முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது பெருமுயற்சியால் உருவான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை முனைவர் மா. செல்வராசன் அவர்களுக்கு வழங்கி,
@tnschoolsedu சார்பில் வகுப்பறை உட்கட்டமைப்பினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தேன்.
மேலும், பல துறைகளிலும் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணைகளையும், கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் வழங்கினேன்.
#என்_உயிரினும்_மேலான போட்டியின் வழியாக நம் இயக்கத்திற்குக் கிடைத்த 182 இளம் பேச்சாளர்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நான் சொன்னதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் பல கூட்டங்கள் கழகத்தினரால் நடத்தப்பட்டு வருகின்றன. வாழ்த்துகள்!
சென்னையில் இன்று நடைபெற்ற அத்தகையதோர் கூட்டத்தை நேரில் கண்டபோது, திராவிடத்துக்கு எதிரான திரிபுவாதங்களைத் தவிடுபொடியாக்கும் கருத்தியல் தெளிவுமிக்க இளைஞர் படையால் 'இன்னும் ஒரு நூற்றாண்டுக்குத் திராவிட இயக்கம் இதே வீரியத்துடன் இருக்கும்' என்ற நம்பிக்கை வலுப்பெற்றது.
#A_New_History_Rising
ஏழாவது முறையாகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்க விருதுநகரின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றியைப் பெற்றுத் தருவோம் என நிர்வாகிகள் கூட்டத்தில் உறுதியளித்தார்கள்…
படிக்க உதவிட வேண்டும் என 2021-ஆம் ஆண்டு மாணவி ஷோபனா எனக்குக் கடிதம் எழுதினார். அவர் கல்லூரியில் சேரவும் படிக்கவும் உதவினேன்.
மூன்றாண்டுகளில் தனது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து, வேலைக்குச் செல்லும் அவரை அழைத்து வாழ்த்தினேன்.
ஒரு பெண் கற்கும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாய் விளங்கும் என்பதையுணர்ந்து, பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்!
📜 நிலமும் வீடும் பெரும்பான்மையான மக்களின் கனவு! அதனை ஈடேற்றும் வகையில் 40 ஆயிரம் பேருக்குப் பட்டா உட்பட,
🔹 ரூ.417.21 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை
57,556 பயனாளிகளுக்கு வழங்கி,
🏢 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம்,
🏫 ரூ.21.36 கோடி செலவில் முடிவுற்ற 34 பணிகள் ஆகியவற்றைத் திறந்து வைத்தேன்.
களத்திற்கு நிகராக சமூக வலைத்தளத்திலும், நம் இளைஞர் அணியினர் கழகப் பணியாற்றும் விதமாக, மண்டல வாரியாக சமூக வலைத்தளப் பயிற்சியை ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி வைத்தார் மாண்புமிகு துணை முதலமைச்சரும் கழக இளைஞர் அணிச் செயலாளருமான @Udhaystalin அவர்கள்.
இதுவரை ஆறு மண்டலங்களைச் சேர்ந்த மாவட்ட-மாநகர-மாநில நிர்வாகிகளுக்கான சமூக வலைத்தளப் பயிற்சி நடந்து முடிந்துள்ள நிலையில், மண்டலம் 9-ஐ சேர்ந்த நிர்வாகிகளுக்கான சமூக வலைத்தளப் பயிற்சி இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் @YGFHDqykgm4VBP9 முன்னிலையில், மதுரையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமூக வலைத்தளத்தின் முக்கியத்துவம் குறித்து @SuriyaKML அவர்களும், சமூக வலைத்தளத்தை ஆக்கப்பூர்வமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து,
@Illamaran21 அவர்களும் பயிற்சி அளித்தனர்.
சமகால அரசியலில் சமூக வலைத்தளத்தின் தாக்கமும், அதை நம் இளைஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆர்வத்துடன் பயன்படுத்த வேண்டியதன் அவசியமும் இந்நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டன.
#DMKYW_SMTraining
திரையுலகின் மூத்த கலைஞர் திரு.டெல்லி கணேஷ் சார் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மேடை நாடகங்களில் தொடங்கி 400-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர். குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் என, தான் ஏற்று நடித்த அனைத்து கதாபாத்திரங்களிலும் தன் முத்திரையை பதித்தவர்.
சின்னத்திரையிலும் தன்னுடைய நடிப்பாளுமையை வெளிப்படுத்திய திறமைக்கு சொந்தக்காரர். அவரின் மரணம் கலையுலகிற்கு பேரிழப்பு.
டெல்லி கணேஷ் சாரின் மரணத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவால் வாடும், குடும்பத்தார், நண்பர்கள், கலையுலகினர் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
#DelhiGanesh