15 பேர் உயிரிழப்பு. 🥺🙏💐
இதை பற்றி எந்த அமைச்சரும் பேச வில்லை, முதல்வரும் பேச வில்லை.
அவர்கள் ஆட்சிக்கு வந்தும் கூட இன்னும் திமுகவை பற்றி மட்டுமே பேசிக்கிட்டு இருக்கிறார்கள்.
மக்களை பற்றிய சிந்தனை, மக்களின் எதிர்காலம், மக்களின் தேவ, இதை எதும் அவர்களுக்கு தேவை இல்ல.
உயிரிழப்பு 15 ஆக உயர்வு 💔💔
ஒரே ஒருத்தன் கூட இதை பத்தி பேசல
அன்பின் தவெக நண்பர்களே
இப்பயவாயது புரிஞ்சுகோங்க
உங்களுக்கு ஊட்டபட்டிருப்பது திமுக வின் வெறுப்பு மட்டுமே
உங்க மனசாட்சி செத்து பல மாதங்கள் ஆகிவிட்டது 💔💔
ஆழ்ந்த இறங்கல்
இதென்ன இழிவான அரசியலாக இருக்கிறது. ஒரு மாணவனின் முகவரி, இரத்த வகை, தொலைபேசி எண் ஆகியன பயன்படலாம். ஆனால் சாதிச்சான்றிதழ் எதற்காக இணைக்கப்பட வேண்டும்??.
சாதிச்சான்றிதழை வைத்து என்ன செய்யப்போகிறார்கள் மாணவர்கள்?
APAAR (Automated Permanent Academic Account Registry) எனும் பெயரில் 'ஒரே தேசம் ஒற்றை மாணவர் அடையாளம்' எனும் பெயரில் ஒன்றிய பாஜக அரசு ஒன்றிய அரசு கல்வி நிலையங்களில் கொண்டு வந்துள்ள திட்டத்தின் பகுதியாக 'தவெக அரசு' இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முனைகிறதா?
மாணவனின் தகவல்களையெல்லாம் ஒருமுகப்படுத்தும்தகவல்-திரட்டல் எதற்காக திரட்டப்படுகிறது எனும் கேள்வி பாஜகவை நோக்கி எழும்பியது. இதேவழிமுறையை தவெக அரசு சாதி விவரங்களை இணைத்து மேற்கொள்கிறது.
இதனால் நடைபெறும் சாதிய வன்முறைகளுக்கு முதலமைச்சர் விஜய் பொறுப்பெடுப்பாரா? பாஜகவின் திட்டங்களுக்கு நிகரான திட்டங்களாக இவற்றை பார்க்கலாமா?
வீட்டிலிருந்து அருகாமை பள்ளி எனும் வகையில் கல்விக்கட்டமைபப்பை வைத்திருக்கும் தமிழ்நாட்டில் எதற்காக இந்த தகவல் அட்டை வழங்கப்படுகிறது என அமைச்சர் விளக்குவாரா?
இத்திட்டத்தின் உடனடி தேவை, இதனால் விளையும் பயன்பாடுகளைக் குறித்து விளக்கமளிக்காமல் அமைச்சர் கடந்து செல்கிறார். சாதியச் சமூகத்தைப் படைக்கவா சாதிச்சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டன? ஒரு சாதிச்சான்றிதழ் மாணவனுக்கு எதற்காக அன்றாட கல்வி கற்றலுக்குத் தேவைப்படுகிறது?
இதுகுறித்த விளக்கத்தை அளிக்காமல் தவிர்த்து, இத்திட்டத்தைநடைமுறைப்படுத்துவார்களெனில் மே17 இயக்கத்தின்
வன்மையான கண்டனங்கள்.
நாங்க சமூக நீதி அரசு. எல்லோருக்கும் எல்லாம்,. அனைவரும் சமம். என்று சட்ட மன்றத்தில் சினிமா படத்தில் பேசுவது போல் பேசுநீங்க @actorvijay.
இதான் அந்த சமூக நீதிக்கான முதல் வழியா???? @CMOTamilnadu@AadhavArjuna ,
@actorvijay CM UNCLE . என்னங்க இது . இதற்கு தான்
ஜனநாயகன் படத்திற்கு இல்லாத ஒன்றை மக்களிடம் அவ்வளவு பொய், பித்தலாட்டம் பண்ணீங்களா? . இவர்கள் பண்ண சூழ்ச்சி தான் அனைத்தும். 💦💦 இவர்களே எல்லாம் திட்டம் தீட்டி செய்தது ஜனநாயகன் படத்திற்கு வந்த பிரச்சினை(பொய்)...💦
மாணவர்கள் சாதி சான்றிதழ் விண்ணப்பித்தால் உடனடியாக சாதி சான்றிதழ் வழங்குவதற்கு வழிவகை செய்யாமல், ஜாதி அடையாளங்களை Id Card பிரிண்ட் பண்ணி தருகிறேன் கழுத்துல மாட்டிகிட்டு சுத்துங்க சொல்வது எந்த மாதிரி மனநிலை இது...😡
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மேலவளவு அரசியல் உரிமை மீட்பு போராளிகள்
புதைக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்ட நினைவிடம்
' விடுதலைக்களம்' @ambedkarthidal@thirumaofficial
மாநகராட்சிகளில் தூய்மைப் பணியைத் தனியார் மயமாக்குவதைக் கைவிட வேண்டும்!
'தங்க மோதிரம் திட்டத்தை' மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
சட்டப் பேரவைக்கான மரபையும் முதலமைச்சருக்கான மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டும்!
தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!
-------------------------
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைப்பதற்குத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் ஓரிரு மண்டலங்களில் மட்டும் அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது அதனை எதிர்த்து விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராடின. பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் இந்த நடவடிக்கையை விரிவுபடுத்துவது ஏற்புடையதல்ல. தமது உயிரைப் பணயம் வைத்து இந்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் நலன்களுக்கு எதிரான இந்நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
அடுத்து, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'ஒரு கிராம் தங்க மோதிரம்' வழங்கும் திட்டம் தொடங்கவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தவெக'வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலான இந்தத் திட்டத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் 755 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 56 சதவீத குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. எஞ்சிய 44 சதவீதம் தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் சாதாரண பிரசவத்துக்குக்கூட ரூ.50 ஆயிரம் முதல்
ரூ. ஒரு இலட்சம் வரையில் வசூலிக்கின்றனர். சிசேரியன் என்னும் அறுவை மூலம் நடக்கும் பிறப்பு எனில் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். கட்டணம் அதிகம் என்றாலும், ஏழை எளிய குடும்பத்தினர் கூட தாய்-சேய் பாதுகாப்புக் கருதி தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.
இந்நிலையில், தங்க மோதிரம் வழங்குவதற்காக செலவு செய்யும் இந்த 755 கோடி ரூபாயைக் கொண்டு அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் தனியார் மருத்துவமனைகளைப்போல அனைத்து உயரிய வசதிகளையும் கொண்ட 'பிரசவ வார்டுகளை' உருவாக்குவதோடு, தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமிப்பது அனைத்துத் தரப்பினருக்கும் பயன் அளிப்பதாக அமையும்.
மேலும், இத்திட்டத்தின் மூலம் பிறந்த குழந்தைக்கு போடப்படும் தங்க மோதிரம் ஒரு சில மாதங்களிலேயே அக்குழந்தைகளின் கைகளுக்குப் பொருந்தாமலும் போய்விடும். எனவே, தமிழ்நாடு அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மேனாள் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது 'முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும் முதலமைச்சர் என்னும் மகத்தான பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.