பாரம்பரியமான, ஜனநாயகத்தை காக்க ஏற்படுத்தப்பட்ட சுயாதீனமான நிறுவனமயமான அமைப்புகள் – குறிப்பாகப் பெரு ஊடகங்கள், நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை – ஆகியவை சரிந்துவிட்டதன் விளைவை டெல்லி இப்போது எதிர்நோக்குகிறது.
முன்னர் நிர்வாகத்தில் தவறு நிகழ்ந்தால், அதனை ஊடகங்கள் வெட்டவெளிச்சமாக்கும் , நீதிமன்றங்கள் தாமாகவே முன்வந்து விசாரிக்கும் , ஏதாவது சிக்கல் என்றால் நாடாளுமன்றம் சிறப்பு விவாதம் நடத்தும், இவை அனைத்தும் தோல்வியுற்றதால், தங்களுடைய எதிர்காலம் கேள்விக்கு உள்ளாவதால் இளைஞர்கள் வீதிக்கு வந்துள்ளார்கள்.
இந்த இளையோர் போராட்டம், வெறும் தர்மேந்திரா பிரதான் க்கு எதிரான போராட்டம் அல்ல, இது மோடிக்கு எதிரான, தான்தோன்றி தனமாக ஆட்சி நடத்தும் டபுள் என்ஜின் சர்க்காருக்கு எதிரான உள்ளக்குமுறல். இந்த போராட்டம், காக்ரோச்சி ஜனதா பார்ட்டியின் போராட்டம் அல்ல, சோனம் வாஞ்சுக் இன் போராட்டம் அல்ல, இது இந்தியாவின் போராட்டம். கொஞ்ம் எஞ்சியும், மிஞ்சியும் இருக்கும் இந்தியாவிற்கான போராட்டம்.
இந்தியாவின் ஆன்மாவை பாதுகாக்க நடைபெறும் போராட்டம்.
வெல்லட்டும் ! இளையோர் குரல் கேட்கும் திறனற்று போன இந்திய ஆட்சியாளர்களின் காதுகளில் ஒலிக்கட்டும், பெருவாரியான இந்திய மக்களுக்கு கல்வியை, பொருளாதார முன்னேற்றத்தை தடுக்கும், கெடுக்கும் இந்த ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டட்டும்.
@RahulGandhi@Wangchuk66@CJP_for_India@CJP_2029
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டத்தின் மையம் ஏகனாபுரம் கிராமம்.
இன்று ஏகனாபுரத்தின் காவல் தெய்வமான எல்லை அம்மன் கோயில் திருவிழா.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் இதுதான் நாம் கொண்டாடும் கடைசி திருவிழா, அடுத்த ஆண்டு கொண்டாட முடியாது என்ற ஏக்கத்தில் கொண்டாடியவர்கள் இம்முறை திருவிழாவை மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகின்றனர்.
3 ஆண்டுகளாக வெள்ளையடிக்கப்படாத வீடுகளில் வண்ணம் பூசியுள்ளனர். சிலர் தங்கள் வீடுகளில் பராமரிப்புப் பணிகளைச் செய்துள்ளனர்.
பரந்தூர் விமான நிலையத்தின் ஒடுதளம் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த ஏரிக்குள் இன்றிரவு தீ மிதி வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
எளிய மக்களின் தீரமிகு போராட்டம் கிட்டத்தட்ட வெற்றியை எட்டியுள்ளது.
#Parandur #பரந்தூர் #ParandurAirport
வேளாண் உற்பத்தியையும் பொதுமக்களின் வாழ்வாதாரங்களையும் அழிக்கும் திட்டங்களை அரசு தொடரக்கூடாது என வலியுறுத்துகிறோம். கைது செய்யப்பட்ட பொதுமக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
சுமார் 2 ஆண்டுகளாக இத்திட்டத்திற்காக விவசாயிகளும் மக்களும் போராடி வருகின்றனர். போராடும் மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து உடனடியாக இத்திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் தொழிற்பூங்காவிற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடும் மக்களை காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
#Melma#SipcotMelma#Protest#LandAcquisition
தூத்துக்குடியில் 15 படுகொலைகளை நடத்திய காவல்துறையின் உயர் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கையை எடுத்திருந்தால், #Ajith படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார் முதல்வரே. @CMOTamilnadu . நீங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் கொடுத்த வாக்குறுதி.
தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான ஒரே ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஒரு நாளைக்காவது சிறை சென்றிருந்தால், யாரை வேண்டும் என்றாலும் அடித்துக கொல்லலாம் என்கிற துணிச்சல் காவல் துறைக்கு வந்திருக்காது.
