His speech was sharp, clear and fabulous! 🔥
He knows better than anyone how to speak and conduct himself in the position he holds.
Proud to be a brother of Vijay Anna and proud to stand with our respected CM! ❤️🔥
@actorvijay@TVKVijayHQ
ஸ்வீட் அங்கிள்
ஸ்வீட் அங்கிள்…
ஏன் இப்படி ஒரு புலம்பல் அறிக்கை விட்டு இருக்கிறீர்கள் ஸ்வீட் அங்கிள்?. வழக்கமாக உங்கள் ட்ரேட் மார்க் வாசகமான ‘மக்கள் தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம்’ என்பது எங்கே ஸ்வீட் அங்கிள்?. அப்படி எனில் இனி மக்களை மதிக்க மாட்டீர்களா ஸ்வீட் அங்கிள்?. பிறகு கொளத்தூர் கொத்து புரோட்டாவுக்கு சொன்ன அந்த கோடான கோடி நன்றிகளையும் மறந்து விட்டீர்களா?.
தமிழகம் முழுக்க லட்டு வாங்கி வைக்கச் சொன்னீர்களாமே ஸ்வீட் அங்கிள்?. அந்த லட்டு எல்லாம் போனி ஆனதா இல்லை பூந்தி ஆனதா?. இரண்டும் ஆகாமல் பூஞ்சை ஆனதா?.
நீங்களும் நீங்கள் வளர்த்த ஆபாசநதியும் பேசிய ஆபாச மற்றும் அவதூறு பேச்சுக்களை இப்போதாவது தவறென்று உணர்கிறீர்களா ஸ்வீட் அங்கிள்?. உங்கள் வளர்ப்பும் இனி அரசியல் களத்தில் தேறாது என்பதை அறிகிறீர்களா ஸ்வீட் அங்கிள்?.
உங்கள் வளர்ப்பான அந்த வன்மநதி எங்கள் தலைவரைப் பார்த்து கொத்து புரோட்டா, முட்டை புரோட்டா என்றெல்லாம் மூளை வீங்கி நக்கல் செய்ததே. இப்போது மக்கள் கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்டதுபோலவே மதுராந்தகத்தில் முட்டை புரோட்டாவும் தாராபுரத்தில் வீச்சு புரோட்டாவும் போட்டுவிட்டனர். இப்போதாவது மக்கள் மனநிலை என்னவென்று புரிகிறதா?. மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பது யாரென்று தெரிகிறதா?.
ஸ்வீட் அங்கிள்… உங்களுக்கு இனி எப்போதும் மக்கள் மனநிலை புரியவே போவதில்லை. ஆனாலும் உங்களுக்கும் உங்கள் வளர்ப்பான வக்கிரநதிக்கும்
ஒன்று சொல்லவா?.
எங்கள் தலைவரைப் பார்த்து புரோட்டா மாஸ்டரா என்று நக்கல் செய்த உங்கள் கூட்டத்திற்கு இந்த இடைத்தேர்தல் வாயிலாக மக்கள் சொல்லியுள்ள பதில் என்ன தெரியுமா?.
“எங்கள் வெற்றித் தலைவர் புரோட்டா மாஸ்டர் அல்ல…தீயசக்தியையும் தீர்ந்துபோன சக்தியையும் புரட்டிப் போடுவதில்தான் மாஸ்டர்…” என்பதுதான் அந்த பதில்.
திடீரென தீர்ந்துபோன சக்தியை இணைத்திருப்பதைப் பார்த்து வியப்பாக இருக்கிறதா?. உங்களுக்கு வியப்பு வராது. சிரிப்புதான் வரும் என்பதும் தெரியும். ஏனென்றால், நீங்கள்தான் தீர்ந்துபோன சக்தியுடன் இணைந்து அரசியல் சதிகளுக்காக ஊர்ந்து போகத் தொடங்கி விட்டீர்களே!. நீங்கள் எத்தனை சதிகளை செய்தாலும் அத்தனையும் மக்களால் முறியடிக்கப்படும்.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. மக்கள் மனத்தில் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கென இருக்கும் முதன்மைச் சக்திக்கான முதலிடமும், நமது மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான நம் சொந்தங்களின் ஆழ்மன விருப்பமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
வாக்குகளுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், திருமங்கலம், ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்று எந்த ஃபார்முலாவும் இல்லாமல் அன்பு, பாச, உறவு ஃபார்முலா மற்றும் ஜனநாயகம் காக்கும் ஃபார்முலாவை வைத்து வென்ற தேர்தல் இது. தமிழகம், ஊழல் சக்திகளின் கோட்டை இல்லை. மாறாக, மாபெரும் மக்கள் சக்தியின் கோட்டை, மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்ற அன்பு மிக்க தூய சக்தியின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பணநாயகச் சூத்திரத்தையே அடித்து நொறுக்கிப் பெற்றுள்ள வெற்றியே இது.
