“போதைப் பொருள் பயன்படுத்தியது போல்”
என்றால் என்ன ‘போல்’ தி.மு.க. தலைவர் அவர்களே?.
அப்படியெனில் அது பொய்யென்று நீங்களும் சொல்ல வருகிறீர்கள்தானே ‘போல்’ கொளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. அவர்களே?.
‘விமர்சித்ததால் கைதா?.’ வேடிக்கையாகப் பேசுவதில் நீங்கள் வல்லவர்தான் ஸ்டாலின் சார். செய்த வினைகளால் சிக்கி வரும்
உங்கள் அமைச்சர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் அனைவரையும்
விமர்சன வல்லுநர் ‘போல்' ஆக்குவதில் ஆகச்சிறந்த ‘போல்' அரசியல்வாதி நீங்கள்தான் ஸ்டாலின் சார்.
எதிர்க்கட்சிகளை மிரட்டுவதில் வல்லவர் நீங்கள்தான���. எதிர்க்கட்சிகளை மட்டுமா?.கூட்டணிக் கட்சிகளையும் கொடியேற்றக்கூட விடாமல் நீங்கள் செய்ததெல்லாம் ‘போல்' நல்ல அரசியலா ஸ்டாலின் சார்?.
எல்லோருக்கும் S.O.P என்றிருந்தபோது எங்கள் வெற்றித் தலைவருக்கு மட்டும் Stalin sir Operating Procedure போட்டவர்தானே நீங்கள் சார்?.
ஜனநாயக உரிமையான விமர்சனங்களை வரவேற்பவரே எங்கள் வெற்றித் தலைவர்.
லஞ்ச ஊழலை ஒழித்து நல்லாட்சியான மனசாட்சி உள்�� மக்களாட்சியைத் தரும் எங்கள் வெற்றித் தலைவர் அவர்கள், உங்களைப் போல ‘போல்' தலைவராக ஒருநாளும் இருக்க மாட்டார் என்பது மக்களுக்கே நன்கு தெரியும்.
இடைத்தேர்தலுக்காக மீண்டும் நல்லோர் வேடம் பூணத்துடிக்கும்
உங்களின் ‘போல்' அரசியலான போலி அரசியல் முகமூடி எல்லாம் விரைவிலேயே கழன்று விழத்தான் போகிறது.
முட்டுச்சந்தில் சிக்கிக்கொண்ட தி.மு.க விற்கு டேக் டைவர்ஷனுக்கு இனி வழியே இல்லை என்��து தெரிந்தும் டேக் ஆஃப் ஆகாத உங்கள் அரசியலைக் கண்டு நீங்களே ஃபீல் செய்து ரீல்ஸ் போட்டு மகிழும் நாள் வெகுதொலைவில் இல்லை.
கோட்டையிலேயே ரீல்ஸ் போட்டவர்தானே நீங்கள்?. உங்களுக்குத் தெரியாத ரீல்ஸா?.
ரியாலிட்டி புரியாமல் ரீல் விடும் 'போல்' தி.மு.க. தலைவர் அவர்களே.
நீட் தேர்வை நீக்கும் ரகசியம் தெரியும் எனப் பொய்வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய பொய்நிதி, போலிநிதி, மேலும் பல பொய்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.
ஒன்றிய அரசால் மட்டுமே நீட் தேர்வை நீக்க முடியும். மாநில அரசால் நீக்கவே முடியா���ு என்பதை மறைத்து, நீட்டை நீக்குவோம் என்ற ரகசியநிதியின் பேச்சையும் அவரது தந்தையின் பேச்சையும் நம்பி ஏமாற வேண்டாம். எனவே, நீட் நீக்கப்படும் வரை, அதை மட்டுமே நம்பி மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்பதற்காகத்தான் நீட் மட்டுமே உலகம் இல்லை என்று எங்கள் வெற்றித் தலைவர் சொன்னார். இதைத் திரி��்துக் கதை கட்டி விட்டிருக்கிறார், இந்தத் திரிபுவாதநிதி.
ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய தீயசக்தி, தன்னைப் போலவே பிறரையும் நினைக்கிறது. அந்தப் பிதற்றலைத்தான் ஸ்டிக்கர்நிதி ஸ்பீக்கர்நிதியாக மாறி, ஸ்பீட் காட்டி ரிபீட் மோடில் கீழே விழுந்து பல்லை உடைத்துக்கொள்கிறார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்திருக்கிறார் எங்கள் ���லைவர், மக்கள் விரும்பும் முதல்வர். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத முதல்வரில்லை, எங்கள் தலைவர். எனவே, தனக்குத்தான் பேசத் தெரியும் எனத் தன் அப்பாவுக்காகத் தப்புத் தப்பாக டப்பாவை உருட்ட வேண்டாம், தப்புத்தாளநிதி அவர்களே.
மேலும், எங்கள் வெற்றித் தலைவர், மக்களை மனதார முழுமையாக நம்பினார். மக்கள் எங்கள் வெற்றித் தலைவரை மனதார முழுமையாக நம்பினர். அதனால் வந்த வெற்றியைப் பார்த்த��ப் பொறாமைநிதியாகிப் புலம்பி இருக்கிறார், இந்த புலம்பல்நிதி.
போதும் நிறுத்திக்கொள்ளுங்கள் புளுகுநிதி. இல்லையேல் மக்கள் உங்களை மேலும் புறந்தள்ளி, கூப் சூப் உறிந்து குடிக்கும் வகையில் ஓரமாக அமர வைத்து��ிடுவார்கள்.
திரைப்படத்தில் தோன்றி, புகழ் பெற்றவராம், நம் வெற்றித் தலைவர். இல்லையென்று யார் சொன்னது? தலைவரே இதைத் தேர்தல் பிரசார இறுதிக் கூட்டத்தில் சொன்னாரே. ஆனால், இதுகூடத் தெரியாமல், தீர்ந்துபோன சக்தி, திரைப்படப் புகழ் என்று ஏளனம் பேசுவது ஏனோ?
வலுவான மக்கள் இயக்கமாக அ.தி.மு.க.வைக் கட்டமைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், அதைக் கட்டிக் காத்த ஜெயலலிதா அம்மையாரும் திரை���்படங்களில் தோன்றிப் புகழ் பெற்றதைத்தான் இப்படிச் சொல்லி ஏளனம் செய்கிறாரா இந்தத் தீர்ந்துபோன சக்தி?
அப்பழுக்கற்ற தொண்டர்கள் இயக்கத்தை அடகு வைத்து, கரைந்து காணாமல் போகச் செய்த இந்தத் தீர்ந்துபோன சக்தியை எம்.ஜி.ஆரின் ஆவியும் ஜெயலலிதா அம்மையாரின் ஆவியும் எப்படி மன்னிக்கும்?.
கோட் சூட், போட்டோஷூட் என்று நீங்கள் பேசுவது மட்டும் பணிவான பேச்சா? பண்பான பேச்சா, மிஸ்டர் தீர்ந்துபோ�� சக்தி?
ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்கூட ஆகாத எங்களைப் பார்த்து, முன்பு என்ன செய்தீர்கள் என்று கேட்கிறீர்களே, மற்றும் பலராக இருந்து மங்கிப் போன தீர்ந்துபோன சக்தியாரே. இது என்ன லாஜிக் தீ.போ.ச.?
குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியமே எங்களுக்கு இல்லை. தீய சக்தியுடன் நீங்கள் நடத்திய ரகசிய பேரத்திற்காக, தடம் மாறித் தடுமாறி ஓரமாக ஒதுங்கியதுதான் உலகமறிந்த பேரம். அதனால் எங்கள் மீது அவதூறு பரப்புவதை ��த்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது.
எங்கள் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற நிறைவேற, நீங்கள் அரசியலில் கரையேற முடியாமல் தத்தளிக்கப் போவதைத் தமிழகமே பார்க்கப் போகிறது.