அன்று சுட்டுக்கொல்ல உத்தரவிட்டவர்களும், இன்று அடிக்க உத்தரவிட்டவர்களும் அமைதியாய் உயர் பதவிகளில் உள்ளனர். @tnpoliceoffl
யாராவது ஒரு குற்றவாளி மோசமான தவறு செய்துவிட்டால், காவல் துறை அந்த குற்றவாளியை கைது செய்யும். அது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு அல்லது நீதிமன்றத்தில் என பல இடங்களில் காவல் துறை அதிகாரிகள், அந்த குற்றச்செயலை பற்றி சொல்லும்போது, "அவர் மிருகத்தை போல்" நடந்து கொண்டார் என சொல்வார்கள்.
இன்றைக்கு, அஜித்குமாரை தாக்கி உயிரை எடுத்த காக்கி உடையில் இருந்த கொலையாளிகளை பார்க்கும் போது "மிருகங்கள் மேலானவை", இந்த காவலர்களை போல் கொடூரமாக நடந்துகொள்ளாது என்பதை உறுதியாக சொல்லமுடியும்.
இந்த மாபாதக செயலில் ஈடுபட்ட அனைத்து காவலர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள், அவர்களை உடனடியாக பதவிநீக்கம் செய்யப்படவேண்டும், அந்த காவலர்கள் தொடர்பான வழக்கு நடத்தி உட்சபட்ச தண்டனையை வாங்கித் தரவேண்டும். அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்.
ஒரு பெருங்குற்றம் நடைபெறும்போது, கீழ்நிலையில் உள்ள காவலர்களை மட்டும் பெயரளவிற்கு தண்டனை கொடுத்துவிட்டு, உயரதிகாரிகளை தப்பிவிட்டதன் விளைவை இப்போது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம், இனிமேலும் எந்த தயவும் இல்லாமல், உயரதிகாரிகளை பதவிநீக்கம் செய்து கைதுசெய்யவேண்டும். இனியொரு குற்றம் இதைப்போல் நடைபெறாமல் உறுதிசெய்யவேண்டும்.
@CMOTamilnadu@tnpoliceoffl
2021ல் @arivalayam அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சூழலியல் பார்வையில் மூன்று முக்கியமான குழுக்கள் அமைக்கப்பட்டன:-
1. டெல்டா மாவட்டங்களை முழுமையாக பாதுகாக்க, ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஹட்ரோகார்பன் கிணறுகள் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை வெளிக் கொண்டு வர, பேரா. சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான குழு.
இந்த குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.
2. சென்னையை நிரந்தரமாக வெள்ளம் மற்றும் வறட்சியில் இருந்து பாதுகாக்க, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு.
இந்த குழு இறுதி அறிக்கை தாக்கல் செய்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
3. பரந்தூர் விமான நிலையத்திற்காக அரசு திட்டமிட்டுள்ள இடத்தில், 20க்கும் மேற்பட்ட நீர்நிலைகள், 7கிமீ தூரத்திற்கு கம்பன் கால்வாய் உள்ளன. இவற்றை அழித்தாலும்(😭), விமான நிலையத்திற்குள் எப்படி நீர்நிலைகளை அமைக்கலாம் என்பதனை ஆராய்ந்து ஆலோசனை சொல்ல, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையிலான குழுவை அரசு அமைத்தது.
இந்த குழு அறிக்கை தாக்கல் செய்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்த மூன்று குழு அறிக்கைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிடாமல், அப்படியே வைத்திருக்கிறது.
இந்த அறிக்கைகளில் அரசின் நடவடிக்கைகளுக்கு சிக்கலான விஷயங்கள் இருப்பதால்தான், அரசு இந்த அறிக்கைகளை வெளியிடாமல் வைத்துள்ளதா?
எந்த திட்டத்தையும் மூடி மறைத்து, மக்களை ஏமாற்றி, திட்டங்களை செயல்படுத்திவிடலாம் என அரசுகள் நினைத்தால், அவை தோல்வியையே சந்தித்துள்ளன என்பதற்கு வரலாற்றில் பல்வேறு உதாரணங்கள் உள்ளன.
முதல்வர் அவர்களே, மேற்சொன்ன அறிக்கைகளை வெளியிடுவதற்கு என்ன தயக்கம்?
இந்த அறிக்கைகளை வெளியிட, பல சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்றத்திலேயே கோரிக்கை வைத்துள்ளார்கள்.
இதுதான் நீங்கள் உத்தரவாதப்படுத்திய “வெளிப்படை தன்மையான” ஆட்சியா?
