பெற்றோர்களே தன் பிள்ளைகளை உற்று கவனியுங்கள்.
செல்லமா வளர்க்கிறேன் என்று அவன் எதிர்காலத்தை நீங்களே புதைக்கிறீர்கள்.
எது சரி எது தவறென்று புரிய வையுங்கள்.
அவனுக்காக செய்தேன், என் பொண்ணு, பேத்தி ஆசைப்பட்டாள் என்று செய்தேன் என்று அடுத்த தலைமுறையை குலைத்து விடாதீர்கள்.
''அடுத்த மாசம் நான் கரண்ட் பில் கட்ட மாட்டேன்... யார் வந்தாலும் உதைதான்.. போன் பண்ணா Response இல்ல..'' ஆறு மணிநேரமாக மின் வெட்டால் அவதியடைந்த பொதுமக்கள் சாலை மறியல்.. போலீசாருடன் கடும் வாக்குவாதம்
TNEB | People Protest | Police
#Newstamil24x7#PoweCut
அரசுப் பள்ளியை மூடுவதாக தவறான தகவலை பிரச்சாரத்தில் பேசியது தவெக தலைவர் விஜய்
அரசு பள்ளியில் ஆய்வு என்ற பெயரில் இழிவுபடுத்தியது அமைச்சர் கீர்த்தனா
இப்போது உசிலம்பட்டியில் மட்டும் 3 கிராமப்புற அரசு பள்ளிகளை மூடி இருக்கிறது தவெக அரசு
மானங்கெட்ட மாற்றம் 🤦
செருப்பை கவ்வக் கொடுத்து அடித்து விட்டது சத்தியம் தொலைக்காட்சி ......திரை மோகத்தால் சீரழியும் தமிழ்ச் சமூகம் ......பொறுப்பை உணருங்கள் ....வெறுப்பைக் கக்க வேண்டாம் ......
அதென்ன கரூர்ல இவன பாக்க வந்து செத்துப் போனவங்களுக்கு மட்டும் அரசு வேலை?
விக்கிரவாண்டி, விழுப்புரம், சேலம், மதுரைனு போன இடத்துக்கு எல்லாம் இவன பாக்க போய் செத்தவனுங்க என்ன தக்காளி தொக்கா 😏
குதிரை பேர வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்
பாவம் ஆதவ் அர்ஜுனா நடிகர் விஜய்.
விஜய் கரூர் செல்லும் போது அங்கே செந்தில் பாலாஜி இருக்கக் கூடாது
என்று கடுமையாக முயன்றும் விஜயால் முடியவில்லை 😂😂😂
இப்படித்தான் ஒண்ணு ஒண்ணா கையை விட்டு போகும்… விசில் போட்டுட்டே இருங்க!
இறுதியில் பாதிக்கப்படப் போவது தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறையின் எதிர்காலம்தான் ☹️☹️☹️
நேற்று: ஐயா எங்க அரசை கவிழ்க்க சதி என்று வாதாடிய TVK வக்கீல்
இன்று; கோழி திருடு போயிரும் என்று கனவு கண்டோம்
என்ன காரணம்???
தெரியுமா???
இந்த வீடியோ பாருங்க
இந்த திருட்டு கூட்டம் நிச்சியம் தமிழ்நாட்டை விற்க தயங்காது .
திமுக @DMKITwing என்றால் சும்மா இல்ல டா சட்ட அறிவின் களஞ்சியம்.💐
அண்ணன் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் அண்ணன் அவர்களுக்கு எப்படி முன் ஜாமீன் கிடைத்து என்று தெரிந்து கொள்ள இந்த பதிவு முக்கியம்.
#dmk
@DMKITwing
சென்னையில் மிகவும் பிரபலமான அரசு உதவிபெறும் ஒரு தனியார் பள்ளி. ஏழை மாணவர்கள் முதல், தினமும் காரில் வந்து இறங்கும் அளவிற்கு வசதிப்படைத்த மாணவர்கள் வரை படிக்கும் பள்ளி.
நான் 10-ஆம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன். ஆனால் அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பிற்கு தமிழ் மீடியம் இல்லாததால், கட்டாயமாக ஆங்கில மீடியத்தில் சேர வேண்டிய சூழல் ஏற்பட்டது.
