அரசு ஊழியர்கள் கவனத்திற்கு... 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்து விவரங்களை தாக்கல் செய்வது கட்டாயம்!
தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும�� தங்களது அசையும் மற்றும் அசையா சொத்துகள், கடன்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விவரங்களை முதல் நியமனத்தின் மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு, ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை சொத்து விவர அறிக்கையை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அரசு ஆவண விவரங்கள்
துறை: Personnel and Administrative Reforms (A) Department
அரசு கடித எண்: Letter No.11927/A/2010
தேதி: 18.03.2010
குறிப்பு அரசாணை: https://t.co/jTAN0ajfL0.24, Personnel & Administrative Reforms (AR-I) Department, dated 17.02.2010
கையொப்பம்: K.N. Venkataramanan, I.A.S., Secretary to Government
என்ன கூறுகிறது இந்த அரசு கடிதம்?
தமிழக அரசால் அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தக் குழு (Administrative Reforms Committee), முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜன் தலைமையில் வழங்கிய பரிந்துரைகளின் ��டிப்படையில்,
"ஒவ்வொரு அரசு ஊழியரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்து விவரங்களை கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டும்" என்ற விதியை கண்டிப்பாக அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
எந்த விதியின் கீழ்?
இந்த நடைமுறை,
Tamil Nadu Government Servants' Conduct Rules, 1973 – Rule 7(3)-ன் கீழ் அமலில் உள்ளது.
அதன்படி, ஒவ்வொரு அரசு ஊழியரும்:
* அசையும் சொத்துகள்
* அசையா சொத்துகள்
* கடன்கள்
* பொறுப்புகள் (Liabilities)
உள்ளிட்ட அனைத்து சொத்து விவரங்களையும் Schedule-I இல் உள்ள Form I முதல் Form V வரை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
எப்போது தாக்கல் செய்ய வேண்டும்?
✅ முதல் நியமனத்தின் 3 மாதங்களுக்குள்
✅ அதன்பிறகு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை
சொத்து விவரங்களை கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டும்.
அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட உத்தரவு
அனைத்து துறைச் செயலர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்,
அனைத்து ���ரசு ஊழியர்களும் இந்த விதியைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
சொத்து அறிக்கைகள் முறையாக பெறப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே 07.06.2007 அன்று வெளியிடப்பட்ட அரசுக் கடிதத்தில் வழங்கப்பட்ட வழிமுறைகளை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என அரசாணை மீண்டும் நினைவூட்டுகிறது.
ய
அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை க��லமுறைப்படி பெறுவது:
நிர்வாக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய,
ஊழலைத் தடுக்கும் கண்காணிப்பு அமைப்பை வலுப்படுத்த,
வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அடிப்படை ஆவணமாக பயன்பட,
மிக முக்கியமான நடைமுறையாக கருதப்படுகிறது.
அஸ்திவார பணிக்காக தோண்டிய போது கிடைத்த புதையல். 1993 ம் ஆண்டின் பிளாஸ்டிக் சோப்பு தூள் பாக்கெட்.
30 ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்காமல்,நிறம் மாறாமல் உயிர்ப்போடு இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லும் ��ிஷங்கள் இவை.!
#PlasticPollution 😏
கிரைய ரத்து ஆவணம் என்றால் என்ன ?
கிரைய ரத்து ஆவணம் (Cancellation Deed of Sale) என்பது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒரு சொத்து விற்பனைப் பத்திரத்தை (Sale Deed) சட்டப்பூர்வமாக ரத்து செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு ஆவணம் ஆகும்.
ஒரு சொத்தை விற்றவர் மற்றும் வாங்கியவர் ஆகிய இருவருக்குள்ளும் ஏற்படும் சில உடன்பாடுகள் அல்லது நீதிமன்ற உத்தரவின் ��டிப்படையில் இந்த ஆவணம் பதிவு செய்யப்படுகிறது.
இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்:
1. இது எப்போது பயன்படுத்தப்படும்?
பணம் தராமல் ஏமாற்றுதல்:
சொத்தை வாங்குபவர், விற்க ஒப்புக்கொண்ட முழுத் தொகையையும் (Sale Consideration) தராமல் இழுத்தடிக்கும் போது.
