From a student of the school to becoming a part of its legacy. A heartfelt homecoming as @dhanushkraja inaugurated the newly built #Dhanush Block, met his beloved batchmates, and celebrated the place where it all began. ♥️
#OM
திருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் கொலை : சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உரிய தண்டனை கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இது காவல்துறை நடத்திய படுகொலையாகும்.
ஒரே மாதிரியான குற்றத்திற்கு, பொதுமக்களுக்கு ஒரு தண்டனையும், காவல்துறைக்கு ஒரு தண்டனையும் வழங்கப்படுவதனால் தான், இதுபோன்ற மனித நேயமற்ற கொடூரச் செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
காவல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் கை, கால்களை உடைத்துவிட்டு ‘பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டனர்’ என்ற காவல்துறையின் கதைகளும், அதை அங்கீகரிக்கும் நீதித்துறையின் செயலுமே, காவல்துறையின் மரணங்களுக்கு அடித்தளமாக உள்ளது.
இந்தியாவில் 90 விழுக்காடு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது காவல்துறையினரே. அத்துறையிடம் அதிகாரம் குவிக்கப்படுவதன் விளைவைத்தான், காவல்துறை மரணங்கள் அரங்கேறி வருகிறது.
மக்களிடம் ஆத்திரமாகவும், கோபத்துடனும் நடந்துகொள்ளும் இந்த காவல்துறை தான், ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் கொள்ளையர்களிடமும், கார்ப்பரேட்டுகளிடமும் அமைதி காத்து வருகின்றனர்.
வரம்பு மீறிய அதிகாரத்தால், தாங்கள் மக்களுக்கு பதில்சொல்ல கடமைப்பட்டவர்கள் அல்ல என்ற அதிகார திமிரும், தவறு செய்தாலும் தப்பித்துக் கொள்ள முடியும் என்ற தைரியமும்தான் காவல்துறையின் குற்ற நடவடிக்கைகள் பெருகக் காரணம்.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான விதிகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நிலையில், அவற்றை மதிக்காத காவல்துறையினர் அஜித்குமாரை கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்திருப்பது கடும் கண்டத்துக்குரியது.
எனவே, இவ்வழக்கில் தொடர்புடைய காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை.... ஒரு கட்சியின் தலைவர் வருங்கால முதலமைச்சராக வர வாய்ப்புள்ளவரை ஒரு அரசியல் தலைவரின் பிறந்த நாளில் விழாவை சிறப்பாக நடத்துவதை விடுத்து இப்படி சாலையில் செல்வோம் எங்கு சிலை இருக்கிறதோ மாலை போடுவோம் ரேஞ்சுக்கு நடத்துவது சரியா? என்னதான் அவர் இவர்கள் இசைவுக்கு ஒத்து வருகிறார் என்பதால் இப்படி செய்யலாமா? இதற்காகத்தான் புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமியை விமர்சிப்பது. அடையாறு மணி மண்டபம் எல்லாம் அவருக்கு தெரியாது.
நாங்கள் என்னதான் செய்யறது?
கபடி ஜெயிச்சா
கைய்விரலை வெட்டுறாங்க!
நல்ல படிச்சா
வாயில வெட்டுறாங்க!
புல்லட் ஓட்டுனா
கைய வெட்டுறாங்க!
கோயிலுக்கு நுழைஞ்சா
ஆளவச்சு அடிக்கிறாங்க!
காசு பணம் சம்பாதிச்சா
தண்ணியில் மலம்கழிக்குறாங்க!
இதெல்லாம் தட்டிக்கேட்டா
கூட்டணிக்கு பிரச்சனைங்றங்கா!
திருப்பி அடிச்சா
வன்முறை என்கிறாங்க!
நாங்கள் என்னதான் செய்யறது?
நாளெல்லாம் எங்கள் சேரி மட்டுமே எரியுது!
"விழுந்த பலிகளை கணக்கில் எடுப்போம்!
விடுதலைப் போரில் கடன் அடைப்போம்!!"
-ம. சங்கத்தமிழன்
VCK Youth Wing
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கிராமத்தில் அங்கு வசிக்கும் வன்னியர் சாதி இளைஞர்கள் இருபது பேர் பொது இடத்தில் உட்கார்ந்து மது குடித்து உள்ளனர் ஏன் இப்படி பொது இடத்தில் உட்கார்ந்து குடிக்கிறீர்கள் என்று கேட்டதற்காக அந்த இருபது சாதிவெறி சாக்காடைகளும் பட்டியலின அருந்ததியர் வீட்டைஅடித்து உடைத்து அவரையும் கடுமையாக தாக்கியுள்னர் இந்த தமிழ்நாட்டில் வளர்ச்சி மாற்றம் எல்லாம் அனைவருக்குமானதாக இருக்கும் பொருளிழப்பு உயிரிழப்பு வன்கொடுமை மட்டும் எங்களுக்கானதாக மட்டுமே இருக்கும் #சாதிவெறி_தமிழ்நாடு
சாதிவெறியர்களை ஒடுக்குவதில் இந்த அரசு பூஜ்யம்...😡
@CMOTamilnadu@Udhaystalin@tnpoliceoffl@SalemCollector
கீழ்ஜாதி ஒருவனுக்காக நகர்ந்து சென்று காட்சியளித்த சிவன் ~ அண்ணாமலை.
கீழ்ஜாதின்ன உடனே அவன உள்ள வரவிடாம, தான் இருந்த இடத்தை விட்டு காட்சியளித்தவன் கடவுளா?
இல்ல, கீழ்ஜாதி, மேல்ஜாதின்னு யாரும் இல்லை, எல்லாருமே சமம்ன்னு "கோயில் உள்நுழைவு போராட்டம்" நடத்தி எல்லாரயும் சமமாய் சாமி கும்பிட வைத்த "பெரியார் முதல் ஸ்டாலின்" வரையான தலைவர்கள் கடவுளா?!
எல்லாருக்கும் எல்லாமே சமமா கிடைக்கணும்னு நினைக்கிறவன்தான் உண்மையான கடவுள்,
ஏற்றத்தாழ்வு பார்த்தா அது கடவுள் இல்லை, "ஏஜெண்ட்"