பாஜக என்ன மொழியில் பேசுமோ அதே மொழியில் தமிழக வெற்றி கழகம் பேசுகிறது என்பதற்கு இதைவிட தக்கச் சான்று இருக்க முடியாது
நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள் மீது பாஜக அரசு கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி உள்ளது
என் கண் முன்னாடியே நடந்த அத்தனையையும் மறக்க முடியாமல் நேற்று இரவெல்லாம் தூக்கம் வரவில்லை
ஆனால் அதை அப்படியே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் என்று மடைமாற்றி விடக் கூடிய வேலையை முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் கணக்கச்சிதமாக செய்திருக்கிறது!
அது மோதல் இல்லை சார் தாக்குதல் அரசு நடத்திய தாக்குதல் பெண்கள் வயதானவர்கள் என எதையும் பார்க்காமல் நடத்தப்பட்ட தாக்குதல் அதை எப்படி மோதல் என்று சொல்ல மனம் வருகிறது!
யார் மனதை குளிர் வைக்க இந்த யுக்தி என தெரியவில்லை!
எனது வெற்றிக்கு காரணமே பள்ளி குழந்தைகள் கல்லூரி மாணவர்கள் என வரிக்கு வரி பேசும் முதல்வர் விஜய் டெல்லியில் அவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு ஒரு சிறு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை!
கடலூர் மாவட்டத்தின் ஆகச் சிறந்த நெறியாளர் சமத்துவம் சகோதரத்துவத்தினை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் @karthickselvaa அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!!!!!
தொடர்ந்து சாதி வெறியுடன் பேசிக் கொண்டு வரும் தவெக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவள் தொடர்ந்து தலித் சமுதாயம் மற்றும் விசிக தலைவரையும் கொச்சைப்படுத்தி வருகிறாள் இவள் மீது உடனடி நடவடிக்கை வேண்டும்.
@CityTirunelveli@tnpoliceoffl
தொடர்ந்து சாதி வெறியுடன் பேசிக் கொண்டு வரும் தவெக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவள் தொடர்ந்து தலித் சமுதாயம் மற்றும் விசிக தலைவரையும் கொச்சைப்படுத்தி வருகிறாள் இவள் மீது உடனடி நடவடிக்கை வேண்டும்.
@CityTirunelveli@tnpoliceoffl
நீ பெரிய நடிகரா இருக்கலாம்.. 108 சீட்டு வாங்கி இருக்கலாம்.. ஆனா 2 சீட்டு ஜெயிச்ச என் தலைவன் எடுக்குற முடிவுதாண்டா தமிழ்நாட்டோட தலை எழுத்து.. ங்கோத்தா 2 சீட்டுனு கிண்டல் பண்ணவன்லாம் இப்ப வாங்கடா..
Political வாத்தியார்🔥🔥🔥
Political game changer🔥🔥🔥
திருமாடா🔥🔥🔥
என் தலைவன்🔥🔥🔥
பாமகவிற்கு எந்த வகையில் குறைந்து விட்டது விசிக?
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் இரண்டு தொகுதியில் களம் கண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்று 2.25 வாக்குகளை பெற்றது. தனது வாக்கு சதவீதத்தை 1.09 என உயர்த்தியும் காட்டியது. பெரிய கூட்டணி இருந்ததால்தான் இது சாத்தியப்பட்டது என யாரேனும் சொல்வீர்களேயானால் உங்களுக்கு பதில் திமுக சுமார் 6 சதவிகித வாக்குகளையும் காங்கிரஸ் கிட்டத்தட்ட 2 சதவீத வாக்குகளையும் இழந்திருந்தது
ஆனால் அதுவே பாட்டாளி மக்கள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட்டு 4.33% மட்டுமே வாக்கு சதவீதத்தை பெற்றது. அதிலும் 1.09% வாக்கு சதவீதத்தை இழந்தது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. விசிகவை போல வெறும் இரண்டு இடங்களில் தான் போட்டி போட்டு இருந்தார்கள் என்றால் மிக மோசமான நிலைக்கு அக்கட்சி போயிருக்கும்
தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சி. அதுவே பாட்டாளி மக்கள் கட்சி அங்கீகாரம் இல்லாத கட்சி
விடுதலை சிறுத்தைகளுக்கு தனி சின்னம் உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடையாது (மாம்பழ சின்னம் முன்னுரிமை அடிப்படையில் தான் கொடுக்கப்பட்டுள்ளது)
பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக உடைந்து போய் உள்ளது விடுதலை சிறுத்தைகளின் அப்படி எந்த பிரச்சனையும் இல்லை
ஆனாலும் கூட பாட்டாளி மக்கள் கட்சிக்கு கடந்த முறையை விட குறைவு என்றாலும் 18 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் அதுவே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரட்டை இலக்க இடங்களை கொடுக்க கூட திமுக தயங்குகிறது
மீண்டும் கேட்கிறேன் பாமகவிற்கு எந்த வகையில் குறைந்து விட்டது விசிக?
தஞ்சை கொல்லாங்கரை கிராமத்தில் தலித் மாணவர்கள் பொதுப் பாதையில் செல்வதைத் தடுக்கிறார்கள். மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தியும் எதுவும் மாறவில்லை.
அந்த பாட்டிக்கு தான் எவ்வளவு வெறி ! என்று தான் இவர்கள் திருந்தப் போகிறார்கள்? திமுக அரசு @CMOTamilnadu என்ன செய்துகொண்டு இருக்கிறது? இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது.
இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காகத் தி.மு.க.வினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இது தொடர்பாக நான் தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவை வழங்கினேன்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் போராட்டங்களைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை நடத்தியது. அப்போது, தமிழக முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் காவல் துறையின் தவறால் முதல் தகவல் அறிக்கை வெளியாகி, பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, அவருக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சத்தைத் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், அலட்சியமாகச் செயல்பட்ட காவல் துறை அதிகாரிகளிடம் இருந்தே இந்தத் தொகையை வசூலித்துக் கொள்ளலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதை மக்கள் மறக்கவில்லை.
தொடர்ந்து இவ்வழக்கைத் துரிதமாக விசாரிக்க, டிசம்பர் 28ஆம் தேதி சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகே ஜனவரி 5ஆம் தேதி ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் பிப்ரவரி 24ஆம் தேதி ஞானசேகரனுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சென்னை, உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடைபெற்றதால் மட்டுமே இந்த வழக்கு விரைவாக நடத்தப்பட்டு, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்காகச் சென்னை உயர்நீதிமன்றத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த வழக்கில் குற்றவாளி என்று மகளிர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நிர்வாகத் தோல்வியின் காரணமாகச் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கை துரிதப்படுத்தியதால் தான், 5 மாதங்களில் தீர்ப்பு வந்துள்ளது.
ஆனால் இவற்றையெல்லாம் மறைத்து, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டதற்குத் தமிழ்நாடு காவல் துறை தான் காரணம் என்று மனசாட்சியின்றிப் பச்சைப் பொய்யை தி.மு.க. தலைவர் கூறி சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறார் என்பதை அனைவரும் அறிவர்.
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய, செயல் திறன் அற்ற அவல ஆட்சி இது. இந்தக் கொடுமைகளுக்காகத் தமிழக மக்கள் இன்னும் 10 மாதங்களில் தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பி வைப்பது உறுதி என்பதை நீதியின் பக்கம் நின்று, நெஞ்சுறுதி மிக்க மகளிர் பக்கம் நின்று தெரிவித்துக்கொள்கிறேன்.