11-ஆம் வகுப்பு முதல் வாரம். பயாலஜி வகுப்பு. கரப்பான்பூச்சியின் உடல் அமைப்பு பற்றிய பாடம் நடந்துகொண்டிருந்தது.
அப்போது ஆசிரியர், "Cockroach crushes food with the help of its..." என்ற பாடத்தில் வரும் வாக்கியத்தை எடுத்துக்கொண்டு, திடீரென என்னை எழுப்பி,
"What does 'crush' mean?" என்று கேட்டார்.
'Crush' என்றால் "நசுக்குவது" என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதை ஆங்கிலத்தில் சரியாக எப்படி சொல்லுவது என்று தெரியாமல் சில நொடிகள் crush means, crush means என கூறிக்கொண்டே நின்றேன்.
உடனே என் அருகில் இருந்த சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய மாணவனை எழுப்பி,
"You say... What does 'crush' mean?" என்று கேட்டார்.
அவன் உடனே,
"Crushing means breaking something into small pieces."
என்று பதிலளித்தான்.
அவனை அமரச் சொல்லிவிட்டு, ஆசிரியர் என்னைப் பார்த்து தமிழில் பேச ஆரம்பித்தார்.
"10-ஆம் வகுப்பு எங்கே படிச்ச?"
"இதே பள்ளியில் தான், சார்... தமிழ் மீடியம்."
"வேற பள்ளியில் தமிழ் மீடியத்தில் சேர்ந்திருக்க வேண்டியதுதானே? இங்கே வந்து சாதாரண வார்த்தைக்குக் கூட அர்த்தம் சொல்லத் தெரியாமல் எங்களை ஏன் கஷ்டப்படுத்துற? உன்னால இங்கிலீஷ் மீடியம்ல படிச்சு இவங்களோட போட்டி போட முடியாது."
அவ்வளவுதான்...
எனக்கு அழுகையே வந்துவிட்டது.
11, 12 ஆம் வகுப்பில் சில மாணவர்கள் நான் தமிழ் மீடியம் மாணவனென என்னை ஒதுக்கியது வேறு. ஆனால் ஒரு ஆசிரியரே இப்படி சொல்லியதும், என் தன்னம்பிக்கை முழுவதும் உடைந்தது.
அன்றிலிருந்து இரண்டு ஆண்டுகள், முதல் பெஞ்சில் அமர்ந்த நான், கடைசி பெஞ்சுக்குப் போய்விட்டேன். ஆசிரியர் என்னைக் கேள்வி கேட்டுவிடுவாரோ என்ற பயத்தில், முன்னால் அமர்ந்திருந்த மாணவர்களின் பின்னால் மறைந்து கொண்டே வகுப்பில் இருந்தேன்.
இறுதியில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்தேன். ஒரு வருடம் வீட்டிலேயே முடங்கி, உடைந்து கிடந்தேன்.
இன்று அமைச்சர் கீர்த்தனா செய்த செயலைப் பார்த்தபோது, அந்த பழைய நினைவுகள் அனைத்தும் மீண்டும் மனதில் வந்துவிட்டன.
எனக்குள்ளும் அதே பதற்றம், அதே பயம் மீண்டும் எழுந்ததை உணர முடிந்தது.
என்னுடைய ஒரே பயம்...
என்னைப் போலவே அந்த குழந்தையும் தன்னம்பிக்கையை இழந்துவிடக் கூடாது.
"இது நமக்கு வரவே வராது" என்று நினைத்து, தனது கனவுகளையே விட்டுவிடக் கூடாது.
மாணவர்களிடம் குறை இருப்பின் ஆசிரியருடன் தனியாக கலந்துரையாடி.. அவர்களின் ஆங்கில புலமையை மேம்படுத்த அறிவுறுத்திருக்கலாம்.
ஆனால், Public Stunt காக, ரீல்ஸ் காக மற்றவர்கள் முன் உங்கள் அதிமேதாவி தனத்தை காட்டுவதாக நினைத்து மாணவர்களை மட்டப்படுத்தி தன்னம்பிக்கையை உடைத்துவிடாதீர்கள்.. 🥺🙏🏼
அருண் குமார் அறிவுக்களஞ்சியம்
MCA, MBA, LLB, Msc.(Counselling Psychology), M.S, M.A.(Political Science)..
MNC ஊழியர்..