'மாண்புமிகு முதல்வரின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்போலோ மருத்துவமனை தரப்பில் அளிக்கப்படும் அறிக்கையை தவிர மற்ற தகவல்கள் உண்மை அல்ல" - தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
@CMOTamilnadu@TNDIPRNEWS
திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் #CBCID தனது விசாரணையைத் தொடரலாம் என்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்திருக்கிறது.
இருந்தாலும், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை #CBI-க்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்.
#CBI விசாரணைக்குத் தமிழ்நாடு அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்!
“Justice must not only be done, but must also be seen to be done”
கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்து அறிவியல் வழியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம்.
கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் ஒன்றின் பின் ஒன்றாக உலக அரங்கில் நிரூபிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி!
அரசியல் அப்பாற்பட்டு ஒரு casual பேட்டி
A Breezy Interview to Logeshwari @am_logii for Logi'cally YouTube channel
Interview link:
https://t.co/IHYUPjPBx8
இந்தியன் ஆயில் - சென்னை பத்திரிகையாளர் மன்றம் ' CPC Cricket League 2025'
பத்திரிக்கையாளர்கள் இடையிலான 'கிரிக்கெட் போட்டி'யில் பெண்கள் அணி 'Power Pen Titans' என்ற பெயரில் சிறப்பாக தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்...
பெண்கள் அணிக்கு வாழ்த்துகள்.. ❤🔥
இரும்பின் தொன்மை குறித்து வரலாற்று முக்கியத்துவம் பெற்ற அறிவியல் ஆய்வு முடிவுகளை மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் உலகிற்கு அறிவித்த ஒரு சில தினங்களில், கடலூர் மாவட்டம் மருங்கூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில், 257 செ.மீ. ஆழத்தில், , 22.97 கிராம் எடையும், 13 செ.மீ நீளமும், 2.8 மி.மீ தடிமனும் கொண்ட இரும்பினாலான கத்தி உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில், இரும்பினாலான அம்பு முனை, ஆணிகள் கிடைத்து வந்த நிலையில், தற்போது கத்தி கிடைத்துள்ளதன் மூலம், தொல் தமிழர் நாகரிகம் இரும்பின் பயன்பாடு அறிந்து, அதன் நுட்பங்களை கற்றுத்தேர்ந்திருந்தது புலப்படுகிறது.
இதற்கு முன்னர் மருங்கூர் அகழாய்வில், இராஜராஜ சோழன் காலத்துச் செம்பு காசுகள், அஞ்சனக் கோல், அகேட், சூதுபவளம், கண்ணாடி மணிகள், ரெளலட்டட் பானை ஓடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது இரும்பினாலான கத்தி கிடைத்துள்ளதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தளம் இது என்பது உறுதியாகியுள்ளது.