கண்டகண்ட பேரங்கள் நடந்ததாக அவதூறு பேசிய மிருகக் குணப் பேச்சுக்கு எல்லாம் மக்கள் தகுந்த பதிலடியைத் தரமாகத் தந்துள்ளனர். அப்படிப் பேசியவர்களை மக்கள் வெகுதூரத்தில் ஒதுக்கி வைத்து, அவர்கள் மனத்தில் மீண்டும் தோல்வி பாரத்தை ஏற்றி உள்ளனர்.
இரண்டு தொகுதிகளிலும் நாம் இரண்டு நாள்கள் பிரசாரம் மேற்கொண்டதை நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசியவர்களுக்குத்தான் இப்போது மக்கள் பதிலடி தந்துள்ளனர். இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்ய அன்றைய தீய சக்தி தி.மு.க., நம்மை அனுமதித்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்.
நம்மைப் பொறுத்தவரை, என்றைக்கும் நாம் மக்கள் பக்கம்தான் நிற்போம். மக்களோடு மக்களாகத்தான் இரண்டறக் கலந்து இருப்போம். அது நம் கடமை மட்டுமன்று. மக்களுக்கான நமது நன்றிக் கடன் அது. எப்போதும் நம் தமிழக மக்களுக்காக முழுமூச்சுடன் நன்றி விசுவாசத்துடனேயே இருப்போம் என்பது நூறு சதவீதம் உறுதி.
இந்த வேளையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ள நம் சொந்தங்கள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவாக நன்றி சொல்வதில் மனம் மகிழ்கிறேன். நெஞ்சம் நெகிழ்கிறேன்.
இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் மதிப்பிற்குரிய தலைவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், எப்போதும் போலச் சிறப்பாகக் களப் பணியாற்றிய நம் மாண்புமிகு அமைச்சர்களுக்கும் மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை த.வெ.க. நிர்வாகிகளான நம் தோழர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த இடைத்தேர்தலில், வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நம் வேட்பாளர்களான சகோதரி திருமதி மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சகோதரி திருமதி சத்தியபாமா (தாராபுரம் தொகுதி) ஆகியோருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்போதும் சொல்கிறேன். இந்த வெற்றி, தனிப்பட்ட இந்த விஜய்யின் வெற்றியோ, தனிப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல. இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி. அப்பழுக்கற்ற தலைவர்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் செய்த துரோகத்திற்கு எதிரான வெற்றி.
மொத்தத்தில், அரசியல் நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. தனிமனித நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வாக்காளர்களுக்குக் கிடைத்த வெற்றி. இது இனிமேலும் தொடரும். தொடர்ந்தேதான் தீரும். மீண்டும் மீண்டும் இனிவரப் போகும் வெற்றிகளுக்கும் சேர்த்து இப்போதே நன்றி.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி!
இது வெறும் தேர்தல் வெற்றியல்ல. கடந்த ஐந்து மாதங்களாக மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்று வரும் நல்லாட்சிக்குத் தமிழக மக்கள் வழங்கிய அங்கீகாரம்!
குறிப்பாக, ஊழலைக் குறைப்பதில் காட்டப்படும் உறுதி, நிர்வாகத்தில் நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் நிலைநாட்டும் முயற்சிகள், மக்களின் நலனை முன்னிறுத்தி எடுக்கப்படும் பல நல்ல முடிவுகள் என முதலமைச்சர் அவர்களின் செயல்பாடுகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த வெற்றிக்கு காரணம்.
இந்த வெற்றிக்காக இரவு பகல் பாராமல் களத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள்.
🏆 மதுராந்தகம் & தாராபுரம் — TVK வெற்றிக் கனி! ❤️🔥
Official announcement இன்னும் சில நிமிடங்களில் Election Commission-லிருந்து வரவிருக்கிறது!
இந்த வெற்றிக்காக வாக்களித்த ஒவ்வொரு அன்பு உள்ளத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் ❤️🙏
இரவு பகல் பாராமல் உழைத்த நம்முடைய அன்பு Warriors அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ❤️🫡
அண்ணா @TVKVijayHQ மீண்டும் ஒரு வெற்றி! 🔥❤️
இது வெறும் வெற்றி மட்டுமல்ல… உங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு!