பொதுச் செயலாளர் என்ற முறையில் தமிழகம் முழுமையையும் பற்றிப் பேசினால் பரவாயில்லை. ஒரே ஒரு மாவட்டத்தில் பெற்ற வெற்றியை மட்டும் சிலாகிப்பதன் அர்த்தம் என்ன? நீங்கள் மாவட்டத்துக்கு உள்ளேயே மடங்கி முடங்கி அடங்கிப் போனதாகத்தானே அர்த்தம்?
இந்த லட்சணத்தில், தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரும் என்கிறாரே தீ.போ.ச.! எத்தனை தேர்தல்கள் வந்தாலும் அத்தனையிலும் நீங்கள் மண்ணைக் கவ்வப் போவது நிச்சயம்.
கட்சியைக் காப்பாற்றவே கதறும் நீங்கள், எங்கள் வெற்றித் தலைவர் மக்கள் விரும்பும் முதல்வர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரைப் பற்றிப் பேசுவதைப் பார்த்து, சிலுவம்பாளையத்தில் இருக்கும் சிறுபிள்ளைகூடச் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. இந்த யதார்த்தம் புரிந்தால் சரி.
தமிழ்நாட்டின் அடிமடியில் கைவைத்துச் சுரண்டிய தீய சக்தியும், ஊழல் சக்தியும் 15 நாள் தூய ஆட்சிக்கே ஆடிப்போய் இருக்கிறார்கள்.
ஒரு நிர்வாகத்துப்புர���ை நடத்திக் கொண்டிருக்கிறார் வெற்றித்தலைவர் விஜய்.
அந்தத்துப்புரவில் 60 ஆண்டுகளாய் அகப்படாத ஆவணங்களும் சிக்கிக்கொண்டிருக்கின்றன; அகலவாய்த் திருடர்களின் சுரண்டல்களும் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
டாஸ்மாக் ஊழல் துர்நாற்றம் களையப்பட்டு வருகிறது. இதுவரை அடித்த கொள்ளை, மக்கள் முன் விளக்கப்பட்டு வருகிறது.
மின் துறையில் எரிபொருள், உபகரணம், மின் மாற்றி, துணை மின் நிலையம், ���ின் உற்பத்தி, மின் பகிர்மானம், மின் கொள்முதல், மின் துறை ஊழியர்கள் என ஷாக்கடிக்கும் ஊழல்களை சலவைக்குப்போட்டு வெளுத்து எடுத்துக்கொண்டிருக்கிறது வெற்றிக்கழக அரசு.
புகைப்படக்கலைஞர் முதல் உயர்நிலை அரசு செயலாளர் வரை அத்தனை நியமனங்கள��ம் ஒழுக்கமான, நேர்மையான நிர்வாகம் என அசைக்க முடியாத வரையறைக்கு கீழே கொண்டுவரப்பட்டுள்ளன.
தலை சுத்தமாக இருந்தால் தான், உடல் சரியாக இயங்கும். தலைமைச்செயலகம் என்கிற தமிழ்நாட்டின் நிர்வாகத்தலையை, மூளையை பீடித்திருந்த 'ப்ரோக்கர்' கலாச்சாரத்தை வெற்றித்தலைவர் அரியணையில் ஏறிய அடுத்து சில நாட்களுக்குள் அடியோடு ஒழித்திருக்கிறார்.
இனி வரும் எந்தக்காலத்திலும் ஊழல், கமிஷன், கையூட்டு இந்த வார்த்தைகளுக்கே இடமில்லை என்ற நிலையை தமிழ்நாட்டை நகர்த்திக்கொண்டிருக்கிறார் மனசாட்சியுள்ள மக்களாட்சியின் முதலமைச்சர்.
இந்த களையெடுப்பு நிர்வாகம், ஊழலிலும் சுரண்டலிலும் ஊறித்திளைத்து மாறி மாறி ஊழல் டீலிங் ஆட்சி நடத்தியவர்களின் தூக்கத்தையும், கனவுகளையும் குலைத்துப்போட்டிருக்கிறது.
