தமிழ்நாட்டில் விலைவாசி ஏற்றம் விண்ணை முட்டுகிறது என்று யார் சொன்னாலும் கைது செய்யப்படுகிறார்கள் போல?
சரி உண்மையில் தமிழ்நாட்டில் விலைவாசி விண்ணை முட்டுகிறதா என்பதை பார்ப்போமா?
இவை அனைத்தும் மத்திய புள்ளியியல் அமைச்சகம் மற்றும் முன்னணி நிதி மேலாண்மை நிறுவனங்கள் வழங்கிய தரவுகளுடன் கொடுத்திருக்கிறேன்
2025 செப்டம்பர்: விலைவாசி ஏற்றம் கட்டுக்குள் இருந்தது (மிகவும் குறைவு)
இந்திய அளவில் (1.54%):
கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலைவாசி ஏற்றம் மிகவும் குறைவாக இருந்தது.
அதாவது, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் ஏறக்குறைய உயரவே இல்லை. உணவுப் பொருட்களின் விலைகள் குறையக்கூடத் தொடங்கின.
அதுவே தமிழ்நாட்டில் (0.25%):
இந்திய அளவை விட தமிழ்நாட்டில் விலைவாசி ஏற்றம் மிக மிகக் குறைவாக இருந்தது.
பொருட்களின் விலையில் பெரிய மாற்றமே இல்லாமல், விலைவாசி முற்றிலும் கட்டுக்குள் இருந்தது.
இப்பொழுது நிகழ்காலத்திற்கு வருவோம்
2026 செப்டம்பர்:
தமிழ்நாட்டில் (6.81%):
தேசிய சராசரியை (5.54%) விட தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு மிகவும் அதிகமாக பதிவாகியுள்ளது.
இதுதான் மிக மிக முக்கியமான இடம்:
இந்தியாவின் அனைத்து முக்கிய மாநிலங்களை விடவும் தமிழ்நாட்டில்தான் 2026 செப்டம்பரில் விலைவாசி உயர்வு மிக உச்சத்தில் இருந்தது.
இந்த புள்ளி விவரங்கள் வாயிலாக நமக்குத் தெரியவரும் முக்கியக் முடிவு:
2025-ல் மக்களுக்கான அன்றாட வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரிக்காமல் முழுக்க முழுக்கக் கட்டுக்குள் இருந்தன.
ஆனால், 2026-ல் அதே செப்டம்பர் மாத நிலவரப்படி, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் வேகமாகக் கூடி விலைவாசி ஏற்றம் மிகவும் அதிகரித்துள்ளது.
பேராசிரியரும் பொருளாதார அறிஞருமான திரு. கலையரசன் அவர்களை நேற்று அதிகாலையில் பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி அராஜகமான முறையில் கைது செய்து, அலைக்கழித்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ள தவெக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை என இந்த அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை விமர்சிக்கும் எவர் ஒருவரும் காவல்துறையின் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற மிரட்டலாகத்தான் இந்தக் கைது சம்பவம் இருக்கிறது.
அறிவுடைமையின் அருமை புரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில் கலைஞர்களும் கல்வியாளர்களும் வஞ்சிக்கப்படுவார்கள்.
தவெகவின் ஆட்சி அப்படியானதே!
#BREAKING | விசாரணை என்ற பெயரில் போலீசார் தன்னை துன்புறுத்தியதாக தமிழ்நாடு டிஜிபி -யிடம் பொருளாதார நிபுணர் கலையரசன் புகார்!
#SunNews | #TNPolice | #Kalaiyarasan
பயமா கோமாரு...
இன்று இடைத்தேர்தல் நடந்தால் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக படுதோல்வி என உளவுத்துறை, வியூக வகுப்பாளர்கள் கொடுத்த அனைத்து சர்வேக்களிலும் வந்துள்ள நிலையில் நேற்று திரு.அன்பில் மகேஸ், இன்று திரு.கே.என்.நேரு என வரிசையாக குறி வைக்கிறது டம்மி முதலமைச்சரின் தற்குறி அரசு.
செப்டம்பரில் ஒரு ரெய்ட், இந்த மாதம் இன்னொரு ரெய்டு என எத்தனை ரெய்டுகளை நடத்தினாலும் தமிழ்நாட்டில் அரங்கேறும் அவலங்களையும் உங்களால் மறைக்க முடியாது, திமுகவின் செயல்பாட்டையும் உங்களால் முடக்க முடியாது.