ஏமாற்று வேலை (Fraud):
தவறான ஆவணங்களைக் காட்டி அல்லது போலி நபர்களை வைத்து சொத்து கிரையம் செய்யப்பட்டிருப்பது தெரியவரும் போது.
பரஸ்பர சம்மதம்:
வாங்குபவருக்கும், விற்பவருக்கும் இடையே ஏதேனும் மனஸ்தாபம் ஏற்பட்டு, இருவருமே "இந்த வியாபாரம் வேண்டாம்" என்று பரஸ்பரமாக முடிவெடுக்கும் போது.
2. மிக முக்கியமான சட்ட விதிமுறை (Supreme Court Rule)இருதரப்பு சம்மதம் கட்டாயம்:
கிரையப் பத்திரத்தைப் பதிவு செய்த பிறகு, அதை ரத்து செய்ய வேண்டும் என்றால் விற்பவர் மற்றும் வாங்கியவர் ஆகிய இருவருமே சார்பதிவாளர் (Sub-Registrar) அலுவலகத்த��ற்கு நேரில் வந்து கையெழுத்திட வேண்டும்.
தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது: நில��்தை விற்றவர் மட்டுமே தனியாகச் சென்று, வாங்கியவரின் சம்மதம் இல்லாமல் கிரையப் பத்திரத்தை ஒருதலைப்பட்சமாக (Unilateral Cancellation) ரத்து செய்ய சட்டப்படி முடியாது.
3. வாங்குபவர் வரமறுத்தால் என்ன செய்ய வேண்டும்?
சொத்தை வாங்கியவர் ஏமாற்றிவிட்டார், ஆனால் அவர் கிரைய ரத்து ஆவணத்தில் கையெழுத்திட வர மறுக்கிறார் என்றால், சார்பதிவாளர் அதை ரத்து செய்ய மாட்டார்.
அந்தச் சூழ்நிலையில், பாதிக்கப்பட்டவர் சிவில் நீதிமன்றத்தை (Civil Court) நாடி, "இந்தக் கிரையப் பத்திரம் செல்லாது" என அறிவிக்கக் கோரி (Declaration and Cancellation Suit) வழக்கு தொடர வேண்டும்.
நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலேயே அதை ரத்து செய்ய முடியும்.
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #அறிவோம்சட்டம்
@sureshkalipandi இந்த கன்டேன்ட் எழுதுவதற்கு நல்ல தொகை கொடுக்கலாம்.. அரசியல் சாக்கடையை விட கேவலமானது என்பதற்கு இதுபோன்ற புனையப்பட்ட கதைகளை எழுதி, இதை உண்மைன்னு நம்பி வர்ற கூட்டத்தை கணக்கு காமிச்சு, அரசியலில் பேரம் பேசுவதுதான் அண்ணாமலை அரசியல்.
@sunnewstamil யோவ் லாரன்ஸ்.. அரசியலில் வர்றதுக்கு கருத்து கேட்கற நீ, சினிமாவுல டான்ஸ் மாஸ்டரா இருந்த நீ சினிமாவுல ஹீரோ-வா நடிக்கலாமா? வேண்டாமா?னு மக்களிடம் கருத்து கேட்டுட்டா நடிக்க வந்த? உன்னோட 'ஓவர்ஏக்ட்' நடிப்பையும் பார்த்து தொலைத்தோமே..? ஏய்யா.. இருக்கிற வேலையில உயிர வாங்கறீங்க..?
@ThanthiTV இதிலென்ன அதிசயம். மூன்று குழந்தைகள் இருப்பது ஏற்கனவே அறிந்திருப்பார்கள். மூன்று குழந்தை என்பதால் சிசேரியன் மூலம் அறுவை சிகி���்சை செய்து குழந்தைகளை வெளியில் எடுத்திருப்பார்கள்.இது இயற்கையாக,சுய பிரசவம் இல்ல. ம���ுத்துவரின் பிறந்த தினத்தன்று தேதி குறிக்கப்பட்டு,நடந்த செட்டப் ஆப்ரேஷன்