நிலவுலகம் இன்னொரு நாள் வாழ்ந்ததென்று,நள்ளிரவு மணியடித்து,பிரகடனம் செய்தது கடிகாரம்.நடுநிசி சாமத்தில்,புதியதோர் தொடக்கம் வந்தது.நெடுந்தூர தேசத்தில் வாழும் என்னுயிர்க் குரியவனே இந்நாள் நமக்கு தனிச்செறிவுடையது என நீ மறந்தாயோ?உம்மை எண்ணி ஏங்கி தனிமொழி பாடும்
இப்பேதையையும் மறந்தாயோ?