மூர்த்தி அண்ணனுக்கு இவ்வளவு கான்பிடென்ஸ் ஆகாது!
பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் - ஊடகங்களின் Breaking News-ஐயும் திசைதிருப்ப Roadshow நடத்தலாமா? Raidshow நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் த.வெ.க. எனும் “TN Branch Washing Machine”, தி.மு.க. ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் “Vettri Vendetta Politics” திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்!
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்கவும் - முதலமைச்சர் மேடையில் punch dialogue என்ற பெயரில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது!
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த த.வெ.க. ஆட்சியைக் கண்டு, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது.
இதை எல்லாம் மறைக்க, தி.மு.க.வினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாகத் த.வெ.க. அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம்!
த.வெ.க. ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக #DravidianModel ஆசிரியர் கலையரசன் அவர்கள் சட்டவிரோதமாகக் கைது: த.வெ.க. அரசின் உச்சகட்ட பாசிசம்!
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியராக உள்ள முனைவர் கலையரசன் அவர்களை நேற்று அதிகாலை, சீருடை அணியாத காவலர்கள் சட்டவிரோதமாகக் கைது செய்து, வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். கைது செய்யப்பட்டவர் சாதாரண நபரோ, குற்றப் பின்னணி கொண்டவரோ இல்லை.
திரு. கலையரசன் அவர்கள் தமிழ்நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர். இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான JNU-வில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பதிப்பித்த "The Dravidian Model" நூலின் ஆசிரியர்களில் ஒருவர். ஒன்றிய அரசின் திட்டக்குழுவில் பொறுப்பு வகித்தவர். தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையைத் தயார் செய்வதில் பங்களித்தவர். எல்லாவற்றுக்கும் மேல், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவராக இருக்கும் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இப்போதும் இருப்பவர்.
அப்படிப்பட்டவரைத் தெரியாமல் கைது செய்துவிட்டோம் என்று கூறுவது நம்பும்படி இல்லை. செய்யாத குற்றத்திற்காக, அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து, அவரது செல்போனைப் பறித்து, கைது செய்து அலைக்கழித்ததைச் சாதாரணச் செயலாக எவரும் கடந்துபோக முடியாது. குற்றவாளிகளை எல்லாம் கூத்தடிக்க விட்டுவிட்டு, கல்வியாளர்களை அச்சுறுத்திப் பார்ப்பது எவ்வளவு பெரிய அசிங்கம்?
திரு. கலையரசன் அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்? Dravidian Model என்ற பதத்தை முன்வைத்து, திராவிட ஆட்சியால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை உலகம் முழுவதும் பறைசாற்றியதற்காகவா? த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகுதான், தமிழ்நாடு இதுவரை சந்தித்திராத விலைவாசி உயர்வைச் சந்தித்துள்ளது என்ற உண்மையைச் சொன்னதற்காகவா?
முட்டாள்களால் நிறைந்த த.வெ.க.வுக்கும் கல்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், கல்வியாளர்களைக் கைது செய்து மிரட்டும் அளவுக்கு அறிவின் மீது ஒவ்வாமை கொண்டவர்களாக இவர்கள் நடந்துகொள்வார்கள் என நிச்சயமாக நினைக்கவில்லை. பாசிசத்தில் பா.ஜ.க.வையும் மிஞ்சிவிடுவார்கள் என்பதைத்தான் இந்தக் கைது காட்டுகிறது. முதலமைச்சரின் ஒப்புதலோடும் உயரதிகாரிகளின் அனுமதியோடும்தான் இந்த அத்துமீறல் நடக்கிறதா?
முனைவர் கலையரசன் அவர்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. கடந்த ஆட்சிக்காலத்திலும், அவர் சுதந்திரமாகத் தன்னுடைய விமர்சனக் கருத்துகளை முன்வைத்திருக்கிறார். ஆனால், இந்தத் தரங்கெட்ட த.வெ.க. ஆட்சியோ, எங்கள் ஆட்சியைப் பற்றியோ நிர்வாகத் தோல்விகளைப் பற்றியோ ஊடகங்களில் உண்மையைப் பேசினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டும் ரவுடி அரசாகச் செயல்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அரசிற்கு ஆதரவு அளித்துக் கொண்டு இருக்கும் கட்சிகள், இந்த அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? இதுதான் இவர்கள் பாசிசத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் அரசியலா?