விரைவில் தமிழ்நாடு நிர்வாகம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டிருக்கும்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தொடங்கிய கட்சியை, புரட்சித் தலைவி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் கட்டிக் காத்த கட்சியை அடகு வைத்த ஒருவர் இருக்கிறார். தன் சொந்தத் தொகுதியிலேயே, விசில் சின்னத்தைக் கண்டு வீரிட்டு அலறி, தான் வெல்வது கடினம் என்று உணர்ந்து, த.வெ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரை, பேரம் பேசி ஓரம் கட்டி மறைத்து வைத்த உத்தம புருசர் ஒருவர் இருக்கிறார்.
தீரம் மிக்க சக்தியாக இருந்ததை, தன் சுயநலத்தால், அகம்பாவ��்தால், தீர்ந்துபோன சக்தியாக மாற்றிய, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அம்மையாரின் அப்பழுக்கற்ற தொண்டர்களால் ஒதுக்கப்பட்டு, தனித்து விடப்பட்ட ஒருவராக இருப்பவர், தன் நிலை உணராமல் பேசி வருகிறார்.
தீய சக்தியுடன் மறைமுக பேரம் பேசி, திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு, கள்ளக் கூட்டணி ஆட்சியை அமைக்க இருந்தவர், த.வெ.க.வைப் பார்த்து அவதூறாகப் பேசுவது, எந்த வகை அரசியல் ஒழுக்கம் என்று தெரியவில்லை.
தலைமைக்குத் தகுதி இல்லாததால்தானே கட்சியினர் சரியான தலைமையைத் தேடி நகர்கின்றனர். இதைக்கூட உணராமல், அர்த்தமற்று அவதூறு பேசினால், மக்கள் மட்டுமல்ல, எம்.ஜி.ஆரின் அப்பழுக்கற்ற தொண்டர்களும் நம்பப் போவதில்லை. இந்த யதார்த்தம் புரியாமல் இருந்தால், யார்தான் என்ன செய்ய?
மாபெரும் மக்கள் சக்தி, மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர் சக்தி ஆதரவு பெற்ற த.வெ.க. ஆட்சிக்கு வந்ததைக் கண்டு தீய சக்திக்கும் தீர்ந்துபோன சக்திக்கும், தீரவே தீராத புகைச்சலும் குமைச்சலும் வந்துள்ளன. அதனால்தான் தீய சக்தியின் வார்த்தைகளைக்கூடக் கடன் வாங்கிப் பேசி, தங்கள் கள்ளக் கூட்டை வெளிப்படுத்தி அகப்பட்டுள்ளார், ���ந்த எடுபடாத அரசியல் ஆட்டக்காரர்.
விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை மனசாட்சி உள்ள மக்களாட்சி அரசு வெளியிட்டுள்ளது. அதைப் பொறுக்க இயலாமல்தான் தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் ஒரே நேரத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தங்களை ஏமாற்றிய தீய சக்தியையும் தீர்ந்துபோன சக்தியையும் தூக்கி எறிந்துதான் தூய சக்தியான த.வெ.க.வைத் தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தனர். இது புரிய���மல் இருவரும் கூட்டு சேர்ந்து கும்மியடித்தால் இருவரின் கரகாட்டமும் கலக ஆட்டமும் மேலும் மேலும் அம்பலப்பட்டு அசிங்கப்படப் போவது உறுதி.
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்க���் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
#CMJosephVijay
சொன்னதைச் செய்தார்!
மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் சொன்னதைச் செய்துகாட்டுபவர்!
ஒரே கட்சி ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் வசம் வைத்திருக்கும் நிலையை மாற்றி, மக்களுக்கான ஜனநாயக ஆட்சியில் அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்று அதைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளார்.
