுத்தத்தையோ உணர்றவங்களுக்கு நாங்க சொல்ற ஒரு விஷயம் "Volunteering".
உங்களை விட கஷ்டப்படுறவங்களுக்கு அல்லது உதவி தேவைப்படுறவங்களுக்கு உங்களால முடிஞ்ச ஒரு சின்ன உதவியை செய்ய ஆரம்பிங்க. மத்தவங்களோட வாழ்க்கையில நீங்க உருவாக்குற ஒரு சின்ன மாற்றம், உங்க மனசுக்குள்ள ஒரு பெரிய நன்றியுணர்வையும் (Grateful Heart) வாழணும்ங்கிற நம்பிக்கை��ையும் கண்டிப்பா கொடுக்கும்.
நீங்க தனியா இல்லை... நாங்க கூட இருக்கோம்.
we will never have tomorrow
❤️இதை தேவைப் படுபவர்களுக்கு share பண்ணுங்க
#Anaya #psychologist
இந்த மாதிரி வாரம் ஒன்னாச்சும் மாணவர்கள் கோரிக்கை வருது.. பின்பு தவெக அரசு பஸ் விட���ராங்க.. நன்றி தெரிவிச்சு வீடியோ வருது..
அப்படி என்னத்தான் ஆட்சி செஞ்சாங்க இரண்டு திராவிடக் கட்சிகளும் இத்தனை வருஷம்?
மேல்மலையனூர் அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரசு போக்குவரத்து சேவை கிடைத்ததால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி..
RuralDevelopment | PublicTransport | 11 July 2026
#Melmalayanur#Newstamil24x7