புகழ்பெற்ற பேராசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டைப் புனைந்து, அவரை அலைக்கழித்து, துன்புறுத்திய த.வெ.க. அரசின் பாசிச செயல் கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு காவல்துறையும், அதற்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்களும் முனைவர் கலையரசன் அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்!
எனக்கு என்னமோ..🤔TVK MLA பல்லவி குழந்தையை.தூக்கிட்டு சுத்தரத்த பாத்தா..
நம்ப அண்ணனுடைய ஆட்சியில நம்ம. குழந்தையும் கடத்திடுவாங்களோ 🤔அப்படி என்ற பயம் இருக்கும் போல
MIDS பேராசிரியரும் திட்டக்கமிஷனில் பங்களித்தவரும் பல முக்கியமான நூல்களை எழுதியவருமான பேராசிரியர் கலையரசனை அடிப்படையற்ற புகாரின் அடிப்படையில் இன்று அதிகாலை 5 மணிக்கு விசாரணை என்ற பெயரில் சீருடை அணியாத காவல்துறையினர் அலைக்கழித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், வாசிப்பு, புத்தகங்கள், சிந்தனைமுறை பற்றி எதுவும் தெரியாத ஓர் அரசு, காவல்துறைதான் இப்படி நடந்துகொள்ளும்.
TN- A police state
The reported pickup of renowned economist Kalaiarasan raises serious concerns about civil liberties, democratic rights, and police accountability.
In a democracy, people must not be made to fear the very institutions meant to protect them. If the law has been followed, let the authorities explain the circumstances transparently.
DEMOCRACY IS NOT ABOUT SILENCING VOICES.
DISSENT IS NOT A CRIME.
ACCOUNTABILITY IS NOT OPTIONAL.
Tamil Nadu deserves answers, transparency, and justice — not fear and intimidation.
@CMOTamilnadu@tnpoliceoffl@chennaipolice_@TVKVijayHQ
#JusticeForKalaiarasan #TamilNadu #Democracy #CivilLiberties #PoliceAccountability
திமுக ஆட்சியில் எல்லா டெண்டர்களிலும் 30% கமிஷன் வாங்கி 20% ஸ்டாலினும், 10% துறை மந்திரியும் பிரித்துக்கொண்டார்கள். நான் ஆட்சிக்கு வந்தால் ஒரு பர்சன்ட் கூட கமிஷன் இருக்காது என்றார். அப்படியெனில் 30% விலை குறைந்திருக்க வேண்டும். ஆனால் 50% கூடியிருக்கிறது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் 5500 ரூபாயிலிருந்து 7500 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது
பாட்டிலுக்கு பத்து ரூயாய் அதிகம் வாங்கிய டாஸ்மாக் இப்போது பாட்டிலுக்கு 20 ரூபாயை கூடுதலாக்கியிருக்கிறது.
யூனிட் 20 ரூபாய்க்கு வாங்கிய மின்சாரத்தை 35 ரூபாய்க்கு வாங்குகிறது
25 கிலோ 1350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரிசி 1850 ரூபாய்க்கும், 1500 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரிசி 2100 ரூபாய்க்கும், 1900 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரிசி 2750 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சராசரியாக மூவாயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்த இடத்தில் 5000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இப்படியே ஒவ்வொரு பொருளாகக் கணக்குப் பார்த்தால் தலை சுற்றும். தமிழ்நாட்டுக் குடும்பங்கள் அனைத்தும் இந்த அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் குறைந்தது பத்தாயிரம் ரூபாய இழக்கின்றன.
விஜய் பேசியபடிப் பார்த்தால் நியாயமாக ஐயாயிரம் ரூபாய் குறைந்திருக்க வேண்டும். ஆனால் பத்தாயிரம் அதிகரித்திருக்கிறது. ஆக அவர் சொன்னதைவிட பதினைந்தாயிரம் அதிகம்.
அவர் கட்சிக்காரர்களே பெரிய பெரிய குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.
ஒருபக்கம் நிர்வாகம் ஸ்பம்பித்துப் போயிருக்கிறது. இன்னொரு பக்கம் விலைவாசி மூச்சடைக்கிறது.
அறிவுலகம் எப்போதும்போல ஃபிடில் வாசிக்கிறது.