தேர்தலுக்கு முன்பாகவே, தங்களை நாடி வரும் மற்றும் தங்களுடன் கை கைகோர்க்க நினைக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு தகுந்த மரியாதையையும், அதிகாரத்தில் சம பங்கையும் உறுதி அளித்துள்ளார். அதிகாரம் ஒரு இடத்தில் குவியாமல், தரைமட்ட தொண்டன் வரை, கூட்டணிக் கட்சிகள் வரை பரவலாக்கப்பட வேண்டும்.
சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது தான் தலைவரின் பாணி என்பதற்கு இத���வே ஆகச்சிறந்த உதாரணம். மாநாட்டு மேடையில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் கொடுத்த வாக்குறுதியை, தனது அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் அவர் பிரதிபலித்து வருகிறார்.
"ஆட்சியில் பங்கு" என்பது வெறும் வார்த்தை ஜாலம் என்று நினைத்தவர்களுக்கு மத்தியில், "சொன்னதைச் செய்வார், செய்வதையே சொல்வார்" என்பதற்கு இணங்க, தலைவர் விஜய் அவர்கள் விக்கிரவாண்டியில் விதைத்த கொள்கை விதையை இப்போது செயலாக மாற்றி வருகிறார். இது தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் பாதையை மாற்றியமைக்கும் ஒரு புரட்சிகரமான நகர்வாகும்.
A history is made..
From a thought… to a vision… to this moment.
Happy to have met our honourable CM @TVKVijayHQ na today and present the very first manifestation of #GOAT. ❤️❤️❤️
This is only the beginning.
TN07CM2026
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும்,
வணக்கம்.
இன்று சட்டமன்றத்தில் மக்கள் அரசு, அதாவது நமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்கள் நலன் விரும்பும் முதலமைச்சர�� என்ற முறையில் நாம் கொண்டு வந்தோம். அதன் மீதான விவாதம் நடைபெற்றது.
மக்களே… நீங்கள் மிகப் பெரும் நம்பிக்கை வைத்துள்ள உங்கள் அன்பிற்குரிய அரசை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு சட்டமன்றக் கட்சியினரும் பேசினர். சிலர் நடுநிலை வகிப்பதாகவும் தெரிவித்தனர். சிலர் வெளிநடப்பும் செய்தனர்.
நம்பிக்கைத் தீர்மானம் மீதான ஆதரவு மற்றும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், எண்ணிக் கணக்கிடு���் முறையில் அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பின்படி, உங்கள் அரசு மீது நம்பிக்கை வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 144. எதிர்ப்பு தெரிவித்தோர் 22. நடுநிலை வகித்தோர் 5. பங்கேற்காதோர் 60. இதன் மூலம், மக்கள் ஆதரவு பெற்ற தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில் மகத்தான வெற்றி பெற்றதாக மாண்புமிகு பேரவைத் தலைவரால் பேரறிவிப்பு செய்யப்பட்டது.
நமது மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்த அனைத்து இயக்கங்களைச் சார்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல, நம்மை ஆதரித்த அனைத்து இயக்கங்களின் தலைவர்களுக்���ும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சட்டமன்ற நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்யும்போது, ஆளும் கட்சிக்கான ஆதரவை மட்டும் காட்டுவது ; எதிர்ப்பை மக்கள் யாரும் பார்க்க முடியாமல் செய்யும் வகையில் நேரலையை நிறுத்தி இருட்டடிப்புச் செய்வது என்பது போன்று சட்டமன்றத்தில் நாம் எதையும் ஒளிக்கவில்லை. மறைக்கவில்லை. அனைத்தையும் இன்றைய நேரடி ஒளிபரப்பில் உலகமே பார்த்ததுதான் அதற்கு உறுதியான சான்று.
தமிழக மக்களே… நீங்கள் அனைவரும் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க விரும்பினீர்கள் என்பது நமக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும், சில சூழல்களால், நமக்கு வாக்களிக்க இயலாமல் போனவர்கள், இப்போது மனம் வருந்துவதையும் நம்மால் உணர முடிகிறது. இனிவரும் காலங்களில் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் உங்கள் தமிழக வெற்றிக் கழகம் பெற��ம் என்பதையும் உறுதியாக நம்புகிறோம்.