நன்றி மக்கள் சக்தியே! ❤️
வெற்றி தொடரட்டும்! 🔥
வாழ்க TVK! 🏴🟥🟨
@CMOTamilnadu@actorvijay
சட்டமன்றத் தேர்தலில் TVK-க்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று 35% மக்கள் முடிவு செய்து வாக்களித்தார்கள்.
அந்த முடிவின் முழு அர்த்தம் தேர்தல் முடிவன்றுதான் பலருக்கும் புரிந்தது. “அப்போது நாமும் TVK-க்கு வாக்களித்திருக்கலாமே” என்று நினைத்தவர்களும் நிச்சயம் இருந்திருப்பார்கள்.
இன்று சூழ்நிலை எப்படியிருந்தாலும், இதை ஒரு வாய்ப்பாக பாருங்கள்.
ஒரு நபர் மீது நம்பிக்கை வைத்து — விஜய் மீது நம்பிக்கை வைத்து — இந்த முறை உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள் என்பதுதான் தராபுரம் மற்றும் மதுராந்தகம் மக்களிடம் எனது அன்பான வேண்டுகோள்.
ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள்.
#TVK #தராபுரம் #மதுராந்தகம் #Vijay
ஊழல் இருளில் உழல்வோர், ஒளியைப் பழிப்பதா?
தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில், தோல்வி பயத்தால் தத்தளிக்கும் திமுக நிர்வாகி திரு. @V_Senthilbalaji, தமிழக வெற்றிக் கழகத்தின் மீது வீசியுள்ள அபாண்டமான அவதூறுகளை வன்மையாக கண்டிக்கிறோம். நிராகரிக்கிறோம். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. புனையப்பட்டது.
இடைத்தேர்தல் வரலாற்றிலேயே ஜனநாயகத்தைப் பணச்சலங்கையிட்டு ஆடவிட்ட பெருமை திமுகவையே சாரும். வாக்காளர்களை ஆட்டு மந்தைகளாக மண்டபப் 'பட்டிக்குள் அடைத்து' வாக்கு வேட்டையாடிய பிதாமகர்கள், இன்று எங்களைப் பார்த்துத் 'தூய அரசியல்' என கூறியதை விமர்சித்து பேசுவது விந்தையிலும் விந்தை!
சேலை, விளக்கு, பிரியாணி எனத் தாங்கள் காலங்காலமாகச் செய்யும் தகிடுதத்தங்களை எங்கள் மீது திணிப்பது, இருள் ஒளியைப் பார்த்துப் பழிப்பதற்குச் சமம். அதிகார பலத்தாலும் பண மமதையாலும் வாக்குகளை விலைக்கு வாங்கிப் பழகியவர்களுக்கு, எங்கள் மீது மக்கள் காட்டும் தன்னெழுச்சியான அன்பு கண்களை உறுத்துகிறது.
அவர்கள் காட்டும் புகைப்படம், வஞ்சகத்தால் புனையப்பட்ட அப்பட்டமான பொய்! காசை வீசி வாக்குகளைப் பறிக்கும் கறைபடிந்த அரசியல் எங்கள் மரபல்ல; அறமே வடிவான எங்கள் தலைவரின் அகராதியிலேயே அதற்கு இடமில்லை. எளிய மக்களின் தூய அன்பை மட்டுமே நம்பி நிற்கும் எங்களுக்கு, ஊழல் குறுக்கு வழிகளில் பயணிக்கும் இயல்பே எக்காலத்திலும் கிடையாது!
அவதூறு சேற்றை வாரி இறைத்துவிட்டு தப்பிவிடலாம் என நினைக்கும் திரு. செந்தில் பாலாஜி மற்றும் திமுகவினர் மீது, த.வெ.க உறுதியான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
பணத்தால் ஜனநாயகத்தை ஏலம் கேட்கும் எத்தர்களுக்கு, தாராபுரம் மக்கள் தங்கள் விரல் மையால் தகுந்த தீர்ப்பெழுதுவார்கள்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
₹187 கோடி சேமிப்பு - இதுதான் நிர்வாக மாற்றம்!
ஒரே பொருள். அதே தரம். அதே அளவு.
DMK ஆட்சியில் துவரம் பருப்பு கொள்முதல் விலை ₹109.15/kg
TVK ஆட்சியில் அதே கொள்முதல் ₹77.89/kg
➡️ கிலோவுக்கு ₹31.26 குறைவு
➡️ 3 மாதங்களில் ₹187.56 கோடி சேமிப்பு
➡️ இதே விலையில் தொடர்ந்தால் ஆண்டுக்கு சுமார் ₹750 கோடி சேமிப்பு!
மக்களின் பணத்தை மிச்சப்படுத்துவதும் ஒரு சாதனைதான்.
ஊழலுக்கு இடமில்லை
வீண்செலவுக்கு இடமில்லை
மக்கள் பணம் மக்களுக்கே!