#TVKFails
சைக்கிள் டெண்டரை ரத்து செய்!!! @CMOTamilnadu@TVKVijayHQ
எனது தொடர்புகளை உபயோகப்படுத்தி லூதியானா மற்றும் சென்னையில் பலருடன் பேசிய பின்னர் எனது தீர்க்கமான முடிவு இதுதான்.
இலவச சைக்கிள் திட்டத்தில் சுமார் 1900-2000 ரூபாய் வரை தவெக அரசு / அமைச்சர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த சைக்கிளை தயார் செய்ய தேவையான மூலப்பொருட்கள் அனைத்தின் விளையும் தற்போது என் கையில் உள்ளது. ஹெல்மெட், வாட்டர் பாட்டில், வாட்டர் பாட்டில் ஹோல்டர் தவிர்த்து மற்ற பொருட்களை ஒரு சைக்கிளுக்கு 3500 ரூபாய்கள் அளவில் வாங்கிவிட முடியும்.
சென்னையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரவாக்கம் பகுதிகளிலும், லூதியானாவிலும் இந்த தொழில் சம்பந்தப்பட்ட பெரும்பாலான உதிரிபாக நிறுவனங்கள் இயங்குகின்றன. நான் 3500 என கூறியுள்ளது அதிகபட்ச விலை. முயற்சித்தால் இன்னும் கூட 5-10% வரை இத குறைக்க முடியும்.
TI Cycles தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் உள்ள நிறுவனம். அந்த நிறுவனத்துக்கு உதிரிபாகங்களை வழங்கும் பல நிறுவனங்களை நான் அறிவேன்.
வருடத்திற்கு 50 லட்சம் சைக்கிள்களை தயாரிக்கும் திறமையுள்ளவை TI மற்றும் Hero. Avon சுமார் 30 லட்சம்.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நிறுவனங்களுக்கு இந்த டெண்டர் அதிக விலையில் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றை பெரும்பாலும் அம்பத்தூர் தொழிற்பேட்டை நிறுவனங்களில் குறிப்பிட்ட தரத்தில் தயாரிக்க முடியும். தமிழகத்திற்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சைக்கிள்களை அசெம்பிள் செய்ய, போக்குவரத்து என 1500 ரூபாய்களை சேர்த்துக் கொண்டால் கூட சுமார் 5000-5300 ரூபாயில் லாபத்துடன் இந்த சைக்கிள்களை அரசிற்கு தரமுடியும்.
ஆக, ஒரு ஆரம்ப கொள்ளைக்கு வழிவகை செய்துள்ளது தவெக அரசு.
தேவையான பொருட்களின் தோராயமான விலைகளை (சில சற்று தாராளமாகவே) கீழே கொடுத்துள்ளேன். முதல்வர் விஜய் அரசு இந்த டெண்டரை கேன்சல் செய்துவிட்டு புதிய, நியாயமான டெண்டருக்கு வழிவகை செய்ய வேண்டும்.
art / assembly Qty Cost
Frame 1 600
Front fork 1 95
Headse assembly 1 100
Handlebar 1 240
Stem 1 110
Grips 1 pair 30
Front wheel rim 1 175
Rear wheel: rim 1 175
Spokes + nipples 100
Front hub 1 80
Rear hub with freewheel body 1 140
Tyres 2 300
Inner tubes 2 140
Rim tape 2 20
Crankset with chainring 1 170
Bottom bracket assembly 1 50
Chain 1 100
Freewheel sprocket 1 150
Pedals 1 pair 100
Front V-brake set 1 150
Rear V-brake set 1 150
Brake cables and housings 2 sets 100
Saddle 1 80
Seatpost 1 150
Seatpost clamp 1 75
Kickstand 1 30
Chain guard 1 30
Reflectors Set 10
Assembly consumables set 150
Helmet / Water Bottle and assembly 1 300
Transportation 300
Assembling activity 1000 Total 5100
மக்களைக் காக்கத் திராணியில்லாமல் வேடிக்கை பார்க்கும் திறனற்ற த.வெ.க அரசு!
1 வயது குழந்தையைக் கடத்திய த.வெ.க நிர்வாகி, தூத்துக்குடியில் ஒரே வாரத்தில் 7 கொடூரக் கொலைகள், பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் காரை ஏற்றி வெட்டுத் தாக்குதல் எனத் தமிழ்நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு அதளபாதாளத்திற்குச் சென்றுவிட்டது!
#LawAndOrderFail #TVKVijayFails #DummyCM #TVKCrimes