இன்று, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் சிலர் பேசியதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அது குறித்து, சில விளக்கங்களை நம் உறவுகளாகிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டியது மக்களின் முதல் மற்றும் உண்மைப் பிரதிநிதியான நமது கடமை.
பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை என்ற அரதப் பழைய, புளித்துப்போன வாதத்தை ம��ண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வழக்கம் போலான அவரது பாணியில் எடுத்து வைத்தார்.
அது குறித்து, தமிழக மக்களான நீங்கள் அனைவரும், 2006-இல் 100 சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளிலும் வென்று, ‘தனிப் பெரும்பான்மை பெற்று(?)’ அமைந்த தி.மு.க. அரசை நினைத்துப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து இருப்பீர்கள் என்பதும் நாடே அறிந்ததுதான்.
எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போத��ம் யதார்த்தம் புரியவே போவதில்லை. ஆகவே, மக்களிடம் நாம் வாக்குகள் குறித்த சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம்.
நம் த.வெ.க.விற்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 34.92. அதாவது ஏறக்குறைய 35 சதவிகிதம். ஆனால், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் சார்ந்த கட்சியான தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளையும் பெற்றுத்தான் சில தொகுதிகளிலாவது வென்றது என்பது உண்மை என்றாலும், தனிப்பட்ட முறையில் தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் மட்டும் எவ்வளவு தெரியுமா?. வெறும் 24.19 சதவிகிதம் மட்டுமே. அதாவது கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட நம் த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட 10 சதவிகிதத்திற்கும் கீழ். ��ிகவும் குறைவு.
அதேபோல, தி.மு.க. தனிக் கட்சியாகப் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 மட்டுமே. ஆனால், நம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகள். தி.மு.க.வை விட 52 லட்சத்து 97 ஆயிரத்து 65 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். ஏறக்குறைய அரைக் கோடிக்கும் அதிகமான மக்களின் வாக்குகள் அவை.
இவை எல்லாம் நாம் சொல்லும் கணக்கன்று. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கு. இது தெரிந்தும், புள்ளிவிவரப் புலி தி.மு.க. எடுத்து வைக்கும் வாதத்தை என்னவென்று சொல்ல?
இது மட்டுமா? நம் த.வெ.க.வை 3 கோடியே 21 லட்சம் (இதில் சில லட்சம் வாக்குகள் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது) மக்கள் நிராகரித்ததாகத் தி.மு.க. சார்பாகக் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால், தி.மு.க. மட்டும் தனியாக வாங்கிய வாக்குகளின்படி 3 கோடியே 68 லட்சம் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிதான் தி.மு.க.
சதவிகிதக் கணக்குப்படி பார்த்தாலும் த.வெ.க. 35 சதவிகிதம் எனில், தி.மு.க. 24 சதவிகிதம்தான். அதன்படி பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் தி.மு.க.வே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்துள்ளனர்.
இப்படி தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன?
மக்கள் மீது கடன்சுமையை ஏற்றி வைத்துவிட்டு, அது வளர்ச்சிக்காகப் பெற்ற கடன் என்று வாய்வித்தைக் காட்டும் தி.மு.க., நம்மைப் பார்த்து ஆதரவைக் கடன் பெற்றதாகக் கூறி உள்ளதை என்னவென்று சொல்ல?
மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதால்தான் நமது அரசைக் க���ங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரித்தன. அதை அக்கட்சிகளின் தலைவர்கள் ஊடகங்களிலும் வெளிப்படுத்தினர். இதையும் தி.மு.க. ஏளனமாகப் பேசி உள்ளது எந்தக் கணக்கில் என்று புரியவில்லை. அதையும் மக்களான உங்கள் பார்வைக்கும் முடிவுக்குமே விட்டுவிட��கிறோம்.