இதுதான் முதலமைச்சர் விஜய்யின் நிர்வாக மாடல்.
இதுதான் விஜய் ஆட்சி.
இதுதான் TVK மாடல்..
#CMJosephVijay @TVKVijayHQ@AdvocateVenkatP
@narayanantbjp@TVKPartyHQ குறைகளைச் சுட்டிக்காட்டத் தெரிந்த எனக்கு,
இத் தமிழகத்திற்கு நல்லது செய்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கத் தெரியவில்லை.
காரணம்............
Rightly said bro. He is getting much closer to the people, and I know people love him unconditionally. But there is always a risk from enemies in any situation. I always have this thought in my mind too. But I strongly believe the universe will always keep him safe, protect him and bless him with a long and healthy life. 🙏❤️
Love you, Anna @TVKVijayHQ ❤️ You are truly one of the best human beings. 🙏
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.
நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.
தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.
பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.
தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் மக்களே!
நான்கு மாத காலத்தில், பல நெருக்கடிகளுக்கு மத்தியில் அளித்த வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. வெளிப்படையான நிர்வாகமும் தூய மக்களாட்சியும் நல்கும் வெற்றித் தலைவர், உங்களது நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பார்.
பல ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்க, வெற்றியின் அடையாளமாம் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
பெண்களின் கண்ணியம் காக்க, உங்க மகன், உங்க அண்ணன், உங்க தம்பி, உங்க தோழன் விஜய்யின் விசில் சின்னத்தில் வாக்களியுங்கள்.
வெற்றி நிச்சயம்!
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், யாருக்கும் வழங்கிடாத பேரன்பையும், பெருவாரியான வாக்குகளையும் நமக்கு வாரி வழங்கி, வாகை சூடும் வரலாற்றைத் திரும்ப வைத்து, உங்களின் முதல் சேவகனாக என்னை அமர்த்திய உங்களுக்கு என் நன்றிக் கடனைத் திருப்பி அளிக்கும் நேரமிது. உண்மையான மனசாட்சியுள்ள மக்களாட்சியை அமர்த்திய தமிழக மக்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, தமிழக மக்களாகிய உங்கள் தலைமையிலான ஆட்சி! இந்த ஆட்சி தொடர்ந்திட, மென்மேலும் வலுப்பெற உங்கள் ஆதரவு எப்போதும் தேவை.
கடந்த 25ஆம் தேதி (25.09.2026) மதுராந்தகம் தொகுதியிலும், 30ஆம் தேதி (30.09.2026) தாராபுரம் தொகுதியிலும் இடைத்தேர்தலுக்காக நாம் பரப்புரை மேற்கொண்டோம்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி (02.10.2026) மதுராந்தகம் தொகுதியிலும், இன்று (04.10.2026) தாராபுரம் தொகுதியில் வாகனப் பிரசாரம் மேற்கொண்டோம்.
இந்த இடைத்தேர்தல் பரப்புரைக்காக நாம் வந்த போது, செங்கல்பட்டு மாவட்ட மக்களும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களும் நமக்களித்த வரவேற்பும், நம்மிடம் காட்டிய அன்பும் பாசமும் எதற்கும் நிகரில்லாதது. எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நிலைத்திருக்கக் கூடியது. இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. இதற்காக உங்களுக்கு வாழ்நாள் கடமைப்பட்டுள்ளோம்.
நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இவ்வளவு காலமாக நம்மை ஏமாற்றி வந்த, தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுவீர்கள்; மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரிப்பீர்கள்; மதுராந்தகம் தொகுதி திருமதி மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி திருமதி சத்தியபாமா ஆகியோருக்கு வெற்றிச் சின்னமாம் நமது விசில் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிப்பீர்கள் என்பதை இந்த நாடறியும். அதற்காக நான் முன்கூட்டியே உங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.
மேலும், இந்தத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முழு ஒத்துழைப்பு நல்கிய தன்னார்வலர்கள் குழு, காவல் துறையினர், மருத்துவக் குழுவினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், மக்கள் நலன்களைக் காப்பதற்காக, எதிலும், எப்போதும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம். லஞ்சம், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்துடன் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இப்போது போலவே எப்போதும் தொடர்வோம்!
மீண்டும் நினைவூட்டுகிறோம்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்களே, நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டிய ஒரே சின்னம் உங்கள் வெற்றிச் சின்னமான விசில் சின்னம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
@ItsOwlPrints Hi, could you please teach us the strategy you follow instead of making us dependent on your calls? Help us understand the process, analysis and risk management so that we can become better traders and investors ourselves. 🙏