@CMOTamilnadu@mkstalin@jawahirullah_MH@TThenarasu@VelmuruganTVK@TRBRajaa@KKSSRR_DMK@TIDCO_1965
@TheBluePen25 தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஓராண்டுக்கு முன் பல இடங்களில் நகர்புற நல வாழ்வு மையம் என்று கட்டடங்கள் கட்டப்பட்டு, மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லாமல் அவை திறக்கப்படாமல் செயல்பாட்டில் இல்லாமல் கிடக்கிறது.
Heard shifting of Sub Registrar office Udangudi, Thoothukudi District happening on the sly today inspite of MHC order. This Sub Registrar office presently functioning in Udangudi Town a thickly populated area, but New Building built in the middle of nowhere (No habitation nearby)
தமிழிசை சௌந்தர்ராஜன் ஒரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
@DrTamilisai4BJP பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ராஜ்யசபா உறுப்பினரும், ஒன்றிய இணை அமைச்சருமான எல்.முருகன் ஊட்டியில் களமிறக்கப்பட்டு மக்கள் மத்தியில் அழைக்கழிக்கப்படுகிறார்.
@Murugan_MoS தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை நினைவில் கொள்வோம்.
நயினார் நாகேந்திரன் ஒரு சட்டமன்ற உறுப்பினர், வாட்டும் வெயிலில் வியர்வை சிந்தி தேர்தலில் போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
@Nainarbjp பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
ஆனால், தேர்தலில் மக்களைச் சந்தித்துப் போட்டியிட்டு, கொளுத்தும் வெயிலில் சுற்றி வெற்றி பெறாத @nsitharaman மற்றும் @DrSJaishankar ஆகியோர் வசதியாக, எம்.பி.க்களாகவும், அமைச்சர்களாக தொடர்கிறார்கள்.
கெடுவாய்ப்பாக பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு மிக முக்கியமான இலாகாக்கள் வழங்கப்படும். அவர்கள் இருவருமே உயர்சாதி பிராமணர்கள் என்பதை நினைவில் கொள்வோம்.
பா.ஜ.க., உயர் சாதி, தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு இடையே பாகுபாடு காட்டவில்லை என்றால், திருச்சியில் நிர்மலா தாயையும், தென் சென்னையில் ஜெய்சங்கரையும் நிறுத்தட்டும்.
பாஜக உயர்சாதிக்கு ஆதரவான கட்சி என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?
#BJPFailsIndia #BJPisAntiOBC
#BJPisAntiDalit
(நேற்று நான் X தளத்தில் செய்த பதிவின் தமிழாக்கம்) நன்றி @SidTweep
பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்துப் போராடிய பொதுமக்களை காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
#parandur#பரந்தூர்
சூழலியல் பார்வையில் வருகின்ற 6 ஆண்டுகள் மிகவும் முக்கியமான ஆண்டுகள். புவியின் சராசரி வெப்பநிலை, தொழிற்புரட்சி தொடங்கிய காலகட்டத்தில் இருந்ததை விட 1.5 டிகிரிக்கு மேல் மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று பாரிஸ் ஒப்பந்தம் கோரிய நிலையை இப்போதே நாம் நெருங்கிவிட்டோம்.
இன்னும் சில ஆண்டுகளில் வரவுள்ள ல-நினா காலகட்டத்தில் மிகச் சிறிய அளவில் வெப்பம் குறைந்தாலும், 1.5 அளவில் 2030க்குள் அடைந்துவிடும் என உலக வானிலை மய்யம் அறிவித்துவிட்டது. இந்த நிலையில் சூழலியல் குறித்த கருத்தாக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய பணியில் பூவுலகின் நண்பர்கள் ஈடுபட்டு வருகிறோம். தொடர்ச்சியாக புதிய புத்தகங்களை வெளியிடும் பூவுலகு இந்த ஆண்டு 5 புத்தகங்களை வெளியிட்டு உள்ளோம்.
தமிழே அமுதே உணவே: -
உணவு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இரசாயணம் மீத்தேன் வெளிவருவதற்கு காரணமாக உள்ளது, சிறுதானிய உணவு உற்பத்தி முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாகவேண்டும், இந்த புத்தகம் சிறுதானியங்கள் குறித்தும், அதன் சமையல் முறைகள் குறித்தும் பேசுகிறது, அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகம்.