மக்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியான நம் த.வெ.க. ஆட்சி அமைத்துவிடவே கூடாதென, தி.மு.க. செய்த வேலைகளால் அதன் டீசண்ட் வெர்ஸன் அம்பலமான கதை ஒன்று நாடெங்கும் உலவுவதையும் நாம் நாட்டு மக்களிடமே விட்டுவிடுவோம். இதில் வேறு, த.வெ.க. ஆட்சிக்குத் தடையாக இருக்க மாட்டோம் என்ற பெருந்தன்மைப் பாடலைக் கீறல் விழுந்த ரெக்கார்டில் இசைக்க விடுவதெல்லாம் வேறு ரகம்.
நாம் இப்போதும் சொல்கிறோம். ஆதாரப்பூர்வமான குறைகளை யார் வைத்தாலும், அதை ஏற்று உடனடியாகத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்களே நாம். ஆனால், நமக்கு எதிராகத் தன் சொத்தை வாதங்களை மக்கள் மன்றத்தில் வைத்துத் தோற்ற தி.மு.க., இப்போது அதையே சட்டமன்றத்திலும் தொடர்கிறது. அதையும் மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறோம்.
நம்பிக்கை இல்லாததால்தான் நாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகக் கூறினார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும்கூடவா புரியவில்லை? அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட தி.மு.க. அமைச்சர்கள் 15 பேரின் தோல்வியைப் பார்த்தும்கூடவா இன்னும் புரிந்துகொள்ளவில்லை? இயல்புநிலை புரியாமல் இப்படியே தொடர்ந்தால், மக்களே இனி வரும் காலங்களில் தி.மு.க.விற்கு இன்னும் நன்றாக, ஆழமாக உணர்த்திப் புரிய வைப்பர்.
நம் மக்களுக்கு, ஒட்டுமொத்தமாக நாம் நன்றி சொன்னதை மறந்துவிட்டு, நன்றி சொல்லவில்லை என்று நாம் போட்டியிட்ட தொகுதிகளைப் பிரித்துப் பேசி, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது புரிதலே இல்லாத தி.மு.க.
நம் மக்களை நாம் விரைவில் சந்திப்போம் என்பது நம் மக்களுக்கும் தெரியும். நமக்கும் த���ரியும். ஆகவே, அதற்காகத் தி.மு.க., அக்கறையாக இருப்பதுபோல டிஜிட்டல் முறையில் தேம்பி அழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நாகரிகமான பதிவு (டீசண்ட்டான வெர்ஸன்) குறித்துத் தி.மு.க. பேசியது. நம்முடைய அரசியல் நாகரிகமும் டீசண்ட் வெர்ஸனும் எப்படிப்பட்டது என்பதைத் தமிழகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏன், அவர்களும் பார்த்தார்கள். தி.மு.க. என்னதான் நம்மை அர்த்தமற்ற முறையில் ஏளனமாகப் பேச���னாலும், நாம் எப்போதும் நாகரிகம் காக்கும் நயத்தகு இயக்கமாகவே இருப்போம். அதிலே மாற்றமே இல்லை. அறிஞர் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலிலும் நாம் பின்பற்ற விரும்புகிறோம்.
இன்று, நமக்கு ஆதரவு அளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்துப் பேசுகையில், தி.மு.க. ஏதோ தாங்கள் சுத்தம் சுயம்பிரகாசம் போலப் பேசியதுதான் மிகப் பெரிய நகைச்சுவை. 1999இல் பா.ஜ.க. கூட்டணியைத் திடீரென நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்த கதையை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதன் பிறகு, அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி போட்டு வென்று, பேரம் பேசி, மந்திரி பதவிகள் பெற்றதையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை.
சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், பா.ஜ.க.வுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்துவிட்டே நமது ���ரசை ஆதரித்து வாக்களித்தனர் என்பது தி.மு.க.வின் அவதூறு கண்களுக்கு வேண்டுமெனில் தெரியாமல் போகலாம். ஆனால், மக்கள் நமது தூய எண்ணத்தை உணர்ந்தே இருக்கின்றனர்.
தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 1999-இல் சேஞ்ச் என்று கூறி எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டது என்ன என்பதை நாடே அறியும். ஆனால், நாம் சேஞ்சையும் சேலஞ்சையும் நம்பி உறுதியாக, உண்மையாக அரசியல் களத்தில் நிற்பவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆகவ���, எதற்காகவும் தி.மு.க. போல எதையும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அவசியமே இல்லை.
மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் புஷ்பா அரசு என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
மக்களே… உங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் புண்படுத்தட்டும். நமக்கு எதிராகப் புறம் பேசட்டும். புலம்பல் பாடல்கள் இசைக்கட்டும். நாம் அதைப்பற்றிக் கவலைப்படவே போவதில்லை. மக்கள் பணியும் மக்கள் நலனும் மட்டுமே நமக்கு முக்கியம்.
மேஜிக்கல் நம்பர் நமக்கு இல்லை என்று கூறும் தி.மு.க., அவர்கள் செய்ய முடியாத மக்கள் நலன் சார்ந்த பலவற்றை மேஜிக்கலாகவும் மிராக்கிளாகவும் நமது அரசு செய்து காட்டப் போவதைப் பார்க்கத்தான் போகின்றனர். ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நாம் சாதித்துக் காட்டத்தான் போகின்றோம். அப்போதும் சொத்தைக் காரணங்களைக் கூறி, இந்தத் தி.மு.க. தப்பிக்கத்தான் பார்க்கும். அதையும் நம் மக்கள் பார்க்கத்தான் போகின்றனர்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி நாம் இருக்கவில்லை. மக்களின�� உணர்வுகளை நம்பி மட்டுமே நாம் இருக்கிறோம். இது புரியாமல், ரீல்ஸ் என்றும் ரியல் என்றும் தனது ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே தி.மு.க. திமிராகப் பேசுகின்றது. ஆனால், இப்படிப் பேசிக்கொண்டே ரீல்ஸ் உலகில் மிதக்கத் தொடங்கி உள்ளதும் ரியாலிட்டி அறியாத இதே தி.மு.க.தான்.
மக்களே… தோல்வியில் மூழ்கித் திக்கித் திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க., ��ம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும். அதைப் பற்றி நாம் கண்டுகொள்ளவே போவதில்லை. நாம் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த செயல்களிலும் திட்டங்களிலும் சட்டங்களிலும்தான் ஈடுபடப் போகிறோம். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி.
மனசா��்சி உள்ள மக்களாட்சி அமைத்துள்ள மக்கள் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம், இன்று சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. மக்கள் நம்பிக்கை மூலம் அமைக்கப்பட்ட நமது அரசுக்கு ஆதரவு அளிக்கப்பட்டும் வாக்களிக்கப்பட்டும் நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்குக் காரணமான, நம்மை ஆதரிக்கும் மதிப்பிற்குரிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், அக்கட்சிகளைச் சேர்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதே வேளையில், என்றும் நம்முடன் நிற்கும் நம் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நமது அன்பினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த வேளையில், தேர்தலில் நம்மை நம்பிய மக்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவிக்க வேண்டியது நமது கடமை. தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி.
இதில் என்ன தவறு.? என்னிடம் கார் இல்லை.. காலில் செருப்பு கூட இல்லாமல் அரசு பேருந்தில் சட்டசபைக்கு வருகை தந்து அசர வைத்த கேவி குப்பம் தவெக MLA தென்றல் குமார் #KVKuppam 🥺🙏
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு அமைச்சர்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் சட்டமன்றப் பேரவை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. எம். ரவிசங்கர் ஆகியோரை வாழ்த்தி உரையாற்றினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் சட்டமன்றப் பேரவை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. எம். ரவிசங்கர் ஆகியோரை வாழ்த்தி ஆற்றிய உரை.
#CMJosephVijay