பரந்தூர் விமான நிலையம், பேரிடருக்கான அழைப்பு:-
நாம் யாரும் விமான நிலையத்திற்கு எதிரானவர்கள் அல்ல, தமிழ்நாட்டில் உள்ள பிற விமான நிலையங்களை விரிவாக்கம் செய்தாலே தமிழ்நாட்டில் போதுமானதாக இருக்கும். சென்னையை வெள்ளத்திலிருந்து காப்பாற்ற சென்னைக்கு மேற்கு பக்கம் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்தே ஆகவேண்டும், பரந்தூர் விமான நிலையம் சுமார் 13 நீர்நிலைகளை உள்ளடக்கி கொண்டுவரப்படுகிறது. நீர்நிலைகளை என்பவை வெறும் தண்ணீர் தேங்கும் பகுதி மட்டுமல்ல, நீர்ப்பிடிப்பு பகுதிகளையும் சேர்த்துதான் நீர்நிலை. விமான நிலையத்தின் நீர்நிலைகள் தவிர சுற்றியுள்ள பகுதிகளில் விமான நிலையம் கொண்டுவரக்கூடிய வளர்ச்சி பிற நீர்நிலைகளை பாதிக்கும், இது சென்னையில் வெள்ள பாதிப்பை அதிகரிக்கும். அதனால்தான் பரந்தூர் விமான நிலையத்தை பேரிடருக்கான அழைப்பு என்கிறோம்.
இந்த புத்தகம் சென்னையில் வாழும் ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டியது.
அம்பலமாகட்டும் போலி தீர்வுகள் :-
சூழலியல் சிக்கல்களுக்கு தீர்வாக, குறிப்பாக நெகிழிக்கு தீர்வாக வைக்கப்படும் எவை எல்லாம் எந்தமாதிரியான பின்விளைவுகளை ஏற்படுத்தும், தீர்வுகள் கொண்டுவரும் புதிய சிக்கல்கள் என விரிவாக பேசுகிறது இந்த புத்தகம். மிகமிக முக்கியமாக "நெகிழி மறுசுழற்சி" சாம்பலாக்கிகள் போன்றவை எந்த மாதிரியான சிக்கல்களை ஏற்படுத்துகின்றன போன்றவை குறித்து தரவுகளுடன் எடுத்துவைக்கிறது இந்த புத்தகம். அவசியம் படிக்கவேண்டியது.
நிலக்கரி சுரண்டல்: -
நிலக்கரி எடுப்பதில் இருந்து ஆரம்பித்து அதன் மூலம் நடைபெறும் மின் உற்பத்தி, அதன் பிறகு கையாலபப்டும் சாம்பல் கழிவுகள் என எல்லாமும் விளிம்புநிலை மக்களை எப்படி பாதிக்கிறது, சூழலியலில் எந்த மாதிரியான மோசமாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று விரிவாக எடுத்துவைக்கிறது இந்த புத்தகம். பல வணிக வளாகங்களில் அளவிற்கு அதிகமாக எரியவிடும் மின்சாரத்திற்கு பின்னால் எவ்வளவு பெரிய வளச் சுரண்டல் உள்ளது என்பதை இந்த புத்தகம் பேசுகிறது, அவசியம் வாசிக்கவும்.
மாறும் திணைகளும் நானும்:-
ஒரு பயணம் பல்வேறு திணைகளுக்கு இட்டுச்செல்கிறது, அங்கே கடந்த பத்தாண்டுகளில் எந்த மாதிரியான மாற்றத்தை கொண்டுவந்துள்ளது
இந்த புத்தகம். உண்மையில் காலநிலை மாற்றம் பல்வேறு பகுதிகளில், திணைகளில் எந்த மாதிரியான தாக்கத்தை, பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது என்பதை பயண நூலாக தமிழில் வெளிவருவது இதுதான் முதல் என்று நினைக்கிறேன், அவசியம் வாசிக்கவேண்டியது.
சென்னை புத்தக காட்சி
நந்தனம்
அரங்கு :- 395,396
@poovulagu
#poovulaginNanbargal
#ChennaiBookFair2024
அடிக்கடி புகார் அளித்தால் பிளாக் !
தாம்பரம் காவல்துறை அதிரடி.
டிவிட்டரில் பகிரப்படும் புகார்களுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக புகார் அளிப்பவர்களை பிளாக் செய்வது தான் நீங்கள் செய்யும் வேலைக்கு அழகா? இது வரை டிவிட்டர் புகார்களுக்கு நீங்கள் எடுத்த நடவடிக்கைகளை பட்டியல் போட்டு சொல்ல முடியுமா @COPTBM ?
புகார் அளிப்பவர்களை பிளாக் செய்வது போன்ற சின்னபுள்ளத்தனமான வேலைகளை செய்வதன் மூலம் தான் காவல்துறையின் மதிப்பு #Degrade ஆகிறது என்பது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.
#Arappor | @CMOTamilnadu | @SDMeena_IAS | @mkstalin
@JuniorVikatan மிக மிக மோசம் , தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சி தூய்மை பணியாளர் சுடலைமாடன் மரணத்திற்கு நீதி வழங்குவதில் திமுக அரசு சாதிய ரீதியான பாகுபாடு காட்டுகிறது.